About my son's toilet problem

Hai,
My son is having a probem of passing tools for the past 8 mionths. He used to pass the stools after 3, 4 or 5 days. Ultimately it gets dried up and he is having a lot of pain while passing the stools. He was crying like any thing. We have tried so many medicines and consulted so many doctors. No use.now, he is 3 years old . Kindly give some suggestions.

ஹாய் பீவி
நல்லதொரு டயடீஷியனிடம் போய் குழந்தைக்கு தகுந்த டயட் சார்ட் கேட்டு வாங்குங்கள்.
நல்ல ஃபைபர் ரிச் உணவுகளாக பார்த்து சொல்லுவார்கள்..அதில் பாதி சரியாகும்.
நிறைய தண்ணீர்,பியர்ஸ்,உலர்ந்த திராட்சை,ப்ரூன்ஸ் என சாப்பிட கொடுங்கள்..முன்னயே நீங்கள் இதுவெல்லாம் ட்ரை பன்னி வெறுத்து போயிருப்பீர்கள்.
டயடீஷியனிடம் போயும் சரியாகவில்லையென்றால் நல்ல குழந்தை மருத்துவரிடம் காட்டுங்கள். எப்பொழுதும் சொல்லும் டயட் விஷயங்கள் மட்டுமல்லாமல் குழந்தையின் உடலை பரிசோதித்து அதில் மிக சிறிய அளவில் குறைகள் இருந்தாலும் இப்படி கான்ஸ்டிபேஷன் ஆகும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.அதனை நிவர்த்தி செய்வதும் ரொம்ப சுலபம்.
நல்ல வயிறு நிறைய குழந்தை சாப்பிடாது போலிருக்கு..ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணவுக்காவது வயிறு இளகுமா என்று பாருங்கள்.உருளை,திராட்ஷை அப்படி எதுவாவது.
8 மாதமாக என்னும்பொழுது ஏதாவது மாற்றம் காரணமாக தானே இப்படி ப்ரச்சனை தொடங்கியிருக்கும்..அது என்ன என்பதையும் மருத்துவரிடம் தவறாமல் சொல்லுங்கள்.

Abdul ALi - Salman - Rayyan

Abdul ALi - Salman - Rayyan

Thank You so much for your reply. My son is very lazy in eating. He never likes to eat any thing. This problem started when I stopped breast feeding in his age of 2. After that he didn't like any other food. He likes only to drink milk. He will try to avoid soild foods maximum in his level.

Doctors also said the same thing thatb his stomach is not at all filled in one day. That is why this problem occurs. Any way, thank you so much once again.

He is very naughty, very intelligent, very talketive and always dancing in front of the TV.Only one minus, he doesn't like to eat food .

Abdul ALi - Salman - Rayyan

give fig

Jaleelakamal

ஹாய் ஹாஜி,
உங்கள் மகன் மிகவும் கஷ்டப்பட்டு போகும் முன்பு சிறிது விளக்கெண்ணையை அந்த இடத்தில் சுண்டு விரலால் வையுங்கள்,அரைமணி நேரத்தில் போய்விடுவான்,இதை தினமும் செய்யுங்கள். அவனும் மனதளவில் பயந்துப்போயி இருப்பான்,அதுவும் சரியாகிவிடும். இது பக்கவிளைவுகள் இல்லாதது, இது ஒரு பாட்டி வைத்தியம்.

CHEERS....

ஹாஜீ,ஜலீலாக்கா சொன்னதையும்,aaksreeன் பாட்டி வைத்தியத்தையும் ட்ரை பண்ணி பார்க்கவும்,பக்கவிளைவுகள் இல்லாததுதானே

ஹாஜீ,ஜலீலாக்கா சொன்னதையும்,aaksreeன் பாட்டி வைத்தியத்தையும் ட்ரை பண்ணி பார்க்கவும்,பக்கவிளைவுகள் இல்லாததுதானே

aaksree அவர்கள் சொன்ன விளக்கென்னை ரொம்ப நல்ல மருந்து என் அம்மா இப்ப்டிதான் செய்வாங்க..

