அருசுவையின் பிரஸடண்ட் / ஆப்செண்ட்

ஹாய் எல்லோருக்கும் இன்னும் சில நாள் அல்லது ஒரேயடியாக கூட நான் அருசுவையில் பதிவுகள் கொடுக்க வர மாட்டேன் என்பதை கவலையுடன் சொல்லி கொள்கின்றேன்..கடைசியாக எனக்கு பதிவு போட்டவங்களுக்கு பதில் போட்டு கொள்கிறேன்....

என்றும் அன்புடன்
உங்கள் மர்ழியா

என்னம்மா ஆச்சு. நான் கூட கொஞ்ச நாள் வரமுடியாம தவித்தேன். ஆனா ஒரேயடியா எங்களை விட்டுப்போறேன்னா எப்படி? உங்க கவலை எங்களையும் தொத்திக்குதம்மா. போகாதே போகாதே எங்களை விட்டுட்டுப் போகாதே. இது அன்புக் கட்டளை.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஏன்,என்ன ஆச்சு மர்ழ்லி,பாரு நம்ம ஜெ மாமிக்காகவாவது ஏன் இந்த முடிவுனு சொல்லு.

இப்பம் தான் எனக்கு ஒரு தோழிகிடைத்தார் அதுக்குமுன் விட்டு செல்கிறிங்களை

benazirjaila

நிறைய பேர் எனக்கு பதிவு போட்டு இருக்கீங்க சோ சொல்லிக்காமல் போறது நல்ல பழக்கமில்லை அதனால்தான் இப்ப வந்தேன்...

ஜலிலக்கா,தளிகா உங்கள் மெயிலின் தலைப்பை மட்டும் பார்த்தேன் ரொம்ப சந்தோச மூடுடன் போட்டு இருக்கீங்க போல ஆனா அதை படிக்கும் மூடில் இப்ப நான் இல்லை அத்னால் ஓப்பன் பண்ணல எப்ப என் மைண்ட் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆகுதோ அப்ப கண்டிப்பா பார்த்து பதில் போடுகிறேன்(நான் சொன்ன என் சொந்த கார ஆள் வந்தாச்சு)

கதீஜா பாவம் நீ என் கையில் ஏற்பட்ட காயத்துக்காக நைட் முழுதும் கவலை பட்டு இருந்து இருக்கே உன்னிடம் போனில் இன்னும் அழுது வடிந்து கவலை பட வைத்துட்டேன் இனி போன் போடாதே எனக்கு ஓரளவு சரியானதும் கண்டிப்பா நானே போடுறேன் உன்னை இன்னும் கஸ்டபடுத்த விரும்பல அதனால்தான் இந்த இடைவேளி சந்தோசமாஅ இரு...

சார்தா ஹாய் எனக்கு ஒரு குழந்தை..மவுன்ரோடில் இருக்கேன்மா ரொம்ப நன்றி என் பெயர் பிடித்ததற்க்கு,..

ஹாய் கே.ஆர் கை அப்படிதன் இருக்கு தண்ணி பட்டா மட்டும் பைன்..மற்றபடி பிராப்லம் இல்லை

அய்யோ அக்கா நான் அவங்களை மரியாதை கொடுக்காமல் என்ன பன்ணினேன் ஒரு வேலை இதில் இன்னொரு ஜெயந்தின்னு இருக்காங்க அவங்களுக்கு போட பதிவை நீங்க மாமிக்குன்னு நினைத்துட்டீங்க போல...மாமியை போய் அப்படி சொல்லுவேனாக்கா?

