ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

இலா.. என்ன தப்பிக்கப் பார்க்கிறீங்க கொஞ்சம் விரிவாக எழுதுங்க.

தளிகா, ரஜினி, ஸாதிகா அக்கா , சாரதா....உங்கள் பதிலைப் படிக்கப்படிக்க நன்றாக இருக்கிறது, இன்னும் எழுதுங்க, மஹா, மர்ழி..... எங்க போயிற்றீங்க அஞ்சலி... பட்டத்துடன் எஸ்கேப்பா? எல்லோரும் வாங்க ..... பெயர் குறிப்பிடவில்லையே எனக் குறைநினைக்கவேண்டாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நான் கல்யாணம் ஆகி 20 நாளில் இங்கு வந்தேன்... கடைசியாக இந்தியா போனது என் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்று என் வேலையை விட்டுவிட்டு போனேன்... 2006ல்... இப்போதக்கி இதோட நான் நிருத்துறேன்....
மொத்தம் நாங்கள் மாமானார் மாமியுடன் ஒரு 20 நாள் கூட இருந்ததில்லை... அதே போல தான் என் கணவரும்.. 10 நாள் கூட எங்க வீட்டில் இருந்ததில்லை...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதிரா,
நீங்க எழுதியதைப் படிக்க நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல உங்கள் ஊரில் இந்தப்பழக்கம் [பொதுவாக] இருப்பதால் பிரச்சனையில்லை. உண்மையிலேயே ஒரு நல்ல ஐடியா இது.

ஆனால் , திருமணம் முடிந்து ஆண்வீட்டிற்கு பெண் போகும் வழக்கம் உள்ள இடங்களில் பெண்வீட்டிற்கு ஆண் வந்தால்............ பெண்னைப் பொருத்தவரை இது போல நடந்தால் ரொம்ப நல்லதுதான். நார்மலா, ஆண்கள் வேலைக்குப் போய்விடுவதால் அவர்களுக்கு வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அப்படி இருக்கும் நேரத்திலும் ரிலாக்ஸ்டாக சந்தோசமாக இருப்பதையே விரும்புவார்கள். மருமகன் என்றால் பெண்வீட்டு மரியாதையும் சேர்ந்துவிடும். அதனால் ஆண் இடம்மாறும் போது பெரிய அளவில் பாதிப்பு வீட்டில் இல்லை. மேலும் ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களும் இல்லை. ஒரு கஷ்டமான சூழ்நிலையில் கூட அவர்களால் திடமாக இருந்துவிடமுடியும். இதையெல்லாம் பார்க்கும் போது ஆண் பெண் வீட்டிற்க்குப் போவது சரிதான்.ஆனால் சமுதாயவழக்கத்தில் இருந்து மாறுபட்டு இதுபோல செய்யும் போது, சொசைட்டியில் அவர்கள் நிலை என்னவாக இருக்கும். இது போன்றவற்றை கிண்டலடித்து தூற்றி மற்றவர்களை காயப்படுத்துவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கும். அது அந்த ஆணை மட்டும் பேசாது. அவரது பெற்றோர், உடன் பிறந்தவர் என அனைவரையும் மனவேதனைக்கு உள்ளாக்கும். அதன் எதிரொலி எப்பொழுதேனும் வீட்டில் தலைகாட்டினால் ?. புகுந்தவீட்டிற்கு போகாமல் தன்வீட்டில் இருக்கும் பெண்னிற்கு, கணவனின் உறவுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் பழகுவதற்க்கும் வாய்ப்புகள் குறைவே. இதனால் எப்பொழுதாவது பார்க்கும் போது, அங்கு போகும் போது விருந்தாளி போன்ற உணர்வு தோன்றுமே தவிர ஒரு ஒட்டுதல் இருக்காது. அவர்களுக்கும் அவ்வாறே. இதனால் நாளடைவில் நிறைய சொந்தங்களை இழக்க நேரிடும். இதுவே பெண் புகுந்தவீட்டில் இருந்தால் புதுபுது சொந்தம், அவர்களுடன் பழகும் வாய்ப்பு இதெல்லாம் அதிகம். [அதிரா, நான் உங்களிடத்தைப் பற்றி சொல்லவில்லை]

