என் குழந்தைக்கு வயிற்றுவலி

Dear sister's pls help me,
என் குழந்தைக்கு 4 மாதமாகிறது.அவன் 5 நாள்களாக மோஷன் போகவில்லை.ரொம்ப வயிற்று வலியால் அலுகிறான்.வெந்நீர்,திராட்சை ஊற வைத்த தண்ணீர் கொடுத்தும் மோஷன் போகவில்லை.நாங்கள் இந்தியாவில் இருந்த போது 5 நாளுக்கு ஒரு முறை மோஷன் போவான்.நாங்கள் துபாய் வந்து 1 மாதாமாகிறது.இங்கு வந்த பிறகு குழந்தையை டாக்டரிடம் காண்பித்தும் சரியாக மோஷன் போகவில்லை.

உங்கள் பதிவை பார்த்துவிட்டு பதில் போடாமல் தூங்க போக மனசு வரலை இங்கு மணி 12.உங்கள் குழந்தைக்கு எவ்வளவு கஷ்டமாக இருகும். 4 மாதம் ஆகிறது என்றால் நீங்க வெறும் தாய்பால் மட்டும் கொடுத்தால் பயப்பட தேவையில்லை. பவுடர் பால்,கெட்டியான ஆகாரம் கொடுத்தால் தான் பயப்படனும். நீங்கள் கெட்டியான ஆகாரம் கொடுக்க ஆரம்பித்து இருந்தால் வார்ம் வாட்டரில் சீனி சேர்த்து குடிக்க கொடுங்க.வயிற்று வலிக்கு பெருங்காயத்தூளை லேசான சுடு நீரில் கரைத்து வயிற்றில் தேய்த்து விடுங்கள். அல்லது விளக்கெண்ணெய்,ஆலிவ் ஆயில் ஏதாவது ஒன்றை வயிற்றில் தடவி விடுங்கள் கேட்க்கும்.

உலை கொதிக்கும் நீரில் சிறிது கருப்பட்டி சேர்த்து கரைத்து குடிக்க கொடுங்கள். இதில் ஏதாவது ஒன்றிர்க்கு கண்டிப்பாக மோஷன் வரும். சோம்பை வறுத்து 1 டம்ளர் நீர் ஊற்றி நன்கு வற்றியதும் வடித்து குடிக்க கொடுங்கள் ஒரு சங்கு அளவு கொடுத்தாலும் போதும். நீங்கள் தாய்பாலும்,தண்ணீரும் மட்டுமே குழந்தைக்கு கொடுத்து வந்தால் தன்னாலயே மோஷன் வரும் பயப்பட வேண்டாம்.

அப்படி நீங்கள் கெட்டியான ஆகாரம் சேர்க்கலைன்னாலும் குழந்தைக்கு வயிற்றுக்கு காணாமலும் மோஷன் வராது.

4 மாதம் தான் ஆகிவிட்டதே அதனால் இட்லி,குழைந்த சாதம் நெய் சேர்த்து சிறிது இப்படி கொடுத்து பார்க்கலாம். டின் புட் கொடுக்காதீங்க.நெஸ்டம் சுத்தமாக கொசுக்காதீங்க அது இன்னும் டைட்டாக ஆக்கும்.டயப்பர் போடாதீங்க இந்த சமயத்துல அதுவும் ஹீட்.

