சுரைக்காய் பாயசம்

தேதி: June 4, 2008

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுரைக்காய் - ஒரு கோப்பை (பிஞ்சுகாயாக பார்த்து வாங்கவும்)
பால் - ஒரு கோப்பை
சீனி - 3/4 கோப்பை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
அண்டிபருப்பு, கிஸ்மிஸ்பழம் - 1/4 கோப்பை
ஏலக்காய் - 2 எண்ணம்


 

முதலில் சுரைக்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை தண்ணீர் விட்டு குழைய வேக வைக்கவும்.
பிறகு பாலை ஊற்றி ஒரு கரண்டியால் கிண்டவும். 5 நிமிடம் பொறுத்திருந்து பால் மற்றும் சுரைக்காய் சேர்ந்து வரும் போது அடுப்பை ஆப் செய்துவிடவும்.
அதன் பின்னர் சீனியை போட்டு கரண்டியால் கிண்டவும், சீனி அந்த சூட்டிலேயே கரைந்து விடும். ஏலக்காயை தட்டி போடவும்.
நெய் சூடாக்கி அண்டிபருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை வறுத்து பாயாசத்தில் கொட்டவும். சுரைக்காய் பாயாசம் தயார். செய்ய மிகவும் எளிது.


மேலும் சில குறிப்புகள்