ஆனால் திருமணத்திற்குப் பின் பெண்கள் மாமி வீட்டிற்கு போகும்போது பாதகம் என்று பார்த்தால், யாரும் அறிமுகம் இல்லாத புது இடத்திற்குப் போகிறோமே என்ற டென்சன் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களாகட்டும், வேலைக்குப் போய் வீட்டுக்கு வரும் பெண்களாகட்டும் அந்தப் புது இடத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொண்டு நடக்கவேண்டும். சமையல், பழக்கவழக்கம் இப்படி எல்லாம். பிறந்த வீட்டில் செல்லமாய் இருந்துவிட்டு இங்கு வந்து இருக்கும்போது யாராவது சொல்லும் சிறு சொல்கூட அவர்களுக்கு பெரியதாகத் தோன்றும். இதனால் அவர்களுக்கு அவர்கள் மீதே தோன்றும் செல்ஃப் சிம்பதி காரணமாய் அழுகை, கோபம் எல்லாம் வரும். அதை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும் போது பிரச்சனை ஆரம்பிக்கும். புகுந்தவீட்டாருக்கோ இவளது ரியாக்சன் கண்டு வேறுவிதமாய் பிரச்சனை கிளப்புவார்கள். பெண்கள் இயற்கையிலேயே உணர்வுகளின் குவியல் -:D . கோபப்படுவதுபோல் அவர்களால் எளிதாக உறவாடவும் முடியும். சாரதா சொன்னது போல் இதில் சகிப்புத்தன்மையும் சேர்ந்துவிடும். அதனால் விரைவிலேயே பிரச்சனைகளை பின் தள்ளி வாழப் பழகிக்கொள்வார்கள். இப்படிப்பார்த்தால் பெண் புகுந்தவீடு செல்வது சரி எனத்தோன்றும்.-:)

இவை என் கருத்துக்கள்தான். நானும் திருமணம் முடிந்து 15 நாளில் இங்கு வந்து விட்டேன். பின் வெகேசன் போகும் போது இருப்பதுமட்டும்தான். இதனால்தான் நான் முதல்பதிவிலேயெ சொன்னேன் " பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது என்பது எல்லோருக்கும் புரிந்து இருந்தால் மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் வந்தாலும், பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும் இல்லை இருவரும் தனியாக இருந்தாலும் எதுவுமே பிரச்சனையாக இருக்காது".

அதிரா, தமிழ்நாட்டில் நாத்தனார்[ Sisterinlaw], கொழுந்தனார் [ Brotherinlaw] என்று உறவை சொல்வதுண்டு. எதற்காக என்றால் , நாத்தனார் என்பது "நாற்று ஆனார்" அதாவது நாற்று ஓரிடத்தில் இடப்பட்டு [நாற்றாங்கால்] தகுந்த நிலை வந்ததும் வயலில் நடப்படும். அதாவது புகுந்தவீட்டில் இருக்கும் பெண் இன்னொரு வீட்டிற்கு சென்று கதிராக சொந்தங்களுடன் செழித்து இருக்கப்போகிறவள். ஆனால் கொழுந்தனார் என்பது " கொழுந்து ஆனவர்" அதாவது புகுந்தவீடு எனும் மரத்தில் புது கிளையைப் [சொந்தங்களை] பரப்ப கொழுந்தாக இருப்பவர் என்பதாகும். எங்கேயோ கேட்டது -:))
Rajini

