கோதுமை இனிப்பு

தேதி: June 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
சீனி - அரை கப்
நெய் - 50 கிராம்
ரிபைண்ட் ஆயில் - 50 கிராம்
முந்திரி - 25 கிராம்
பாதாம் பருப்பு - 3
ஏலக்காய் பொடி - சிறிது


 

ஒரு பாத்திரத்தில் 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு சீனியை போட்டு கொதிக்க விடவும். பாதாமை சிறிது சுடுதண்ணீரில் 5 நிமிடம் போட்டு தோலை உரித்து 4 ஆக நறுக்கவும்.
வேறு அடுப்பில் ஒரு நாண் ஸ்டிக் கடாயில் நெய்யும், எண்ணெய்யும் விட்டு முந்திரி, பாதாம் பருப்பையும் வறுக்கவேண்டும்.
அதிலே கோதுமையை கொட்டி சிறு தீயில் வறுக்கவும். சிவந்து வாசனை வரும்போது சீனித்தண்ணீரை ஊற்றி கிளறவும். ஏலக்காய்பொடி சேர்த்து கிளறி உதிரியாக இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்