ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

கதீஜா,உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன்,பார்க்கிலையா?அரட்டை அடிக்கலாம் பகுதி 3 இல் இருக்கு.பாருங்களேன்.

இல்லை அதிரா அப்படியெல்லாம் இல்லை இந்தியாவி பெண்வீட்டில் ஆண் நிற்கலாம், நிற்பார்கள் ஆனால் ஒன்றிரண்டு நாட்கள் தான்..அது ஒரு வாரம் ஆனால் கூட கேவலமாக பேசுஆர்கள்.
இந்தியாவிலும் பல இடங்களிலும் உங்களைப் போலத் தான்..சாதிகா மர்ழியா ஊர் போல.
கேரளாவில் கன்னூர் என்ற இடத்தில் எல்லாம் அப்படி தான் பெண் வீட்டுக்கு பைய்யன் வர வேண்டும்.
எது எப்படியோ எல்லோரும் நிம்மதியாக இருந்தால் போதும்...
1 வயது குழந்தையானாலும் சரி 100 வயது பட்டியானாலும் சரி எல்லோருக்கும் நிம்மதி சந்தோஷம் அவசியம்.அவரவர் விருப்பம்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்..சடங்கு சம்பிரதாயம் எதற்கும் ஒரு தடையாகக் கூடாது

தளிகா நிட்சயம் தொடர்வோம் எனக்கு இப்போ நேரமில்லை, வருகிறேன்.... ரஜனி.... மற்றும் எல்லோரும் இதுபற்றிக் கதையுங்களேன்..... தளிகா யாராவது துரத்தினால் ஓடிவிட்டுத் திரும்ப வரலாம்.... இது ஒன்றும் புதிதில்லையே எமக்கு..... எனக்கும் அந்தப் பயம் இருந்ததால்தான் தனியாக தலைப்பு போட பயமாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தாளிகா, நீங்கள் சொல்வது சரிதான்.
அப்படி தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை தேவையானால் நாம் நிறைய சகித்துக் கொள்ளவேண்டும். என் கேஸை எடுத்துக்கொண்டால் "சமையல்" உட்பட நிறைய விசயங்களை சகித்துக்கொண்டாயிற்று.
ஆனால் என் குழந்தைகாக நான் விட்டுக் கொடுத்துப் போகிறேன்.
ஆயிரம் ஆனாலும் நம் அப்பா, அம்மா நமது இரத்த சொந்தங்கள்தான் நமக்காக கண்ணீர் விடும் / கஷ்டப் படும்.

நாம் என்னதான் உயிரை கொடுத்து பாடுபட்டாலும் மாமியார் வீடு என்று வரும் போது (நாம் அவர்களொடு இருந்தாலும் / அவர்கள் நம்மோடு இருந்தாலும்) நமது கஷ்டம் அவர்களுக்கு புரியாது. புரிந்தாலும் ஆறுதல் கிடையாது. இது எனது தாழ்மையான கருத்து.

என்ன மர்லியா

என் மீது கோபமா? நான் சும்மா விளையாட்டுக்குத் தான் உங்களுக்கு பட்டம் சூட்டினேன். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு பதிலிடவே இல்லை.

இப்படியெல்லாம் செய்தீங்கன்னா நான் உங்க வீட்டுக்கு வந்துடுவேன். ஏன்னா என் office mountroad இல் தான் இருக்கு.

இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை பார்த்தேன்.தளிக்கா ,காயல்பட்டினம்,கீழக்கரை பகுதியில் ராத்தா,லாத்தா என்று அக்காவைத்தான் சொல்லுவார்கள் .இலா, ராத்தாவுக்கு ஆண்பால் காக்கா.கரெக்டாக சொல்லிட்டீங்க.அதுக்காக த்ங்கச்சிக்கு ஆண்பால் மைனாவா என்றுகேட்டு விடாதீர்கள்.எல்லோரையும் போல் தம்பிதான்.
அதிரா உங்கள் ஸிலோன் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு.இந்தியாவில் கீழக்கரை,காயல்பட்டினம் தொண்டி போன்ற ஊர்களில் மட்டும் தான் வீட்டோடு மாப்பிள்ளை.
பையனுக்குவீடு இல்லேனாலும் பெண்ணுக்கு கண்டிப்பாக வீடு கொடுத்தே ஆகணும்.
நான்கு பெண் பிள்ளைகள் இருந்தாலும் நாண்கு பேருக்கும் வீடு கட்டிக்கொடுத்தே ஆகவேண்டும்.பெற்றோருக்கு வசதி இல்லாமல் போனால் அந்த கடைமை உடன்பிறந்தோருக்கு உண்டு.
அனேகமாக கடைசி பெண் வீட்டில் தான் பெற்றோர் இருப்பார்கள்.
கிட்டதட்ட ஸிலோன் மாதிரிதான்.இம்முறையினால் மாமியார் கொடுமை,ஸிலின்டர் வெடிப்பு..போன்ற பிரச்சினை எதுவும் இருக்காது.
இந்த ஊர்களின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்..
உள்ளூரிலேயே சம்பந்தம் வைத்துக் கொள்ளுவது.
இதனால் பத்திரிகைகளில் படிக்கும் அனேக பிரச்சனைகள் வருவது மிகமிக அபூர்வம்.
அனேகமாக பெண்,மாப்பிளை வீட்டினர் ஒருவருக்கொருவர் பழக்கமான்வர்களாகவும்,சொந்தங்களாகவும்
இருப்பதால் பிரச்சினை வருவது என்பது அரிது..
ஸாதிகா

arusuvai is a wonderful website

சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தருவதாகவே இருந்திருக்கிறது. நம் உறவினர்களையும், நண்பர்களையும் ஒருங்கினைக்கும் பாலமாகவும் , நமக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால் மட்டுமே இது போன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பு. ஆனால் அதுவே கண்மூடித்தனமாக மாறி அனைவரின் நிம்மதிக்கும் உலைவைக்கும் என்றால் அது கண்டிப்பாக தேவையே இல்லை.

சில கண்மூடித்தனமான விஷயங்கள் தாளிகா சொன்னது போல எத்தனையோ உயிர்களை காவுவாங்கி இருக்கிறது. நாம் இந்த இடத்தில் வெடித்த கேஸ்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. முதியோர் இல்லங்களில் ஓடும் கண்ணீரையும் சேர்த்துதான் யோசிக்க வேண்டும். பாதகம் எந்தப்பக்கம் நடந்தாலும் தப்பு தானே. எனக்குத் தெரிந்து மாமியாரை தாயாராக மதித்த மருமகள்களும் உண்டு, ஆனால் துரதிஷ்டம் அவர்கள் மாமியாரால் மனித ஜென்மமாகக் கூட மதிக்கப் படாததுதான். அதேபோல மருமகளை மகளாய், வீட்டுக்கு வந்த மகாலஷ்மியாய் நினைக்கும் மாமியார்களும் உண்டு. ஆனால் விதி வேறுவிதமாய் இருக்கும். ஆக மாமியார், மருமகள் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் வரமாய் அமைவது சில இடங்களில் மட்டுமே நடக்கும் அதிசயம்.

பிரச்சனை சின்னதாக இருக்கும் போதே இது இப்படித்தான் முடியும் என்று சொந்தங்களை அறுத்துக்கொண்டு போவதும் தவறு, பிரச்சனை விபரீதமாய் இருந்தும் அதையெல்லாம் சகித்து அந்தக்கால கண்ணாம்பாள் மாதிரி அழுது சகிப்பதும் தப்பு. பரஸ்பரம் விட்டுக்க்டுப்பது என்பது எல்லோருக்கும் புரிந்து இருந்தால் மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் வந்தாலும், பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும் இல்லை இருவரும் தனியாக இருந்தாலும் எதுவுமே பிரச்சனையாக இருக்காது.
Rajini

சரியான நேரம் பார்த்து வருவோம்ல..................................
என்னதுப்பா 4 நாள் நான் லீவு அறுசுவைக்கு அதற்குள் பாகம் 3 முடிந்து பாகம் 4 (2) பதிவு ஆரம்பிச்சாச்சா......... ஜலீலா அக்கா பாகம் 4 என்று போட்டு இருக்கிறாங்க ,இன்னுமொரு பாகம் உள்ளது எதில் பதிவு போட................

