ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் ஐந்து...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

நாளாம் பதிப்பு சிறிது நாளிலேயே 89 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஐந்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... என்னால் இப்போதய்க்கு இதில் பங்களிக்க இயலாது..உங்கள் முன்னால் உள்ள பதிவுகளுகெல்லாம் மெதுவாக பதில் போடுகிறேன்..யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

ஆமாம் அப்படி தான் சொல்லனும் இல்லாட்டி காதில் போட்டுக்காம விட்டுடனும்.என் மகள் போன முறை ஊருக்கு போய் வரும்சமயம் ஒருத்தர் கேட்டார் "என்ன வரும்போது வெள்ளையா இருந்ததே இப்ப கறுத்துட்டா நீ கவனிக்காம அப்டியே விட்டிருப்ப அதான் அப்டி ஆயிட்டா"ன்னு..எனக்கு வந்துதே கோவம் கறுத்துட்டான்னு சொன்னா போதும்ல அதென்ன நீ கவனிக்கலன்னு ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்..மிருகம் தான் காலாகாலத்துக்கும் ஒரே மாதிரி இருக்கும்..மனுஷன் க்லைமேட்டுக்கேத்த மாதிரி மாறனும்"ன்னு சொல்லிட்டு வந்துட்டேன் பிறகு கொஞ்ச நேரம் கழிச்சு வீடு வந்து சேந்ததுகப்புரம் அய்யோ என்ன இப்படி கோபமா பேசிட்டேன்னு வருத்தம்.
நாம பிள்ளைகளைப் பத்தி என்னவெல்லாம் யோசனைல இருக்கோம்..இவங்க ஒரே நிமிஷத்தில் கவனிக்கரதில்லன்னு சொல்லும்போது மட்டும் கோபத்தை அடக்கவே முடியரதில்லை.

சாதிகா, நல்ல ஒற்றுமைதான் நமக்கு.
இந்தக் காலத்து குழந்தைகள் பர்சனாலிடியை விமர்சிப்பதை ரசிக்க மாட்டார்கள். அவர்களுக்கு பிடிப்பதில்லை. இந்த மாதிரி கமென்ட் அடிப்பதில் முதலிடம் நம் உறவினர்களுக்குத்தான்.
எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை. என் நாத்தனார் பையன் எட்டாவது படிக்கிறான். அவனை டாக்டர் கண்டிப்பாக எடை குறைத்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். நாத்தனாரின் கணவருக்கு ஒபிசிடி என்று இன்ஷ்யூரன்ஸ் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் எல்லாம் பார்ப்போருக்கு ஆரோக்கியமாகத் தெரிகிறார்கள். ஒல்லியாக இருந்தாலும் டாக்டர் வீட்டுக்குப்போகாத நம் குழந்தைகள் நோயாளிகளாகத் தெரிகிறார்கள்.
நான்கூட இதெல்லாம் பார்ப்பதில்லை. நாம் என்ன ஐஸ்வர்யாராயா. நான் ஏழை, பணக்காரர், ஜாதி, குட்டை, நெட்டை, ஒல்லி, குண்டு, கறுப்பு, சிவப்பு இதெல்லாம் பார்க்க மாட்டேன். என் பெண் கூட கிண்டல் பண்ணுவாள். அம்மாவுக்கு ஆறிலிருந்து அறுபது வரை இல்லை இல்லை பிறந்த குழந்தையிலிருந்து எல்லா வயதிலும், எந்த வேலை செய்பவராக இருந்தாலும் (பக்கத்து வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண்மணி முதல்) ப்ரெண்ட்ஸ் என்று.
அன்புடன்
ஜெய்ந்தி மாமி

ஆம்.இன்னொரு ஒற்றுமையும் உண்டு.எனக்கு திருமணம் நடந்த ஆண்டும் உங்களுடையதே
.நானும் அனைவரிடமும் சுலபமாக பழகி விடுவேன்.
என் கணவர் குழந்தைகள் உட்பட இதற்காக கிண்டல் பண்ணுவார்கள்.
இப்போது சில வாரங்களுக்கு முன்னர் தான் அறுசுவை தளத்தை அறிந்து சகோதரிகளுடன் உரையாடு வதை பார்க்கும் என் பையன் ஆஹா மம்மி..உங்களுக்கு ஏற்ற வெப்சைட் என்கிறான்.
தளி..மகள் சற்று கறுப்பானதற்கு உறவினறரின் நக்கலுக்கு நீங்கள் கொடுத்த பதிலடி... கலக்கறீங்கப்பா.
---ஸாதிகா

