ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

ஆகா, தலைவி பட்டம் வந்ததும் கமிட்டி முடிவுன்னு உங்க முடிவ சொல்லிட்டு போறீங்களா?. இனிமே உங்களை அம்மான்னுதான் கூப்பிடனும், எல்லாரும் காலில் விழனும்(???)னு சொல்லுவீங்களோ. எல்லாம் பதவி படுத்தும் பாடு
Rajini

அஹா ரஜினி கடலராணிபட்டத்தை விட இது பரவாயில்லாப்பா.!!!
இது நான் எதிர்பார்த்தே.......... அஞ்[எயில்லபு]லி அஞ்சா புலி ஒகே.
இலா விஜய் டிவியில கலக்கப்போவது யாரு!!!! நிகழ்ச்சி பார்த்துட்டு அப்ப்டியே இங்க வந்து தலைப்பா போட்டுடீங்க போல
இலா,ரஜினி எனக்கு பட்டம் காத்தடியா..........
குழந்தைகளுக்கு பிரியமானதுதானே யாரு வெறுப்பா காத்தாடியை .....சொல்லுங்கப்பா பார்போம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மொக்கை,கடலைபோடுரவங்களை தான் நம்பகூடாது இந்த காலத்தில்.........ஹா ஹி ஹா ஹி ஹா ஹி.......... கூட்டமா குரூப் சேர்ந்த மாதிரி சபையோர் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கும் ஒரு பட்டம் சொல்லிட்டு பெயரா வைக்கீரிங்க பிள்ளைகளா...... சரி சரி ரஜினி,இலா இதுக்கெல்லாம் அழலாமா?
நானே துடச்சியுட்டுரேன் கோபமெல்லாமில்ல சந்தோஷம் தான் வருத்தபடுரதுக்கு என்னயிருக்கு ஜாலிக்குதானே நீங்களும்கோபடாதீங்க......ஜாலிக்குதான் எழுதினேன்

naturebeuaty

அஞ்சலி பட்டம் வாங்கிய களைப்பில் படுத்துத் தூங்கிட்டீங்களா?. வந்து காத்தாடி குடுத்த இலாவுக்கு நன்றி நவில்ந்துட்டுப்போங்க.உங்க தயவில கனவிலயும் கார் ஓட்டிட்டு, ஒரு 1 அவர் பெர்மிஷன் லயும் போய் காருவிடப் போய்யிருக்காங்க. பட்டம் நூலை அத்து உங்க கிட்ட இருந்து பிடுங்கறதுக்கு முன்னால வந்து உள்ளேன் ஐயா சொல்லீடுங்க
Rajini

கீழே விழுந்தாலும் மண் ஒட்டலைன்னு சொல்லற மாதிரி, தலைப்பில் இருந்து கடைசியில வைக்கிற புள்ளிவரை கோபத்தில சாமியாட்டம் ஆடிட்டு கடைசியில போனாப் போகுதுன்னு "கோபமெல்லாமில்ல சந்தோஷம் தான் வருத்தபடுரதுக்கு என்னயிருக்கு "ன்னு சொல்லி கட்சியின் உண்மையான் தொண்டர்ன்னு ஃப்ரூவ் செஞ்சுட்டீங்க. பரவாயில்ல விடுங்க நாங்களும் நீங்க விழுந்ததைப் பார்க்கலைன்னு சொல்லிடுறோம்.

ஒன்மோர்திங், பட்டம் குடுத்தது நான் இல்லிங்கோ. நன்றி எல்லாம் இலாவுக்கே சொல்லுங்க.-:)))
Rajini

அடா ரஜினி[கஜினி] என்ன கொட்டஎழுதியிருக்கானே புரியலையா! கண்ணு தெரியலையா! என்னமோ நிங்க குடுத்தா பட்டத்தாலா தூங்கிட்டுயிருக்கேன் என்ன கனவா கண்டுகிட்டுரிகிங்க.......அட சம்பந்தமில்லாம பதில் சொல்லுரீங்க..............கடல போட்டு உங்களுக்கு வாயெல்லாம் வலிச்சுருக்கும் கத்திகத்தி பேசி அழுத்தை அறுக்காதிங்க.........ரஜினி .எனக்கு வேலையிருக்குப்பா டின்னர் ரெடி பண்ணனும் நானிப்ப் எஸ்கேப்

naturebeuaty

அஞ்சு,ரஜி,இலா உங்க மூணு பேரோட லூட்டியை இப்பதான் பார்த்தேன் எனக்கு சிரிப்பு தாங்கல அதிலும் பட்டம் ர்ரொம்பவே அருமை அப்ப்பா நான் தப்பித்தேன் என் பட்டம் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்..

