தேவா, ஹெல்ப் ப்ளீஸ் - BIOTIQUE ப்ராண்ட்

தேவா,
நான் Susri (ஸ்ரீ) . உங்கள் அழகு குறிப்புகள் பலவற்றை படித்து எனக்கு தெரியாத விஷயங்களை நிறைய தெரிந்து கொண்டேன். அதற்க்காக முதலில் உங்களுக்கு என் நன்றிகள் பல... பல..

இங்குள்ள குறிப்புகள் படித்து இந்த முறை இந்தியா சென்று வரும்போது ப்யூட்டி ப்ராடக்ட்ஸ் கொஞ்சம் வாங்கி வந்துள்ளேன்.

என்னிடம் எற்கெனவே நான் வாங்கி வந்திருந்த பழைய பொருட்கள் இருப்பதை பார்த்ததும்தான் இந்த சந்தேகம்... நான் சென்ற முறை பயணத்தின் போது BIOTIQUE PRoducts (Face pack, Moisturing lotion) மற்றும் தலைக்கு தேய்க்க dandruff cream என்று வாங்கி வந்து இருந்தேன். சில உபயோகப்படுத்த ஆரம்பித்த நிலையில் தொடராமல் விட்டு விட்டவை. சில இன்னும் ஒப்பன் கூட செய்யாதவை... ஆனால் இவற்றின் காலாவதி தேதி (Expiration Date) இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன... (மொத்தம் 5 வருடங்கள்...தயாரிப்பு தேதியில் இருந்து என்று கொடுக்கப்பட்டுள்ளது).

இப்போது நான் இதை உபயோகப்படுத்தலாமா?! பொதுவாக இந்த ப்ராண்ட் (Biotique) நாள் பட்டு உபயோகிக்க உகந்ததா?! நல்ல ப்ராண்டா?! பாதுகாப்பானதாக இருக்குமா?! சுத்தமாக use பண்ணமால் தூக்கி எறியவும் மனம் வரவில்லை.

உங்கள் கருத்தினை சொல்லி உதவுங்களேன் ... ப்ளீஸ்.

மற்ற தோழிகளும் இந்த ப்ராண்ட் (Biotique) ப்ற்றி அறிந்திருந்தால் எனக்கு கொஞ்ச்ம் சொல்லுங்களேன்... மிக்க நன்றி!

ஹாய் Susri, நீங்கள் குறிப்பிட்டுள்ள பிராண்ட் நிச்சயம் நல்ல பிராண்ட்தான். அதில் சந்தேகமே இல்லை. அதில் பேஸ் க்ரீம்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். எந்த சைட் எபெக்ட்ஸும் தரவில்லை. எனக்கு ஒரு முறை Biotique products அத்தனையும் சேர்த்து ஒரு கிப்ட் பேக்காக கிடைத்தது. அதில் இருந்த Under Eye Cream, நைட் க்ரீம், பாடி லோஷன் எல்லாமே நல்லா இருந்தது. நீங்கள் பயப்படாமல் உபயோகிக்கலாம். மேலும் எக்ஸ்பயரி ஆக இன்னும் 2 வருடம் இருக்கும் நிலையில் நிச்சயம் உபயோகிக்கலாம். முதலில் கை வசம் இருக்கும் உபயோகித்த க்ரீம்களை முடித்து விட்டு புதிதாக உள்ள க்ரீம்களை திறந்து உபயோகியுங்கள். இதில் இன்னொரு பலனும் இருக்கிறது. பொதுவாக எல்லா க்ரீம்களையும் காலை, மாலை இரு வேளையும் உபயோகிக்க சொல்லி பேக்கில் போட்டிருக்கும். ஆனால் நாம் யாரும் அப்படி செய்வதில்லை. ஒரு வேளைதான் பெரும்பாலும் உபயோகிக்கின்றோம். இப்படி க்ரீமை சீக்கிரம் தீர்க்கும் சாக்கிலாவது இரு வேளையும் உபயோகிக்க ஆரம்பியுங்கள். முகத்திற்கும் நல்ல பலனை தரும்.

தேவா, உங்கள் உடனடி பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தேவா!! எனக்கு மிகவும் சென்ஸிடிவ் ஸ்கின் (Oily and often get pimples on the face) ஆக இருப்பதால், கொஞ்சம் குழப்பம்...

நல்ல தெளிவான பதில் கொடுத்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி! இதோ இன்றிலிருந்தே போட தொடங்கி விடுகிறேன்... : )

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் Susri,
முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கவும், பரு போகவும் வாரம் ஒரு முறை முல்தானி மட்டியை பன்னீரில் குழைத்துப் போடுங்கள். சாதாரண சருமம் போல் ஆகிவிடும். பருக்களும் வராது.

தேவா, யூ ஆர் வொண்டர்ஃபுல்!!

டியர் தேவா, நான் கேட்டதற்க்கும் மேலே , தேவையறிந்து குறிப்பு கொடுக்கும் நீங்கள் உண்மையிலேயே சூப்பர்!! ரொம்ப தேங்ஸ் ஃபார் தெட்.