arusuvai is a wonderful website

கதீஜா நான் இருக்கேன் நீ இருந்தா லைனின் வா...சார்தா கதீஜா சொன்னதுதான் என்னை சொல்லன்னு தெரிஞ்சது ஏன்னா என் பொண்ணும் துப்பும் கேஸ்தான் அதை இதில் சொல்லியும் இருக்கேன் சோ அதை படிச்சுட்டுதான் இப்ப்டி சொன்னீங்களோன்னு நினைத்தேன்...என்னவோ கவலிஅன்னு சொல்லிகிறாங்க உங்களுக்கு என்னன்னு தெரியல..
ஜெயந்தி மாமி அடிக்கடி வாரீங்க போல சந்தொசம்...

ரஜினி விஜி கீட என் ஐ டி கேடீங்கலாம்..என்னை ஏட் பண்ணிகங்க..

அனு நல்லா இருக்கேம்மா..

அனு,ஜலீலாக்கா,தளி,கே.ஆர்,கதீஜா என் பொண்ணு ஸ்கூலுக்கு எல்லாம் ஓரு விசிட் போய் வந்தேன் அதில் நான் சொன்ன க்ஆப்பிள் கிட்ஸ் ரொம்ப தூரம்..பக்கதில் இருக்கும் ஒரு ஸ்கூல் வசதி கம்மி மண்ணில் பிள்ளைகளை விளையாட விடுறாங்க பெரிய மரமெல்லாம் இருக்கு ஏதாவது பூச்சி கடிச்சுட கோடாது ஆதோட ரொம்ப சின்ன கிளாஸ் ரூம் அதை விட்டுட்டோம் இன்னொன்று கிட்ஸ் ந்னு ஒரு ஸ்கூல் அது நல்லா இருக்கு..சின்ன் அபங்களாவில் ஸ்கூல் நடத்துறாங்க விளையாட பிள்ளைகளாம் கார்டன் பக்கம் அது சிமெண்ட்தான் ஆனா வெயில் இல் விளையாடனும்.. இன்னொரு ஸ்கூல் ராதாகிருஷ்னன் ரோட்டில் இருக்கு அங்கு போனோம் அது இதை விட விரிவான பெரிய இடம் பெரிய் அ,பெரிய ரூம்ஸ்,நிறைய டாய்ஸ்,புல் ஏஸி,ஆகிவிட்டீஸ் அதகமா இருக்கு அதில் போடலாம்னு இருக்கோம் பாஸ்போட் சைஸ் போட்டோ வேனுமாம் அதை எடுத்துட்டு சேர்கனும்..அவலை எப்படிதான் பிரிய போறேனோ இப்ப நினைத்தாலெ கண் கலங்குது..ஸ்கூலை பார்த்து சேர்க போறோம் என் பொண்ணு ஸ்கூலில் சேர்கும் அளவுக்கு வளந்துட்டான்ன சந்தோசம் ஒரு பக்கம் எப்படி என்னை விட்டு இருப்பாலோ,நான் எப்படி என் கண்மெனியை விட்டு இருப்பேன்னோன்ன கவலை மறு பக்கம்..காலம்தான் இதுக்கும் பதில் தரும் அதற்க்காக லைபை ஸ்பாய்ல் பண்ன கூடாதே!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

குழந்தை ஸ்கூலுக்குப் போறது பிரிவா. அப்புறம் என் பொண்ணு கண்ணையும், மூக்கையும் ஆட்டிண்டு சூப்பரா ரைம்ஸ் சொல்றான்னு சொல்ல வேண்டாமா. இது எப்படி இருக்கு. மரியத்தை அப்டி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இப்டி வந்து அரட்டை அடிக்கப்போறீங்க. அப்புறம் என்ன. இப்டிதான் எங்க வீட்டிலே ஒண்ணு ஜெட்டியோட அலைஞ்சுட்டிருந்தது. இப்ப என்னடான்னா காலேஜ்லே செகன்ட் இயர் படிக்குது. நான் நிமிர்ந்து பாக்கறா மாதிரி வெட வெடன்னு உசரமா வளர்ந்திருக்கு. எனக்கே அட்வைஸ் பண்ணுது. தாங்க முடியலப்பா
அன்புடன்
ஜெய்ந்தி மாமி

அப்ப்டி,இப்படி ன்னு எவ்லோ ஈஸியா சொல்லுறீங்களே மாமி?இது அப்பப்ப ஜட்டி கூட போடாம கலட்டி போட்டுட்டு ஓடுது இதுல அடுத்தவங்க காலை காட்டினாலும் சீ சேம் சேம்னு சொல்லி பெரிசா அசட்டு சிரிப்பு வேற

