ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் ஐந்து...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

நாளாம் பதிப்பு சிறிது நாளிலேயே 89 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஐந்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... என்னால் இப்போதய்க்கு இதில் பங்களிக்க இயலாது..உங்கள் முன்னால் உள்ள பதிவுகளுகெல்லாம் மெதுவாக பதில் போடுகிறேன்..யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

ஹாய் மஹா

யுவன் எப்படி உள்ளான். அமிர்தவர்ஷினி முன்பெல்லாம் பேக் மாட்டிக்கொண்டு வெளியில் வந்தால் முகமெல்லாம் ஒரே சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் 2 நாளாக ஆபிஸுக்கு கிளம்புவதை பார்த்து ஒரே அழுகை. அவள் அழுவதைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
அறுசுவையில் பார்த்தபின்தான் தெரிகிறது, இங்கு எல்லோரும் குழந்தைகள் சாப்பிடும் விசயத்தில் ஒரே ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம்.

காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் என்று நம்பலாம்.

ஒரே பதிவில் அனைவரயும் விசாரித்த உங்களின் பதிவு அருமை.

ஹாய் மர்லியா

ஏன் பெண்ணை ஸ்கூலுக்கு அனுப்ப இப்படி கவலைப்படுகீறீர்கள். ராதாக்ருஷ்ணன் ரோடில் எந்த ஸ்கூல். தப்பா நினைக்கலனா சொல்லுங்க. ஏன்னா அங்கு சில்ரன் கார்டன் ஸ்கூல்னா கண்ணை மூடிட்டு சேர்க்கலாம். அங்கு குழந்தைகளை நன்றாய் பார்த்துக்கொள்வார்கள். நான் அந்த ஸ்கூலில் தான் 12வது வரை படித்தேன். அங்கு கின்டர் கார்டன் இருக்கிறது. குழந்தை கல்விக்கு எற்ற இடம்.

மர்ழியா!.... குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப டென்ஷன் ஆகவேண்டாம். பயபடாமல் அனுப்புங்கள். என் பேரன் நான்கு நாட்கள் கொஞ்சம் வம்பு பண்ணினான். இப்ப அவனே பேக் - ஐ தூக்கிக்கொண்டு ஜாலியா போகிறான். எல்லா குழந்தைகளும் அப்படித்தான்.
குழந்தைக்கு காலையில் எழுந்தவுடன் பால் கொடுக்காதீர்கள். பாலை குடித்துவிட்டால் பிறகு டிஃபன் சாப்பிடமாட்டார்கள். டிஃபன் சாப்பிடக்கொடுத்தபிறகு பாலை குடிக்கக்கொடுங்க. கையில் ஏதாவது ஸ்நாக்ஸ் ( பிஸ்கட், சிப்ஸ், சுண்டல், வேர்கடலை,.... இப்படி ஏதாவது) கொடுங்க. ஸ்கூலுக்கு வரும் மற்ற பேரன்ட்ஸ்களுடன் நிறைய பேசுங்க. குழந்தைகள் ஒருவருக்கொருவர் ஃபிரன்ஸ்ட்ஸ் ஆவற்குள் நாம் மற்ற பேரன்ட்ஸுடன் ஃபிரன்ட்ஸ் ஆகனும். ஸ்கூல் ஏஸி - யாக இருப்பதால் பரவாயில்லை. சாதாரண ஸ்கூலாக இருந்தால் குடிப்பதற்கு ஏதாவது ஜூஸ் கொடுக்கலாம். சாத்துகுடி போன்ற பழ ஜூஸ்கள் கசப்பாகிவிடும் என்று நினைத்தால் குலுக்கோவிட்டா (குளுக்கோஸ்) கலந்து கொடுக்கலாம்.
ஆல் தி பெஸ்ட்!.....மர்ழியா!
ஸ்கூலுக்கு நீங்களே கொண்டுவிட்டு கூட்டி வாங்க மர்ழியா! அந்த அனுபவம் வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத சுகமான இனிமையான அனுபவம்!....

