ஹைய்யா...ஜாலி......வாங்க.(அரட்டை அடிக்கலாம்..பாகம் IV)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
அதாவது மாங்கா!!! கடலை (!!??!!??) மொக்கை... இப்படி எதுனாச்சும் வைச்சுக்கோங்க!!! பாகம் 4 ஆரம்பம்!!!!

மர்ழியா/அஞ்சலி உங்க த்ரெட்டின் தொடர்ச்சியாகதான்..............

வாங்க!! வாங்க!!! அய்யா வாங்க!! அம்மா வாங்க!!! வந்து அரட்டையரசனுக்கு ஒரு கும்புடு போட்டு ஒரு கும்மி அடிச்சிட்டு போங்க!!!

நன்றி,தளிகா.க்ரீன் டீ எப்படி தயாரிப்பதுஎன்று சொல்லுங்களேன்
உங்கள்மீது பாசம் வைக்க, நாங்கள்இவ்வளவுபேர் இருக்கிறோம்.எதற்காக கேன்சரைஅழைக்கிறீர்கள்.மர்லியா மாமியின் மறைவு என் மனத்தையும் மிக பாதித்துவிட்டது.நாம்தானே மர்லியாவுக்கு தைரியம் கொடுக்கவேண்டும்,நீங்கள் எதையும் பாஸிட்டிவ்வாக நினையுங்கள்.நல்லதே நடக்கும்,நம்புவோம்.
அன்புடன் விமலா.

அன்புடன் விமலாவிற்கு,
ஜலீலாக்காவின் கூட்டாஞ்சோறு குறிப்பில் கொஞ்ச ரீ குறிப்பு இருக்கிறது, அங்கே கிறீன் ரீ பற்றி விரிவாக எழுதியுள்ளேன், செல்வியக்காவின் இனிப்பு போண்டா குறிப்பிலும் எழுதியுள்ளேன் தயவு செய்து எடுத்துப் பாருங்கள். எனக்கு இப்போ நேரமில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா,நன்றி,ஆனால் நான் கேட்டது க்ரீன் டீ தயார்செய்வது எப்படி என்று.பால் சேர்க்கலமா,நல்லாகொதிக்கவைக்கணுமா என்றுதான். நான் இப்போதுதான் உங்க பதிவை பார்த்தேன்,கெஸ்ட்வந்துட்டாங்க.... அதனால் பதில்போடமுடியவில்லை....ப்ளீஸ்,நீங்களே பதில் சொல்லிடுங்களேன்.....
அன்புடன் விமலா.

விமலா கிரின் ரீ
கடையில் வாங்கும் கிரீன் ரீயை ஒரு தேக்கரண்டி ஒரு கப்பில் போட்டு, கொதி நீரை விட்டு மூன்று/நான்கு நிமிடங்கள் ஊறவிட்டு, பின் வடித்துக் குடியுங்கள். நன்கு ஆறமுதல் இளஞ் சூட்டுடன் குடித்திட வேண்டும். வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். அடிக்கடி குடிக்க வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்தாலே போதும்.

எண்ணெய், மச்சம் அதிகமாக சாப்பிட்டால் பின்னர் இதனை ஒரு கப் குடித்தால் போதும் செமிபாடாகிவிடும். வயிற்றுப் பிரட்டு எதுவும் இருக்காது. தளிகா மாறி எழுதிவிட்டார் என நினைக்கிறேன், நான் அறிந்தது, அதிகமாக கிரீன் ரீ குடித்தால் குடல் கான்சர் வரும் வாய்ப்புகள் அதிகமென சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள், ஏனெனில் சைனாவில் இதனையே அவர்கள் எப்பவும் குடிப்பதால் அவர்களுக்கு குடல் புற்றுநோய் அதிகமாக வருவதாக சந்தேகிக்கிறார்கள். உங்களுக்கு gastric/அல்சர் பிரச்சனை இருந்தால் இதைக் குடிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம்.

இதற்கு பால் சீனி எதுவுமே சேர்ப்பதில்லை. சும்மா கசாயம் குடிப்பதுபோல் குடிக்க வேண்டியதுதான், ஆனால் தடிப்பாக இருக்கக் கூடாது, மெல்லிய சாயமாக இருக்க வேண்டும். அதுதான் சொன்னேனே ஒரு கப்பிற்கு ஒரு தேக்கரண்டி போதும். சில்வர் டம்ளர் அல்ல அதைவிடப் பெரிய கப்.