தோசை,நூடல்ஸ் இப்படி பட்ட டிபன்கள ஸ்னாக்ஸ் க்கு பதிலா கொடுத்து விடலாமா ஸ்கூலுக்கு?ஏன்னா இவ பால் குடிக்கவே 1 மண் நேரம் எடுப்பா இதுல எங்கே மற்றதை சாப்ட சுத்தமா முடியாது இப்படி ஸூலுக்கு கொடுத்துவிட்டா சரியா கொடுத்துடுவாங்களா?அப்படி கொடுக்கலாமா மாமி?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தோழியரே இந்த பாகம் 5 ஆரம்பித்த நேரம் எனக்கு பதிவு போட நேரம் கிடைத்தது கடந்த 8 நாட்களாக அறுசுவை பக்கம் வந்தாலும் மன்றத்தின் பக்கம் வர டைம் கிடைக்காமல் இருந்தது எல்லாரும் எப்படியிருக்கிறீங்க?

யாருக்கு பெயரையாவது விட்டு இருந்தால் மன்னிக்கவும்

மர்ழி
மிகவும் சந்தோஷம் உங்கள் பாகம் 5 யை பார்த்ததும்,கொஞ்சம் கொஞ்சமாக பழையநிலைமைக்கு வரவும். அப்புறம் மரியம் எப்படியிருக்கா?ஸ்கூலுக்கு அனுப்ப ஆரம்பிச்சாசா

ஷாரதா
எப்படியிருக்கிறீங்க கடந்த 8நாட்களாக மன்றம் பக்கம் வரமுடியவில்லை,உங்கள் மாமியார் மருமகள் பதிவுகளை பார்த்தேன் உங்களின் வருத்தம் வேதனை வெளிப்பட்டது, ஆனால் பதிவு அனுப்பத்தான் நேரம் இல்லாமல் போய்விட்டது, அப்புறம் அமிர்தவர்ஷினி எப்படியிருக்கா? பிள்ளைகள் சாப்பிடாமல் இருப்பதை பார்க்க வேதனையாகதான் உள்ளது எனக்கு இப்பம் பழகி போய்விட்டது.இப்போது என் வாண்டு அவருக்கு என்ன ஸ்நாக்ஸ் பிடிக்குமோ அந்த டப்பாவை காண்பிபார் நம்ம அதை எடுத்து கொடுக்கவேண்டும், அதுவும் அவர் சொல்லாமல் நம்ம கொஞ்சம் கவரிங் பேப்பரை கிழித்து கொடுத்துவிட்டோம் அவ்வளவு தான் ஓரே ஆட்டமா இருக்கு என்ன செய்ய இப்படி போது என் பொடியனின் சாப்பாடு

காயத்திரி
காயு எப்படியிருக்கிறீங்க? அன்று உங்கள் பெயரை கூப்பிடவிலை என்ற கோபம் தீர்ந்தபாடிலை போலும்,உங்களையும் அறுசுவை பக்கம் பார்க்கமுடியவில்லை

ரஸியா அக்கா
ரஸியா அக்கா எப்படியிருக்கிறீங்க? உங்க குழந்தைகள் மூவரும் நலமா? இன்று தான நேரம் கிடைத்தது அறுசுவை பக்கம் வருவத்ற்கு

தளிகா
தளிகா எப்படியிருக்கிறீங்க, மாமியார் விவாதம் அனல் பரந்தது அதில் நல்ல நடுநிலை நாயகியாக நின்று உங்கள் கருத்தை வெளியிட்டீங்க நான் அதில் கலந்துக்கொள்ள முடியாமல்போய்விட்டது, என்றாலும் ரஜினி,அதிரா,இலா,நீங்க கொடுத்த பதிவு முழுவதும் வாசித்தேன்

அதிரா
எப்படியிருக்கிறீங்க மற்றும் உங்கள் டான்சில் பிரச்சனை சரியாகக்க முயற்சி செய்து விட்டீங்களா?நான் உங்களிடம் 3முறையாக இலங்கையில் கொழும்புவிலா இருக்கிறீங்க என்ற கேள்வியை கேட்டு கொள்கிறேன் இதற்காவது பதில் கிடைக்குமாஆஆஆஆஅ?