கிஸ்மிஸ்,அச்சு வெல்லம் போட்டு இரவு ஊற வைத்து காலையில் மிக்ஸியில் அடித்து வடித்து கொடுக்கவும் லேசாகும்..இதெல்லாம் தாய் மருந்து ஒன்னுமாகாது..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க.மகன் சுகமா.உங்கள் மகனை பற்றிய பதிவை பார்த்து மனசு கஷ்டமாக இருந்தது. ஏன்னா என் பையனுக்கு இதே போல இருந்து நாங்க நிறைய கஷ்டம் அனுபவித்து இருக்கிறோம். நீங்கள் சொல்வது போலதான் அவனுக்கு 5 அல்லது 6 நாள் கூட சில சமயம் ஆகும் அவன் அழுது துடிப்பதை பார்த்தால் நான் துடித்து போய்விடுவேன். அது வரக்காட்டியும் அந்த பிள்ளைகள் படும் பாட்டை சொல்லி மாளாது.நமக்கு ஒன்னுனா கூட பெரிசா தெரியாது ஆனால் பிள்ளைகளுக்குன்னு வந்தால் அவ்வளவுதான் அது படும் கஷ்டத்தை பார்த்தே நமக்கு வேதனைதான். நான் நிறைய டாக்டரிடம் காமித்து இருக்கேன் இந்தியாவில் சில டாக்டர் பயபட தேவையில்லை சரியாகிடும்னு சொன்னாங்க. சில டாக்டர் இப்படியே ப்ராப்ளமா இருந்தால் சிறிய ஆபரேஷன் செய்யனும்னு பயம் காட்டினார்கள். ஆனால் நான் ஜப்பானில் காமித்த டாக்டர்கள் பயப்படவே தேவை இல்லை எல்லாம் நல்லா இருக்கு அவன் நல்ல ஆக்டிவா இருக்கான் தைரியமா இருங்க சீக்கிரம் சரியாகிடும்னு சொன்னங்க. நல்ல நடக்க வைக்க சொன்னாங்க.அவனுக்கு 1.2 மாதத்தில் ஏற்பட்டது 3 வயதுக்கு பின்னாடி சரியாகும்னு தான் டாக்டர்ஸ் சொன்னாங்க இங்க அதே போல சரியாகிட்டு.இப்ப அவன் ஒரு நாள் மோஷன் போகாவிட்டால் கூட எனக்கு கிறுக்கு பிடித்துவிடும் முன்னாடி போல வந்துட்டோன்னு. ஏன்னா பயம் இப்ப அல்லாஹ் உதவியால் அவனுக்கு சரியாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ். அதே போல உங்கள் பையனுக்கும் சரியாகிடும் கவலை படாதீங்க.

நான் மன்றத்துல கூட இதை பற்றி பேசி இருக்கேன் போய் பாருங்கள் பழைய த்ரெட்ல இருக்கும். அவனுக்கு கொடுத்ததை போல சொல்கிறேன் நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

காலையில் வார்ம் வாட்டரில் சிறிது சீனி சேர்த்து குடிக்க கொடுங்க.அப்புறம் சோம்பை வறுத்து ஒரு க்ளாஸ் நீர் விட்டு நன்கு அவித்து தண்ணீர் வற்றியதும் ஒரு 5 மில்லி அளவு எடுத்து குடிக்க கொடுங்க. காய்ந்த திராட்சையை இரவு ஊறவைத்து கலையில் அந்த தண்ணீரை வடித்து குடிக்க கொடுங்க இது எல்லாம் நம்ம அறுசுவை ப்ரெண்ட்ஸ் எனக்கு சொன்ன டிப்ஸ்.

