ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

என்ன தேடின மாதிரி இருந்தது... இங்க தான் இருக்கேன்... இன்னுமே ஒரு 30 மணி நேர தூக்கம் பாக்கி இருக்கு.. ஆனா என்ன உங்களை எல்லாம் பாத்து ஒரு வணக்கம் போடலாம்ன்னு வந்தேன்... நலந்தானா?? அதிரா உங்க மெயில் ஐடி தப்பு.. இப்போ தான் பார்த்தேன்.. மெயில் சர்வர் திட்டி அனுப்பிட்டது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்படி இருக்கீங்கக்கா?இன்னும் கிளம்பலயாக்கா?நீங்க இல்லாததால் ரொம்ப போர்க்கா..

ஊர் வந்ததும் மறக்காம போன் போட்டுடுங்க நான் ஒன்னு பேசனும்..அதிரா இப்பதான் இலாட்ட பேசினேன் உங்க ஐடி தப்பாமே! என்ன அதிரா இது?ஹும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரஜினி

நன்றிப்பா வாழ்த்துக்களுக்கு.

மர்ழியா
நீங்க இல்லாமலா? எல்லா தோழிகளுக்கும் தான்ப்பா அழைப்பு. கழுத்து சுளுக்கு எப்படி இருக்கு?

அதிரா
என் கணவர் வீட்டின் படி பிறந்த நாள் நட்சத்திர படி தான் கொண்டாடுவார்கள். என் பையனுக்கு ஜூலை 4 தேதி நட்சத்திர படி பிறந்த நாள். மேலும் இங்கு ஜூலை 4 விடுமுறை (இவர்களின் சுதந்திர தினம்). எனவே விருந்தினருக்கும் வசதியாக இருக்கும். ஜூலை 7 அவர் பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் கொண்டாடுவார்.

காயத்திரி
எப்படி இருகீங்க? பிஸி எல்லாம் இல்லை, பிரியாத்தான் இருக்கேன்

ஜெயந்தி மாமி என்னுடைய விசாரிப்பையும் செல்விக்கு சொல்லவும்.

தங்களின் பிரச்சனை எனக்கும் உண்டு. எதாவது ஒரு முறை பயன் பட்டால் எனக்கும் சொல்லவும். சிறிது நெய் தடவி பாருங்கள். ஒரு குறிப்பில் தளிகா சொல்லியிருந்தார்கள்.

உங்க செல்லத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நாங்கள் முதல் பிறந்த நாளுக்கு (நட்சத்திரம்) அன்று பூஜை (ஆய்சு ஹோமம்) செய்த்தோம். கோவிலுக்கு சொன்றோம். அன்று பார்ட்டி வைக்க வில்லை.

அவர் பிறந்த நாள் அன்று சின்ன பார்ட்டி. இந்தியாவில் அவர் தாத்தா பாட்டி, கோவிலில் அன்னதானம் செய்தார்கள். இப்போ தான் எல்லா கோவில்களிலும் அன்னதானம் செய்கிறார்களை அதில் ஒரு கோவிலில் பணம் செலுத்தி விட்டார்கள். தங்களுக்கு என்ன மாதிரி ஆலோசனை வேண்டும். மெனு ஐடியாவா? அல்லது வேறு மாதிரியா? மறக்காமல் அன்று போட்டோ எடுத்து விடுங்கள்.

என் தோழி அவர் குழந்தை பிறந்த நாள் அன்று(அல்லது அந்த வாரத்தில்) சென்னையில் உள்ள ஒரு அனாதை விடுதிக்கு சென்று மதிய உணவு அவர்கள் குடுபத்துடன் (அம்மா, அப்பா, மாமா மாமி) அங்கு சாப்பிட்டு வருவார்கள்.

அஹா அதிரா,
என்ன மெயில் அனுப்பினேன் கிடைக்கலையா?. நீங்க கொடுத்த அதே ஐ.டி க்குத்தான் அனுப்பினேன். இலாவேற ஐ.டி தப்புன்னு சொல்லிட்டுப் போறாங்க. இன்னொருதடவை செக் செய்யுங்க. இல்லைன்னா பிரதீபா, விஜி இல்ல மர்ழிகிட்ட என் ஐ.டி இருக்கு. மெயில் கிடைக்கிறதுக்கு முன்னாலயே நான் தான் அவசரத்தில வந்து கூவிட்டனோ? ஊப்ஸ்! சாரிப்பா.

மர்ழி,
பெருங்காயப் பொடியும் போடலாம். ஆமா, இன்னுமா மரியம் உங்கமேல குதிக்கலை-:))

காயத்ரி,

"தாயே உன்னை இத்தனைக்காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ" கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டு[ உணர்ச்சிவசப்பட்டா தான்] ஏர்போர்ட்டுல இருந்து ஒரு பாட்டு அடுத்த வாரம் கேட்டா பயந்துடாதீங்க, அது அடியேன் தான். ஆமாப்பா, 1 மாசம் இந்தியா ட்ரிப்.