கல்யாண மேளம் த்ரெட்டில் நம்ப ரெண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமையை எழுதி இருந்தேன் பார்த்தீங்களா?
அன்புடன்
ஜெயந்தி மாமி

நேற்று ஒரு பள்ளி தலைமை ஆசிரியை குழந்தைகளை முதன்முறையாக பள்ளிக்கு விடும்பொழுது என்பதைப் பற்றி பேசினார்..மிகவும் அழகான தெளிவான டிப்ஸ் கொடுத்தார்..அதனை இங்கு தருகிறேன்.

1)குழந்தை பள்ளிக்கு போவதற்கு முன்பே பள்ளியைப் பற்றிய உண்மையானவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்
2)விலையுயர்ந்த வாட்டெர் பாட்டில் டிஃப்பன் பாக்ஸ்,பேக் என்று வாங்கிக் கொடுக்கக் கூடாது..மற்ற பிள்ளைகளுக்கு அதனைக் கண்டு ஆசையில் வீட்டுக்கு கொண்டு போகும்
3)மற்ற பிள்ளைகளின் பொருட்களை கொண்டு வந்தால் பொறுமையாக இப்படி எடுக்க கூடாதும்மா இது அவங்க அம்மா காசு கொடுத்து வாங்கி கொடுத்ததல்லவா..அம்மா உனக்கு வாங்கித் தந்ததை மட்டும் கொண்டு வருவது தான் நல்ல பிள்ளை என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்
3)எல்லா பொருட்களிலும் பேர் எழுதி விட வேண்டும் முதல் நாளே அப்பொழுது ஆசிரியருக்கு கண்டுபிடித்து கொடுக்க வசதியாக இருக்கும்
4)மண்ணை வாரி அடுத்த பிள்லைகள் மீது வீசக் கூடாது என்று சொல்லிப் புரியவைக்க வேண்டும்
5)பள்ளிக்கு போக அடம்பிடித்தால் 2 நாள் விடாமல் பிறகு விடக் கூடாது அப்பொழுது அது இன்னும் ஏமாற்றம் அடைந்து விடும்..ரொம்பவும் வாஷி பிடிக்கும்..சொல்லிப் புரிய வைத்து தவறாமல் அனுப்ப வேண்டும்
இன்னும் என்னெனவோ சொன்னார் பிறகு வந்து சொல்கிறேன்

நான் நல்ல இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கீங்க?மன்றத்தில் கலக்கறீங்களே நேரம் கிடைக்கிற்தா?நீங எப்படி இருக்கீங்க?

எனக்கு ரொம்ப குழப்பம் நீங்க அழகா சூப்பரா டிப்ஸ் தந்துட்டீங்க பாலோ பண்ணுறேன்..ரொம்ப தேங்ஸ்..

சார்தா என் கணவ்ர் சேர்ச் பண்னி 4,5 ஸ்கூல் வைத்து இருந்தால் நான் ஒரே டைமில் எல்லா ஸ்கூலேயும் ஒரு ரவுன்ஸ் போய்ட்டு வந்தேன் சோ சில ஸ்கூல் பெயர் தெரியலமா கிட்ஸ் ந்ன ஸ்கூல் மட்டுமே நியாபகம் இருக்கு மற்றதெல்லாம் பெயர் பாககல இனிதான் கேட்கனும்

அக்கா ஓஹ் கேஸ்னால் புடிப்பு வருமா?என்ன இங்கு இருக்கும் வெயில் காணாதுன்னு நீங்க வேற துபாய் வெயிலை போட போறீங்களா ஹா ஹா ஓக்கே பொடுங்க..தைலம்தான் போட்டேன் இப்ப கொஞ்சம் தேவல ஆனாலும் பைன் இருக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அதிரா
எப்படிருக்கிறீங்க, சந்தோஷம் உங்கள் பதில் கண்டு., இபோது தெளிவாக புரிந்தது எனக்கு நீங்கள் கொழும்புவில் இல்லை ,என்று அங்கு லண்டனில் இருக்கிறீங்களா? (அப்பா ஆரம்பிச்சுட்டா? மறுபடியும் இடத்தை கேட்டு என்று சொல்வது கேட்கிறது) அங்குதான் என் பிரண்ட் இருக்கிறாள், அவள் அம்மாவும் இலங்கை பூரிவீகம் தான், அதுமட்டும் அல்லாது நம்ம பிரதீபாவும் இஉக்கிறாங்க அல்லவா அதுதான் கேட்டேன்.