அதிரா
உங்கள் கலாசாரத்தில் இது ஆரம்பத்தில் இருந்தே ஊறி இருப்பதால் ஆண்கள் பெண்கள் வீட்டில் இருப்பது பழகிவிட்டது.
ஆனால் இங்கு தமிழ்நாட்டில் எத்தனை ஆண்கள் மாமனார், மச்சினரோடு சுமுக உறவு வைத்துக்கொள்கிறார்கள்.? மிகக் குறைவு.
ரஜினி சொன்னது போல் ஆண் பெண் வீட்டுக்கு செல்வது ஒரு கேலிக்குரியதாகி விடுகிறது. அந்த ஆணுக்கு அதில் ஆட்சேபனை இல்லை என்றாலும் சமுதாயம் அவனை விடுவதாய் இல்லை.
" உனக்கென்னப்பா மாமியார் வீட்டு சாப்பாடு, காலாட்டிக்கொண்டு சாப்பிடலாம். எங்களுக்கு அப்படியா, கஷ்டப்பட்டால்தான் சாப்பாடு" என்று ஆண்கள் வட்டத்திலேயே பேசப்படும். இது ஒரு கட்டத்தில் ஒரு ஆணின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் விசயமாகிவிடுகிறது. இது கடைசியில் கணவன், மனைவிக்குமிடையே ப்ரச்சினையை உருவாக்கிவிடும்.
பொதுவாய் இங்கிருக்கும் திருமணமான பெண்கள் மாமியார் வீட்டில் இருந்தால்தான் ஒரு மரியாதை அம்மா வீட்டில் உருவாகும். நமக்கு சகோதரர்களோ,சகோதரிகளோ இருந்தால் நாம் நம் அம்ம வீடு என்று போய் இரண்டு நாள், ஒரு வாரம் என்று தங்கலாம். அதுதான் நமக்கு மரியாதை. அங்கியே போய் டேரா அடித்தால் அங்கு வாழ வந்திருக்கும் பெண் (அண்ணி) நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் நாம் "ப்ரைவசி" எதிர்ப்பார்ப்பது போல் அவர்களும் எதிர்பார்ப்பார்கள்.

பொதுவான கருத்து: ஆணோ, பெண்ணோ திருமணம் ஆகிவிட்டது என்றால் தனிக்குடித்தனம் வைத்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தன் குடும்பம் என்ற பொருப்பு வரும். அது வரைக்கும் இரவெல்லாம் ஊர் சுற்றிய ஆண்கள் கூட சரியாய் வீட்டுக்கு வருவார்கள். சேமிக்கும் எண்ணம் வரும். (கூட்டுக் குடும்பம் எனில் கும்பலில் கோவிந்தா தான், செலவு எவ்வளவு ஆகிறது என்றும் தெரியாது. மேலும் மனைவி தனியாகவா இருக்க்ப்போகிறாள், அதான் அண்ணி , நாத்தனார், கொழுந்தன் என்று ஒரு பட்டாளமே இருக்கிறதே பொழுது போக்க என்று தின்மும் லேட்டாக வரும் பழக்கம் தொடரும்).

ஒரு பண்டிகை நாள், திருவிழா, விடுமுறை என்று அனைவரும் ஒன்று கூடினால் தான் உறவுகலுக்குள் ஒரு மரியாதை வரும். அதை விட்டு முழுதும் அம்மா வீட்டையே சார்ந்திருப்பதும், அல்லது மாமியார் வீட்டில் இருப்பது வீண் ப்ரச்சனைகளையே உருவாக்கும். நமக்கும் நமது குடும்பம் என்ற பொறுப்புணர்ச்சி வராது.

இருவர் சம்பாத்தியம், குழந்தைகள் நலன் என்று வரும் போது நாம் யாரை சார்ந்திருக்கிறோமோ அங்கு பொருளாதார மற்றும் வீட்டு வேலைகள் ரீதியாக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும். இதற்கு சகிப்புத்தன்மை வேண்டும். இதுவும் நம் குழந்தைகள் வளரும் வரை அப்புறம் கால் ஓட்டத்தில் எல்லாம் மறைந்துவிடும்.

ரஜனி, சாரதா

மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க, இவ்வளவு விஷ்யம் இருக்கிறதா என்றுதான் எண்ணுகிறேன், ஆனால் ஒன்றை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை, அதாவது பெண் மாமியார் வீட்டுக்குப் போனால்தான் பொறுப்பு வருகிறதென்பதை. அப்படியாயின் ஆணுக்கு எப்படிப் பொறுப்பு வருகிறது?. என்னைப்பொறுத்து திருமணமானதுமே இருவருக்கும் பொறுப்பு தானாக வந்துவிடுகிறது.

நீங்கள் சொல்வது சரி, ஊர் வழக்கப்படிதான் எதுவும் நடக்கும், பெண் வீட்டில் ஆண் தங்குவது முறையில்லை என்றால் மாறித்தங்கினால் ,பகிடி பண்ணுவார்கள் அது உண்மை, ஊரோடுதானே ஒத்தோட வேண்டும். ஆனால் ஒரு விஷயம்,

எனக்கு உங்கே திருநெல்வேலியில் ஒரு தம்பி இருக்கிறார்... இன்ரநெற் மூலம் அறிமுகமானவர், அவர் எழுதியிருந்தார், தனது தங்கைக்கு 20 வயது, திருமணமாகி மாமி வீட்டுக்குப் போய் விட்டார், இப்போ குழந்தை கிடைப்பதற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று. அப்போ நான் கேட்டேன் கணவர் எங்கே என்று, அவரும் எங்கள் ஊர் தான், அவர் வந்து வந்து போவார் தங்க மாட்டார், குழந்தை கிடைத்து 3 மாதம் முடிய தங்கை அங்கே போய்விடுவார் என்று.

