blood loss and diahrea

hello all, help me for blood loss during motion and for diahrea also... having this problem for 1 year... any home medicine please...

dear all,

give me good food tips to cure the inflammation (wound)in the stomach.. Green leafy vegetables are good but iam getting only spinach...

could u'll please suggest some good easy food for this problem.. Thanks and awaiting for ur answers..

ஹாய் ப்ரியா தேங்காய் பால் வயிற்று புண் ஆற்றும் என்பார்கள்.கவலைபடாதீர்கள்.நிறைய வெஜிடபுல்ஸ், ப்ருட்ஸ் ,சாலட் சாப்பிடுங்க. டேக் கேர்.
***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.***
அன்புடன் பஜீலா

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

thanks fajeela farveen...

எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் ஆகிறது. நார்மல் டெலிவரி தான். நார்மல் டெலிவரி என்று ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் பிறந்து 20 நாட்களில் எனக்கு மோஷனில் இரத்தம் போச்சு. மாத்திரை சாப்பிட்டு இப்பொழுது இரத்தம் போவது நின்றுவிட்டது. கடுப்பும் நின்று விட்டது. ஆனால் காந்தல் ரொம்ப இருக்கு. அதுவும் குழந்தைக்கு பால் குடுக்கும் பொது என்னால் சில நேரம் உட்காரவே முடிவதில்லை.குழந்தைக்கு பால் குடுப்பது என்பது ரொம்ப சந்தோசமான விஷயம். ஆனால் நான் இதை ரொம்ப கஷ்டத்துடன் செய்கிறேன். :( இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? ஒரு மாதத்திற்கும் மேலாக காரமே இல்லாமல் சாப்பிடுகிறேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

வளைய வடிவில் குஷன் விற்பார்கள், நாற்காலி மேல் போட்டுக் கொள்ளலாம். உங்கள் ஃபார்மசிஸ்ட்டிடம் விசாரித்துப் பாருங்கள். அல்லது மெட்டர்னிடி ப்ராடக்ஸ் விற்கும் இடங்களில் விசாரித்துப் பாருங்கள்.
//ஒரு மாதத்திற்கும் மேலாக காரமே இல்லாமல் சாப்பிடுகிறேன்.// அது மெதுவா சரியாகிரும். காரம் இல்லாம சாப்பிடக் கஷ்டமாக இருந்தால் மிளகு சேர்த்துக்கங்க. இதையே நினச்சுட்டு இருக்காதீங்க. உடம்பும் மனசும் சுகமாக இருக்கிறது இப்போ முக்கியம் இல்லையா?

‍- இமா க்றிஸ்

நல்லா இருக்கீங்களா? எங்கே தென்காசியில் தான் இருக்கீங்களா? என்ன குழந்தை? சில நேரம் குழந்தை பறந்த பிறகு சிலருக்கு hemorrhoid வரும். அதனால் இரத்தம் வந்து இப்பொழுது மருந்து சாப்பிட்டதால் நின்றிருக்கலாம். அதிகம் நார் சத்துள்ள உணவை உண்ணவும். தயிர் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். (ஆனால் நம் ஊரில் குழந்தை பறந்த பிறகு தயிர் கொடுக்கவே மாட்டார்கள் :(..... ) Tear எதாவது இருந்ததா? அப்படி என்றால் எத்தனை டிகிரி? ஆறிவிட்டாதா? சில நேரம் அதிகம் புஷ் பண்ணியதால் பைல்ஸ் போன்று கூட இருக்கலாம். தினமும் நீங்கள் குறைந்தது 15 நிமிடமாது வெதுவெதுப்பான தண்ணீரில் உட்கார்ந்திருக்கவும். நார் சத்துள்ள கீரை காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். எடுக்கும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி இமா அம்மா
தென்காசியில் அந்த குஷன் கிடைக்குமான்னு தெரியல. விசாரிச்சு பார்க்கிறேன். மிளகு கூட சேர்க்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. பூண்டு கூட சேர்க்கவில்லை. எனக்கு என்னவோ இதுவே பழகிவிடும் போலிருக்கிறது. :(
லாவண்யா
நல்லா இருக்கீங்களா? தென்காசியில் தான் இருக்கிறேன். பையன் பிறந்துள்ளான்.
முதலில் தயிர் சாப்பிடவில்லை. இப்பொழுது சேர்த்துக் கொள்கிறேன். தண்ணீர் நிறைய குடிக்கிறேன். Tear என்றால் எப்படி இருக்கும்? லேசாக வெடித்து இருந்தது. அதை தான் tear என்று சொல்றீங்களா? Neosparin ointment போட்டேன். சரியா போச்சு. டாக்டர் பொறுக்குற சூடில் தண்ணீரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் உட்கார சொன்னங்க. சம்மர் வேறு. கொஞ்ச நாள் உட்கார்ந்தேன். இப்பொழுது செய்யவில்லை. மற்ற எல்லாவற்றிலும் ரொம்ப பக்குவமாக தான் இருக்கிறேன்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்