சொரியாசிஸ் பற்றி தெரியுமா ?

என் கணவர் 6 வருடமாக சொரியாசிஸ் நோயில் அவதிபடுகிறார்.English medicine சாப்பிட்டு வேலை செய்யவில்லை.தமிழ் மருந்து சாப்பிட்டு (குறைந்து இருந்தது)சிறுது காலம் நன்றாக இருந்தது.2004 ல் என் கணவர் dubai க்கு வந்து விடார்.அதன் பிறகு ஒரு வருடம் குறைந்து இருந்தது,2007 December ல் இருந்து அதிகமாக வந்து விட்டது.தமிழ் மருந்து உடம்பு & தலையில் தினமும் தடவுகிறார்,பலன் எதுவும் இல்லை.இதனை பற்றி உங்களுக்கு தெரிதால் சொல்லுகள்.

Sharmila

ஹலோ sharmila,
எனக்கு அதை பற்றி தெரியும். .எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க,நான் உங்களுக்கு அனுப்பறேன்.
நன்றி,
கவிதா.
.

kavitha

ஹாய்,
ஷர்மிலா சொரியாசிஸ்க்கு சித்தா வைத்தியம் ரொம்ப நல்லது.ஒரு சில உணவுகளை (தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்,கார்போஹைட்ரேட் உள்ள உணவு,போர்க்,சுகர் சேர்க்க கூடாது) தவிர்க்க வேண்டும்.ஷர்மிலா சொரியாசிஸ் வருவதற்கு காரண்ம் லிவரில் அழுக்கு வருவதால்தானம் நான் ஒரு ஆர்டிக்கலில் படித்தேன் .அதற்கு எக்சசைஸ் சொல்லியிருக்கிறார்கள்.என்னன்னா ரைட் சைட் செஸ்ட்க்கு 2 இன்ச் கீழே அப்படியே circle shapela ரப் பண்ண வேண்டும்(20 செகண்ட்ஸ்) ,இரண்டு காலிலும் முட்டிக்கு 2 இன்ச் கீழே 20 செகண்ட்ஸ் circle shapela ரப் பண்ண வேண்டும்.ஒரு நாளைக்கு இரண்டு முறை பண்ண வேண்டும்.தலையில் பொடுகு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.இதை பண்ணி பாருங்கள் ஒரு மாதத்தில் நன்றாக மாற்றம் தெரியும்.ஸ்கினை டிரை ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.எனக்கு இன்னும் ஏதாவது ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
நன்றி,
கவிதா.

kavitha

இதனால்தான் வருகின்றது என்று தெளிவான காரணம் கண்டறியப்படாத நோய் இது. நவீன மருத்துவத்தைப் பொறுத்த மட்டில், மூலக்காரணம் கண்டறியப்பட்டால்தான் முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். இந்த நோய்க்கு இதுவரை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் கண்டறியப்படவில்லை. உடல் எதிர்ப்பு சக்தி அமைப்பில் உண்டாகும் கோளாறு காரணமாக, செல்களின் வளர்ச்சி அமைப்பில் மாற்றங்கள் உண்டாகி, செல்கள் அபரிமித வளர்ச்சியடைவதின் விளைவுதான் சொரியாஸிஸ் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள காரணம். எதிர்ப்பு சக்தி அமைப்பில் உண்டாகும் கோளாறுக்கு, பரம்பரை, மன அழுத்தம், ஒவ்வாத மருந்துகள் என்ற பல காரணங்களில் ஏதேனுமொன்று காரணமாக இருக்கலாம்.

நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துகள் நவீன மருத்துவத்தில் இல்லையென்றாலும், நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது இருக்கின்றது.
சொரியாஸிஸ் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், அதில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றின் வகையைப் பொறுத்து, பரவி இருக்கும் நிலையைப் பொறுத்து, சிகிச்சை, மருத்துவம் எல்லாம் வித்தியாசப்படும். ஆகவே, இந்த விசயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்கள் மேற்கொண்ட சிகிச்சையை எடுத்துக்கொள்வதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்கள் கணவருக்கு இருப்பது என்ன வகை, என்ன நிலை என்பதை தெரிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டீர்கள் என்றால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

முன்பு இது சம்பந்தமாக ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் தோல் மருத்துவ நிபுணர் ஒருவருடன் பேசி இருக்கின்றேன். சில வகை சொரியாஸிஸ்ஸை ஆரம்ப நிலையிலேயே தடுத்து, முற்றிலும் குணப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். எனக்கு தெரிந்தவர்கள், என்னுடைய உறவினர்கள் என்று சிலருக்கு இந்த நோய் இருக்கின்றது. அவர்கள் யாருக்கும் முற்றிலும் குணமாகவில்லை. இவர்கள் எல்லோருமே செய்த பொதுவான ஒரு விசயம், எல்லா வகை மருத்துவத்தையும் முயற்சித்து பார்த்தது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், யாராவது ஒரு மருத்துவத்தை சொன்னால், உடனே அதற்கு மாறிவிடுவார்கள். அதை சில நாட்கள் தொடர்வார்கள். தொடர்ந்த சில நாட்களில் மிக நன்றாக கேட்கின்றது(?!), நன்றாக இருக்கின்றது என்பார்கள். சில மாதங்கள் கழித்து பார்த்தால் நிலைமை மோசமாகி இருக்கும். ஒருவர் அரிப்பு வேதனை தாங்காமல் தற்கொலையே செய்துகொண்டார்.