அன்பு சாதிக்கா ராத்தா பதிவை தேடி வெறுத்து போனேன்..கிடைக்கல சரி மேட்டருக்கு வாறேன் ராத்தான்னு கூப்பிடலாம்மு கேட்டு இருந்தேன் முந்தாநாள் இல்லையா? அதுக்கு சரி,வேணாம்னாவது சொல்லி இருக்கலாம் அப்படி இல்லாமல் தளிக்காக்குதான் அம்மா போல எனக்கு அக்கா போலன்னு சொல்லிட்டீங்களே ஆ ஆ ஆ(அழுகைதான்)தளிக்கா என்ன என்னை விட 10 வருஷம் மூத்தவளா? ஆ ஆ (அதே அழுகை)இப்படி என்னை இன்ஷல் பண்ணிட்டீங்களே!அவ உங்களை ஆண்டின்னு சொன்னா நம் ஊர் பிரகாரம் இப்படி யூஸ் பண்ண மாட்டோம் கிட்டத்தட்ட நம் இருவரின் ஊருக்கும் நிறைய பொருத்தம் உண்டு..அதனால் ராத்தான்னு கூப்புடட்டானு எவ்லோ பவ்யமா கேட்டேன் ஆ ஆ

ரஜினி,சாதிகா ராத்தா நீங்க என் கடையை பற்றி முன்பு கேட்ட நியாகம் அப்ப பதில் போட மறந்துட்டு..ஆமாப்பா புட் ஹாஸ்பிட்டாலிட்டி இருக்கு செட்டி செண்டரில் 3 கடை மற்ற ஏனைய இடத்திலும் கொஞ்டம் இருக்கு பெயர் சொல்ல விரும்பல இது பொது தளம் என்பதால் ஓகே..
தப்பா நினைக்கலதானே!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எல்லாரும் எப்படி இருக்கீங்க?
என்ன மர்ழி ஒரே பட்டம் மழையா பொலியிறாங்க. உங்க பட்டம் நல்லா இருக்கு. இலா நல்ல பட்டம் சூட்டறாங்க அவங்களுக்கு நாமே சூட்டலாமா? மரியம் ரொம்ப குறும்பா ஆகிடாலா? சிட்டி செண்டர்ல உங்க கடை இருக்கா மர்ழி எனக்கு இதுவர தெரியாதே.
அதிரா டான்சில்ஸ் ஆப்பரேஷன் டேட் பிக்ஸ் ஆகிட்டா நீங்க தயாராகிட்டீங்களா health wise.
எங்க மஹா போய்டீங்க ஆளயே காணும் உடம்பு எதுவும் முடியலயா?
இலா இத உங்க சொல்லனும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன் வரும்போது எல்லாம் மறந்து போய்டுறேன் இன்னக்கி தான் நியாபகம் வந்துச்சி. நீங்க உங்க கருத்துக்கு கீழ ஒரு வரி கொடுக்குறீங்கள்ள அது சூப்பர் பா என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. ரொம்ப பிடிச்சிருக்கு.

அல்லாஹு அக்பர்...ஸாரி மர்ழி..பர்மிஷன் கிரான்டட்...நான் உங்களுக்கு ராத்தாதான்.நீங்க எனக்கு தங்கச்சிதான்.நம் இருஊர்களுக்கும் ஒரு இணை பிரியாத பந்தம் உள்ளது.எந்த ஊரிலும் சம்பந்தம் வைத்துக்கொள்ளாத மக்கள் காயலில் மட்டும் தான் சம்பந்தம் வைத்துக் கொள்வர்.அதே போல் கல்யாணம் பண்ணி மாமியார் வீடு செல்லும் பழக்கம் எல்லா ஊரிலும் உண்டு.ஆனால் இவ்விரு ஊர்களில் மட்டும் வீட்டோடு மாப்பிள்ளை.(ஆமாம் ..அதென்ன மாமியார் வீடு?மாமனார் வீடு என்றுசொல்லக்கூடாதா?விஷயம் தெரிந்ததோழிகள் விளக்கம் சொல்லுங்களேன்.)
வாவ் சிட்டி சென்டரில் கடையா?அங்கு வுள்ள புட் கோர்டில் வுள்ள ஒரு கடையையும் விட்டு வைத்ததில்லை.
அரேபியன் ஹட் சவர்மா,கிரில்ட் சிக்கன்க்கு எஙக குடும்பத்தி ரசிகபட்டாளமே வுள்ளது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அப்பாப்பா ஒரு ஆட்டமே இங்கே நடக்குதே......
எனக்கு இதைப் பார்த்தா "மப்பட் ஷோ " பார்க்கிறமாதிரித்தான் தெரியுது. அதிலும் பெயர் வைப்பு வேறு. பேசாமல் போய் 3 ரெசிப்பி செய்து பின்னூட்டம் போட்டாலே எவ்வளவு நல்லது(என்னைப்போல்....:) )அதை விட்டிட்டு கூத்து நடக்குது இங்கே....... பறவாயில்லை.... ஒருவரும் முறைக்காதீங்க.