ஆரஞ்சு ஜூஸ் மைக்ரோவேவில் வைத்து கொடுங்க.
தைரியமா இருங்க கவலை வேண்டாம் சரியாகிடும். நான் என் பையனுக்கு மட்டும் தான் இப்படி இருந்ததுன்னு முன்னாடி நினைப்பேன் ஆனால் இப்ப உள்ள குழந்தைகள் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு. அதனால் எல்லாம் சரியாகிடும்னு நினைங்க சரியா. பையனுக்கு மோஷன் போன பிறகு எனக்கு பதில் போடுங்க. இல்லைன்னா என்ன செய்றானோ உங்க பையன்னு எனக்கு கஷ்டமாக இருக்கும். வேறு ஏதாவது சந்தேகம் இருதால் கேட்க்கவும்.மற்ற் சகோதரிகளும் பதில் தருவார்கள்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா அக்கா,
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. உங்களுடைய அறிவுறை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.என் குழந்தைக்கு வெந்நீரில் கிரைப் வாட்டரை கலந்து கொடுத்தேன்.கொஞ்ச நேரத்தில் மோஷன் போனான்.ஆரஞ்சு ஜுஸ் செய்வது எப்படி?வேறு என்ன ஜுஸ் குழந்தைக்கு கொடுக்கலாம்.எனக்கு நேரம் பார்க்காமல் பதில் அனுப்பிய உங்கள் நல்ல மனதுக்கு நன்றி.
அன்புடன் கவிதா

உங்கள் குழந்தை நல்லா இருக்கானா. மோஷன் போய்விட்டது பார்த்து மனசு நிம்மதியா இருக்கு. இதுல என்ன இருக்கு நேரம் எல்லாம் குழந்தைகள் விஷயத்தில் பார்க்கக்கூடாது. அந்த பச்ச குழந்தை 5 நாளா என்ன கஷ்டப்பட்டு இருக்கும். அதை நினைத்துதான் உடனே பதில் போட்டேன். நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே. கெட்டியான ஆகாரம் பற்றி முடிந்தால் சொல்லவும்.

ஆரஞ்சு ஜூஸ் 2 ஆரஞ்சு பழம் எடுத்து வார்ம் வாட்டரில் பிழிந்து சிறிது சீனி சேர்த்து கொடுங்க.ஆரஞ்சு ஜூஸ் குழந்தைகளுக்குன்னு கிடைக்கும் அப்படி கிடைத்தால் அதை மைக்ரோவேவில் சிறிது ஹீட் செய்தும் கொடுக்கலாம்.
வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.

அன்புடன் கதீஜா.

Haiகதீஜா அக்கா,
பதில் அனுப்பியதற்கு நன்றி.என் குழந்தை நலமாக இருக்கிறான்.என் குழந்தைக்கு இன்று முதல் அவனுக்கு 5வது மாதம் ஆரம்பிக்கிறது.அவனுக்கு இதுவரையிலும் கெட்டியான உணவு மற்றும் ஜுஸ் கொடுத்ததில்லை.காலையில் ஆரஞ்சு ஜுஸ்,அப்பறம் மதியம் என்ன தரலாம் குழந்தைக்கு?தாய் பால் மட்டுமே தருகிறேன்.என் குழந்தையின் பெயர் ராகேஷ். உங்கள் பெயரை முதலில் தவறாக டைப் பண்ணி விட்டேன்.அதனால் என்னை மன்னிக்கவும்.
அன்புடன் கவிதா

