எனது 1 1/2 வயது மகளின் கால்கள் சொரசொரப்பாக உள்ளது.

எனது 1 1/2 வயது மகளின் கால்கள் சொரசொரப்பாக உள்ளது. Johnson's Baby Cream use பண்ணுரேன். But no use. Please advise me friends.

எப்படி இருக்கிறீர்கள். மகள் சுகமா. உங்கள் மகளுடைய கால் சொர சொரப்பாக இருப்பதற்க்கு தேங்காய் எண்ணெய் தடவி பாருங்கள் சரியாகும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் லலிதா என் மகளுக்கும் கால் அப்படி தான் இருந்தது...அதாவது காலின் இரு ஓரத்திலும் தானெ?
அப்படியென்றால் என் மருத்துவர் அவீனோ ஹீலிங் க்ரீம் போட சொன்னார்...குளித்தவுடன் மாயிஸ்சரைசர் போடவும் சொன்னார்...காலை கீழே வச்சு அங்கங்க உக்காருவதால் இருக்கலாம்.
காலுக்கு எப்பொழுதும் பேன்ட் போட்டு விளையாட விட்டு இந்த க்ரீமும் போடுங்க போயிடும்.தண்ணீர் குறைவாக குடித்தாலும் அப்டி ஆகும்

Thanks for both of you. நான் try பண்ணி பாக்குரேன்.

Lalitha

மேலும் சில பதிவுகள்