இன்னுமொன்று நடிகர் சூரியா எங்கோ ஒரு பேட்டியில் சொன்னார், மனைவியும் குழந்தையும் தாய்வீட்டில் இருக்கிறார்கள், நான் குழந்தையைப் பார்த்து 15 நாட்கள் ஆகிவிட்டது, இன்று சூட்டிங்குக்காக வெளியூர் போகிறேன் அதனால் குழந்தையை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போகப்போகிறேன் என்று.

மேலே நான் எழுதியுள்ளதை வைத்து, எனக்கு கவலையாக இருந்தது, ஏனென்றால்.... ஒரு தாய்க்கு குழந்தையில் எவ்வளவு பிரியம்,ஆசை அன்பு உள்ளதோ அத்தனையும் தந்தைக்கும் உண்டுதானே, அப்போ இந்த பெண் வீட்டில் மாப்பிள்ளை தங்காததால், அந்தத்தந்தை தன் குழந்தையின் அந்த 3 மாத கால வளர்ச்சியை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை இழக்கிறாரே, உண்மையில் அந்தத் தந்தை விரும்பியா விலத்தி இருக்கிறார்? இல்லையே,,, ஊர் உலகத்துக்குப் பயந்துதானே தன் ஆசைகளை அடக்குகிறார்.அதேநேரம் அந்த பிரசவ காலம் பின்னருள்ள காலங்களில் ஒரு பெண்ணுக்கு யாரின் அன்பும் பாசமும் இருந்தாலும் கணவன் அருகே இருந்தால் ஒரு புதுத் தென்பு உருவாகுமல்லவா?

அடுத்து மாப்பிள்ளை வீட்டில் இருந்தால்தான் அக் குடும்பத்துடன் ஒட்டுறவு ஏற்படுமென்பதில்லையே. நாங்கள் எங்கள் வீட்டில் இருந்தாலும், கொண்டாட்டங்கள்... ஒருவருக்கு சுகயீனம் என்றால் அல்லது விடுமுறைகளில் அங்கே போய்த்தங்கி வருவோம்... அதிலேயே உறவு பலப்பட்டுவிடும் தானே.பெண்ணுக்கு மட்டும்தான் ஒட்டுறவு தேவையா? அப்போ ஆணுக்கு எப்படி பெண் வீட்டில் ஒட்டுதல் ஏற்படும்? இரு குடும்பத்தையும் சமமாகத்தானே மதிக்க வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிகமாக எல்லோரும் தனிக்குடித்தனம் போவது நல்லதென்கிறீர்கள், ஆனால் என்னால் அதனை ஏற்க முடியவில்லை, ஏனெனில் எல்லோரும் தனிக்குடித்தனம் போனால் பெற்றோரை யார் பார்ப்பது?, ஆனால் கூட்டுக் குடும்பமும் கஸ்டம்தான்.

நான் நினைக்கிறேன், எங்களூரைப்போல், பெண்ணுக்கோ ஆணுக்கோ யாருக்காயினும் வீட்டைக் கொடுக்கிறபோது, எல்லோருக்கும் பங்காக கொடுக்கக் கூடாது, உதாரணமாக 3 மகன்கள் என்றால் ஒரு மகனுக்கு மட்டுமே வீடு கொடுக்க வேண்டும், மற்றவர்களுக்கு சொத்தைப் பங்கிடலாம், இதனால் மற்றவர்கள் தனிக்குடித்தனம் போவார்கள், வீடு கொடுத்த மகனுடம்ன் பெற்றோர் இருப்பார்கள். அப்போ பெற்றோரை அந்த மகன் பார்க்க வேண்டும், அதே நேரம் மற்றவர்களுக்குப் பொறுப்பில்லை என்று அர்த்தமாகாது. ஏனையவர்களும் இடையிடையே கூட்டிச் சென்று வைத்திருக்கலாம்.