ஹாய் பெனாசிர்,பஜீலா கை பரவா இல்லைம்மா துஆ செய்யுங்க எனக்காக..பொண்ணு பைன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்கள கிண்டல் பண்ணியதால போறீங்களா!!! சாரி கேட்டோ!!!

i hope you are feeling better. Take care

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஐ லவ் ஆல் ஆப் யூ. இந்த முகம் தெரியாத தோழமை எவ்வளவு சுகம் தெரியுமா? ஜாலியாக இருப்போம். கோபம் வேண்டாம்.
யாராவது சீக்கிரமா ஒரு ஜாலி டூர் ரெடி பண்ணுங்கப்பா. இந்தப் பொண்ணு சிரிக்கறா மாதிரி.
மனசு சரி இல்லாதபோது சரி பண்ணிக்கதான் இங்க வரோம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மாமி என் சொந்தகார ஒருத்தர் அவர்னா எனக்கு உயிர் அவருக்கு ஒருமுறை கேன்ஸர் வந்தது அப்புரம் அதை கியூர் பண்ணியாச்சி அதுக்கப்புறம் நல்லா ஆகிட்டாங்க ஆனா கொஞ்ச நாளா ஒரே பெயின் அடிக்கடி ஆப்ரேஷன் பண்ணிய இடத்தில் போய் பார்த்தாச்சு ஸ்கேன் எடுக்கமாலேயே ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க முட்டாள் டாக்டர்ஸ் ஆனா அது இப்ப போன்,லிவரில் லேசா தொட்டு இருக்கு இப்ப 2 ஊசி போடனுமாம் செம காஸ்லி ஊசி காசு போனா போகட்டும் ஆனா அதோட கியூர்ன்னு அவ்வளவா சொல்ல முடியாதாம் அந்த 2 ஊசி போட்ட பின் ரிட்டன் ஒரு ரிப்போட் எடுத்துதான் எதுவும் சொல்லுவாங்களாம் என்னால் முடில டைப் பண்ண கூட கணீர் எழுத்தை மறைக்குது..அவங்களை இப்ப நான் இன்கே அழைத்துட்டேன் நான் பார்த்துகறேன்னு அதோட சென்னையிதான் எதாவது அவசரத்துக்கு பெரிய டாக்டர்ஸ் இருக்காங்க உடனெ பார்த்துகல்லாம்னு இன்று காலையிதான் வந்தாங்க அவங்களை பார்த்ததும் என்னால் முடியல ரொம்பவே டல் பாவமா இருக்கு நாந்தான் சாப்பாடு கூட தீட்டி விடுறேன் அந்த அளவுக்கு இருக்காங்க முன்பெல்லாம் கலகலன்னு இருப்பாங்க இக்கே வந்தா அவங்க இங்கே வந்தாலே கிச்சனில் ஒரு சேர் போட்டுடுவேன் அதில் உட்கார்ந்து அப்படி பண்ணு இப்படி பண்ணு ந்னு ஒரே ரகலைதான் அதுக்காகவே அதிக வேலைனா அப்படி உட்கார வைத்து பேசிட்டே வேலை முடிப்பென்..படுக்குறது ரொம்ப ரேர் எப்பபார் முழிச்சுட்டெ எஇருப்பாங்க ஆனா இப்ப எப்பப்பார் படுக்கைதான் மனசு தாங்கல எனக்கு நாளைதான் இங்குள்ள டாக்டரிடம் போறோம் அல்லாஹ்தான் 2 ஊசியோட அவங்களை கம்லீட்டா கியூர் பண்ணிடனும் எனக்காக பிரே பண்ணுங்க பிளீஸ்..அவங்களுக்கு ஒன்னுனா என்னால் தாங்க முடியாது..

ஒரு வேண்டுகோள் :

உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு இப்படி கேன்ஸர் இருந்து கியூர் ஆகிட்டுனா டாக்டர் சொல்லுறார்ன்னு சும்மா இருந்துடாதீங்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொல்லுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இனிமேல் உங்களிடம் பேசவே முடியாதா? ஏன் இப்படி. சரி உங்கள் உடம்பை பார்த்துகொள்ள்வும். உங்கள் குழந்தையை விசாரித்ததாக சொல்லவும். நன்றி.

மர்ழியா,
நம்மால் முடிந்தது. நாம் அனைவரும் அவருக்காகப் பிரார்த்திப்போம். இறைவன் அவரைப் பூரணமாகக் குணப்படுத்தி நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

நான் உங்கள் பிரியமானவர்களுக்காக ப்ரார்த்தனை செய்கிறேன். கவலை படாதீர்கள்.

மேலும் சில பதிவுகள்