பிரசவ அனுபவங்கள்......

தோழிகளே இது எனக்கு 9 வது மாதம்.உங்களுடைய பிரசவ அனுபவங்களை சொல்லுங்கள்.என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். உங்களுடைய மனநிலை,எதிர்பார்த்த, எதிர்பாராத நிகழ்வுகள்,முதன் முதலில் உங்கள் செல்லக் குழந்தையை பார்த்த அந்த உன்னதமான தருணம், பிரசவ வலி, அதை எதிர்கொண்ட விதம்,மருத்துவ சிகிச்சை இவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

திவ்யா,
நல்ல படி பிரசவமாகி, நற்குழந்தை கிடைக்க என் வாழ்த்துக்கள்.
ஒரு தாய்க்கு பிரசவம் அதுவும் தலைபிரசவம் என்பது வாழ்வில் இன்றியமையாதது.
இது அனுபவித்தால்தான் புரியும்.லேபர்வார்டுக்கு அழுகையுடன் போகும்,கர்ப்பிணி முறுவலுடன் தாயாகி திரும்ப வருவாள்.இது அனைத்து தாய்மார்களுக்கும் கிட்டும் அனுபவம்.
முதல் குழந்தைக்கு லேபர் வார்டுக்கு திகிலுடன் சென்ற நான்,இரண்டாவது குழந்தைக்கு தைரியமாகப் போனேன்.
மருத்துவரை அதிகம் தொந்தரவு தராமல் இணக்கமாக இருப்பது அவசியம்.
அரைகுறை மயக்கத்துடன் நாம் ஈன்றெடுத்த சிசுவை பார்க்கும் அந்த தருணம் இருக்கிறதே ஆஹா..மாந்தராய் பிறந்ததற்கு நல்ல மாதவம்செய்திடல் வேண்டுமம்மா.
தங்கைதிவ்யா,குழந்தை பேறுக்கு முன் அந்தகுழந்தை வேண்டும்,அழகான குழந்தை வேண்டும்,சிவப்பு பிள்ளை,சுருள்முடிபிள்ளை,கொழுக்மொழுக் குழந்தை ..என ஏகப்பட்ட லிஸ்ட் நீண்டுஇருக்கும்.எல்லாம் குழந்தை பிறக்கும் வரைதான்.அந்த லிஸ்ட் காணாமல் போய் விடும்.
எப்படி குழந்தையானாலும் அது நம் குழந்தை நாம் பெற்றெடுத்த மகவு என்ற நினைப்பு மட்டுமே மனதில் இருக்கும்.நீண்ட லிஸ்ட் போடுங்கள்.உங்கள் லிஸ்ட் பிரகாரம் குழந்தை கிடைக்க என் வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸ்னேகிதிகளே..
எல்லோரும் எங்கே போய் விட்டீர்கள்?மன்றத்தில் ஒருவரையும் காணவில்லையே/?வாருங்கள்.மன்றத்தில் வந்து ஒரு கலக்குகலக்குங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நீங்க சொல்வது உண்மைதான்.குழந்தையை முதலில் பார்க்கும் அந்த நேரத்தை நினைத்தாலே ஆசையாக இருக்கு.அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.தைரியமாக இருந்தாலும் முதல் குழந்தை என்பதால் அவ்வப்பொழுது சிறிது பயம் வருகிறது.

தோழிகளே,எங்க போனீங்க?உங்க பதிவுகளை காண ஆவலுடன் ஓடி வந்த என்னை ஏமாத்தாதீங்க! உங்க கருத்துக்களை பதிக்க வாங்க...வாங்க....

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹலோ திவ்யா,
எந்த ஊரில் இருக்கீங்க?எப்போ EDD?இன்னும்சில வாரங்களில் குவாகுவா தான்.இப்பவே நல்லா ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
இனி ஓய்வு என்பது அரிதாகி விடும்.
ஸ்னேகிதிகள் அநேகர் தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள் போலும்.
லைனில்யாரையுமே காணோம்.
என் தம்பி ஊரில் இருந்து வருகிறான்.பிளைட் லேட். வரும்வரை தூங்காமல் இருக்கிறேன்.நீங்கள் போய் தூங்குங்களேன்.
---ஸாதிகா