அப்புறம் நைட் தூங்க முன்னாடி எப்படியும் 2 அத்திப்பழமாவது சாப்பிட கொடுத்து சிறிது வெந்நீர் கொடுத்து தூங்க வையுங்கள். அவன் டாய்லெட்டுக்கு வருதுன்னு சொல்லும் போது கூட சிறிது வெந்நீர் கொடுத்து உட்கார வையுங்கள். கஷ்டமாக இருப்பதால் குழந்தைகள் கமோடில் இருக்கமாட்டார்கள். வழியில் அழுவதைவிட அவர்களுக்கு பயம் தான் இருக்கும் அதனால் எழுந்து நிற்ப்பார்கள். அது கூட கொஞ்சம் வராது. 3 வயது என்பதால் நாம் சொல்வதை புறிந்து கொள்வார்கள். அதனால் அவர்கள் நல்ல மூடில் இருக்கும் போது எடுத்து சொல்லனும் நீ கமோடில் இருந்தால் ஈஸியாக போகும் உனக்கு வழிக்காது என்று சொல்லி கொடுங்க. நீ இருக்க பயந்தால் மோஷன் வராது. எல்லாம் சொல்லுங்க நான் என் பையனை வைத்து என் ஹஸ்ஸும் பக்கத்துல உட்கார்ந்து அவனை எப்படிலாம் சந்தோஷப்படுத்தி உட்காரவைப்போம். அப்படியே உட்கார்ந்தாலும் வரும் போது கஷ்டமாக இருந்தால் எழும்பிவிடுவான் அதுக்கு தான் விடக்கூடாது எழும்பிவிட்டால் சுத்தமாக வராது எப்படியும் கமோடில் உட்காரவச்சி பழக்குங்க. நல்ல நடக்கவிடுங்க ஏணி படி இருந்தால் விளையாட்டு போல ஏறி இறங்க வையுங்கள். எல்லாம் சரியாகிடும்.

சாப்பாடு என்றால் இட்லி,தோசை கொடுங்க. தோசையில் A B C என்று தோசை ஊற்றி கொடுங்க.அப்புறம் ஆரஞ்ஜூஸ் கொடுங்க ஓவனில் வைத்து லேசா ஹீட் பண்ணி கொடுங்க.பீடியா ஸியர் கிடைத்தால் வாங்கி கொடுங்க. அதுக்கும் மோஷன் ப்ரீயாகும்.

அப்புறம் நான் வெஜ்,முட்டை,வாழைபழம்,ஆப்பிள் சேர்க்காதீங்க.நிறைய காய்கறி சேர்த்து துவரம் பருப்பு,சாதம் சேர்த்து குழைய வேகவைத்து கொடுங்க.சிறு பருப்பு சேர்க்காதீங்க அது டைட்டாக்கும்.ப்ரூன்ஸ் ஜெல்லின்னு கிடைக்கும் அதுவும் சாப்பிட கொடுங்க.பால் ஹை பேட் மில் கொடுக்காதீங்க.பட்டர்,சீஸ்,பிரெட் சேர்க்காதீங்க. காரம் சிறிது சேர்த்து சமைத்து கொடுங்க.முக்கியமாக காய்கறி ஜூஸ்,ப்ரூட் ஜூஸ், தண்ணீர் அதிகமாக கொடுங்க இடையிடையே வெந்நீர் கொடுங்க.எனக்கு தெரிந்தது எல்லாம் சொல்லிவிட்டேன்னு நினைக்கிறேன். மற்றது ஏதும் நியாபகம் வந்தால் சொல்கிறேன். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
சொல்ல மறந்துட்டு உங்க மகனுக்கு டயப்பர் வைக்கும் பழக்கம் இருக்கா அப்படி இருந்தால் முதலில் அதை நிறுத்துங்க. அந்த ஹீட்னாலயே இன்னும் அதிகமாக டைட்டாகும்.

அன்புடன் கதீஜா.

I have really surprised to see this much reply of my query. Thanks a lot & lot.
I know this website through my very close friend Sabitha.Now I got lot of friends through this site those are whole heartedly helping of my son's ptroblem.
I will try what are the suggestions I got now.Insha allah, it will be cure.
Thank You once again.

Abdul ALi - Salman - Rayyan

மேலும் சில பதிவுகள்