கோதுமை வெஜ் சாதம்

தேதி: August 1, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சம்பா கோதுமை ரவை - ஒரு கப்
கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
சோளம் - 1/2 கப் (உதிர்த்தது)
குடைமிளகாய் - 1/2 கப் (விதைநீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கீற்று
உப்பு - தேவைக்கேற்ப


 

மேலே கூறியதுப்போல் எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அதில் கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு ,வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீன்ஸ், சோளம், தக்காளி போட்டு ஒரு வதக்கு வதக்கி விடவும்.
ரைஸ் குக்கரில் சம்பா கோதுமை மற்றும் காய்கலவை சேர்த்து 2 1/2கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
கோதுமை வெஜ் சாதத்தை வெளியே எடுத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


இந்த கோதுமை சாதம் பெரியவர்கள், குழந்தைகள் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். நல்ல சத்து நிறைந்த உணவும் இது என்பதால் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி, பூண்டு விழுது, சோயா, பட்டாணி சேர்த்துக்கொள்ள விரும்புவர்களும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் காரத்திற்கு என்று மிளகாய்,மிளகாய்த்தூள் எதுவும் செர்க்கவில்லை. தொட்டுக்கொள்ள எதாவது தேவைபடுமா?