ஸாதிகா
மிகவும் சந்தோஷம் அன்பு பரிமாறல் செய்ததற்கு உண்மையில் அட்மின் பாபு அண்ணாவிற்கு தான் நாம் அனைவரும் கடமைபட்டுள்ளோம்.தொடரலாம் அன்பு பரிமாறலை இனிமேல்......

விமலா ஆன்டி
க்ரீன் டீ குறிப்பு கிடைத்தது உங்களுக்கு அதன் செய்முறை சொல்லவும்,அதேப்போல் உடம்பு குறைய ஏதாவது டீ இருக்கா?....................(உடம்பு குறைய எக்ஸர்சைஸ் தான் செய்யவேண்டுமே தவிர குடித்துக்கொண்டோ, சாப்பிட்டுக்கொண்டோ இருக்ககூடாது என்று நினைப்பது தெரியுது ஆன்டி)

அஞ்சலி
ஹாய் எப்படிய்ருக்கிறீங்க? வீட்டில் எல்லாரும் எப்படியிருக்கிறாங்க? உங்க ஹஸ், மற்றும் சிவராஜ், இங்கு நாங்க 3 பேரும் சுகம். நான் ஆன்லைனில் வர இயலவிலை ஏன் என்றால் வெள்யூரில் இருக்கிறேன் அதிலும் யாருக்காவது பிரண்டு வீட்டில் போனால் அங்கு கம்பியூட்டர் பார்த்து வீட்டால் அறுசுவை ஓபன் செய்து மன்றம் பக்கம் வந்து விடுவேன்.இப்போதும் ஒரு பிரண்டு வீட்டில் தான் இருக்கிறேன் அடுத்தவாரம் லைனில் வருவேன்

ரஜினி
எப்படியிருக்கிறீங்க? அனி மற்றும் அஷிதா எப்படியிருக்கிறாங்க? நீங்க இந்தியாவிற்கு எப்பொட்து போகிறீங்க?

ரஸியா அக்கா
நாங்க நன்றாக இருக்கிறோம், யுவனும் நன்றாக இருக்கிறான் என்னை நன்றாகவே வேலைவாங்குகிறான் வீட்டை சுததம் செய்ய அவனே எனக்கு பெரும் உதவியாக வீட்டை ரணகளமாக்கிவிடுகிறான்

ஷாராதா
எப்படியிருக்கிறீங்க? அப்படி குழந்தை அழுதுகொண்டு இருக்கும் வேலைக்கு போகமிகவும் கஷ்டமாக இருக்கும் இதைப்பற்றி என் அக்காவிடம் கேட்டால் ஒரு பெரிய கதையே சொல்லுவா?
உங்கள் நிலமையில் தான் அவள்ளும் இருந்த்ஹ்ள்.

சபிதா எப்படியிருக்கிறீங்க? கலக்கதான் முடியவில்லை நேரம் போதமாட்டேங்குது விரைவில் வருகிறேன்

மற்ற எல்ல தோழியருக்கும் பதில் பிறகு அனுப்புகிறேன் மர்ழி ,இலா, கதீஜா, தளிகா, ஜெ மாமி, ஜலீலாஅக்கா, காயத்திரி, பிரதீபா.......

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எங்கு போயிட்டீங்க மஹா?சண்டை போட வந்தேன் என்னை கேட்கலன்னு கீழே என் பெயரை போட்டதான் புலச்சு போட்டும்னு விட்டுட்டேன்!

ஆமா அது என்னப்பா கிரீன் டீ டிடைல் பிளீஸ் யாராவது சொல்லுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்