arusuvai is a wonderful website

நான் நாமக்கல்லில் அம்மா வீட்டில் இருக்கிறேன்.முதலில் மும்பையில் இருந்தோம். இப்பொழுது சென்னை வந்துவிட்டோம்.என்னோட ஹஸ் 1 மாசமா அலைந்து இப்பொழுது தான் வீடு பார்த்திருக்கிறார்.நான் செல்ல இன்னும் 3 மாதங்கள் ஆகும்.நீங்க எங்க இருக்கீங்க?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ரொம்ப நேரமே பாடுபடறேன் பதிவு போட ஆனால் முடியலை.என் பொண்ணு ஆட்டம் போடுவதற்குள் சீக்கிரம் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன்.
எனது அனுபவம் சொல்கிறேன்
நான் எப்பவும் போல ஒரு குடைச்சல் பேர்வழி தானே 7 மாசத்திலேயே பேக் ரெடி பன்னியாச்சு..அதில் ஹாஸ்பிடலுக்கு தேவையான எல்லத்திஅயும் வச்சுட்டேன்..இன்னொரு கார்டனில் திரும்ப வன்ததும் குழந்தைக்கான பொருட்கள்..என் அம்மா உதவிக்கு இருந்தாலும் எனக்கு எப்பவும் யாரையும் நம்பிக்கை வராது..எல்லாம் நானே செய்யனும்னு நெனச்சு அதை நானே எடுத்து வச்சு ஒரு பக்கம் வச்சாசு..ஒழுங்க யாரடயாவது சொல்லியிருக்கனும்.அப்படி எனக்கு 34 வாரம் தான் ஆகுது செக் அப்க்கு போனவ தான்..அவங்க இஞெக்ஷன் போடனும்னாங்க..எதுக்குன்னு கேட்டேன் சும்ம ஹார்மோனல் இஞெக்ஷன் தான் ஒன்னும் ஆகாது நல்லதுக்கு தான்னு சொன்னாங்க..அப்ப என் புத்தி எப்படி மழுங்கிப் போச்சோ சரின்னு ஒத்துக்கிட்டேன்..அந்த ஊசி போட்டுட்டு அந்த நர்ஸ்கள் என்னை 30 நிமிஷம் படுக்க சொன்னாங்க..பாத்தா நர்ஸ்கள் எல்லரும் அடிக்கடி ஓரக்கண்ணால் என்னை ஒரு மாதிரி பார்வை..அப்பவும் அது என்னன்னு எனக்கு புலப்படலை..ஆனால் எனக்கு படுத்து போர் அடிச்சப்ப என்ன என்னை இப்படி படுக்கவச்சுட்டு எல்லாரும் வந்து வந்து பாக்கரீங்கன்னு கேட்டேன்..ஹிஹிஹீன்னு ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு ஒன்னுமில உங்களுக்கு மயக்கம் வருதான்னு பாத்தோம்னு சொல்லிட்டு அவங்களுக்குள் பேசி என்னை வீட்டுக்கு அனுப்பிநாங்க..ஆனால் கடைசியாக டாக்டர் ஒரு பரிதாப பார்வை என்னைப் பார்த்துட்டு என் அம்மா கிட்ட "பொண்ணை ந்நல்ல பார்த்துகுங்க"ன்னு சொல்லி அனுப்பிநாங்க..என் அம்மாவும் வீட்டுக்கு வந்துட்டு ஒரே டென்ஷன் என்னது இப்படி டாக்டர் சொன்னாங்கன்னு.
வழக்கம்போல் மாலை 7 மணிக்கு வாக்கிங் போனோம்.நடக்க நடகவே எனக்கு என்னவோ போல் இனி போதும் நடக்க வேண்டாம் என்பது போல் ஒரு உணர்வு.ஆனால் யாரிடமும் சொல்லல..எப்படியோ வீடு வந்து சேர்ந்தேன்.
என் கனவரிங்கே இருந்ததால் வீடு வந்த பின் வழக்கம்போல் சாடிங்..அன்றும் இரவு 8 மணிக்கு சாட் பன்ன தொடங்கி இரவு 10 மணி வரை சாட்டிங்..கனவரிடம் சொனேன் அந்த இஞெக்ஷன் போட்ட பின் என்னவோ மாதிரி இருக்குன்னு.
அப்படியே சரி பாவம் அம்மாவுக்கு டென்ஷன் கொடுக்க வேண்டாம் நெனச்சு சொல்லாமல் எப்படியோ சஹிச்சுகிட்டேன்..இது பிரசவ வலி தானென்று சுத்தமா தெரியலை.அதுக்கு இன்னும் 3 வாரம் இருக்கேன்னு ஜாலியா இருந்தேன்.