என்னுடைய ஆலோசனை, உங்களுக்கு நவீன மருத்துவத்தில் நம்பிக்கை இருந்தால், அதை மட்டும் தொடரும் எண்ணம் இருந்தால், அடுத்த முறை உங்கள் கணவர் இந்தியா வரும்போது சென்னை, புரசைவாக்கம் டாக்டர் பேட்ரிக் அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவருடைய தரகரா என்று கேட்டுவிடவேண்டாம். நான் நன்கறிந்த சிலரின் தோல் பிரச்சனைகளை, மற்ற மருத்துவங்களில் சரியாகாத பிரச்சனைகளை இவர் குணமாக்கி இருக்கின்றார். இவரது மருத்துவம் சிலரது சொரியாஸிஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கின்றது. குறைந்தபட்சம் என்ன நிலை, அதற்கு மருத்துவம் உண்டா இல்லையா, குணப்படுத்த இயலுமா, இயலாதா என்பதையாவது தெரிவித்துவிடுவார். அவரை பார்ப்பதுதான் கஷ்டம். பாதி நாட்கள் அமெரிக்காவில் இருப்பார். உங்களுடைய முயற்சிகளில் இதையும் ஒன்றாக வைத்துக்கொண்டு, அடுத்த முறை பாருங்கள். கண்டிப்பாக இதனால் உங்களுக்கு இழப்பு எதுவும் நேராது. தீர்வு கிடைக்கின்றதோ இல்லையோ, தெளிவு கிட்டும்.

ஆம் அட்மின் சொல்லுவது 100% சரி.சொரியாஸிஸ் மட்டுமல்ல தோல் வியாதி அனைத்துக்கும் நல்ல தீர்வு டாக்டர் பேட்ரிக்.சென்னையில் தலை சிறந்த மருத்துவர்களும்,மருத்துவ மனைகளும் அதிகம்.அதற்காக மற்ற ஊர்களில் இல்லை என அர்த்தமாகிவிடாது.
gynaecology,paedatrics,haematology,oncology,dermotology,opththamology,cardiology,

இப்படி ஒவ்வொரு துறையிலும் முன்னனியில் சிலர் இருப்பதைப்
போல்தோல் மருத்துவத்தில் டாக்டர் பேட்ரிக் முன்னனி வகிக்கிறார்.
டாக்டரை பற்றிய விபரம் முகவரி தேவை என்றால் தருகிறேன்.
---ஸாதிகா

arusuvai is a wonderful website

டாக்டரை பற்றிய விபரம் முகவரி கொடுங்கள்

sharmila

dr . patric yesudiyan
896,பூந்தமல்லி ஹை ரோட்
சென்னை- 10
தொலைபேசி - 26411254
இப்பொழுது டாக்டருக்கு உடம்பு சரி இல்லை.திங்கள் கிழமை முதல் பார்ப்பார்.திங்கள் கிழமைக்கு அப்புறம் நேரில் போய் அப்பாயின்ட்மென்ட் வாங்குங்கள்.
பார்க்கும் நேரம் : திங்கள் - வெள்ளி 10 - 1&4 - 7
ஷர்மிளா,6 வருஷங்களாக அவதிப்பட்டு வரும் உங்கள் கணவர் இந்த டாக்டர் மூலமாக இறைவன் பூரண் நலத்தை தர பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்புள்ள ஷாதிகா
கேட்டதும் விளக்கமாக தெளிவாக கொடுத்து விட்டீர்கள் ..எனக்கு சந்தோஷமாக இருக்கிறது

எனக்கு வயது 29 ஆறு மாதமாக என் கால் விரல்களுக்கு மேல் அரிப்பு எடுக்கின்றன என் இரண்டு காது மடல்களிலும் அரிப்பு எடுக்கின்றன சொரிந்தால் வீங்கிவிகின்றன. மருத்துவர்களும் சித்த வைத்தியர்களும் செருப்பு போடுவதால் ஏற்படுகின்றன் அதனால் தோல் செருப்பை அணிய சொல்கிறார்கள்.நான் வெட்பாலை தைலம் தேய்த்தும் பலன் இல்லை தெரிந்தவர்கள் ஆலோசனை கூறவும்

thinamum oranguvatharkku mun thevaiyana idathil coconut oil thadavavum.
1/2 hour kazhithu "TENOVATE OINTMENT" (or) "PSORA OINTMENT" (OR) "SALITAR OINTMENT apply seiyavum.

nee vazha pirarai kedukkathe

dr . patric yesudiyan
896,பூந்தமல்லி ஹை ரோட்
சென்னை- 10
தொலைபேசி - 26411254
இப்பொழுது டாக்டருக்கு உடம்பு சரி இல்லை.திங்கள் கிழமை முதல் பார்ப்பார்.திங்கள் கிழமைக்கு அப்புறம் நேரில் போய் அப்பாயின்ட்மென்ட் வாங்குங்கள்.
பார்க்கும் நேரம் : திங்கள் - வெள்ளி 10 - 1&4 - 7
ஷர்மிளா,6 வருஷங்களாக அவதிப்பட்டு வரும் உங்கள் கணவர் இந்த டாக்டர் மூலமாக இறைவன் பூரண் நலத்தை தர பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.

P.T.SATHYASEELAN

nee vazha pirarai kedukkathe

மேலும் சில பதிவுகள்