தோழியரே எல்லாரும் எப்படியிருக்கிறீங்க

மர்ழி, என்ன மேடம் எப்படியிருக்கிறீங்க, மரியம் எப்படியிருக்கிறாள், ஸ்கூலில் சேர்த்தாச்சா? மாமி ஊருக்கு போய் இருப்பதை பதிவில் இருந்து பார்த்தேன்.
பிறந்த வருஷத்தை போட்டவுடன் மஹா என்று கூப்பிட்ட நீங்க அக்கா என்று ஒரு பதிவில் சேர்த்து இருப்பதை பார்த்தேன் வேண்டாம் மர்ழி அந்த அக்கா என்று எல்லாம் சும்மா முன்பு போலவே மஹா என்றே சொல்லுங்க ஓ.கே வா
ஹாய் விஜி, ரஜினி,அஞ்சலி, இலா, எப்படியிருக்கிறீங்க? இன்று சில பேரிடம் சார்ட் பன்னியாச்சு

அதிரா ,தளிகா, ஜலீலா அக்கா,ஜெயந்தி மாமி,கதீஜா, காயத்திரி, ஷாரதா,

புதிதாக வந்துள்ள சபிதா, சாதிகா நீங்களும் எப்படியிருக்கிர்றீங்க

இப்போது கொஞ்சம் பிஸி மறுபடியும் விரிவான பதிவு போடுகிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அரட்டையில் ஒரு பிரசங்கம்
நன்றாகவே போகிறது. எனக்கு உடல் நிலை இன்னும் சரியாகவில்லை. இன்று முளுவதும் படுத்தேன்.... இப்போதான் கொஞ்சம் உசார் வந்தது... உடனேயே வந்துவிட்டேன்.

நான் அடிக்கடி நினைப்பதுண்டு, இந்த மாமி வீட்டுக்கு பெண் போவதுபற்றிக் கதைக்க வேண்டும் என்று. சரி பிழை கதைப்பதற்காக அல்ல, தெரிந்து கொள்ளும் ஆவலில்தான்.

நான் நினைத்துக் கவலைப்படுவதுண்டு, 20/21 வயதுகளில் பெண்ணுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துவிடுகிறார்கள், அத்துடன் அவர் புகுந்தவீடு போய்விடுகிறார், அப்போ அந்தச் சின்ன வயதிலேயே தாய் தந்தை சகோதரரைப் பிரிந்து விடுகிறார்... இது எவ்வளவு கொடுமை. ஒரு வீட்டில் ஆண்பிள்ளையை விட பெண் பிள்ளைதான், அதிகம் ஒட்டி வாழ்கிறார், அதாவது... பார்த்துப்பார்த்து அலங்கரிப்பது, பூமரங்கள் நடுவது, ஏன் கோழி, ஆட்டுக்குட்டி.... பூனை நாய் இப்படி எல்லாமே செய்வார்கள், அதைவிட படிக்கும் நேரம்/வேலைக்குப்போகும் நேரம் தவிர மற்றபடி வீட்டையே சுற்றி வருவார்கள், வீட்டிலுள்ளவர்களுடன் கதைத்துக்கொண்டே இருப்பார்கள்... இப்படிப்பட்ட ஒருவர் வீட்டை விட்டுப் போனால், அந்த வீட்டின் நிலைமைதான் எப்படி இருக்கும், ஆசை ஆசையாக தான் உருவாக்கியதத்தனையும் விட்டு விட்டுத்தானே போகிறார், இது எவ்வளவு கவலை.

ஆண்பிள்ளைகள் அப்படியில்லைத்தானே, வீட்டில் நிற்கும் நேரம் குறைவு , இரவில்தானே வீட்டுக்கு வருவார்கள்(பொதுவாக)... அவர்கள் திருமணம் முடித்து வீட்டை விட்டுப் போனால் பெரிதாக மாற்றம் விளங்காதல்லவா? அதிலும் அவர்கள் ஆண் என்பதால் நினைத்தவுடன் வந்துவிட்டுப் போகலாம். பெண் என்றால் அப்படியா? எத்தனை பேரிடம் அனுமதி பெறவேண்டும்... நினைத்தவுடன் வீட்டுக்குத் திரும்ப முடியுமா?