ஆமாம் இப்[பொழுது பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த ப்ரச்சனை உண்டு.இது கட்டி ஆகாரம் கொடுக்க தொடங்கியபின் மெல்ல மாறும்.
கதீஜா ஆரஞ் ஜூசை ஹீட் பன்னிடாதே அதில் உள்ள சத்து அழிந்து போகும்..ரூம் டெம்பெரேசருக்கு கொண்டு வந்த பின் கொடுக்கலாம்.ஆரஞ் ஜூசை மடும் ஃபீடிங் பாட்டிலில் கொடுத்து விடாதீர்கள்..பல் கெட்டுப் போகும்.
ஒரு ஃபில்லரால் அல்லது ஸ்பூனால் பாதி தண்ணீரும் பாதி ஆரஞ் ஜூஸும் கலந்து கொடுங்க..
மீதமுள்ள கதீ சொன்னது நல்ல ஐடியாக்கள் தான்.இன்னுமொன்று எனக்கு தெரிந்து
குழந்தையை படுக்க வைத்து அதன் காலை பிடித்து சைகில் ஓட்டுவது போல் அடிக்கடி 5 நிமிஷம் செய்யுங்க..அப்பவும் பலன் கிடைக்கும்.
டயபர் இல்லாமல் பாருங்கள்.குழந்தையின் உணவு என குழந்தைகளுக்கான த்ரெட் உள்ளது.
எந்த உணவு கொடுப்பதாக இருந்தாலும் கொடுத்து 1 வாரம் நல்ல பார்த்து அது சேருதானு தெரிஞ்ச பின் அடுத்த உணவு கொடுங்க.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்..சில குழந்தைக்கு ராகி சேராது சிலதுக்கு செரெலேக் சேராது..சில குழந்தைக்கு பழம் சேராது..அதனால் எது கொடுத்தால் வயிறு இறுகுது எது கொடுத்தால் ஃப்ரீ ஆகுது என நல்ல கவனியுங்க.
என் மகளுக்கும் முன்ன செரெலேக் வீட் கொடுத்தா தான் மோஷன் போகும்..அதுவே செரெலேக் வீட் அன்ட் ஃப்ரூட்ஸ் அல்லது ரைஸ் கொடுத்தால் டைட் ஆகிடும்.அதனால் நல்ல கவனிங்க.
இப்பத்திக்கி ராகி பொடியை பசும்பாலில் கூழ் காய்ச்சி கொடுக்கலாம்,இப்ப ஒரு வேளை தினம் கொடுத்து 2 வாரம் கழித்து 2 வேளை கொடுங்க போதும்.
ஃபார்முலா கொடுத்தாலும் கான்ஸ்டிபேஷன் ஆகும்.நான் அதனால் அதை அதிகம் கொடுத்ததில்லை.தேன் கொடுத்தாலும் கான்ஸ்டிபேஷன் ஆகலாம்.
நம்ம ஊர் நெஸ்டம் ரைஸ் நல்ல இருக்கும்..எதுவும் செய்யாது.வெறும் அரிசி மாவில் கூழ் காய்ச்சி கொடுக்கலாம்.
1 மாசம் கசிச்சு சத்து மாவி நிரபரா கிடைக்கிரது அதை காய்ச்சி கொடுங்க..சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வச்சு நல்ல மசிச்சு பால் கலந்து கொடுங்க.வித விதமா கொடுக்கலாம்.
சூஜி கோதுமை கிடைக்கும் அதை ஊறவச்சு மிக்சியில் அடிச்சு பால் எடுத்து கூழ் காய்ச்சி கொடுக்கலாம்.
ராகிப் பொடிக்கு வயிறு இறுகினால் ராகி விதையை மிக்சியில் ஊறவச்சு அடிச்சு வடிகட்டி அதன் பாலால் பசும்பால் சேர்த்து காcய்ச்சி கொடுக்கலாம்.
6 மாசம் ஆனபின் சாதத்தில் தயிர்,பருப்பு குழம்பு என காரமில்லாதவை சேர்த்து கொடுக்கலாம்..மெல்ல 8 மாசத்தில் கொஞ்சம் குழம்பெல்லம் சேர்த்து மிக்சியில் அடிக்காமல் மசித்து கொடுங்க..1 வயசில் நாம சாப்பிடுவதையே அவங்க சாப்பிடும்படி ஆக்கிடுங்க..பிறகு வருகிறேன்..டோன்ட் வரி.ரொம்ப மனசை அலட்டிக்காம இருங்க