அப்படியே சஹிச்சு இரவு மணி 1 எல்லோரும் மேட்ச் பார்ப்பதில் இருந்தாங்க..என் அம்மாவும் ஒரு விளையாடு பைத்தியம் அதனால் என்னை கண்டுக்கலை.நான் பிறகு மெல்ல வந்து அம்ம சுடு தண்ணி கொடுங்க குளிச்சு பாக்க்றேன் என்னக்கு என்னவோ போல இருக்குன் என்றேன்..என் அம்மா அடிச்சு புடிச்சு ஓடி வந்தாங்க..எப்படி இருக்கு என்ன பன்னுதுன்னு கேட்டாங்க..
என்ன சொல்லவும் தெரியல எப்படின்னு..ஒரு மாதிரி ஆனால் ஒன்னும் இல்லை..அடிவயிற்றில் ஒரு பாறையை வெச்ச மாதிரி ஒரு ஃபீலிங் ஆனால் சஹிச்சுக்கர அளவுக்கு தான்..அம்மா நல்ல டோஸ் ஏன் முன்னயே சொல்லலன்னு.பிறகு உடனே ஹாஸ்பிடலுகு போகலாம்னு அம்மா சொன்னாங்க..அத்தனை நேரம் வலி மட்டும் இருந்த எனக்கு கூட டென்ஷனும்...அந்த பேகை மறந்தாச்சு காலில் ரெண்டு விதமான செருப்பு ஒரு அப்பாவோடது ஒன்னு தங்கையோடது..கிறுகி மாதிரியே ஹாஸ்பிடலுக்கு போனேன்.
எனக்காகவே காத்திருந்தமாதிரி நர்ஸ்களுகு புன்முறுவல் நேரா லேபர் வார்டுக்கு கொன்டு போய் பிரசவத்திற்கான எல்லா ஆயத்த வேலைகளும் தொடகியாச்சு..எனக்கு ஒன்னும் புரியல"என்னது டெஸ்ட் பன்னாமலே நீங்க எப்படி முடிவு பன்னிநீங்க..இது ஃபேக் பெயினா இருக்கும் டாக்டர் வரட்டும் நான் கேட்டுக்கறேன்னு"சொன்னேன்.
அதை அவங்க கண்டுக்கரதா இல்லை...இல்லை டாக்டரும் இது தான் சொல்வாங்க பேசாம இருங்கன்னு சொல்லியாச்சு.
அது முடிஞ்சு டாடர் வந்தாங்க நான் ஹவ் ஆர் யூ டாக்டர்னு கேட்டேனே அவங்களுக்கு சிரிப்பு தாங்கல..இந்த நிலமையில் நலம் விசாரிப்பு பாருன்னு நெனச்சிருப்பாங்க போல.பின்ன லேபர் பெயின் குறித்து மனதளவில் நான் முன்னயே தயார் படுத்திக்கிட்டதால் அப்ப முதலே நான் எல்லாத்துக்கும் தயாராக இருந்தேன்.
என்னை ரூமுக்கு அனுப்பிட்டு நல்ல பெயின் வந்து கடைசி கட்டத்தில் வார்டுக்கு கொண்டு வந்தால் போதுமென்று சொல்லி ரூமில் கொண்டு விட்டார்கள்.ரூமில் வந்து ஒரு 4 மணி வரை பொறுக்கும் அளவு வலி தான்.அப்ப யார் இருக்கங்கன்னெல்லாம் நான் பார்க்கலை..எனக்கு எது சுகமோ அது போலவெல்லாம் படுத்துகிட்டேன்..குப்புற முட்டியை மடக்கை படுக்கும்போது கொஞ்சம் நல்ல இருந்தது.
ஆனால் அதன் பிறகு தாங்க முடியாத வலி அதாவது அத்தனை நேரம் இடையிடையே அரட்டை அடித்துக் கொண்டு இருந்தேன்..வலி 10 நிமிடத்திற்கொருமுறை இருந்தது..ஆனால் அதன் பின் 3 நிமிடத்திற்கொருமுறை என இருந்தது..என்ன செய்வது எல்லாம் செஞ்ச வேலை தானே நான் சஹிச்சுதானே ஆக வேனும்னு மன்சை எதிலாவது திசை திருப்பி விட்டு சமாளித்தேன் அப்படியே காலை விடிந்து ஒரு 7 மணி அளவில் நல்ல வலியுண்டு ஆனால் அரை மயக்கம் போல ..சரியாக நியாபகம் வராத மாதிரி.நர்ஸ் வந்து பார்த்து விட்டு இப்போ லேபர் வார்டுக்கு போகலாம் என்றார்கள்.
வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது ரொம்ப வலி வந்து அழுகை வருவது போல இருக்கும்பொழுது உடனே எல்லாம் நம்ம குழந்தைக்குத் தானேன்னு யோசிப்பேன் வலி குறையும்.
