கோதுமை இடியாப்பம்

தேதி: June 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 ஆழாக்கு
தேங்காய் - ஒரு மூடி
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - அரை தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி


 

கோதுமை மாவில் உப்பு போட்டு கொதிக்கும் தண்ணீரை விட்டு கரண்டியால் இடியாப்பக் கட்டையில் பிழியும் அளவிற்கு பிசறிக்கொள்ளவும்.
இட்லிச்சட்டியில் பிழிந்து வேக விட்டு எடுத்து தேங்காய்ப்பூ, சீனி, நெய் போட்டு பிசறவும். கடைந்த மோரில் துளி உப்பு போட்டு இடியாப்பத்தில் பிசறி வைக்கவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பிசறிய இடியாப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.


புட்டுக்கு வறுத்து அரைத்த மாவில்தான் இடியாப்பம் பிழியனும்.

மேலும் சில குறிப்புகள்