ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா தூக்கம் வரலையா?. மரியம் என்ன செய்யறா?. தூங்கியாச்சா?
Rajini

பருப்பா இப்படி திரடையே மாற்றீட்டேன் குழப்பத்தில் சே மறக்க வந்தேன்...இப்படி ஆகிட்டே

அவ அப்பா வந்து ஆட்டம் போட்டபுந்தான் தூங்குவா..நான் இன்னும் சாப்டல அவருக்காக வெயிட்டிங்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மஹா, நான் யு.ஸ் ல்தான் இருக்கேன். இப்போத்தான் அரிசிப்பத்தி நீங்க காரசாரமா பேசிட்டு இருக்கிறதைப்பார்த்தேன். உங்க மெயில் ஐடி விருப்பம் இருந்தா சொல்லுங்க. மெயில்ல பேசலாம்
Rajini

மர்ழியா, பாப்பாவை தூங்க வைக்கப் போய்ட்டேன். இப்போதான் தூங்கினா. அவங்க அண்ணனைப் பார்த்தா தூக்க கலக்கத்தில கூட விளையாடனும்னு ஒரே அழுகை. ஒரு வழியா சமாதானப்படுத்தி தூங்க வைச்சாச்சு.
Rajini

ஓஹ் தூங்கிட்டாளா?நல்லது இவ என்னை தூங்க வைத்துடுவா தலையிலெல்லாம் மிதிப்பா தூங்கும் வரை வட்டம் சுற்றிட்டே இருப்பா..தூங்கினாலும் அப்பா சவுண்ட் கேட்டதும் எழும்பிடுவா..அதனால்தான் அவர் வந்த பின்னே தூங்கட்டும்னு விட்டுட்டேன்..அவர் வந்துட்டார் குட் நைட் ரஜினி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா, மணி என்ன ஆச்சு இன்னுமா தூங்காம இருக்கா?. இவளும் அப்பிடித்தான் யாராவது பேச ஆரம்பிச்சா உடனே எழுந்துடுவா. இப்போ என் பையனுக்கு வேற லீவ் விட்டாச்சா, அதுனால அவன் அழிச்சட்டியம் தாங்க முடியலை. அவளை யாரும் பார்க்காதப்போ மெதுவாய் போய் எழுப்பி விட்டுடறான். மண்டைய பிச்சுக்கலாம் போல இருக்கு. ஏதாவது சம்மர் கிளாஸ் போடனும். இந்தியா வந்ததும் ஜாலிதான்.
Rajini

குட்நைட்
Rajini

மர்ழியா,
உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கும் ஒரு மாதிரி இருக்கிறது. மாமிக்கு தைரியக் குறைவாக இருக்கலாம். ஏனெனில் மருந்துகள் பவரானவைதானே. கொஞ்சம் தென்பு வந்தால் நலமாகி விடுவார்.

அம்புலன்ஸ் என்றால் எனக்கும் நடுக்கம்தான். இங்கு வெளிநாடுகளில் தொட்டதற்கும் அம்புலன்ஸ் என்பதால் பழக்கப்பட்டதொன்றாகிவிட்டது. நேசறியில் கூட அம்புலன்ஸ் வரவழைத்து குழந்தைகளுக்கு எப்படி லைற் போடுவது ஹோர்ன் பண்ணுவது, நோயாளிகளைப் படுக்க வைப்பது என்றெல்லாம் காட்டுகிறார்கள். இப்படித்தான் பொலிஸ், fire எஞ்சின் எல்லாம் வரவழைத்து விளங்கப்படுத்துவதால்.... இங்கே சின்னனிலேயே எல்லாம் பழக்கப்பட்டு விடுகிறது. எனக்கும் இன்னமும் அம்புலன்ஸ் உள் பக்கம் எப்படி என்று நேரில் தெரியாது... படத்தில்தான் பார்த்திருக்கிறேன்.

கடவுள் உங்களுக்குத் தைரியத்தைத் தந்திருக்கிறார். அதுதான் முக்கியம். நாளை பேசுவோம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரஜனி,
உங்கள் மகளுக்கு 1 வயதாகவில்லை என்றால் கஸ்டம்தான், அவசரப்பட வேண்டாம். முடிந்தால் ரெட்மில் செய்யுங்கள்.

தோட்டம் எப்படிப் போகிறது? பூச்சி புளுத் தொல்லை இல்லையா? இங்கே எனக்கு ஸ்லக் க்கு மருந்து அடித்தே கழைத்துவிட்டேன். கொஞ்சம் மழை என்றால் போதும் உடனே ஸ்லக் தான். உருளைக்கிழங்கு நன்றாகவே வருகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்