சந்தோஷ செய்தி

எனக்கொரு மகள் பிறந்தாள். ..
எனக்கு ஜுலை 12 மகள் பிரந்திருக்கிராள். நார்மல் டெலிவரி தான். கொடி சுத்தி இருந்ததால பெயின் வரவச்சி பாப்பாவ எடுத்துட்டாங. கடவுள்புன்னியதுல நார்மல் ஆ முடிஞ்ஜுது. என் தங்கம் அப்படியே அவங்க அப்பா மாதிரி இருக்கா..

ப்ரியா, ரொம்ப சந்தோஷம். குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? குட்டிப் பெண்ணின் நடவடிக்கைகளை நல்லா ரசியுங்கள். (கொட்டாவி விடும்போது பார்க்க அழகாக இருக்கும்.) உங்கள் உடம்பையும், குழந்தையையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள். உதவிக்கு யாராவது இருக்கிறார்களா? பத்திய உணவு சாப்பிடுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

எப்படி இருக்கீங்க. செல்ல மகள் எப்படி இருக்கிறாள். நீங்கள் குழந்தை பெற்ற விஷயத்தை எங்களிடம் சொன்னதுக்கு மிகவும் சந்தோஷம். குழந்தை அவங்க அப்பா போல இருக்கிறாளா. உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருக்குமே.உங்கள் உடம்பையும் குழந்தையும் நல்ல கவனித்துக்கொள்ளுங்கள்.அப்புறம் எப்ப ஜப்பான் வர்றதா ஐடியா முடிவு செய்தாச்சா. நான் சொன்னது போல வின்டர் வர முன்னாடியே அதாவது அக்டோபர் கடைசிக்கு முன்னாடி வந்தால் சரியாக இருக்கும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் பிரியா வாழ்த்துக்கள்.நீங்களும்,குழந்தையும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்

அன்புடன் பிரதீபா

பிரியா குழந்தை பிறந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள். குழந்தையையும், உங்கள் உடம்பையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

ஜானகி

god bless you and your baby- ROJA

- ROJA

ஹை ப்ரியாக்கு குழந்தை பிறந்தாச்சா?வாழ்த்துக்கள் ப்ரியா.
என்ன குட்டி அப்பா போலவா,அது மேலும் சந்தோஷம் தானே. ஜெ மாமி சொன்னது போல கொட்டாவி விடும் போது அந்த காட்சி அழகோ அழகு.
ப்ரியா,பாருங்க, குட்டி பாப்பா இனி பாவ்பாஜி கேட்க போகுது.ஹீ..ஹீ.சும்மா பிரியா.
ம்ம்ம்...எஞ்ஜாய் வித் யுவர் குட்டி.

ரொம்ப சந்தோசம் குட்டி பாப்பா என்ன செய்யுது?நல்லா பார்ட்துகங்க பிரியா என் மனமார்ந்த வாழ்த்துகள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ப்ரியா வாழ்த்துகள்.
நான் இது தான் உங்கூட முதல் முறை பேசுவது. நல்ல சந்தோஷமான விஷயதோட நான் உங்ககூட பேச வாய்ப்பு கிடைத்தது.
குட்டி பாப்பா எப்பிடி இருக்கிங்க? உங்க உடம்பும் நாமலுக்கு வந்தாச்சா?

ப்ரியா.வாழ்த்துக்கள்.உங்களுக்கு பெண்பிறந்தது குறித்து மிக்க சந்தோஷம்.உங்கள் கனவு,ஆசைகளின் பிரகாரம்,உங்கள் செல்ல மகள் வளர எனது வாழ்த்துக்கள்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

வாழ்த்துக்கள் ,உங்களிடம் பேசுவது இது தான் முதல் தடவை.குட்டி பாப்பா எப்படி இருக்கிறாள்.பாப்பாவின் சேஷ்டைகளை ரசியுங்கள்.உங்க உடம்பு இப்போ எப்படி இருக்கு?பாப்ப பெயர் என்ன?

மேலும் சில பதிவுகள்