வித்தியா.... அதென்னப்பா... என் தொண்டையில் கத்தி வைப்பதைக் காட்டியா நான் வீரப்பெண் என தம்பிக்கு சொல்லப்போறீங்க? இது கொஞ்சம் இல்லை அதிகம் ஓவர்.....

சாதிகா அக்கா நீங்க புதியவர். என்னைப் பார்த்திருப்பீங்க இங்கு. உங்கள் கேள்வி நல்லாத்தான் இருக்கு. அதுதானே மாமா, மாமி வீட்டுக்கு போவதென்றும் சொல்லலாம்தானே.... நான் நினைக்கிறேன் பேச்சு வழக்கமாக வந்துவிட்டது. அவ்வளவுதான் விஷேட காரணம் இருக்காது. அதுசரி இந்தியாவில் உங்க ஊரில் மப்பிள்ளை வீட்டுக்கு பெண் போவதில்லையா? நான் நினைத்தேன் இந்தியா முளுவதும் அப்படித்தான் என்று. இலங்கையிலும் நாங்கள் எங்கள் வீட்டில்தான் இருப்போம். மாப்பிள்ளைதான் பெண்குடும்பத்தோடு வந்திருப்பார். என்னைப் பொறுத்து இதனால் பிரச்சனைகள் குறைவு. நான் இது பற்றி ஒரு தலைப்பு போட்டுக் கதைக்கலாம் என நினைப்பேன் பின் விட்டு விடுவேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மர்ழி,
உங்க பொண்னு ஸ்கூலுக்கு போறாளா இல்ல நீங்க போறீங்களா? ஆளையே காணமே, உங்களை மட்டும் இல்ல அதிரா, மஹா வையும் காணலை. மரியம் எப்படி இருக்கா?. ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சா?.

அதிரா,
அறுசுவையில நிறைய ரெசிபி ட்ரை செஞ்சு பார்த்துட்டு இருக்கீங்களா?. அடடா, டான்சில்ஸ் செஞ்சா 2[அ] 3 நாள் நல்லா சாப்பிட முடியாதுன்னு இப்பவே வெரைடியா கட்றீங்களா?. அசத்துங்க.

மஹா,
எங்க இருக்கீங்க?. சீக்கிரம் வாங்க. அறுசுவை உங்களைத் தேடுது. உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?.

விஜி,

பால்கோவா சூப்பர். நான் அடுத்த வெகேசன் நேரா பாஸ்டந்தான். அங்க எங்க போறோம்னு கேட்கறீங்களா?. வேற எங்க நேரா உங்க வீட்டுக்குத்தான். சூப்பர் மெனு ரெடி செஞ்சு வைச்சுக்குங்க.

ஜலீலாக்கா,

ஊருக்குப் போறீங்களா?. எப்போ?. முடிஞ்சா ஊருக்குப் போவதற்கு முன்னாடி எனக்கு ஒரு சூப்பர் கேரட் ஊறுகாய் ரெசிபி சொல்லுங்கக்கா :)) இல்லைன்னா பாவம் சின்னப் பொண்னு நீங்க வர்றதுக்குள்ள ஏங்கிப் போயிடுவேன் -:(

காயத்ரி,
உங்களுக்கு சோயா சைட்ல பதிவு இருக்கு பாருங்க

தீபா,
என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு இருக்கீங்க போல. ஆள் எங்க இருக்கீங்க?. திடீர்ன்னு பார்த்தா தசாவதாரம் படத்துக்கு PRO ஆயிட்டீங்க :) சும்மாதான் சொன்னேன். வாங்க சீக்கிரம்.
Rajini

மேலும் சில பதிவுகள்