அஞ்சலி
அஞ்சலி சுகந்தன்னே?இந்த பாகம் 3 நு தொடங்கியதுன் நிங்ஞளு பின்னே கொறைய பதிவு அளிச்சது பின்ன ஆளு பாகம் 4ல கண்டிட்டு இல்லா ,இப்பளு வா பகாம் 5 தொடஞ்கியது வேகம் வா பதிவுகளு இடானு.நீங்களு ராஜ்குட்டன் எங்கன உண்டு.

பிரதீபா
எப்படியிருக்கிறீங்க?உங்களையும் ரொம்ப நாளா காணவே இல்லை அறுசுவை பக்கம் வாங்கப்பா?

விஜி
வீட்டில் எல்லாரும் எப்படியிருக்காங்க?அத்தை , மாமா, குட்டீஸ் எல்லாரும்? ஓரே பிஸி போல வாங்கப்பா? வந்து ஆஜர் கொடுத்துவிட்டு போங்க

ரஜினி
என்ன எப்படியிருக்கிறீங்க?உங்கள் அனி அன்ட் அக்ஷிதா எப்படியிருக்கிறாங்க?

ஜலீலா அக்கா
அக்கா எப்படியிருக்கிறீங்க? நீங்க குறிப்பில் போட்டோ எப்படி அனுப்புவது என்று கேட்டீங்க ஆனால் உங்கள் எக் புட்டிங்கில் உள்ள போட்டோ வரவில்லை அதை கவனிக்கவும்

கதீஜா
கதீஜா எப்படியிருக்கிறீங்க?வீட்டில் எல்லரும் சுகமா? ஸ்பெஷலா உங்க குட்டி மற்றும் உங்கள் பதிவுகளை பார்த்தேன் வருத்த்

கே.ஆர்
ஹிபா 2 நாளா ஆன் லைன்னில் காணம் மற்றும் தொடர்பு கொண்டேன் பதில் இல்லை, என்ன உங்க பொண்ணு நல்ல இருக்கிறாளா?

இலா
இலா எப்படியிருக்கிறீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்க கூட பேசி, மொக்கை போடவே பாகம் 4 ஆரம்பிச்சு நீங்க ,ரஜினி,அஞ்சலி 3 பேரும் பட்டமளிப்பு விழாவேற நடத்தி உள்ளீர்கள்.அறுசுவை உறுப்பினர்களை முறையாக அழைத்தாலும் உங்கள் பட்டமளிப்பு விழா 3 பேருக்கும் இடையீலேயே முடிந்து போய்விட்டது (ஆக மொத்தம் யூ.எஸ் மக்கள் எல்லா பட்டத்தையும் 3 பேருமே பகிர்ந்து கொண்டீங்க)பராவாயில்லை அந்த பட்டம் எல்லாம் எங்களுக்கும் வேண்டாம் அதுதான் ரஜினி எங்களை ஜலீலா அக்கா சாபையில் உறுப்பினர் ஆக்கி விட்டங்களே....

ஜெயந்தி மாமி
ஜெ மாமி எப்படியிருக்கிறீங்க? மாமா மற்றும் உங்க பொண்ணு மற்றும் பையன் எப்படியிருக்கிறாங்க? என்னை தஞ்சாவூரா என்று கேட்ட கேள்வியோடு சரி அதன் பின்பு தொடர்பு கொள்ளமுடியவிலை

விமலா ஆன்டி எப்படியிருக்கிறீங்க?கீரின் டீ செய்முறை கிடைத்ததா?

சாதிகா, மற்றும் சபிதா எப்படியிருக்கிறீங்க?

சுபா இப்போது உங்கள் கையில் பட்ட கீறல் (கண்ணாடி உடைந்து ஏற்பட்ட காயம்) எப்படி உள்ளது முன்னேற்றம் உள்ளதா?வேலைகள் செய்ய முடிகிறதா?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எல்லோரும் கலக்குறீங்களே...
மர்ழியா வந்ததைப் பார்த்ததும் சந்தோசமாக இருக்கு. அப்படித்தான் இருக்க வேண்டும் ஒரே அழுது வடிந்துகொண்டிருக்காமல் மனதை மாற்ற வேண்டும்.

கதீஜா... ஜப்பான் போயிற்றீங்களா? சந்தோசம். அதுதான் கொஞ்ச நாளாகக் காணவில்லையே என யோசித்தேன்.