நேற்றுதான் உங்கள் குறிப்பின் படி முல்தானி மட்டி பன்னீரில் கலந்து போட்டேன். இன்னும் தொடர்ந்து போட்டு வர பலன் தெரியும் என்று நீங்கள் சொன்னது நம்பிக்கையாக இருக்கிறது. : )

ஆனால் இப்போ problem... திடீரென்று முகத்தில் இடது பக்க கன்னத்தில் மட்டும் இரண்டு மூன்று பருக்கள். இவை வெயில் கட்டியா , இல்லை பருவா என்பது கூட என் நீண்ட நாள் சந்தேகம்.
இப்படி வருவது எனக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும் இப்போ என் கவலை, இன்னும் 10 நாட்களில் வரப்பொகும் என் குட்டிப்பையனின் பிறந்தநாள் விழாவில் நான் எப்படி இருப்பேனோ என்றுதான். : -(

நான் யூஷுவலா இரவு படுக்கும்முன் சந்தனம் (கட்டையில் அரைத்து) கட்டிகளின் மீது பூசி படுப்பேன். ஆனாலும் அது கட்டிகளை மேலும் பெரிதாகாமல் தடுப்பது கிடையாது. : ( அதனால் இடையில் கொஞ்ச நாட்களாக கஸ்தூரி மஞ்சள் பவுடரை தண்ணீரில் குழைத்து போடுகிறேன்... இது கட்டியை சீக்கிரம் உடைய செய்கிறது... மேலும் ஆற்றுகிறது.... ஆனால் அந்த இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடத்திலும் ஒரு கருமை நிறம் வந்து விடுகிறது... எனக்கு எது சரியான மருந்து, நான் போடுவதில் ஏதும் குறைபாடு உள்ளதா என்று ஒன்றும் புரியவில்லை. : (

ஏதாவது உடனே செய்து கொஞ்சம் முகத்தை சரி பண்ண ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ், ப்ளீஸ். (p.s. பிறந்தநாள் விழா - Aug 16th)

அன்புடன்
சுஸ்ரீ

I am aslo having this same problem, but i dont know what is that 'multhani'? where i have to get it? I am in US now...I dont know how to type in Tamil, sorry for that....

ஹாய் Susri, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு எண்ணெய்ப்பசை சருமம் என்பதால்தான் முல்தானி மட்டியை பன்னீர் குழைத்து போட சொன்னேன். இல்லாவிட்டால் தயிர் குழைத்து போட சொல்லி இருப்பேன். ஏனென்றால் தயிர் முகத்தில் உள்ள பருக்களின் வடுக்களையும், கரும்புள்ளிகளையும் போக்கி விடும். எனது கீழ்க்கண்ட பதிவில் இருக்கும் பொடியை தினமும் உபயோகித்து வந்தீர்கள் என்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கி பளிச்சென்று இருக்கும். உங்களுக்காக அதன் லிங்கை இங்கே தருகிறேன்.
http://www.arusuvai.com/tamil/forum/no/3677

இந்த பொடியை நீங்கள் முல்தானி மட்டியோடு பன்னீர் கலந்து பேக்காக போடலாம். இதில் உள்ள வசம்பு தழும்பை போக்க நல்ல மருந்து. முல்தானி மட்டி தொடர்ந்து உபயோகிக்க பரு வருவது நின்று விடும். இப்போதைக்கு உங்களுக்கு இதனை தயாரிக்க நேரம் இருக்காது. உங்கள் பையனின் பிறந்த நாள் வரை நீங்க தினமும் கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் அனைத்தையும், பன்னீரில் 2 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து பேக்காக போட்டு வாருங்கள். கரும்புள்ளி மறையும். நம்ம ஊரில் துன்னுத்தி பச்சிலை ( ஆங்கிலத்தில் Basil Leaves) கிடைக்கும். இதன் சாறு கரும்புள்ளியைப் போக்கும். உருளைக்கிழங்கு சாறு இயற்கையான ப்ளீச். அதனையும் தினமும் தடவலாம்.
உங்கள் பையனின் பிறந்த நாள் அன்று பவுடர் போடும் முன் எங்கெல்லாம் கரும்புள்ளி இருக்கிறதோ அங்கெல்லாம் கன்சீலர் அல்லது பவுண்டேஷனை நன்றாக தடவி 5 நிமிடம் கழித்து பவுடர் தடவுங்கள். கரும்புள்ளி இருப்பது தெரியாது. முதல் நாளே இது போல் செய்து பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரியும். எக்காரணம் கொண்டும் புது மெக்கப் டெக்னிக்கை பங்க்ஷன் அன்று ட்ரை செய்யாதீர்கள். உங்கள் குட்டிப் பையனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும், உலகின் அத்தனை அதிர்ஷ்டங்களும் அவனுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்.

