hai friends,
my girl baby have a lots of small hair in face and body.anybody tell me how can i reduce it and anything make a problem in future?(The hair will change dark)please tell me.
And another one my 5 year old boy always bliking his eyes recently .Any homeremdies can help for him?
thanks .
farsha
குழந்தையின் உடம்பு முடிக்கு
ஹாய் Farsha, உங்கள் பெண் குழந்தையின் உடம்பில் உள்ள முடியினை நீக்க தினமும் குளிப்பாட்டும்போது கஸ்தூரி மஞ்சளை பொடி செய்து அதனை குளிப்பாட்டிய பிறகு உடம்பு முழுதும் நன்றாக தடவி தேய்த்து பிறகு தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். இது போல் செய்தால் நாளடைவில் உடம்பில் முடி வளராது. சிறிய ரோமங்களும் உதிர்ந்து விடும். உங்கள் மகனின் கண் சிமிட்டலுக்கு கண் மருத்துவரை சென்று பாருங்கள். நாமாக செய்யும் சில வைத்தியங்கள் கண் விஷயத்தில் வேண்டாமே. நமக்குத் தெரியாமல் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். உணவில் நல்ல சத்துக்களை சேருங்கள். முக்கியமாக வைட்டமின் A உள்ள உணவுகளைக் கொடுங்கள். நன்றாக நிறைய நேரம் தூங்க பழக்குங்கள். அதிக நேரம் டீவி, வீடியோகேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு மறக்காமல் கண் மருத்துவரை சென்று பார்த்து ஆலோசனை பெறுங்கள்.
thanku Deva madam
thanx for ur valuable advise,but kasthuri manjal make it dry skin(i read some articales).
can i apply only kasthuri manjal or mixing with any other powder .please tell answer.
thanks
farsha
TERMARIC
நான் அறுசுவை இல்லத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.கஸ்தூரி மஞ்சளை அப்படியே போட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.எனவே பயத்த மாவுடன் சேர்த்து குளிப்பாட்டவும்.அன்பே சிவம்.
ஹாய் தேவா மேடம்
ஹாய் தேவா மேடம்,எப்படி இருக்கிறீங்க?எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்.எனக்கு ஒரு சந்தேகம்.என் 5 வயது பொன்னுக்கு முடி மிகவும் வளைந்து வளைந்து இருக்கிறது.தலைக்கு குளித்தால் மட்டுமே முடி நேராக(stright hair) இருக்குது.அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான் நேரா (stright)இருக்கு.காய்ந்ததும் பழைய படி வளைந்து விடுகிறது.முடி நேராக (stright hair)வளர நான் என்ன செய்ய வேண்டும்?பியூட்டி பார்லர் போனால் அவர்கள்கீட்டர் போட்டு சரி பன்னி ஆக்கி விடுகிறார்கள்.இது 2 நாள் தான் நிக்குது.முடிstrightner போட்டு முடியை stright பன்னலாமா?இல்லை வேறு வழி இருக்கா?நன்றி
ramba
குழந்தை தலைமுடி ஸ்ட்ரெயிட்னிங்
ஹாய் ரம்பா, எப்படி இருக்கீங்க? உங்க பொண்ணு தலைமுடி சுருட்டையா ஆகுதுன்னு சொல்லி இருக்கீங்க? அவளோட ஹேர் நேச்சர் அப்படி. என்னோட ஹேரும் அதே Texture தான். தலை குளிக்கும்போது நேரா இருக்கும். காய்ந்த பிறகு வளைந்துவிடும். ஹேர் ரொம்ப ஸ்ட்ரெயிட்டா இருந்தாதான் எல்லா ஹேர் ஸ்டைலும் பண்ண முடியாது. இப்படி ஹேர் இருக்கறது வசதிதான். ஒரு நாள் கர்லி ஹேர் ஸ்டைல் வெச்சுக்கலாம். இன்னொரு நாள் ஸ்ட்ரெயிட்னிங் செஞ்சுக்கலாம். ஆனால் இதெல்லாம் அவள் பெரிய பொண்ணா ஆனப்பிறகு அவளே தானாக செய்துக் கொள்ளும் வயது வந்தப்பிறகு பார்த்துக்கலாம். அவளுக்கு 5 வயதுதானே ஆகிறது. எதுக்கு இப்பவே ஹீட்டரெல்லாம் வெச்சு முடியை வீணாக்கணும். ஹேர் ட்ரையர், ஹீட்டர் எல்லாமே முடியை பாதிக்கும். அவ முடியை அப்படியே பராமரிச்சா நல்லா இருக்கும். பெரிய பெண்ணாகி அவள் விருப்பப்பட்டா மாத்திக்கட்டும். குழந்தைகளுக்கு எல்லாமே அழகுதான். நீங்க அவ ஹேரை நினைச்சு கவலைப்படாதீங்க.மாறாக அந்த ஹேரில் செய்யக்கூடிய வித விதமான ஹேர் ஸ்டைலை கத்துக்கிட்டு செஞ்சு விடுங்க. இப்படிப்பட்ட ஹேருக்கு பிரெஞ்ச் பிளாட் போட்டு நடுவில் Beads வெச்சா அழகா இருக்கும். பாதி முடி மேலே எடுத்து போனி டெய்ல் மாதிரி போட்டாலும் நன்றாக இருக்கும். கொஞ்சம் ஷார்ட்டா கட் பண்ணி ரெட்டை ஜடை போட்டாலும் நன்றாக இருக்கும். அவ முடி சாப்டா இருக்க கண்டிஷனர் மறக்காம உபயோகிக்க ஆரம்பிங்க. வளைவுகள் குறையும். இப்போதைக்கு ஜான்சன் ஜூனியர் ஷாம்பூ வித் கண்டிஷனர் உபயோகிக்கலாம். இப்போதைக்கு கண்டிஷனர் மட்டும் போதும். அதையும் வேர்க்கால்களில் போடாம முடியில் மட்டும்தான் போடணும். நன்றாக 5 நிமிடம் தேய்த்துவிட்டு பிறகு தண்ணீரில் அலசுங்க. ரொம்ப நீளமா வளர்க்காம அப்பப்ப முடியை ட்ரிம் பண்ணிவிட்டீங்கன்னா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும்.
BABY CARE
நான் புதிதாக இணைந்துள்ளேன்.உங்கள் மகளுக்கு கஸ்தூரி மஞ்சள் சிறந்ததே.ஆனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.அதனுடன் பயத்த மாவையும் சேர்த்து குளிப்பாட்டுங்கள்.
ஹலோ தேவா
ஹலோ தேவா மேடம்,ரொம்ப நன்றி.இப்போது தான் உங்க பதிவை பார்த்தேன்.னேத்தைக்குஎங்கள் வீட்டில் விசேசம்.என் பையனுக்கு பிறந்தநாள்.கேக் கட் பன்னி கொண்டடினோம்.அதனால தான் நேத்தைக்கு இன்னைக்கு சாயங்காலம் வரை அருசுவை பக்கம் வரமுடியவில்லை.இப்போதான் உங்க பதிவைபார்த்தேன்.னீங்க சொன்னமாதிரியே செய்யரேன்.மிக்க நன்றி
ramba