உப்புச்சீடை

தேதி: July 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி - 4 ஆழாக்கு
பொட்டுக்கடலை - ஒரு ஆழாக்கு
தேங்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 மி.லி


 

புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.
பொட்டுக்கடலையை தூளாக்கி கொள்ளவும்.
முதலில் துருவிய தேங்காயை சிறிது நேரம் ஆட்டி பின் அரிசியை கழுவிப் போட்டு தண்ணீர் அதிகம் விடாமல் உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் தூளாக்கிய பொட்டுக்கடலை சலித்து சேர்த்து பிசைந்து மிகச்சிறிய அளவில் உருட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி (அதிகம் கொதிக்காமல்) சீடைகளை போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.


அரிசி சரியாக அரைக்கவில்லை என்றால் சீடை பொரிக்கும் போது எண்ணெயில் வெடித்து சிதறி விடும். அரைக்கும்போது அரிசியில்லாமல் மையாக அரைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்