கோதுமை லட்டு

தேதி: June 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் - 3
முந்திரி - 10
திராட்சை - 10
நெய் - கால் கப்


 

கோதுமை மாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் கோதுமை மாவை போட்டு நிறம் மாறி வாசம் வரும் வரை வறுக்கவும். வாசனை வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை போட்டு சர்க்கரை பொடியாகும் வரை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் பொடி செய்து வைத்திருக்கும் சர்க்கரையை வறுத்து வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
கோதுமை சர்க்கரை கலவையுடன் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும்.
அதனுடன் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறவும். விரும்பினால் நெய்யின் அளவை குறைத்துக் கொண்டு சிறிது பால் சேர்த்தும் கிளறலாம்.
எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து சிறு சிறு ஊருண்டைகளாக பிடித்து வைக்கவும். சூடாக இருக்கும் போதே பிசைய வேண்டும் என்று அவசியமில்லை, சிறிது நேரம் ஆறியதும் நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.
சுவையான கோதுமை லட்டு ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மாலை நேரச் சிற்றுண்டி.
அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த கோதுமை லட்டை செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ரெசிப்பி. நல்ல தெளிவா இருக்கு உங்க படங்கள். எங்க வீட்டில் நான் அடிக்கடி செய்யகூடியது. போன வாரம் நான் இது செய்தேன். ரொம்ப நன்றாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. இதில் பால் நான் சேர்ப்பதில்லை. பால் சேர்த்தால் சீக்கிரம் சாப்பிட்டு விடவேண்டும். அதனால் நான் நெய் சேர்த்து உருண்டை செய்வேன். நிற்ய்ய நாள் வைத்து சாப்பிடலாம்.

தாங்க்ஸ் கிதாஆச்சல்.

சூப்பர் ரெசிப்பி நல்ல தெளிவான படங்கள். நான் பொரிகடலை திரித்து நெய் சேர்த்து உருண்டை செய்திரிகிரென் அதுவும் சுவையா இருக்கும்,இதையும் ட்ரை பண்ணி பார்கிரேன் தாங்க்ஸ் கிதாஆச்சல்

naturebeuaty

நான் இந்த Goonder ( Edible gum) வஸ்துவை நெய்யில் வறுத்து போடுவேன் இது நல்ல க்ரஞ்சியாக இருக்கும்.. பார்த்தவுடன் செய்ய வேண்டும் போல இருந்தது... பால் சேர்க்காமல் செய்தேன்....

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Mam,

சத்துமாவு மாதிரி தான் வந்துச்சு.உருண்டை பிடிக்கமுடியவில்லை.காரணம் என்ன?

LathaJai

கொஞ்சம் நெய் அதிகமாக தொட்டு பிடிங்க!!! நல்ல லட்டு ஷேப்பில் இருக்கும். அவங்க ரெஸிபியிலே போட்டு இருக்காங்க பாருங்க!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் கீதா, இந்த வாரம் உங்க கோதுமை லட்டு ரெசிப்பி செஞ்சேன். ரொம்ப நல்லா இருக்கு. அளவுகளெல்லாம் மிகச்சரியாக எழுதி இருக்கீறீர்கள். என் பையனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கோதுமை மாவில் செய்தது மாதிரியே இல்லை. நல்ல ஹெல்தியான தின்பண்டமாவும் இருக்கு. இந்த ரெசிப்பி கொடுத்ததுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி.

இந்த ரெசிப்பியை செய்து பார்த்து mail அனுப்பிய அனைவருக்கும் மிகவும் நன்றி.

with love,
Geetha Achal

எப்படிங்க இப்படிலாம்???!! ரொம்ப அருமையா இருந்துச்சு. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி வனிதா.

Hai Geetha Mam,
just now i registed my name in this site its bcoz of u!yesterday i did this,it was really suberb!
Thank u
varshi

மிகவும் நன்றி வர்ஷி. நீங்கள் எங்கே இருக்கிங்க?? விரும்பினால் சொல்லலாம்.