ஹாய் Santho, முல்தானி மட்டி என்பது ஒரு வகை களிமண்(Clay). இது முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க உதவும். முகத்தில் அதிக எண்ணெய்ப்பசை இல்லையென்றால் பரு வராது. முல்தானி மட்டி US ல் நார்த் இண்டியன் கடைகளில் கிடைக்கும். அப்படி உங்களால் வாங்க முடியவில்லையென்றால் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும் Clay Face Pack ஐ வாங்கி உபயோகிக்கலாம். அதே பலன் கிடைக்கும்.

டியர் தேவா, என்ன ஒரு அழகான தெளிவான விளக்கமான...பதில். ரொம்ப நன்றி!

எனக்கு ஆயில் சருமம்தான் , நீங்கள் சொன்ன முதல் குறிப்பில் உள்ள படியே முல்தானி மட்டியை பன்னீரில் குழைத்தே போடலாமென்று இருக்கிறேன். சரியா?!

மன்னிக்கவும் தேவா, இத்தனை அழகான உங்கள் பதிலுக்கும் நான் மறுபடியும் ஒரு கேள்வி கேட்பதற்க்கு....

இவை இல்லாமல் நீங்கள் கொடுத்துள்ள லிங்க் , special பொடி தயாரிப்பு முறை எல்லாம் படித்து தெரிந்துக்கொண்டேன்.மிக்க நன்றி. கட்டாயம் அனைத்தையும் முயற்ச்சிக்க விரும்புகிறேன். மேலும், நான் இந்தமுறை இந்தியாவில் இருந்து, இந்த குறிப்பில் நீங்கள் கொடுத்துள்ள பெரும்பான்மையான ஐயிட்டங்களை வாங்கியுள்ளேன்... ஆனால், அவைகள் எல்லாம் பவுடர் முறையில் கடையில் வாங்கினேன். அதாவது, ரோஜா இதழ் பொடி - 200 கிராம், வசம்பு பொடி - 100 கிராம் என்ற கணக்கில்.... நானே இதுபற்றி உங்களிடம் விளக்கம், கருத்து கேட்கலாமென்று இருந்தேன்... இப்போது எல்லாம் பொடி வடிவில் இருப்பதால், நான் எந்த அடிப்படையில் கலந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள பேக் தாயாரிப்பது...?!! நீங்கள் சொன்ன கிராம் கணக்குக்கு இந்த பொடியை sustitute செய்து கொள்ளலாமா?!! கொஞ்சம் உதவுங்களேன்... தேவா.. ப்ளீஸ்...

மேலும் நீங்கள் சொன்னமாதிரி மற்ற ஆலோசனைகள் & மேக்கப் டெக்னிக்குகளை பார்ட்டி டே -க்கு யூஸ் செய்து கொள்கிறேன்... அதற்க்கும் ஒரு பெரிய நன்றி!

இவை எல்லாவற்றையும் விட மேலாக, என் சின்ன பையனிற்கு நீங்கள் தெரிவித்த உங்களின் அன்பான இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள் பல நூறு! : )

மீண்டும் நன்றியுடன்....
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

தேவ சேனாதிபதியே வணக்கம்.

அருசுவை தோழிகளையெல்லாம் அழகாக்கும் தேவ சேனாதிபதியே என் தோழியையும் அழகாக்க ஒரு வழி சொல்லுங்கள்.

எண்ணை பசை சருமம் உள்ளவர்களுக்கு தினமும் என்ன தேக்கனும். எந்த மாதிரி கிரீம் பயன் படுத்தனும். எனக்கு டிரை ஸ்கின் என் தோழி ஒருவருக்கு வேண்டும்.
அவர் பேரன்லவுலி போடலாமா?னிவ்யா கிரீம் போடலாமா?

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஸ்ரீ, உங்களது நன்றிக்கு எனது பதில் நன்றி. தங்களிடம் உள்ள பொடியையே அதே கிராம் கணக்கில் உபயோகிக்கலாம். கொஞ்சம் அளவு குறைந்தாலோ, கூடினாலோ வேறு பலன் தர இது மருந்து இல்லையே. அதனால் பயப்படாமல் உபயோகிக்கலாம். ஏனென்றால் நாம் தனியாக ரோஜா இதழின் பொடியையோ, நீரையோ முகத்தின் மென்மைக்கு உபயோகிக்கும்போது, இப்படி அளவு கொஞ்சம் கூடினால் கூட அது நல்ல பலனையே தரும். வசம்பும் அப்படியே. குழந்தையின் முகத்திற்கு வெறும் வசம்பை சுட்டு அதனை பொட்டாக இடுகிறோம். அதுவும் அதிகம் இருந்தாலும் எதிர் பலன் தராது. எனவே நீங்கள் சேர்க்கும் பொருட்களின் அளவு கொஞ்சம் கூட குறைச்சல் இருந்தால் பரவாயில்லை. பன்னீரில் குழைத்தே முகத்தில் போடுங்கள். பார்ட்டியில் கலக்குங்க. உங்க பையன் பேர் என்னன்னு முடிஞ்சா சொல்லுங்க (உங்க பேரும் நல்லா இருக்கு).

மேலும் சில பதிவுகள்