சொல்லி உதவுங்களேன் தோழிகளே

தெரிந்தால் சொல்லி உதவுங்களேன் தோழிகளே
என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது, கடந்த 10 வருடங்களாக மாத்திரை சாப்பிட்டு வந்தார், இப்பொழுது மருத்துவர் இன்சுலின் ஊசி போட வேண்டும் என்று சொல்லி விட்டார். நான் ஏதாவது கை வைத்தியம் செய்து சர்க்கரையை குறைப்பதாக கூறினேன். அவரும் 3 மாதம் time கொடுத்து இருக்கிறார். இந்த 3 மாததிற்குள், எப்படியாவது சர்க்கரையைக் குறைத்து விட்டால், இன்சுலின் ஊசி யிருந்து தப்பிக்கலாம். உங்களுக்கு தெரிந்த கைவைத்தியம், பாட்டி வைத்தியம், உணவு முறைகள் சொல்லுங்களேன் தோழிகளே.

என்றும் தமிழி.

தமிழி

சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தோம் என்றால் பிரச்சினை இல்லை, இல்லையென்றால் பெரும்தொல்லைதான். நீங்கள் எங்கு வசிக்கின்றீர்கள்? ஆவரம்பூ கிடைக்குமா அங்கு? அதை அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம், பாகற்காய் அவித்து அந்த தண்ணீரைக் குடிக்கலாம். மேலும் டயட் மற்றும் உடல்பயிற்சி ரொம்ப முக்கியம். அதை சரியாக ஃபோலோ செய்தால் இன்சுலின்கு அவசியமே இல்லை. அதிகமாக கீரை, சப்பாத்தி,ராகி சேர்த்துக் கொள்ள செய்யுங்கள், மேலும் நேரத்துக்கு உணவு உண்ண வேண்டும்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

முதலில் உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நான் பிரான்ஸில் வசிக்கிறேன்.

நாங்கள் வசிக்கும் நாட்டில் ஆவரம்பூக் கிடைக்காது.
நீங்கள் சொன்ன ராகி,கோதுமை,இவைகள் கிடைக்கும். கீரைகள் நிறைய . பாகற்காயும் சீனாவிலிருந்து வருகிறது. கசப்பு இருக்காது. அதனை கொடுக்கலாமா?

நன்றி மீண்டும் சந்திப்போம்.

அன்புடன் தமிழி

தமிழி பாவக்காய ரவுண்டா கட் பண்ணி ஆவன்ல 3நிமிஷம் வையுங்க.பாதி வெந்து இருக்கும்.அத அப்பிடியே மிக்ஸில போட்டு அடிச்சி கொடுங்க.(வாரத்துக்கு ரெண்டு நாள் )உங்களுக்கு காசினிகீரை கிடைக்குமா.அது ரொம்ப நல்லது.ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுங்க.டெய்லி வாக்கிங் கண்டிப்பா போகணும்.கோதுமை நிறைய யூஸ் பண்ணுங்க.இப்போதைக்கு இவ்வளவு தான் ஞாபகம் வருது.அம்மா கிட்ட கேட்டுட்டு மிச்சத்த சொல்றென்.இதை எல்லாம் பண்றதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட இன்சுலின் லேட்டா ஆரம்பிக்கலாமான்னு நல்லா கேட்டுட்டு ஆரம்பிங்க.ஏன்ன இன்சுலின் போடுற ஸ்டேஜ்ல லேட் பண்ணா ரொம்ப டேஞ்சர்.அப்புறம் அருகம்புல் ஜுஸ் குடுக்கலாம்.பாவக்காய்,அருகம்புல் ரெண்டுமே வெறும் வயித்துல சாப்பிடணும்.பஸ்ட் ஆரம்பிக்கிறப்ப கொஞ்சமா ஆரம்பிங்க.
Think Positive Your THINIKING Will make the THINGS Positive

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

ஹலோ பிரபா,
நாங்கள் இருக்கும் ஊரில் இந்திய கடைகள்கிடையாது. இந்தியர் எங்களைத்தவிர யாரும் கிடையாது. டாக்டர்கிட்ட இன்சுலின் ஆரம்பிக்க இன்னும் 3மாதங்கள் டையம் கொடுத்து இருக்கிறார்.september கடைசியில் போகும்போது சர்க்கரை இறங்கி இருக்க வேண்டும்.Pancraes ஒழுங்காக வேலை செய்யவேண்டும்.

அறுசுவை உறுப்பினார்கள் இப்படி எனக்கு யோசனைகள் சொல்வதை வைத்து முயற்சி செய்து பார்க்கிறேன்.முயற்சியை இப்பொழுதே தொடங்கிவிட்டேன்.
நன்றி, நன்றி மீண்டும் சந்திப்போம்.