Hai Geetha,
how r u?
Am in USA

ஹாய் வர்ஷி
எங்கே USA இருக்கிங்க?

chicago

ஹாய் வர்ஷி,
நான் albany,ny இருக்கென்.

ஹாய் கீதா எப்படி இருக்கீங்க, உங்க குட்டி பொண்ணு எப்படி இருக்காங்க.

நேத்து உங்க கோதுமை லட்டு செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.கோதுமை மாவில் செஞ்ச மாதிரியே இல்ல. நன்றி.

ஹாய் கவி,மிகவும் ச தோசம் பா.
பொன்ணு நல்லா இருக்கா.
உங்க குழந்தை எப்ப்டி இருக்காங்க??

நேற்று கோதுமை லட்டு செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறேன்.

என் கணவருக்கு கொடுக்கும்பொழுது இந்தியன் ஸ்டோரில் வாங்கியது என்று சொல்லிக் கொடுத்து விட்டேன். பின்னர் தான் அறுசுவையை பார்த்து செய்ததை சொன்னேன். :)
நன்றி கீதா

டான்யா
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

டான்யா,
அழகான பெயர்..
மிகவும் சந்தோசம் பா…அருசுவை வந்து ஒரு வாரத்திலேயே குறிப்புகள் செய்து அசத்துறிங்க…
எங்க இருக்கிங்க?
அன்புடன்
கீதா ஆச்சல்

கீதா,

நான் கலிபோர்னியாவில் இருக்கிறேன். இங்கு வந்து ஒன்றரை மாதங்கள் ஆகிறது. உங்கள் அழகு குட்டி செல்லம் ரொம்ப சமத்தாக தெரிகிறது... உண்மையில் எப்படி? :) உங்கள் குட்டியின் பெயர் என்ன?
இப்போது தான் முழு நேரமாக சமைக்க ஆரம்பித்துள்ளேன். அந்த ஆர்வக் கோளாறு தான். :)

டான்யா
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

hey we both are from same college yaar... i saw ur name in my friend munira's friends list... :)

Tanya

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

Nice to Know that you r friend of Munira..DId u studied in Crescent Engg...

ஹாய் கீதா ஆச்சல், இந்த குறிப்பை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நான் முந்திரிக்கு பதில் பாதாம், கொஞ்சம் நெய்+ low fat milk போட்டு செய்தேன். என் பெண்ணுக்கு மிகவும் பிடித்து விட்டது. நன்றி உங்களுக்கு.

வின்னி,
மிகவும் நன்றி. குழந்தைக்கு பிடித்ததா..மிகவும் சந்தோசம் .
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாச்சல் கோதுமை லட்டு வித்யாசமான சுவையோடு நன்றாகிருந்தது, நன்றி.

அம்மாவும், பொண்ணும் பார்க்க மிகவும் அழகாயிருக்கீங்க. கீதா, அக்க்ஷதா குட்டியப் பார்த்தா வாலு மாதிரி தெரியலையே சமர்த்தா அழகா போஸ் குடுத்திட்டிருக்காங்க பாருங்க. :-)

அன்புடன் :-).........
உத்தமி :-)

உத்தமி அக்கா,
மிகவும் நன்றி . உங்களுடைய அம்மா இப்பொழுது எப்படி இருக்காங்க?
நீங்கள் ஊரில் இருந்து வந்துவிட்டிங்களா? நான் கொஞ்சம் நாளாக வெளியூர் சென்றதால் அருசுவை பக்கம் வர முடியவில்லை.
அக்ஷ்தா இப்பொழுது தான் மிகவும் வாலாகிவிட்டாள்…போன வாரம் தான் அவளுக்கு 2வது பிறந்த நாள் கொண்டாடினோம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

hi I am Lekshmi from malaysia.I tried this laddu for a prayer.Everyone liked it.Thanks for a simple wonderful recipe.