ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

உங்கள சமாதானம் பண்ண தனியா ஒரு 5 அடிக்கும் கம்மியா ஒருத்தர் கட்ட பஞ்சாயத்து பண்ணவரனுமா?? கோவிக்காதீங்க அஞ்சலி!!! ஸ்ஸ் அப்ப அப்பா ஒரே வேலை ஜாஸ்தி!!! உங்களுக்கும் ஒரு ஸ்மைலி தர்றேன்!!!
;=}}}

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

kalakitinga ponga thalika..good maturity..yenga irukinga

உங்க சமாதானம் ,மொக்கையெல்லாம், 5 அடிக்கும் கம்மியா ஒருத்தர் கட்ட பஞ்சாயத்து வந்தா அவங்க கிட்ட சொல்லுங்க......ஓ.கே....... வேலை ஜாஸ்தி!!! ன்னு எஸ்கேப் ஆகுது ஒரு பீல்டப்பு வேறாய.உங்களுக்கும் ஒரு ஸ்மைலி !!!

naturebeuaty

அது நான் தான்!!! நாலடி 9 அங்குலம் இப்போ ஸ்மைலீ பேக் அட் யூ...
நீங்க போட்ட சத்ததில பாருங்க ரஜினி ஓடிவிட்டாங்க!!! நெல்லை புயலே!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இஞ்ச பாருங்க இலா
உங்களைப்போன்றவர்களுக்காகத்தான் கஸ்டப்பட்டு நாங்க கதைக்கிறோம், அதைப் புரியாம அழுகுறீங்களே.... நாளைக்கு உங்கட பொண்ணு உங்கள விட்டுப் பிரியாம இருக்கத்தான் நாங்க இப்படியெல்லாம் பாடுபடுறோம் அதைப் புரியாம் ஐயையோ என்னுடையது இன்னும் 90 ஐத் தாண்டலியே என அழுகிறீங்களே .... இதுவா இப்ப முக்கியம்.

உண்மைதான் தளிகா.... பெண் பிள்ளை வீட்டை விட்டுப் போனால் பெற்றொரின் கதி என்னாவது, இதை ஏன் புரிந்து கொள்கிறார்களில்லை. என்னைப் பொறுத்து சட்டம் எதுவும் இருக்கக் கூடாது... இப்படித்தான் வாழவேண்டும் என்று இல்லாமல் தம்பதியினரே முடிவு செய்து தமது வசதிக்கேற்ப எங்கேயும் வாழலாம் என்று இருந்தால், எல்லா பெற்றோரும் மகிழ்ச்சியாகவே இருப்பர். சாரதா, ரஜனி நல்ல விளக்கமான பதில்தான் தந்திருக்கிறீங்கள். ஆனால் எனக்கென்னவோ பெண்ணைப் பிரித்து வைப்பது சரியாகத் தெரியவில்லை... இந்த நூற்றாண்டில். .....தாய் வீட்டில் இருக்கலாம் அதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் உண்மையே... ஆனால் எனது கேள்வி அந்த நேரம் கணவனும் அங்கே தங்கினால் என்ன?

நான் சொல்லிய அந்த திருநெல்வேலி தம்பி என்னிடம் சொன்னார், ஏனக்கா எனது மனைவி, என் பிள்ளைக்கு நான் செலவழிக்காமல் ஏன் பெண் வீட்டாரை எதிர்பார்க்க வேண்டும் நிட்சயமாக நாந்தான் எல்லா செலவையும் பொறுப்பேற்பேன் என்று. இழய தலைமுறையினர் இதுபற்றிச் சிந்திக்கிறார்கள் என்றே தெரிகிறது. எங்கள் ஊரில் ஒரு காலத்தில் இப்படி இருந்தது பிரசவ செலவை பெண் வீட்டாரே ஏற்பதென்று. பின்னர் எல்லாம் கப்பலேறிவிட்டது. இப்போ திருமணம் பொருந்திவிட்டாலே எல்லா செலவையும் மாப்பிள்ளை பொறுப்பெடுக்கிற அளவிற்கு வந்துவிட்டது.....

ரஜனி, உண்மையில் எனக்கு நாத்தனார் கொழுந்தனார் என்றால் யாரென்று தெரியாது, இலங்கையில் இந்த முறை பாவிப்பதில்லை. உங்களின் விளக்கம் நன்றாக இருக்கிறது.

