டோபு பொரியல்

தேதி: June 9, 2008

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

டோபு - 1 பக்கட்
உப்பு - சிறிது
கறித்தூள்/மிளகாய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க


 

முறை 1
========
டோபுவை மெல்லிய கீலங்களாக வெட்டவும்.
பின்னர் அதோடு உப்பு, கறித்தூள்/மிளகாய்தூள் சேர்த்து பிரட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதனுள் டோபு துண்டுகளை போட்டு டீப் ஃபிரை செய்து எடுத்து ஒரு எண்ணெய் ஒற்றும் தாளில் போடவும்.
சுவையான டோபு பொரியல் தயார். இதனை மாலை நேர உணவாக(ஸ்நாக்ஸ்) தக்காளி கெட்ச்சப் அல்லது ஸோஸுடன் சாப்பிடலாம். அல்லது பக்க உணவாக சாப்பிடலாம்.
முறை 2
========
டீப் ஃபிரை செய்ய விரும்பாதவர்கள் டோபுவை சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு/கறித்தூள் சேர்த்து பிரட்டி ஒரு பாத்திரத்தில் சிறிது (~ 3 மேசைக்கரண்டி)எண்ணெய் விட்டு சூடாக்கி டோபு துண்டுகளை போட்டு இரு புறமும் திருப்பி முறுக பொரிய விட்டு எடுக்கலாம்.
இதனையும் ஸ்நான்க்ஸாக உண்ணலாம் அல்லது நூடில்ஸ், சேவை , இடியப்ப கொத்து போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


இதற்கு கட்டியான டோபுவை (Hard Tofu) பயன்படுத்தவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்களை பெயர் சொல்லி அழைத்ததர்க்கு மன்னிக்கவும்.டொபு என்றால் என்ன விளக்கவும்.

ஹலோ மேனகா, டோபு(Tofu) என்றால் சோயா பாலில் செய்யப்படும் பன்னீர். பசுப்பாலில் இருந்து பன்னீர் செய்வது போல இது சோயாப்பாலில் இருந்து செய்யப்படுவது. 100% வெஜிடேரியன் :) நிறைய புரதச்சத்து உண்டு. சுவையும் நன்றாக இருக்கும். பொதுவாக சைனீஸ், ஜப்பானீஸ், தாய் நாட்டவர் தங்கள் சமையலில் அதிகம் பாவிப்பர். கடைகளில் ஃபுரோஸன் செக்ஷனில் கிடைக்கும். இதில் இரண்டு வகை உண்டு. 1.Hard Tofu 2. Soft Tofu

நீங்கள் என்னை தாராளமாக பெயர் சொல்லி அழைக்கலாம் :) எனக்கு இன்னும் அவ்வளவு வயதாகவில்லை. அப்படியே வயதானாலும் பெயர் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். :)
-நர்மதா :)

நர்மதா ரோபுப் பொரியல் மிகவும் நன்றாக இருந்தது. நான் கறிதான் செய்திருக்கிறேன். எண்ணெயில் பொரித்தேன். நீண்ட நேரமெடுத்தது பொரிய, ஆனால் எண்ணெய்யாக இருக்கவில்லை. நன்றாக வந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த டோபு பொரியலின் படம்

<img src="files/pictures/aa272.jpg" alt="picture" />