ஒரு சோக செய்தி.

மனதுக்கு மிகவும் வேதனையான செய்தி.

இன்று நம் தோழி மர்ழியாவின் மாமி இறந்துவிட்டார்கள்,இந்த செய்தியை நம் அனைவருக்கும் தெரியப்படுத்தும் படி மர்ழி சொன்னார்கள்.

அவர்களுக்கு இறைவன்,மேலான சுவர்க்கபதவியை தருவான்.இன்ஷால்லாஹ்....

மனதுக்கு மிகவும் வேதனையான செய்தி.

நம் தோழி மர்ழியாவின் மாமி இறந்துவிட்டார்கள்,இந்த செய்தியை நம் அனைவருக்கும் தெரியப்படுத்தும் படி மர்ழி சொன்னார்கள்.

அவர்களுக்கு இறைவன்,மேலான சுவர்க்கபதவியை தருவான்.இன்ஷால்லாஹ்....

இந்த துக்கத்திலிருந்து மர்லியாவும் அவர் குடும்பத்தாரும் சீக்கிரம் ஆறுதல் அடைய , அவர் மாமியின் ஆத்மா சாந்தி அடையவும் எல்லாம் வல்ல இறைவனை ப்ரர்ர்த்திப்போம்.

மர்லியா

மர்லியா உங்க மாமி நிவுஸ் கேள்வி பட்டேன்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைகி ராஜிவூன்//

கவலை படாதீர்கள்.
ரொமப்வே அவர்கள் அவஸ்தை பட்டிருப்பார்கள்.
அவர்களுக்கு அல்லா சொர்க்க பதவியை கொடுக்க தூவா கேட்போம்.

மெயில் போட்டதும் என்னால் தாங்க முடியல,
என்னால் அங்கு ப்திவு போட கூட
முடியல
ஜலீலா

Jaleelakamal

மர்லியா,உங்கள்மாமியின் ஆத்மாசாந்தி அடைய நாங்கள் அனைவரும் மனதார ப்ரார்த்திக்கிறோம்.விரைவில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் அமைதியடையவும் இறைவனைவேண்டுகிறோம்.

நிஜமாகவா? எவ்வளவு நம்பிக்கையுடன் மர்ழியா அவர் பிழைத்துவிடுவார் என்று சொன்னார். எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை விஷயம் தெரிந்து டாக்டர்கள் இவர்களிடம் சொல்லாமல் மறைத்திருப்பார்களோ.
என் அக்காள் கணவர் ஜூன் 2007 16 அன்று இரவு 845க்கு இறந்தார். 830 மணிக்குக் கூட ஒன்றும் பிரச்சனை இல்லை. நன்றாக இருக்கிறார் என்று சொன்னார்கள் டாக்டர்கள். நமக்கு ஒன்றும் புரிவதில்லை.
இறப்பு என்பது ஈடு கட்ட முடியாத இழப்பு. மர்ழியா உங்கள் மாமியின் ஆத்மா சாந்தி அடையவும், அவரின் இழப்பைத் தாங்கும் சக்தியை உங்களுக்கு கொடுக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இதே நேரத்தில் உங்கள் குடும்பத்தையும், உங்கள் மகளையும் நினைத்து உங்கள் ஆரோக்கியத்தையும் மனதில் கொள்ளுங்கள் என்று உரிமையுடன் சொல்லுகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மர்ழியா அவர்களின் மாமியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திப்போம்.

மர்ழி மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். நல்ல மனோதிடத்துடன் இந்த துக்கத்தில் இருந்து மீளவும், அவரது மாமியின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Rajini

மனத்திற்கு கஷ்டமாக உள்ளது

மர்ழி,
உங்கள் நம்பிக்கை நாங்களும் நம்பினோம்,ஆனால் இறைவன் அவர்களை அழைத்துவிட்டான், மனத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது இந்த செய்தியை பார்த்தப்பின்பு, உங்கள் மாமியின் ஆத்மா சாந்திஅடைய நான் ஆண்டவனை கேட்டுக் கொள்கிறேன்.
உங்களுக்கும் நல்ல மனதைரியத்தை ஆண்டவன் அருளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மர்ழி மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. மாமி எதுவும் பிரச்சனை இல்லை என்று சொன்னதும் நீங்கள் சந்தோஷபட்டீர்களோ அதைப் போல நாங்களும் நினைத்தோம். ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை. மர்ழி கடைசி கொஞ்ச நாட்களாவது உங்க கூட அவர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பாவ்து கிடைச்சதே. அவர்கள் உங்க கூட இருந்த தருணங்களை நினைத்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்க மனம் தளரக் கூடாது. தைரியமாக இருக்கவும். காலபோக்கில் எல்லாம் சரியாகும் நாள் வரும். உங்கள் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம் மர்ழி, மரியத்தை பார்த்துக் கொள்ளவும்.

மர்லியா மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.மாமி ஆன்மாவால் உங்களுடனெ இருக்கிறார்.கவலை படாதீங்க.

savitha

மேலும் சில பதிவுகள்