ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

நான் ஒன்னு சொன்னா யாரும் என்னை தேடி வரமாட்டீங்களே??
எனக்கு இந்த த்ரெட்டில் இலா,ரஜினி,அஞ்சலி..நீங்கல்லாம் என்ன பேசிக்கறீங்கன்னு புரியல..அன்னைக்கே கேக்கலாம்னு நெனச்சேன் அப்ரம் தமிழ்ல தானே எழுதினோம்னு என்னை விரட்டினா என்ன பன்றதுன்னு விட்டுட்டேன்.
தமிழ் தான்னு புரியுது.காத்தாடி புரியுது,கடலை மாலைன்னா என்னன்னும் புரியுது..ஆனால் அது எப்ப யார் பேசரது என்ன பாஷை அதென்ன மொக்கை அதெதுவும் புரியல,,அதனால நான் முழிச்சுட்டே இருந்தேன்.
அதிரா சாரி அரிசி முட்டையை உள்ள தள்ளி உங்க ஸ்டோர் ரூம்ல தான் நான் ஒளிஞ்சு நிக்கிறேன்:-)

லேட்டஸ்ட் தமிழ் டிக்ஷ்னரி!!!

வெருதே கதைக்கரதுக்கு பேர் மொக்கை!!!
sometimes if we make some one give treat for no reason that is also called mokkai . if you cant kill time then you call some one tell" amm appuram solluda enna vishesham " enRu solvathu...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்களுடைய பதிவை பார்த்தேன்.ஆனால் பதிவு போட முடியாமல் போய்ட்டேன். என் ஐடி தளிகா,பரதீபா,மர்ழியா கிட்ட இருக்கு வாங்கிக்கோங்க.

அன்புடன் கதீஜா.

good one abt mokkai.. i had a teacher in school..we call her as mokkai simply.. becoz he always talks abt MOKKAI PENCIL ..he uses that work frequently.. mokkai pencil yedukum use agadhu..so mokkai nu sonna avan waste ;)

Kewlfrend@yahoo.com

புகுந்த வீடு
தளிகா, புகுந்த வீடு இனிக்காது என்று யாரும் சொல்லவில்லையே. இனிக்கும் என நம்பித்தானே எல்லோரும் காலெடுத்து வைக்கின்றனர். ஆனால் பேப்பர், படங்கள், மற்றவர்களின் கதைகள், அறிந்தவை கேட்டவை.... ஏன் நீங்க கூட சொன்னீங்க கூட்டுக்குடும்பம் வேண்டாம் என்று இவற்றை வைத்துத்தான்.... ஏன் பெண்களுக்கு இப்படிப் பிரச்சனைகள் வருகிறது என நினைத்து அவை பற்றி அறிய ஆவல். நிறையப் பேருக்கு நல்ல புகுந்த வீடு கிடைத்துள்ளது... அது உண்மை. நீங்க கூட மாமா பற்றிக் கதைத்தீங்க, இங்கே கூட ஒரு இந்திய நண்பர் குடும்பர், இருவரும் டாக்டர்கள்... அந்த ஆணின் தந்தை வந்திருந்தார் ஊரிலிருந்து, நாங்கள் போயிருந்தோம் அப்போ கதைத்துக் கொண்டிருந்தபோது அந்தத் தந்தை எல்லோரையும் என்ன வேண்டும் எனக் கேட்டு எல்லோருக்கும் ரீ ஊத்தி வந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு டாக்டர்தான். இப்படி நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் எனது கதையைக் கூட இதுவரை சொல்லவில்லை.