அன்புடன் தமிழி

ஹலோ தமிழி
சர்க்கரை வியாதிக்கு,
1.நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும்
2.ஒரே நேரத்தில் அதிகமாய் உண்ணாமல் அதை சில இடைவெளிகளுக்கு பின் பிரித்து உண்ணலாம்.
3.தினமும் கீரை சேர்க்கலாம், ஒருநாள் மசியல், ஒரு நாள் பொரியல் இப்படி வரைட்டியாக செய்யுங்கள்
4.கிடைத்த பாகற்காயை சமைத்து கொடுங்கள்.
5.பிரபா கூறியது போல அருகம்புல் ஜீஸ் கிடைத்தால் நல்லது.
6.நவாப்பழ கொட்டையை காய வைத்து பொடித்து, பாலில் கலந்து உண்ணலாம்.
7.நவாப்பழமும் சாப்பிடலாம்
தவிர்க்க
8.தேங்காய் அதிகம் சேர்க்க வேண்டாம்
9.கேரட், பீட்ரூட் வேண்டாம், இனிப்பு அதில் உண்டு, மேலும் எல்லா காய்கறிகளிலும் இனிப்பு சத்து கொஞ்சம் உண்டு, இருப்பினும் மற்ற சத்துகளுக்காக அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
10.காபியோ டீயோ இனிப்பு அறவே வேண்டாம்.
11.ஸ்வீட்டை நீங்களும் கொஞ்ச நாட்களுக்கு மறந்து விடுங்கள், ஏனெனில் அதைப் பார்க்கும் போது அவர்களுக்கும் அதை உண்ணும் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும்
காலையில் இட்லி என்றால் 3, சப்பாத்தி என்றால் -2 இப்படி கம்மியாக உண்ணவும்
பின் ஒரு 11 மணி வாக்கில் சூப், உப்பு பிஸ்கெட் அல்லது வேறு பழங்கள் சாப்பிடலாம்.ஏனெனில் சீக்கிரம் பசிக்கும்
மதியம் அளவாய் ஒர் கப் சாதம், கீரை, (ரொம்ப பசித்தால் சப்பாத்தி கொடுங்கள்
சாயந்திரம் பயறு வகையறா ஏதேனும் அவித்து கொடுக்கலாம்,முளைகட்டிய பயர் நல்லது
இரவு சீக்கிரம் உண்ண வேண்டும் சப்பாத்தி(ரொட்டி, ஸ்டப்டு சப்பாத்தி, இப்படி வரைட்டியாக செய்யலாம்)
அல்லது, கூல்(ராகி), அல்லது ஓட்ஸ் கஞ்சி அல்லது கோதுமை ரவை சாதம் செய்து கொடுக்கலாம்.

இது போக தினமும் வாக்கிங் செய்ய வேண்டும்,மாத்திரை நேரத்துக்கு எடுக்க வேண்டும், மனக்கவலை இல்லாமல் இருக்க வேண்டும், குறையனுமே என்று வருந்தாமல் கண்டிப்பாக குறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு ஒன்றுமே இல்லாதது போல உற்சாகமாக இருந்தால் சர்க்கரை நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
மேலும் உளுந்தவடை கொடுக்கலாம். அரிசி தான் அதிகம் சேர்க்க கூடாது. உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

அன்புள்ளங்கள் அனைவருக்கும்
உடனே எனக்கு பலப்பல குறிப்புகள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
என் கணவருக்கு இப்பொழுது சர்க்கரை இறங்கி வருகிறது. தினமும் பாகல்காய், வெந்தயம், அவித்த உணவுகள் என்று கொடுத்து +. தினமும் உடற்பயிற்ச்சியும் செய்கிறார். இப்படியே தொடர்ந்தால், நலம் என்று நினைக்கிறேன். மருத்துவர் என்ன சொல்கிறார் என்று septembre பார்ப்போம். உடனே எனக்கு பலப்பல குறிப்புகள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் மீண்டும் சந்திப்போம்.

தமிழி அன்புடன்.

சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். எனது கணவருக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்கு அடங்கியுள்ளது. மருத்துவர் மிகவும் சந்தோஷப்பட்டார். தினமும் வெந்தாயம்,பகற்காய்சாறு ,கருவாப்பட்டை யை கொதிக்கவைத்த தண்ணீர் வெறும் வயிற்றில் ஒரு முறை+இரவு ஒரு முறை
கொடுத்தேன்.மதிய + இரவு சாப்பாடு கொடுக்கும் போது முதலில் காய்க்கறிகள் (அவரைக்காய்,கோஸ்.......) பிறகு சாப்பாடுக் கொடுத்தேன். காலையில்
நிறைய காய்கறிகள், பழம்,கோதுமை உணவுகள்,நடை பயிற்சி இவைகள் தான் சர்க்கரையை கட்டுபாட்டுக்கு வந்தது.
தமிழி அன்புடன்.

தமிழி,,, உங்கள் முயற்சி வெற்றி கண்டுள்ளது .. வாழ்த்துக்கள் .
எனக்கு ஒரு சந்தேகம் .. பட்டை எப்படி சுடு தண்ணியில் கலந்து குடுதீர்கள் ??
அதாவது பட்டையும் நீரும் கொதிக்க வைத்து வடிகட்டி குடிபதா ?? அல்லது
சுடு தண்ணியில் பட்டை கலந்து குடிப்பதா ??

இந்த லின்கில் போய் பாருங்க..
http://www.arusuvai.com/tamil/node/8210

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வணக்கம் பாலம்மு.நலமா?
இப்பொழுதுதான் உங்கள் பதில் பார்த்தேன்.2பட்டையை லேசாக தட்டி 2 அல்லது 3 டம்ளர் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிக்கட்டி காலையில் பாதி டம்ளர் ,இரவு பாதி டம்ளர் குடித்தாலே போதும்.சுவை strongகாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் கலந்தும் குடிக்கலாம்.
மீதம் கண்டிப்பாக இருக்கும், அதனை ம்றுநாள் குடிக்கலாம்.
அன்புடன் தமிழி

மேலும் சில பதிவுகள்