டவுட் கிளியரா? இன்னும் இருக்கா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமா அதிரா நானும் சமீபத்தில் தான் அப்படி படித்தேன் ...ஆனால் கேன்சர் வராமல் தடுக்க என்றும் கூட கேள்விப்பட்டேன் அதான் எனக்கு புரியல..

தளிகா,
இந்தக் கிரீன் ரீயில் ஒருவித அரிக்கும் தன்மை இருக்கிறது. அதுதான் உடல் கொழுப்பை, எண்ணெயை வெளியே கொண்டு வருகிறதாம். இந்த அரிப்புத் தன்மையால் குடலில் அரிப்பை உண்டாக்கினால் அது நாளடைவில் புண்ணாக மாறி கான்சராக உருவாகலாம்.

கான்சர் வராதென்பதுபற்றி எனக்குத் தெரியவில்லை. இதில் நிறைய வகை இருக்கிறது, எங்கள் அக்கா, அண்ணி ஏதோ பெயரில் வாங்கிக் குடிப்பார்கள்... குடித்ததும் டயறியா போலாகிவிடும்... இதனால் உடம்பு குறையுமாம். நான் போன போது எனக்கும் வாங்கித்தாருங்கள் எனக் கேட்டேன்.... பொறு பொறு கொஞ்ச நாளாக அது கண்ணில் படவில்லை என்றார்கள் பின்னர் அதே ரீ கிடைக்கவில்லை. அதனால் முதன் முதலாக இதைக் குடிக்க விரும்புபவர்கள் வீட்டில் நிற்கும் நேரம் பார்த்துக் குடிப்பது நல்லது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

விமலா, அதிரா, தளிகா

எனக்குத் தெரிந்தவரையில் கிரீன் டீ உடலுக்கு மிகவும் நல்லது. அது கேன்சர், ஹார்ட் டிசீசை தடுக்கும். கிரீன் டீ கேன்சர் செல்களை டெவலப் செய்யாமல் தடுக்குது. முக்கியமா லங் கேன்சர் , பிரஸ்ட் கேன்சர். டெய்லி கிரீன் டீ 1[அ]2 தடவை தாராளமாக எடுக்கலாம். ஆனா, அதுவே அடிக்ட் ஆகி ஒரு நாள்லயே ரொம்ப தடவை குடிச்சா கிட்னி, லிவர் எல்லாம் பாதிக்குமாம். எதுவுமே அளவுதான். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு.
Rajini

நன்றி ரஜினி விரிவான விளக்கத்திற்கு..அதிரா ஒரு வேளை க்ரீன் டீயில் ஒரு வகை டீ தான் இப்படியோ என்னவோ..இப்ப என்ன கேன்சர் வரக் கூடாது அதானே பேசாம நாம ப்ராகோலி சப்பிடலாம்:-)
நான் ட்வின்னிங்ஸின் க்ரீன் டீ வாங்குவேன்..எப்பவாவது மாதத்தில் 2 அல்லது 3 முறை குடிப்பென்.இங்கு சிறு குழந்தைகளுக்கு கூட க்ரீன் டீ கொடுக்க சொல்கிறார்கள் மருத்துவர்கள்..ஜீரன ப்ரச்சனை உள்ள 8 மாத குழந்தைக்கும் கொடுக்க சொல்கிறார்கள்...இனி நமக்கு க்ரீன் டீயைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம்..

நன்றி அதிரா,அனிகாஷ்...எல்லாம் சரி...... சர்க்கரை போடாமல்தான் குடிக்க வேண்டுமா.....;-(
அது ரொம்ப கஷ்டம் ஆயிற்றே....ம்ம்ம் ட்ரை பன்னர்ரென்...நான் வெளியெசெல்லவிருப்பதால் வந்து பேசுகிறேன்...
அன்புடன் விமலா.

மர்லியா இப்ப பெரம்பு எடுத்து கொண்டு அங்க வந்து அடிப்பேன் சீக்கிரம் //ஹைய்யா அரட்டை 5 ஆவதை சீக்கிரம்//

தலைபை சுருக்குங்கள்.நிங்கள் மறுபடியும் அங்க போய் மாற்று என்பதை கிளிக் செய்து தலைபை சுருக்குங்கள்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்