டாக்டர் வந்து பார்த்து விட்டு மணி 8 தான் ஆகுது இன்னும் 6 மணிநேரம் இருக்க வேண்டுமென்றார்கள்..நான் இடையிடையே நர்சிடம் டைம் கேட்டுக் கொண்டே எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தேன்.கடைசியில் என்னையறியாமல் நர்சிடம் இனி போதும் என்றேன் ..நர்ஸ் ஒரே சிரிப்பு என போதும்னு கேட்டு.
அந்த கட்டத்தில் எனக்கு சிசேரியன் கேட்கலாமா என்பது போல உள்ளுக்குள் ஒரு யோசனை பிறகு திரும்ப சரி இன்னொரு 4 மணிநேரம் எப்படியாவது சமாளிப்போம் என்று உருண்டு பிறன்டு படுத்தேன்..மணி அப்பொழுது காலை 11 ஆனது திடீரென வலி போய் விட்டது..எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் என்னடா இது வலி இல்லையென்று..குழந்தையின் அசவு தெரிகிறதா என்று கேட்டார்கள் எனக்கோ எதுவும் தெரியவில்லை..எனக்கு உள்ளுக்குள் பயம் கவ்விக் கொண்டது அய்யோ அசைவே தெரியவில்லையே வலியும் இல்லையே நான் என்ன செய்வேன் என்று.நர்ஸ் ஒன்னும் பயம் வேண்டாம் எல்லம் சரியாகும் என்றார்கள்.
பிறகு ஒரு 10 நிமிடம் தான் என்னையறியாமல் குழந்தை பிறந்தது..மருத்துவரும் அதற்கு தயாராகியிருக்கவில்லை அதனால் அடித்து பிடித்து ஓடி வந்து தான் பிரசவம் பார்த்தார்.கடைசி 10 நிமிடம் தான் பிரச சமயத்திலேயே சுகமானது என புரிந்து கொண்டேன்..நான்ன் அதற்கு தான் அவ்வளவு நாள் பயந்தேன்.
டிவியில் கடைசி நேரத்தில் தொண்டையை கிழித்துக் கொண்டு ஒரு கத்து கத்துவார்களே ஆஆஆஆஅ என்று அதுக்கு தான் நான் பயந்தேன் பார்த்தால் அந்த கடைசி நேரத்தில் ஒரு பயமும் வலியும் இல்லை பின் எதனால் இந்த சினிமாவில் மனுஷன் மானத்தை வாங்குகிறார்கள் என புரியவில்லை.
அப்படி என் குழந்தை பிறந்ததும் அடுத்த ரூமுக்கு கொண்டு போனார்கள்..குழந்தை அழுகாததால் அடித்தார்கள் எனக்கு ரொம்ப வலித்தது..அப்பொழுது ஒரு மெல்லிய பூணைக் குட்டி போல ஒரு சத்தம் எல்லோர் முகத்திலும் சந்தோஷம் குழந்தை அழுதால் தான் அது இவ்வுலகத்தில் வாழ தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
என்னிடம் பெண் குழந்தை என்றார்கள் அது மட்டும் தான் நினைவிருகிறது பிறகு மயக்கம் தெளிந்து பார்த்தால் ரூமில் என் குழந்தையை இன்னும் நான் பார்க்கவில்லை..அருகிலுள்ள தொட்டில்ல் பார்த்தால் குழந்தை இல்லை நான் ஒரு வித பயத்துடன் அம்மாவிடம் குழந்தை எங்கே என்றேன்..அம்மா பயப்படாதே குழந்தை முன்கூட்டி பிறந்தது தானே அதனால் பிலிலைட்டில் வைத்திருகிறார்கள் நான் போய் கொண்டுவந்து காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்..எனக்கு அம்மா திரும்ப வரும்பொழுது என் குழந்தை கைய்யில் இருக்குமே என்று நினைத்தபொழுது இது கன்வா இல்லை நினைவா என்பது போல என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்..என் உடம்பே கனமில்லாம இருந்தது..வாழ்க்கையில் முதன் முறையாக நான் ஒரு வித முழுமையான மனநிம்மதி என்ற சுகத்தோடு இருந்தேன் .
அமா வந்தார் அருகில் குழந்தையை வைத்தார் நான் உடனே கை கால் எல்லம் எண்ணிப் பார்த்தேன் எனக்கு உள்ளுக்குள் படாம்பூச்சி..குழந்தை மிக அழகாக இருந்தது ..எனக்கு சந்தோஷம் தாங்கலை..
தோ அந்த குட்டி இப்பொழுது ஒரே கத்து நான் போறேன்