தாய் தந்தையோ, மாமா,மாமியோ அவர்கள் பிரச்சனை அல்ல, இந்த சேர்ந்திருப்பதுதானே பிரச்சனை, போட்டி பொறாண்மை என நிறைய ஏற்படுமே.

இப்படி நான் நினைக்கிறேன், நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கண்டிப்பாக அதிரா
ஒரு பெண்ணுக்கும் , ஆணுக்கும் திருமணத்திற்குப் பின்னர் தான் பொறுப்புகள் கூடும்.
அதுவரை தன் சம்பளத்தை அம்மாவிடமோ, அப்பாவிடமோ கொடுத்து விட்டு பின்னர் வாங்கி செலவு செய்து கொண்டு இருப்போம். அவர்கள் ஏதாவது செலவைப் பற்றி சொன்னால் காதில் வாங்கி கொள்ளவே மாட்டோம். ஆனால் திருமணத்த்ற்கு பின் சம்பளத்தை யாரிடம் கொடுப்பது என்பதில் ஆரம்பித்து எது எதெற்க்கு எவ்வளவு செய்தோம் என்பது வரை கணக்கு வைத்திருப்போம். ஏனெனில் கண்டிப்பாய் ஒருவருக்கு ஒருவர் பொருளாதார பரிமாற்றம் வைத்திருப்போம்.

ஆமாம் இங்கு முதல் குழந்தையின் ப்ரசவத்தை அந்த பெண்ணின் அம்மா வீட்டில்தான் பார்ப்பார்கள். ப்ரசவ செலவு முழுதும் அம்மா வீட்டிற்க்குத்தான். (உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனது அக்கா மகளுக்கு ப்ரசவத்தின் போது 6 1/2 லட்சம் செலவானது. அது முழுவதும் என் அக்கா வீட்டில்தான் ஏற்றுக்கொண்டார்கள். இத்தனைக்கும் எங்கள் சித்தி (அம்மாவின் தங்கை) பையனை (தம்பி முறை) தான் கல்யாணம் செய்து வைத்தோம்)

7ஆவது அல்லது 9ஆவது மாதம் சீமந்தம் செய்து அம்மா வீட்டிற்க்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின் குழந்தை பிறந்து 3 அல்லது 5 மாதம் கழித்து கணவன் வீட்டிற்க்கு அனுப்பி வைப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் கணவன் மனைவியே வந்து வந்து பார்த்துக்கொள்வார். ப்ரசவத்தின் போது உடனிருப்பார்.

இந்தப் பிரிவை பெரியவர்கள் எதற்காக உருவாக்கியிருப்பார்கள் என்று காரணம் கேட்டோமானால் அனேகமாய் இதற்காகத்தான் இருக்கும் . அதாவது இந்த காலகட்டத்தில் ஆணும் , பெண்ணும் உடல் ரீதியாக இணைவது குழந்தைக்கோ அல்லது பெண்ணின் உடல் நிலைக்கோ சரியில்லை. இப்போதைய தலைமுறையினர் இதனை புரிந்து கொண்டு அதற்காக ப்ரிகாஷ்னாய் இருக்கிறோம். ஆனால் அன்றைய கால கட்டத்தில் இதற்கான் தடுப்பு முறைகள் மிக மிகக் குறைவு. அந்தத்தந்தை தன் குழந்தையின் அந்த 3 மாத கால வளர்ச்சியை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை தற்காலிகமாக இழந்தாலும் பின் அந்தக் குழந்தை அவர் அரவணைப்பில்தானே வளர்கிறது.

தனிக்குடித்தனம் போனால் அதிகமாய் நிம்மதியாய் இருப்பது இந்த பெற்றோர்கள் தான். ஒன்றாய் இருந்தால் ஒரு கால கட்டத்தில் அந்த வீட்டு பெரியவர்கள் ஒன்று முதியோர் இல்லத்தில் இருப்பார்கள். இப்போதெல்லாம் அடிக்கடி நான் பார்க்கும் போஸ்டர்கள் காணவில்லை போஸ்டர்கள்தான். அதில் அனேகம் 60 வயது கடந்த முதியவர்கள் படம்தான் இருக்கும். இது எதனால் ஒன்றாய் இருந்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் குடைச்சலால் தான்.