சாரதா,
இப்போ பர்ச்சேஸ்ல பிசிப்பா, டைம் கிடைச்சா வந்து கதை சொல்றென். இல்லைன்னா, கதைப் படிக்கிறேன்[நீங்க எல்லாம் சொல்லப் போவதைத்தான்]

இலா,
மௌன விரதமா?. ஆளையே காணலை, தேடினாத்தான் வருவீங்களா?.

தீபா,
மெயில் பார்த்தேன்ப்பா. இன்னைக்கு ரிப்ளே இருக்கும் பாருங்க.
Rajini

மர்லியா அக்கா(!)
கை எப்படி இருக்கிறது, கொப்புளம் வந்தால் உடைக்காதீர்கள். 2 நாட்களில் சரியாகிவிடும்.ஜலீலாக்கா ஊருக்கு போய்விட்டார்களா?
Aniaksh,Saradha,நன்றி

food

மர்ழி நான் இந்த கதை த்ரெட் போடல. சாரதா மேடம் தான் போட்டாங்க மர்ழி.
ரஜினி என்ன பாட்டெல்லாம் பட்டை கிளப்புது. ம் ம் ஊருக்கு வர மூடுல இருக்கீங்களா? ஓகே ஓகே அப்போ தார தப்பட்டைக்கு எல்லாம் ஏற்பாடு பண்ண வேண்டியது தான். என்ன ரஜினி பூர்ண கும்ப மரியாதை எதுவும் வேணுமா சொல்லுங்க ஏற்பாடு செய்துடுவோம். ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க ரஜினி calm down. happy journey and safe journey

என்னப்பா எல்லோரும் தூங்குறமாதுரி இருக்கு?

ரஜினி அதிரா க்கு உங்க ஐடி கிட்டி இருக்கும் பொறுங்க அதிரா போல குதிக்கதீங்க..இல்லைப்பா போட்டுட்டேன் இன்னும் போகல ஒரே தொந்தரவா இருக்கு ஸ்[பிரே யூஸ் பண்ணலாமான்னு பார்கிறேன் எங்கு போட்டேனோ தெரியல கானோம்...இருங்க நஜினி இப்ப வாரென் உங்க மேல குதிக்க ஹா ஹ நினைத்தாலே சந்தோசமா இருக்கு அப்ப உங்க மேல குதிச்சா ஆஹா சட்னிதான்!

வித்யா இதோ வந்துடறேன் எங்கெ என் இடம் எங்கே என் இடம் சாப்டதான் ஹா ஹா சந்தோசமா கொண்டாடுங்கள் உங்க செல்லத்துக்கு என் முத்ததை கொடுத்துடவும் விஜி உங்கள் செல்வத்துக்கும்தான்..

தளி ஆலைன் செ பண்னு

கே.ஆர் எப்ப ஆன்லைனில் வாரா?

மஹா சிம குஷி மூடில் இருப்பீங்க மெதுவா வாங்க ஒகே...

காயத்ரி சாரிப்பா சார்தான்னு தெரியும் அவசரத்தில் மாற்றிட்டேன் அந்த பொண்னு வந்து என்னத்த குதிக்க போறாங்களோ!

ஆ ஆ சுசித்ரா இப்பதான் உங்க புரொபைலை பார்த்தேன் சமையலில் 10 வரிஷம் அனுபவம் அப்ப என்னை விட வயது அதிகம் நான் உங்களுக்கு அக்காவா?யாராவது கேளுங்கப்பா இந்த அனியாயத்தை..அட்லீஸ்ட் மர்ழியான்னாவது சொல்லி இருக்கலாம் அதை விட்டுட்டு அக்காவாம் ஆ ஆ(அழுகை)கை சரியாகிட்டுமா..அக்கா இப்பதான் பிலைட்டில் பறந்து வந்துட்டு இருப்பாங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமாம் திவ்யா அதேதான்..

குரங்கு கையில் பூமாலை போல அது என் கையில் மாட்டி இருக்கு குரானை ஏற்றி இருக்கேன் மனசு பிரீயா இருக்க கேக்லமாமேன்னு ரொம்ப நல்லா இருக்கு..

இதில் நான் சொன்னது போல என் கை பட்டு ஸ்டக் ஆகிட்டு நல்ல பிள்ளையாட்டம் சிஸ்டத்தின் பக்கம் வைத்துட்டேன் அவர் என்னாச்சுன்னு கேட்டார் தெரியலேயேன்னு கிச்சன் பக்கம் போயிட்டேன் ஏன்னா இப்படி பொய் சொல்லுறப்ப எனக்கு சிரிப்புதானக வந்துடும்..அப்புறம் அவர் சரி பண்ணி தந்தார்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்