எனது மாமா, மாமி இளமையிலேயே வெளிநாட்டில் வாழத் தொடங்கியவர்கள், அதனாலோ என்னவோ, அவர்களுக்கு மருமகள் என பாகுபடுத்திப் பார்க்கும் பழக்கமில்லை. மகள் மாதிரியே நினைக்கிறார்கள். நாங்கள் அங்கே போகிறோம் என்றால் மாமா போய் எனக்காகவே உறைப்பு பண்டங்கள் வாங்கி வந்து போத்தலில் போட்டு மேசையில் வைத்திருப்பார், போனதும் சொல்வார், அதிரா உங்களுக்காகவே வாங்கி வைத்திருக்கிறேன் என்று. நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கின்றபோதே பழங்கள் வெட்டிக் கொண்டுவந்து நீட்டுவார் எடுங்கோ என்று(அவரும் ஒரு விரிவுரையாளர் இப்போ ஓய்வுபெற்றுள்ளார்). மகனுக்கு கொடுப்பதை விட அதிகமாகவே உடைகள் நகைகள் என வாங்கித்தருவார்கள். அங்கு போனால் எனக்கு எந்த விதமான பயமும் இல்லை. உண்மையில் அவர்களின் அறைக்குள் சென்று அலுமாரி எல்லாம் திறந்து எனது வீட்டில் எடுப்பது போல் தேவையான பொருள்கள் எல்லாம் எடுத்து வருவேன். மாமாவில் ஒரு பழக்கம், வெளியே போகிறபோது கண்ணில் படும் விதம் விதமான பொருள் எல்லாம் வாங்கி வந்து வைத்திருப்பார். நான் எனது விருப்பத்திற்கேற்ப எல்லாம் எடுத்து வருவேன். மாமி அவரைவிட ஒருபடி மேல், என்னை வாங்கோ என்று அழைக்க மாட்டார் அதிரா வாங்கோடா என்றே தான் அழைப்பார். அவ்வளவு அன்பானவர். வெளியே போய் வந்தால் வாசல் கதவு திறக்கும்போதே தன் மகனிடமும் கேட்டு என்னிடமும் கேட்பார், அதிரா ரீ ஊத்தவோ கோப்பி ஊத்தவோ என்று.

எந்த அலுவலாயினும் தன் மகனிடம் சொல்வார்கள் அதிராவைக் கேட்டு அதிராவின் விருப்பத்துடன் செய்யுங்கள் என்று. அதனால் என் கணவரும் அப்படியே என் விருப்பத்திற்கே நடக்கப் பழகிக்கொண்டார். இதிலிருந்து நான் நினைக்கிறேன் பெற்றோர் நடத்தும் விதத்தில் தான் பிள்ளைகளும் மனைவியை எப்படி நடத்துவதென பழகிக்கொள்கிறார்கள். இப்படி நிறையவே எழுதலாம், ஆனால் நான் நன்றாக இருப்பவர்கள் பற்றி நினைக்கவில்லை, புகுந்தவீடு சென்று கவலைப்படுபவர்கள் பற்றித்தான் நினைக்கிறேன்.

சாரதா எழுதியிருந்தார்... காணவில்லை என்ற போஸ்டர்கள்தான் அதிகமாகிவிட்டதென. இதைப் படிக்கிறபோது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. வயதானவர்களுக்கு இப்படி ஒரு நிலை வர நாம் காரணமாகக் கூடாது. பொறுத்துத்தான் போகவேண்டும். வயதானவர்களின் சாபம் எம்மை நன்றாகவே வாழ விடாதென்று சொல்வார்கள். நாளைக்கு எமக்கும் வயதாகும். ஆனால் மருமகள் பார்ப்பதால்தான் இப்படி ஏற்படுகிறதோ... பெற்றோர் மகளுடன் இருந்தால் இப்படியான நிலைமை வராதென்றே நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா,
உங்களுக்கு ஏன் கவலை? நல்ல மாமா தானே? கணவரும் ஒத்துக்கொள்கிறார் என்றால், விடுமுறையில் இரு வீட்டிலும் சமமாக தங்கலாமே. இன்னுமொன்று, உங்கள் தங்கையின் திருமணத்திற்கு இப்பவே பெமிசன் கேட்டு வையுங்கள். 2/3 மாதமாவது பெற்றோருடன் போய் நில்லுங்கள். ஏனெனில் வெளியே போபவர்களுக்கு கவலை பெரிதாகத் தெரியாது, ஆனால் மகளை அனுப்பிவிட்டு அப்பா, அம்மா எவ்வளவு துன்பப் படுவார்கள், அந்தக் கவலையை நீங்கள் போய் நின்றுதான் தீர்க்க வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா,சீரியசா பேசரீங்க,இடையில் ஒரு முக்கியமானகேள்வி!
க்ரீன் டீ எப்படி போடுவது? அதன் பலன் என்ன?
சொல்லுங்களேன்.....:))