எப்படி இருக்கீங்க?ரீமா குட்டி எப்படி இருக்கா?எனக்கு இது 36வது வாரம்.உங்க பதிவு படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருந்தது.நல்லா எழுதறீங்க.அந்த நேர அனுபவத்தை கூட இவ்வளவு நகைசுவையா சொல்ல தளிகாவால தான் முடியும்.ஆமா உங்க அனுமதி இல்லாம,தெளிவா எதற்குனு சொல்லாம ஊசி எப்படி போட்டாங்க?நம்ப ஊர்ல கூட இப்படி செய்றாங்களா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

முதலில் என்னைப்பற்றிக் கொஞ்சம் சொல்கிறேனே. நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு குழந்தை என்றால் சரியான விருப்பம். என்னை விட ஒரு வயது குறைந்த பிள்ளைகளைக்கூட முக்கித்தக்கித் தூக்கிக் கொண்டு திரிவேன். எங்கள் சொந்த இடம் வேறு ஆனால் நாங்கள் இருந்தது படித்ததெல்லாம் வேறிடம். விடுமுறைக்கு ஊருக்குப் போவோம். போனால், அயல் குழந்தைகளையெல்லாம் நான் தான் டே கெயார் பண்ணுவேன். எனக்கு எப்பவும் அழகாக மேக்கப் போட்டுத்தான் வைத்திருக்க விருப்பம். அதனால் நானே அக் குழந்தைகளுக்கு பவுடர் போட்டு பொட்டு வைத்து தூக்கித் திரிந்து நித்திரையாக்கி பின் உடனேயே தட்டி எழுப்பி தூக்கித் திரிவேன்.

எனக்குத் திருமணமாகி வேறு ஒரு திருமணத்திற்குப் போனபோது அங்கே ஒருவர் தன் பிள்ளைக்கு என்னைக் காட்டிச் சொன்னார் பார்த்தாயா இந்த அக்காதான் சின்னனில் உன்னைத் தூக்கித் திரிவார் எனச் சொல்வேனே என்று. இப்படிப் பட்ட எனக்கு குழந்தை வயிற்றில் கிடைத்ததும் சொல்லவா வேண்டும்.

எங்கள் முறைப்படி என்னவோ 7 மாதத்தின் பின்தான் குழந்தைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது. அப்போ நான் கிட்டத்தட்ட 5 வது மாதமே என் கணவரையும் அழைத்துக்கொண்டு கடைக்கு அடிக்கடி போவேன் அங்கே போய் குழந்தையின் ஆடைகள் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வருவேன். பின் 7 வது மாதம் வந்ததும் போய் எல்லாம் வாங்கியாகிவிட்டது. அதன்பின் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு இரு தடவையாவது குழந்தைக்கான பாக்கைத் திறந்து அவ்வளவு உடுப்புகளையும் விரித்துப் போட்டு ரசிப்பேன். என்னோடு நிறுத்தாமல் அப்பா, அம்மா வையும் அழைத்துக் காட்டி கணவருக்கும் காட்டுவேன். அதைப் பார்த்தாலே ஏதோ குழந்தை கையில் இருப்பதுபோல் சந்தோசமாக இருக்கும். ஆனால் நான் நினைக்கிறேன் என்னுடைய இந்தச் செயல் அப்பா,அம்மாவிற்கு எவ்வளவு ஆக்கினையாக இருந்ததோ தெரியாது, ஆனால் ஒவ்வொரு தடவையும் அவர்களும் என்னுடன் சேர்ந்து புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்து ரசிப்பார்கள்.