எங்கள் மாமா, திருமணம் முடித்தது எங்கள் ஊரில்தான், 10 நிமிடத்தில் அவர்கள் வீட்டுக்குப் போய் விடலாம். அப்போ அவர் காலை எழுந்து முகம் கழுவி, ரீ குடித்துவிட்டு, அம்மம்மாவிடம் வந்துவிடுவார், இங்கே குளித்து உடை மாற்றிக்கொண்டு, அம்மம்மாவின் ரீயைக் குடித்துவிட்டு மாமியிடம் போய்ச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குப் போவார். பின் வேலையால் வந்து, மாமியையும் அழைத்துக்கொண்டு அம்மம்மாவிடம் வருவார், இரவு 8/9 மணிபோல்தான் திரும்பிப் போவார்கள். இது ஆண் என்பதால் இப்படி நடக்கிறது, பெண் என்றால் ஒரே ஊரில் இருந்தால்கூட முடியுமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எங்களுக்கு இங்கு இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் நான் இதுபற்றிக் கதைத்தேன், அவர்கள் சொன்னார்கள், ஐயோ ஊருக்குப் போனால் மாமியார் வீட்டில்தான் தங்க வேண்டும், நான் முடிந்தவரை வெளிநாட்டில்தான் இருப்பேன் என்று. என்னைப்பொறுத்து, மாமா, மாமியைச் சமாளிக்கலாம் ஆனால் இந்த சகோதரர்கள் மனைவிமார், பிள்ளைகள் என்று எல்லோரும் ஒன்றாக இருப்பதுதான் கஸ்டமோ தெரியவில்லை. பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்தாலே ஒத்துப் போவது கஸ்டம், ஒரே வீட்டில் எப்படி?

ஆனால் சம்பிரதாயம் அதுதான் என்றால் சமாளித்து நடக்கத்தானே வேண்டும்.

ஆனால் என்னைப்பொறுத்து மாப்பிள்ளை பெண் வீட்டுக்கு வந்தால், அவரை ராஜாபோல்தான் கவனிக்கிறார்கள், எங்களூரில் குடும்பத்தில் மூத்த மாப்பிள்ளையாக ஒருவர் வந்தால் தந்தைக்கு அடுத்தபடி அவர் தான் அக் குடும்பத்தின் பொறுப்பாளி ஆகிறார். இதனால் பெண்ணுக்கும் எந்தப் பிரச்சனையுமே இல்லை. ஆண்கள் வேலைக்குப் போவார்கள், வீட்டுக்கு வந்தாலும் எந்தப் பொறுப்பும் கிடையாது, ஆனால் பெண் ஒரு குடும்பத்துள் போகிறபோது... சமையலறை யிலிருந்து சகலதையும் சமாளிக்க வேண்டிய நிலை வருகிறது. அதே பெண் தாய் வீட்டிலேயே இருந்தால், எல்லாவற்றையும் தாயும் இளைய சகோதரங்களும் செய்து விடுவார்கள்.

என்னைப்பொறுத்து திருமணமானதும் என் ஹஸ் வந்து எங்களுடன் இருந்தார். அம்மா வழமைபோல் வீட்டை சமையலை கவனிப்பார். அப்பா, வெளி வேலைகள் பில் பேமென்ற் அத்தனையும் செய்வார். அப்போ எங்களிருவருக்கும் எந்தப் பொறுப்பும் இருக்கவில்லை. காலையில் ரீ ஊத்திவிட்டு அம்மா எழுப்புவா, அதேபோல் மாலையில் இருந்தாற்போல் ஹஸ் சொல்வார் அந்த பீச்சுக்கு ஒருக்கால் போய் வருவோமே... என்றதும் உடனேயே நான் வெளிக்கிட்டு விடுவேன், அம்மா போவிட்டு வருகிறோம் என்று மட்டும் சொல்வேன்... எங்கே போகிறாய்.... எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று கேக கேட்க ஓடி விடுவேன்... இது எமது வீடென்பதால், திரும்பி வரும்போதுகூட எந்தப் பயமும் இருக்காது சாப்பாடு றெடியா என்றபடி உள்ளே நுழையலாம்... ஆனால் மாமி வீட்டில் இது சாத்தியப்படுமா? ஆனால் சில இடங்களில் நல்ல தாக அமைந்துவிடுகிறது, எல்லோரையும் குறை சொல்ல முடியாது, இருப்பினும் மாமா,மாமி என்றால் எமக்கு ஒரு பயம், மரியாதை இருக்கத்தானே செய்கிறது.

எல்லோரும் எழுதுங்கள். தவறிருப்பின் மன்னிக்கவும். இது ஒரு தவறான கலந்துரையாடல் என யாராவது நினைத்தால் தயவு செய்து ஆரம்பத்திலேயே சொல்லிவிடவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்