சரியாக நிக்கமாட்டீங்கறா

இன்னும் என் பேபி (6மாதம்) சரியாக நிக்கமாட்டீங்கறா.காரணம் என்ன?

எடு அந்த பிரம்பை லதா வை ரெண்டு போடலாம்..என்னது 6 மாசத்தில் குழந்தை நிக்கனுமா?அது இப்ப தான் உக்கார பழகும் வயிசு .நிற்க இன்னும் 2 மாசமாவது காத்திருக்கனும்..இருங்க வறேன்.

எப்படி இருக்கீங்க குழந்தை எப்படி இருக்கிறாள். 6 மாதம் தானே ஆகிறது குழந்தை நிற்காததற்க்கு கவலை வேண்டாம். சில குழந்தைகள் 6 வது மாதத்தில் தான் உட்காரும்.என் பையன் 7 மாதத்தில் தான் நிற்க்க ஆரம்பித்தான் 8 மாத்தில் சுவரை பிடித்து நடக்க ஆரம்பித்தான் அவன் நல்ல நடக்க 1 வயதும் 2 மாதமும் ஆனது. முதலில் நானும் உங்களை போல தான் பயந்து டாக்டரிடம் காமித்தேன் சில குழந்தைகள் சீக்கிரத்தில் எல்லாம் செய்யும் சில குழந்தைகள் கொஞ்சம் லேட்டாக செய்யும் வாரிசு கூட இதுல காரணமாக இருக்கும்னு சொன்னாங்க . என் அம்மா சொன்னாங்க நானும் நிற்க்கவே 8 மாதம் ஆனதாம் அதனால நீங்க எதுக்கும் கவலை படவேண்டாம் குழந்தைக்கு மசாஜ் பண்ணிவிடுங்க முதலில் அவளை எழுந்து நிற்க்க வைக்க நீங்க ட்ரை பண்ணும் போது நல்ல கைதட்டி அவளை சந்தோஷப்படுத்துங்க அவளுக்கும் ஆசை வரும் நிற்க்க ஆசைபடுவாள். இப்ப 6 மாதம் ஆகிவிட்டதால் அவளுக்கு குழைந்த சாதம்,காய்கறி சூப்,பருப்புன்னு சேருங்க. ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க. லேசா மைக்ரேவேவில் ஹீட் செய்து கொடுங்க சளி பிடிக்காது.சரியா கவலை படாமல் குழந்தையின் எல்லா செயலையும் பார்த்து ரசித்து சந்தோஷமாக இருங்கள்.மற்ற சகோதரிகளும் வந்து பதில் தருவாங்க.

அன்புடன் கதீஜா.

லதா சொல்லி இருப்பது நாம குழந்தையை கையை பிடித்து சும்மா நிற்க்க வைத்தால் நிற்க்குமே அதை தான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சில குழந்தைங்க 8 மாதத்திலே நடக்கும். என் பெரியம்மா வீட்டு அக்கா பொண்ணு 8 மாதத்திலே நல்ல நடந்தால். அப்புறம் என் ப்ரெண்டோட பையன் நடக்க 1 வயதும் 8 மாதமும் ஆனது. இதை போல அவங்க யாரையாவது பார்த்து கேள்வி கேட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன். நானும் நாம குழந்தையை கையை நிற்க வைக்கும் போது குழந்தை கால் பலம் இல்லாமல் உட்கார பார்க்குமே அதைன்னு நினைத்துதான் பதில் சொல்லி இருக்கேன். என்னன்னு லதா வந்து சரியா சொன்னால் தான் தெரியும்.

அன்புடன் கதீஜா..