எப்போ குழந்தை கிடைக்கும் எப்போ தூக்கலாம் என்பதுதான் என் முளுக்கனவாகவே இருந்தது. அப்போ அம்மா சொன்னார், இப்போ குழந்தை கிடைக்கவேண்டும் என ஏக்கமாக இருக்கும் பின்னர் குழந்தை எப்ப சாப்பிடும் எப்ப தவழும் எப்ப நடக்கும்...... இப்படியே எல்லாமே தொடரும் என்று அது எவ்வளவு உண்மை இப்ப கூட நினைப்பேன் பெரியவர்களாக வளர்ந்தால் எப்படி இருப்பார்கள், இதே போல் என்னுடன் இருப்பீங்களா எனக் கேட்டால் யேஸ் என்று சொல்வார்கள். இப்படி நிறையக் கதைகள்.

அது போகட்டும். எனக்கு எதுவித பிரச்சனையும் இருக்கவில்லை. நான் நோர்மல் டெலிவரியைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் என் கணவருக்கு சீசர் செய்தால் நல்லதென விரும்பினார். அந்த நேரம் பார்க்கலாம் என விட்டாயிற்று. குறித்த திகதிக்கு 3 கிழமைக்கு முன்னர் கடைசியாக ஒரு செக்கப் இருந்தது அதற்காகப் போனோம். செக் பண்ணிய இடத்தில் சாடையாக பிறசர் இருக்கிறது, என்றும் கொன்சல்ரன் 2 நாட்களால் வெளியூர் போகப்போவதாகவும் வர 1 மாதமாகும் என்றும் சொன்னார். என் கணவருக்கு அதே கொன்ச;ல்ரந்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என விரும்பினார். உடனேயே கதைத்துப்பேசி அடுத்த நாள் சீசர் என முடிவானது.

அடுத்தநாள் காலை சீசர் எனக்கு எந்த வலியும் இல்லைத்தானே. விடிய பச்சை உடுப்பெல்லாம் போட்டு தொப்பி எல்லாம் போட்டார்கள், கணவரும் அதே உடையில் வெளிக்கிட்டார் (தியேட்டருக்குள் வருவதாயின் போடவேண்டும்) ஸ்ரெச்சரில் படுக்கச்சொல்லி தள்ளிக்கொண்டுபோக வந்தார்கள் அப்போதான் எனக்கு ஒரே உதறலாக இருந்தது, சாதாரணமாக நானே போனால் பயமில்லை இது என்னவோ செய்யப்போகிறார்கள் போல் பயப்பட்டேன். அப்பா, அம்மாவும் வந்துவிட்டார்கள் அப்பா திருநீறு பூசிவிட்டார்.

தியேட்டருக்குள் போய் படுத்தாயிற்று. முதுகெலும்பில் ஊசி போட்டார்கள். எனக்கு பெரிதாக விறைக்கவில்லை. ஆனால் அப்படித்தான் தெரியும் அது சரியாகும் எனச்சொல்லி கொன்சல்ரன் வயிற்றில் கத்தியை வைத்ததும்தான் நான் எனக்கு தெரிகிறது வைக்க வேண்டாம் எனக் கத்தினேன். பின்னர் பார்த்தால் விறைப்பு வரவில்லை. உடனே மாஸ்க் வைத்தார்கள் மயங்கிவிட்டேன். குழந்தையை எடுத்து கணவரிடம் கொடுத்து அவர் அப்பா, அம்மாவிடம் கொடுத்துவிட்டு என்னுடன் நின்றார். கண்விழித்தேன், வெளியில் வந்ததும் பெரிய சத்தம் அந்த வோட்டே அதிரும்படி கத்திக் கேட்டது , கையில் தந்தார். அப்படியே அவித்த வெள்ளைக்கட்டியாக சிகப்புச் சொண்டுடன் பெரிய சத்தமாக கத்தியபடி எனக்கு அழுகையே வந்துவிட்டது சந்தோசத்தில்........ இது முதல் பிரசவம் அடுத்ததுக்கு எனக்கு எந்தப்பயமும் இருக்கவில்லை, குழந்தை முகத்தை எப்போ பார்ப்பேன் என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது.