இலா கூல்....கூல்..... இதுக்குப்போய் அழலாமா? அமெரிக்காவில் இருந்துகொண்டு அரிசிக்காக அழலாம், ஆனால் புகுந்தவீடா, பிறந்தவீடா எனக்கதைக்கிறார்களே என்று அழலாமா? இந்தாங்க நீங்களும் துடைச்சிட்டுத் தாங்க......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரூபி,உன்னுடைய இந்த பதிவு படிக்கும் போது,கண்ணீர் தழும்பியது நிஜம்.எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

//பெற்றோர் பேரக்குழந்தைகளை பொடியாக மறையும்வரை எட்டிப் பார்த்து அழுது அழுது அடுத்த வருடத்தில் 1 வாரம் கிடைக்க காத்திருப்பார்கள்..இது பெருமாலானவர்களின் கதை//

எல்லா பெண்களும் இப்படி தான் போல. ரொம்ப மனசு கனமா இருக்கு.

அன்பு தோழிகளே!
அறுசுவையே களை கட்டுது..
எனக்கு கண்ணாடி டம்ளரை கழுவும் போது உடைந்து அறுத்து தையல் போடுமளவு வந்து விட்டது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.. அதனால் அறுசுவை பக்கம் வர இயலவில்லை...

இப்போ கொஞ்சம் பரவாயில்லை...

அனைவரும் நல்லா பேசுங்க!!
நான் அப்பறமாக எல்லாம் படித்துவிட்டு எழுதுறேன்...

gayatri you online now

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

என்ன சுபா கண்ணாடி டம்ப்லர் குத்தி தையல் போடுமளவுக்கு என்னப்பா பன்னினீங்க?உடஞ்ச டம்ப்லர் ரொம்ப டேஞ்சர்..நம்மை அறியாம ஒரு கிழி கிழிச்சிடும்..கிழிக்கும்போது வலிக்காது பிறகு தான் நல்ல எரியும்.குழந்தையை கவனிக்க 2 கைய்யே பத்தாது இதில் காயம் வேற பட்டு எப்படி சமாளிக்கரீங்க.அதான் அறுசுவைக்கு காணலியா.பயல் என்ன சொல்கிறார்

ஆம் ஹிபா அது உண்மை..எனது விஷயத்தில் என் கணவர் எல்லாம் புரிந்து கொள்வதால் எனக்கு ப்ரச்சனை இல்லை.
ஆனால் அதிரா அட்ஜஸ்ட் பன்னி நின்றால் கண்டிப்பாக புகுந்த வீடும் இனிக்கும்.ஆனால் என்ன செய்வது இருவரும் அட்ஜஸ்ட் பன்னனுமே ஒருவரே குத்து வாங்கிக் கொண்டு இருந்தால் தான் சண்டை வரும்.
அதற்கு எடுத்துக் காட்டு எனது மாமனார்..எங்களுடன் 3 வருடம் இதே வீட்டில் இருந்தார்.அந்த மூன்று வருடத்தில் ஒருபோதும் எங்களுக்கு ப்ரைவசி இல்லாதது போலவோ கஷ்டமாகவோ தோன்றியதில்லை..அந்தளவுக்கு நல்ல குணமானவர்...என் அப்பா தான் அவர் என தான் இங்குள்ள பலரும் நினைத்தார்கள்.
மருமகளும் மாமனாரும் போல அல்லாமல் எனது நன்பராகவே இருந்தார்..எனது கணவருக்கு பொறாமை வந்து கோவிப்பார்..அப்பாவும் பொண்ணும் எப்ப பாரு என்ன பேசுறீங்க என்பார்.
ஒரு டீ கூட நான் தான் போட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்ததில்லை..எனது பிறந்த நாளுக்கு அன்பளிப்புகள் தருவார்.
அவர் ஒரு சமையல் கலை நிபுனர் என்பதால் எனக்கு விருப்பமான உணவுகளை விஷேஷ நாட்களில் சர்ப்ரைஸாக தந்து மகிழ்விப்பார்..அப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர் ஊருக்கு வெகேஷனுக்கு போனால் ஒரே போராக இருக்கும் என்னவோ வருத்தமாக இருக்கும்...அப்ப புகுந்த வீட்டினர் எல்லோரும் அது போல இருந்தால் ப்ரச்சனை வரவே வராது இல்லையா.

மேலும் சில பதிவுகள்