Hi seyedkatheeja
ஆமாம், நீங்க சொல்வது சரிதான்,பேபி கால் பலமில்லாமதான் நிக்க மாட்டீங்கறா.என்ன பன்றது சொல்லுங்க.இவளுக்கு பின் கூட பிறந்த குழந்தையை இடுப்ப்பில் வச்சுகிறாங்க, அவன் நல்லா நிற்கிறான்

LathaJai

ஓஹ் அதுவா லதா ஆமாம் 5 மாசம் ஆகும்பொழுதே கூட நிற்க வைத்தால் நிற்கும்..ஆனால் கவலையில்லை ஒரு 8 மாசம் ஆகும்பொழுது தானா நிற்கும்.இரண்டு காரணக்கள் இருக்கலாம் ஒன்று அதற்கு காலுக்கு அந்தளவு பலமில்லை இரண்டு அதற்கு நிற்க இஷ்டமில்லை..பெரும்பாலான குழந்தைகளுக்கு இஷ்டமிருக்காது..அப்படியாக இருக்கலாம்.
மட்டன் கால் சூப் செய்து கொஞ்சமாக கொடுக்கலாம்..மசாஜ் செய்யலாம் நல்ல கால் பலம் வரும்..ஒன்னும் கவலைப்படாதீங்க இன்னும் ரெண்டே மாசத்தில் தானா நிற்கும் நடக்கும்.
லதா பிறகு சவுகரியமா வருகிறேன்..இப்போ நேரம் இல்லை.டோன்ட் வரி

லதா, உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கா? ஆக்டிவ்வா இருக்கா? அது போதும். தானாக நிற்கும், நடக்கும். ஓடும். அப்ப இல்ல இருக்கு கதை. இதே லதா வந்து என் குழந்தை பின்னாடி ஓடி ஓடி .. முடியலை அப்படீன்னு சொல்லப்போறாங்க.
கால் பலத்துக்கு அரிசி களைந்த தண்ணீரை சுட வைத்து குழந்தையை குளிப்பாட்டும் போது பொறுக்கும் சூட்டில் விடவும்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ரொம்ப நன்றி தளிகா ஜெயந்தி மாமிக்கு.இப்பத்தான் நிம்மதியா இருக்கு.

LathaJai

லதா நான் சொல்ல வததை ஜே மமி சொல்லிட்டாங்க காலியில் மெசேஜ் டைப்பண்ணேன் ஆனல் போகல எரர்.

கால் பலம் இல்லை என்றால் சூப் கொடுக்கனும்.
எலும்பு சூப், நீங்க வெஜ் என்றால், தக்காளி சூப், பால் கீரை சூப், மிக்ஸ்ட் வெஜ் சூப் அப்படி கொடுங்கள்.
நான் வெஜ் என்றால் மட்டன் முட்டெலும்பு சூப் காரமில்லாமல் , ஆட்டு கால் சூப் கொடுக்கனும்.
காலில் நல்ல எண்ணை தேய்த்து மசாஜ் பண்னி அப்பரம் அந்த கஞ்சி தண்னீரை ஊற்றுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

குழந்தையை நீற்க வைத்தால், கால்கள் முன் நோக்கி மடிந்து உட்கார்கிறதா? என் பையனும் அப்படி தான் செய்தான். ஒன்னும் பயம் இல்லை. தளிகா, ஜெயந்தி மாமி சொன்னமாதிரி மஸாஜ் பண்ணுங்க. நம்ம ஜலீலக்கா சொன்ன மாதிரி சூப் கொடுங்க.

கதீஜா சொன்ன மாதிரி ஒவ்வோரு குழந்தையும் ஒரு மாதிரி. சந்தோசமா இருங்க.பயப்படாதீங்க

Praba
i am new to arusuvai.i saw your question.can i tell a suggestion.don't try to make him stand up in 5th month.there may be chance for bone bend.try to do that after sixth month.at this age they can be able to sit only.i am having a son.he is 11months old.now only he starts to walk with support.if you have doubt you see the baby growth chart.at 10 months age they can be able to stand with support.this is the normal growth chart.don't try the things so early.it will lead to danger.its my advise only.don't make me mistake

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

மேலும் சில பதிவுகள்