நிறைய எழுதிவிட்டேன். தளிகாவும் விரிவாக எழுதியிருக்கிறீங்க. சாதிகா அக்காவும் எழுதியுள்ளார். இப்படி படிக்கிறபோது நல்ல அனுபவங்களாக இருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்க சொல்வதை எல்லாம் கேட்க கேட்க எனக்கு எப்போ குழந்தை பிறக்கும், எப்போ குழந்தைய பார்ப்போம்னு ஆசை அதிகமாயிட்டே இருக்கு.அதிரா உங்க தமிழ் அழகா இருக்கு.

//அப்படியே அவித்த வெள்ளைக்கட்டியாக சிகப்புச் சொண்டுடன் பெரிய சத்தமாக கத்தியபடி எனக்கு அழுகையே வந்துவிட்டது சந்தோசத்தில்........ //
எப்படிங்க இப்படி எழுதறீங்க? உங்களால இலங்கை தமிழ் கற்று கொள்ள எனக்கு ஆசை வந்துவிட்டது.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு திவ்யா நேற்று அவசரமாக பதிவு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.திவ்யா உண்மையில் பிரசவத்தை குறித்து முன்னமே பயப்பட தேவையே இல்லை ஏனென்றால் அது சில மணிநேர வலி தான் ஆனால் அது எல்லாமே மறந்து போய்விடும்.குழந்தை பிறந்து விட்டால் எனக்கு தெரிவிப்பாய் தானே திவ்யா.
ஆம் அதிரா நானும் அதே போல் குழந்தைக்கு எடுத்து வைத்த ட்ரெஸை அடிக்கடி எடுத்து விரித்துப் பார்ப்பேன் அவ்வளவு சுகமாக இருக்கும்.என் மகளுக்கு முதன் முதலில் ஆர்ஞ் நிற ரோம்பெரும், இரண்டாவது பின்க் ரோம்பெரும்,மூன்றாவது எல்லா நிறத்திலும் கோடுகள் உள்ள ஒரு ரோம்பெரும்..இந்த மூன்றும் தான் இன்றும் கண்ணில் நிறைந்து நிற்கிறது.
என் மகளுக்கு முதல் முதலாக மட்டி விட்டது பின்க் ரோம்பெர்/பின்க் கேப்/பின்க் மிட்டென்ஸ்/பின்க் சோக்ஸ்.குழந்தையும் பின்க் ,செக்க சிவந்த உதடு.அவ்வளவு அழகாக இருந்தது.
ஆமாம் திவ்யா நம்மூரில் அதிகளவில் செய்கிறார்கள்..சொல்லாமல் கொள்ளாமல் இன்டியூஸ் பன்னுவது இப்பொழுது சர்வ சாதாரணமாகி விட்டது..இது எனது மகளின் பீடியாட்ரீஷியன் கவலையாக சொன்னது.அதனால் எப்பொழுதும் நீங்கள் உஷாராக இருங்கள்.தானே பழுப்பதற்கும் தல்லிப் பழௌப்பதற்கும் வித்யாசம் உண்டு என்பார்கள் மலையாளத்தில் அது மாதிரி இயற்கையாக வரும் வலி தான் நல்லது என நன்புகிறேன்.
என் மருத்துவர் சொல்கிறார் அவருக்கு தெரிந்த நர்ஸ்கள் சர்வ சாதாரணமாக சொல்வார்களாம் 8 மாதம் முடியும்பொழுதே நிறைய பேருக்கு நாங்கள் அவர்களுக்கு சொல்லாமல் இன்டியூஸ் பன்னி விடுவோம் அப்ப தான் எங்களுக்கு பெட் ஃப்ரீயா கிடைக்குமென்று.
எனக்கு டெலிவெரி ஆகி 1 வாரம் கழித்து என் மருத்துவர் 1 மாதம் வெளியூரில் இருந்தார் அப்பொழுது தான் புரிந்தது அவரது சவுகரியத்திற்காக தான் அப்படி பன்னிநார்கள் என்று.

மேலும் சில பதிவுகள்