அதிரா இந்த வம்புக்கு நான் இல்லையம்மா..
ஒரு விஷயத்தை பேச அனுபவ ரீதியாக எதனால் என்று சொல்ல வேண்டிவரும்..அது ப்ரச்சனையில் கொண்டு போய் விடும்..இப்பொழுது நான் மருமகள் மாமியாராக இல்லாமல் நடுநிலையாக நல்ல யோசித்து எனக்கு தெரிந்த காரணம் சொல்கிறேன்.
அதிரா சொன்ன அந்த வார்த்தை ரொம்ப ரொம்ப சரி அதை பொன்னேட்டில் எழுதி வைக்க வேண்டும்..வீட்டில் பெற்றோர் மகனிடம் சொல்லி புரியவைக்கும் விதத்தில் தான் எல்லாமே உள்ளது.உங்களைப் போல மாமி மாமா இருந்தால் ஒரு ப்ரச்சனையும் வராது.
ஆனால் உங்கள் விஷயத்தில் பிறந்த வீட்டிலேயே தங்குவதாலோ என்னவோ அந்த மரியாதையும் பாசமும்..எங்களுக்கு புகுந்த வீட்டில் நிற்பதாலோ என்னவோ அவ்வளவு நாள் மகன் பாசமாக தங்களுக்கென்று இருந்தார் இனி வரப்போகிறவள் என் மகனை சுருட்டிக் கொண்டு போய் விடுவாளோ என்று பெற்றோர் பயப்படுகிறார்கள்..
அவர்களை சொல்லியும் குற்றமில்லை சமுதாயம் அப்படி..வருகிறவள் மருமகள் அல்ல சூனியக்காரி என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கி விடுகிறார்கள்.இதில் முக்கிய பன்கு வகிப்பவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் தான்.
அதாவது அவர்களுக்கு 50,100 என்று கிடைக்க வேண்டி மருமகள் மாமியாரிடையே ப்ரச்சனையை கிளப்பி விடுகிறார்கள்..
மருமகள்களுக்கும் ப்ரச்சனையை கைய்யாளும் பக்குவம் இல்லை.என் அப்பா அம்மா கூட என்னை ஒன்னும் சொன்னதில்லை இவர்கள் யார் என்னை சொல்ல என்ற எண்ணம்.
எனக்கு இன்று இருக்கும் பக்குவம் அன்று இருந்திருந்தால் என்று பல சமயமும் யோசிப்பேன்.75% ப்ரச்சனை சமூகத்தாலும் வருகிறது...ஊரான் வீட்டு பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் கண்டு ரசிக்க ஒரு கூட்டம் ஆட்களுக்கு இஷ்டம் என்றொரு ப்ழமொழி உண்டு மலையாளத்தில் அது போல மாமியார் மருமகள் ப்ரச்சனை வரட்டுமே கொஞ்சம் புறன் பேசி நேரம் போக்கலாமே என்று காத்துக் கொண்டிருக்கும் ஒரு கும்பலே உண்டு.
உங்களுக்கு ஒன்று தெரியுமோ அதிரா அக்கம்பக்கத்தினருடன் ச்ப்ரச்சனை ஆனால் அவர்கள் சாபம் விடுவதே" இரு இரு உனக்கொரு மருமகள் வரட்டும் வந்து உன் முடியை பிடிச்சு ஆட்டினால் தான் நீ அடங்குவாய்" என்று..ஹஹஹா..அந்தளவுக்கு மருமகளுக்கு நல்ல இமேஜ்
ஆக மொத்தம் ப்ரச்சனை தேவையில்லாமல் உருவாகுவது தான்.மருமகள் ப்ரச்சனை சஹிக்கலாம்..அது காலப் போக்கில் மாறிவிடும் ..ஆனால் கடைசி காலத்தில் மாமியார்களை பந்தாடும் ப்ரச்சனை பெரும்பாடு ரொம்பவும் கொடுமை.
அது நான் பார்த்து தமிழ்நாட்டில் அதிகளவில் நடக்கிறது.மருமகள்கள் மாமியாரை அடிக்கவும் உதைக்கவும் வரை செய்கிறார்கள்..
குப்பை போல தான் பல வீட்டிலும் வயதானவர்கள்..சரி நான் பிறகு பேசுகிறேன்.

அன்புள்ள விமலா க்ர்ரின் டீ உடல் எடை குறையவும் கேன்சர் வராமல் தடுக்கவும் உதவும் எங்கிறார்கள்..நானும் எப்பவாவது குடிப்பேன்..ஆனால் நாம நினைத்தால் நடக்கிர காரியMஆ கேன்சருக்கு என் மேல் பாசம் என்றால் வந்து தானே தீரும்.

அதிலும் ஒரு விதமான பச்சை டீ இருக்கு. ஒப்லாங் என்று பேர். எல்லாத்தையும் விட பச்சை டீயில் ஆன்டி ஆக்சிடொன்ட்ஸ் அதிகம்.

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்