வளர்ந்து வரும் விலைவாசி ஏற்றம் அதிகம் பாதிப்பது மிடில் க்ளாஸ் மக்களைத்தான். அது கடைசியில் பாதிப்பது குடும்ப உறவுகளைத்தான். அதுவும் 2, 3 மகன்கள் இருந்தால் பெற்றவர்கள் பந்தாடப்படுவார்கள். அந்தப் பிள்ளை நல்லா சம்பாதிக்கிறார் இல்ல அங்க போய் தங்கட்டும் என்று ஒருவர் சொல்ல கடைசியில் விசு பட கதையாகிவிடும்.

முடிந்தவரை அவர்களுக்கென்று ஒரு சம்பாதியத்தை உண்டு பண்ணிகொண்டு அல்லது உண்டுப்பண்ணி கொடுத்து விடவேண்டும். அப்போதுதான் முதியோர் இல்லங்கள் குறையும்.
பெற்றவர்கள் நிம்மதியாய் கடைசி காலத்தை ஒட்டுவார்கள்.இது நமது அப்பா, அம்மா, மாமனார், மாமியாருக்கு மட்டுமல்ல, நாளை நமக்கும்தான்.

அதிரா எமக்கு பெற்றோருடன் இருந்து கவனிக்க தான் ஆசை நிஜத்தில்...எமக்கு மட்டுமல்ல இங்குள்ள எல்லா பெண்களுக்கும் அது தான் ஆசையாக இருக்கும்..ஆனால் அது நடக்காது எப்படியும் புகுந்த வீட்டில் தான் நிற்க வேண்டும்..ப்ரச்சனைக்கு பயப்படுவதால் மட்டுமே தனிக்குடித்தனம் விரும்புகிறோம்.
எமக்கு திருமணமாகை வெளியே வந்து விட்டால் பிறகு பேற்றோருடன் இருக்கும் வாய்ப்பு அவர்கள் படுக்கையில் கிடந்த பின் கவனிக்க மட்டும் தான்..நல்ல காலத்தில் ஒரு வெகேஷனுக்கு வெளிநாட்டிலிருந்து போனாலும் நடுங்கி பயந்து ஆர்டர் ஏற்று பெற்றோரிடம் ஒரு வாரம் நின்று விட்டு ஏங்கி அழுது விட்டு திரும்பி விடுவோம்..
பெற்றோர் பேரக்குழந்தைகளை பொடியாக மறையும்வரை எட்டிப் பார்த்து அழுது அழுது அடுத்த வருடத்தில் 1 வாரம் கிடைக்க காத்திருப்பார்கள்..இது பெருமாலானவர்களின் கதை:-(

எனது வீட்டில் நானும் என் தங்கையும் தான்..என் தங்கையும் திருமணமாகி போய்விட்டால் என் பெற்றோர் தனியாக கழிய வேண்டும்..பின்னாளில் நடக்கப் போவதை இன்று நினைத்து நினைத்தே நான் தேம்புகிறேன்.

அரட்டை அரங்கத்தை அழுகை அரங்கமாக மாற்றிய அன்பு அதிராவுக்கு பல கோடி நன்றி... அட்மின் நினைத்திருப்பார்ர்.. ஓ இப்படிதான் இந்த பெண்களை ஆப் செய்வதா என்று!!! பாகம் 1 /2 3/ எல்லாம் 3 நாளில் 90 தாண்டியது.. இது நான் ஆரம்பித்ததால் வந்த வினையோன்னு நினக்கிறேன்... அவங்க அவங்க புகுந்த வீட்டு கதை சொன்னா ஒரு படமே சாரி சீரியலே எடுக்கலாம்.... அதிரா டியர் நோ ஹார்ட் பீலிங்க்ஸ்... பாருங்க அப்பப்ப வர அத்தி பூக்களையும் கூட இந்த டாப்பிக் தொரத்தி விட்டுடும்.... இப்படியே போனா நான் பெர்மனென்டா அப்பீட்டு!!! ஆங்!!! சொல்லிடேன்!!!

தளிகா!!! வரப்போறதை நினத்து ஏனம்மா கவலை... எல்லாத்துக்கும் ஒரு வழி உண்டு....

டைம் பார் டாப்பிக் சேன்ஞ்!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்