thanks sister

கதீஜா,கவிதா கிரேப் வாட்டர் குழந்தைக்கு கொடுக்க கூடாது அது வயிரை புண்ணாக்கும்..என் பொண்னுக்கு இவ்லோ வயது ஆகியும் நான் உபயோகித்ததில்லை..டாக்டர்ஸும் கண்டிக்கிறார்..அதும் 5 மாச குழந்தைக்கா வ்வேணாம் கவிதா பாவம் அவாய்ட் பண்ணுங்க 1 வயதுக்கு மேல்னா அவசர்டஹ்துக்கு எடுத்துகலாம் தப்பில்லை..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மற்றபடி ரூபி,கதீஜாவின் வைத்தியங்கள் ரொம்ப நல்லது..கிரேப் வாட்டர் தவிர மர்றதை டிரை பண்ணுங்க..தாய்பால் ரொம்ப முக்கியம் விட்டுடாதீங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சரி அக்கா, இனி மேல் குழந்தைக்கு கிரேப் வாட்டர் தரவில்லை.இயற்கை முறைகளையே பின்பற்றுகிறேன்.நன்றி அக்கா.
அன்புடன் கவிதா

கவிதா குழந்தைக்கு,
நான் ஒரு முறை சொல்கிறேன் விரும்பினால் பின்பற்றுங்கள், இந்த முறை நான் கேட்டறிந்து சொல்லவில்லை, என் பிள்ளைகளை இதே முறையில்தான் வளர்த்தேன், எப்பவுமே மோசன் பிரச்சனை என நான் கஸ்டப்பட்டதில்லை.

தினமும் காலையில் நீங்கள் தேனீர் குடிக்கிறபோது ஒரு தேக்கரண்டி ஓமத்தை பச்சையாக அப்படியே ஒரு கப்பில் போட்டு கொதிநீர்விட்டு மூடிவிடுங்கள், நன்கு ஆறியதும் மெல்லிய துணியால் வடித்தெடுத்து கறண்டியால் அல்லது feeding bottle ஆல் பருக்கிவிடுங்கள். தினமும் அல்லது ஒன்றுவிட்ட ஒருநாள் செய்து வாருங்கள் 2 வயதுவரை நான் இப்படித்தான் செய்தேன், எந்தப் பிரச்சனையும் வராது. காலைச் சாப்பாட்டுக்கு முன் நித்திரையால் எழுந்ததும் கொடுங்கள்.

இன்னுமொன்று, நீங்கள் தாய்ப்பால் கொடுப்பீர்கள்தானே, என்னைப்பொறுத்து நீங்கள் உண்ணும் உணவு முறையில்தான் தப்பிருக்கிறது, நீங்கள் நிறைய கீரை,மரக்கறி, மீன் உண்ணவேண்டும். தாராளமாக ஒரேஞ் யூஸ் நீங்கள் குடியுங்கள். நீங்கள் இப்படியான முறைகளைப் பின்பற்றினால் குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் வராது. நீங்கள் ரொட்டி, சப்பாத்தி அல்லது சூட்டு உணவுகள் உட்கொண்டால் பிள்ளைக்கு கஸ்டம். இறைச்சியைக் குறைத்து மீன் அதிகம் சேருங்கள்(அசைவம் உண்பவராயின்) . என்னைப்பொறுத்து குழந்தைக்கு ஒரு வயது வரை ஒறேஞ் யூஸ் நல்லதல்ல. ஒரு வயதின்பின் தண்ணீர்சேர்த்துக் கொடுக்கலாம், ஏனெனில் அதில் அசிட் தன்மை அதிகமாக உள்ளது. தண்ணீர் அடிக்கடி பருக்கிவிடுங்கள்.

மேலேயும் அனுபவமுள்ளவர்கள்தான் நல்ல குறிப்புகள் கூறியுள்ளார்கள் அவற்றையும் பின்பற்றுங்கள். மர்ழியா எனக்குத் தெரியவில்லை. நான் 3 மாதம் தொடங்கி 3 வயதுவரை கிரேப் வாட்டர் கொடுக்கிறேன். வயிற்றில் ஏதாவது செய்து அழுதால் அல்லது தலையில் தோய வார்த்தால் கட்டாயம் கொடுப்பேன்... ஏன் கூடாதென்கிறீர்கள். அதுபற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்