ஜயந்திமாமி, தளிகா,
யாராவது பிள்ளைகளை அப்படிச் சொன்னால், எதிர்த்துக் கதைத்து ஏன் கூடாத பெயர் எடுக்கிறீங்க. ஒரு ஸ்மைலோடு விலத்திடுங்க. நான் அப்படித்தான் செய்வேன் மனதுக்குள் நினைப்பேன் அப்பாடா கண்ணூறு கழிந்துவிட்டதென்று. அதனால் கோபப்பட்டு ஏன் கோபக்காரராக இருக்கிறாரே என பெயர் எடுக்க வேண்டும். எமக்குத் தெரியும் எமது பிள்ளைகளை எந்தளவுக்கு நேசித்து வழர்க்கிறோம் என்று, மற்றவர்கள் எது வேணுமென்றாலும் சொல்லிவிட்டுப் போகடுமே..... இன்னுமொன்று சிலர் வஞ்சகமில்லாமலும் கேட்பார்கள், நாம் திருப்பி ஏதாவது சொன்னால் கவலைப் படலாம்... சும்மா கேட்டதற்கு இப்படிச் சொல்கிறாவே என்று.

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஊரில் இருந்தபோது ஒருநாள் எனது அம்மா 500 ரூபா தாளை மடித்து சட்டைப் பொக்கற்றினுள் வத்துக்கொண்டு முன்னால் ஒரு வெறும் வளவு அதில் போய் நின்று கதைத்துக்கொண்டு நின்றா. கன நேரம் நிறையப்பேர் வந்து போவார்கள், கதைத்துவிட்டு வீட்டுக்குள் வந்து பார்த்தால் காசைக் காணவில்லை. திரும்பிப் போய்த் தேடினால் கிடைக்கவில்லை. அப்போ அயலிலுள்ள ஒருவர் அவரும் கொஞ்ச நேரத்திற்கு முன் அந்த வளவில் நின்றவர்.... அவ வந்திருக்கிறா... அப்போ அம்மா கேட்டிருக்கிறா... இப்படி காசைக் காணவில்லை கண்டனீங்களோ என்று? கடுகளவு கூட அவவில் சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை ஒரு கதைக்கு கேட்டதுதான்.... அவ உறவினர் தான்... இல்லை எனச் சொல்லி விட்டுப் போய் விட்டார். அடுத்த நாள் அவவின் மகள் சின்னப் பிள்ளைதான் வந்து அம்மாவிடம் கேட்டாவாம், எங்கள் அம்மா வயதானவ அவ இப்படி காசை எடுப்பாவோ ஏன் அவவிடம் போய் கண்டனீங்களா எனக் கேட்டீங்கள் என்று. எங்கள் அம்மாவிற்கு மயக்கமே வந்ததுபோல் இருந்ததாம்.... சும்மா கேட்டதை எவ்வளவு பெரிதாக மாற்றிவிட்டார்கள் என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மஹா பெரிய பட்டியலே தூக்கிட்டு வந்திட்டீங்க... வாசித்தே கழைத்துவிட்டேன். நான் இப்போ UK இல் இருக்கிறேன்.... எல்லோரும் இலங்கையில் இருக்கிறேன் என்றல்லவா நினைக்கிறீங்க... தப்பும்மா....தப்பு...... புகுந்தவீடு பற்றிக் கதைத்து கழைத்தது மட்டுமில்லாமல் இலாவையும் அழ வைத்துவிட்டோம்.... இருந்தாலும் இலாவின் ஆசைப்படி 90 ஐ தொட்டுவிட்டோம்... மெதுவாகத் தொட்டாலும் அங்கே எவ்வளவு அருமையான விஷ்யங்களைக் கதைத்துள்ளோம்....

அதனாலேயே மறின தொண்டை நோ புதுப்பித்துவிட்டது எனக்கு... மஹா பெயர் கொடுத்துள்ளேன் வெயிட்டிங் லிஸ்ட் இல் இருக்கிறது. சமர் ஹொலிடே முடிய முதல் டேற் தருமாறு பணிவான வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளதும்.... செர்ஜனும் முடிந்தவரை முயற்சிக்கிறேன் எனச் சொன்னார். பார்ப்போம்.... கேட்டதற்கு.... நன்றி..... இந்தாங்க சொக்கா..... கட்ஸ்பெறி.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆஹா மஹா பிரகதீஷ் அத்தனை அருசுவை தோழியரையும் பெயர் சொல்லி சொல்லி வினவி இருக்கிறீர்கள்.
நாங்கள் அனைவரும் நலமே.நீங்கள் எப்படி இருக்கிர்\றீர்கள்?
உங்களுடன் முதல்முதலாக பேசுகிறேன்.மன்றத்தில் வரும் அனைத்து பதிவுகளையும் அனேகமாக பார்த்து விடுவேன்.(தாமதமாக ஆனாலும்)
தொடருவோம். நமது அன்பு பறிமாறலகளை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்