சுரைக்காய்

சுரைக்காய் கூட்டு செய்வது அனைவருக்கும் தெரியும். அன்பு நெஞ்சங்களே, சுரைக்காயில் விதவிதமாக சமைப்பது பற்றி தெரிந்துகொள்ள விழைகிறேன். உதவி செய்யுங்கள். நன்றி

சுரக்காய்
மாஜி

கேரட் துருவி கேரட் சாதம் செய்வது போல் சுரக்காய் சாதம், மட்டனில் சுரக்காய் போட்டு செய்யலாம், சுரக்காய் சூட்டு பண்ணலாம், ஹல்வா செய்யலாம்
ஜலீலா

Jaleelakamal

உங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி. சுரைக்காயை துருவினால் தண்ணீர் விடாதோ, எப்படி சாதம் தாளிப்பது தெரிவியுங்களேன் ப்ளீஸ்.

enrum inithe vaazhga

சுரைக்காயில் சொதி வைத்தால் சுவையாக இருக்கும். வெள்ளைக்கறியும் வைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

என்னுடைய குறிப்பில் புளிச்சாறு செய்முறை கொடுத்துள்ளேன்.
அதில் சுரைக்காயை பெரிய சதுர துண்டுகளாக நறுக்கி சேர்க்கலாம்.
அடை மாவு அரைக்கும்போது சுரைக்காயையும் நறுக்கி சேர்த்து அரைத்து அடை வார்க்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்