பொன்னாங்கண்ணிகீரை சூப்

தேதி: June 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு
துவரம்பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
சீரகம், சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கல்பாசி - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று


 

துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். பருப்பை மசித்துக் கொள்ளவும்.
கீரையை ஆய்ந்து வெந்த பருப்பில் போடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சூப்பில் கொட்டவும். கடைசியாக உப்பு போட்டு இறக்கவும்.


சூப் குடிக்கலாம். சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பொன்னாங்கண்ணிக்கீரை கண் பார்வைக்கு சிறந்தது.

மேலும் சில குறிப்புகள்