கட்லெட்

கட்லெட் செய்வது எப்படி?

இங்கு நிறைய கட்லெட் ரெசிபிஸ் இருக்கு உங்களுக்கு எந்த வகையான கட்லெட் வேணுமோ அதை தேடுக என்ற பெட்டியில் டைப் செய்து பாருங்கள் உங்களுக்கு தேவையானது கிடைக்கும்.

அன்புடன் கதீஜா.

கட்லெட் செய்வது ரொம்ப ஈசி.வெஜிடபில் கட்லெட்னா

முதலில் 1 உருளையை வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வச்சுக்குங்க.
காய்கறிகள்,கேரட்,பீன்ஸ்,பீசை பொடியா கட் பன்னி வச்சுக்குங்க..1 வெங்காயம்,கறிவேப்பிலை,பச்சை மிளகாயை வதக்கி அதில் கொஞ்சம் கரம் மசாலா தூள்,உப்பு,காய்கறிகள் சேர்த்து சுத்தமா தண்ணீர் விடாமல் காய்கறிகள் நல்ல வேகாமல் 3/4 பாகம் வேகும் அளவுக்கு வேக விடுங்கள்..காய்கறி வெந்த பின் தண்ணீர் இருந்தால் கட்லெட் உடைந்து போகும்..இது கஷ்டமாக தோன்றினால் முதலில் காய்கறிகளை வேக வச்சு வடித்து பின் வெங்காயம் மசாலா வதக்கியதில் சேர்த்து சூடாறியபின் உருளையும் சேர்த்து வடை போல் தட்டி கலக்கிய முட்டையில் முக்கி ப்ரெட் பொடியில் பிரட்டி எடுத்து பொரிகவும்

eanaku katlet eapadi seaya veandum eana theariyadu please help me

http://www.arusuvai.com/tamil/node/8447 ;)

‍- இமா க்றிஸ்

மீன் கட்லட்

மீன் கட்லட் செய்ய முல் இல்லாத மீன் கால் கிலோ, உருளை கிழங்கு 2 வேகவைத்தது வெங்காயம் 1 பொடியாக நருக்கி சிரிது எண்ணை விட்டு வதக்கி கொள்ளவும்.இது மூன்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து உப்பு மிளகு தூள் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது .இதை உருன்டை அல்லது கோல வடிவில் உருட்டி கொள்ளவும்.முட்டை வெள்ளைகருவை நன்றாக அடித்து அதில் உருண்டையை நனைத்து பின் ப்ரட் தூலில் பிரட்டி எடுக்கவும்.இதை மிதமான தீயில் வைத்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.மிகவும் ருசியாக இருக்கும்.இதே முறையில் எலும்பு இல்லாத கோழித்துண்டை வேகவைத்தும் பிசைந்து செய்யலாம்

muyarchi seithal mudiyathathu illai,ruby

ரவா கட்லெட்- http://www.arusuvai.com/tamil/node/11817
சேனைக்கிழங்கு கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/9528
காய்கறி கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/4614
பனீர் வாழைக்காய் கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1759
சோயா கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1901
முளை கட்டியபயிறு கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1482
வெஜ்-கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1475
பொங்கல் கட்லட் - http://www.arusuvai.com/tamil/node/1474
பலாப்பழ கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1472
ரவா கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1364
மட்டன் கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/399
சிக்கன் கட்லெட் - http://www.arusuvai.com/tamil/node/1299

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லா கட்லெட் லிங்க்ஸையும் தேடிப்பொட்டு சும்மா கலக்கிட்டிங்க வனி. சூப்பர்! (எல்லா குறிப்பையும் இன்னும் முழுதாய் படித்து பார்க்கவில்லை. இனிதான் படிக்கவேண்டும். )

அதற்குள், இந்த கட்லெட் குறித்து ஒரு கேள்வி/சந்தேகம் - எண்ணெயில் பொரித்து எடுப்பதற்கு பதிலாக அவனில் பேக் செய்தால் நன்றாக வருமா? யாராவது செய்து இருக்கிங்களா?! தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

தாரளமாக செய்யலாம்.க்ரீஸ் செய்த அவண் தட்டில் கட்லட்டை அடுக்கவும்.மேலே சிறிது எண்னெயை தடவிக்கொள்ளவும்.அவணை 375 டீகிரி செட் செய்து 5 மினிட் ப்ரி ஹீட் செய்தபின் கட்லட் தட்டை உள்ளே வைக்கவும். 15 அல்லது 20 நிமிடம் பேக் செய்யவும்.இடையில் திருப்பிப்போட மறக்க வேண்டாம்.செய்துவிட்டு மறக்காமல் சொல்லவும்.

hi

நான் காய்கறிகளை வேகவைத்து மசாலா செய்தபின் கட்லட் வடிவத்தில் தட்டி கொண்டு அதனை பிரட் தூளில் நனைத்து தோசைகல்லில் மிதமான தீயில், ஆயில் spray செய்து முறுகலாக வரும் வரை வைத்து எடுத்து விடுவேன். மிகவும் அருமையாக உள்ளது என்று என் கணவர் மற்றும் பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் சொல்லுவார்கள்.
ஆயில் கம்மியாக இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதுவும் கடந்து போகும் !

im suffer from skin problem black mark are many in my skin and hair fall problem plz any suggestion me

lavanya

மேலும் சில பதிவுகள்