ஆலோசனை கூறுங்க

எல்லோருக்கும் வணக்கம்;
இந்த இணையத்தளம் ரொம்பவும் எனக்கு பயனுள்ளதாய் இருக்கிறது . அதற்கு முதலில்எல்லோருக்கும் நன்றிகள்.
மறுபடியும் உங்கள் ஆலோசனைகள் எனக்கு தேவை.

நான் இப்போது 2.5 மாதம் (10 வாரங்கள்) கர்ப்பமாக இருக்கிறேன் . எத்தனை மாதங்களால் miscarriage ஆபத்து இல்லை. இன்னமும் யாரிடமும் சொல்வதற்கு ஒரு பக்கம் ஆசையாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது.

அடுத்து விற்றமின் A உணவுகளை எந்தெந்த உணவுகளை குறிப்பாக எவ்வளவு காலம் தவிர்க்க வேண்டும்.?
வேறெந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது .
கரட் ஜுஸ் எத்தனையாவது மாதத்திற்கு பிறகு நல்லது . கரட்டில் விற்றமின் A இருக்கிறதால்.
காய்ச்சிய பால் ஒவ்வொரு நாளும் அல்லது அடிக்கடி உண்ணலாமா? பாலில் கிருமி தொற்றுதன்மை ஏதாவது இருக்கிறதா?

அழகான கொஞ்சம் நிறமான, தேவையான அளவு நிறையுடன் ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ள வேறு எந்த முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்?(உணவு, வேறு ஏதாவது)

வணக்கம் தோழி! முதல் மூன்று மாதங்கள் கவனமாக இறுங்கள்.... 4 மாதத்தில் இருந்து misscarriage ஆவது குறைந்து விடும்....என்னை கேட்டால் முதல்ultrasound and labtests செய்த பின் அனைவருக்கும் சொல்வது நலம்.கேரட் juice குடிப்பது நிச்சயம் பயன் தறும்,its rich in vit A....பயபட தேவை இல்லை...பப்பாளி மட்டும் தடுத்து விடுங்கள்...வெளி நாடுகளில் மருத்துவர்கள் பப்பாளி கூட சாப்பிட சொல்கிறார்கள்.நாள் ஆக ஆக நன்றாக பசிக்கும் ,எனக்கும் அப்படித்தான் உள்ளது...நான் 20 வாரங்கள் கர்பமாக உள்ளேன்... பயங்கரமாக பசிக்கும் போதெல்லாம் பால் தான் குடிப்பேன்...பால் மிகவும் நல்லது....நன்கு காய்ச்சிய பாலில் கிருமிகள் இல்லை...சத்தான உணவு நன்றாக சாப்பிட்டாலே போதும்...அழகான போதிய எடை உள்ள குழந்தை பிறக்கும்... நிறமான குழந்தைக்கு நிச்சயம் heridity தான் காரணம்

மருத்துவரை பாத்துடீங்களா? ஃபோலிக் ஆசிட் மாத்திரை குடுத்தாங்களா? ஃபோலிக் ஆசிட் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.கண்டிப்பா ஃபோலிக் ஆசிட் எடுத்துகுங்க. பழங்கள்,காய்கறிகள்,மீன் அதிகமா சேர்த்துகுங்க.கோழி சாப்பிட வேண்டாம்.கீரை,நட்ஸ்,முளை கட்டிய பயிறு எல்லமே நல்லது தான்.

மேலும் சில பதிவுகள்