கை மருந்து வகைகள்!

நம் அருசுவையில் பலர் கேட்பது இதுதான் கை மருந்து சொல்லுங்களேன்னு ஆனால் நாம் அதர்க்கு கொடுக்கும் பதில் வெவ்வேறு திரட்டில் கொடுப்பதால் அதையே வேறொருவர் கேட்கும் போது தேடதான் செய்கிறோமே தவிர ஈஸியா அதற்குண்டான திரட்டை சரியாக கொடுக்க முடியவில்லை ஏன்னா எதில் கொடுத்தோம்னு நம்மகே தெரிவதில்லை..அதுதான் காரணம்..எனவே அதற்க்காக ஒரு திரட் திரக்க பல நாட்களாக நினைத்து இப்ப போடுகிறேன் இதில் கை மருந்து(தாய் வைத்தியம்)பற்றி யாருக்காவது எழும் சந்தேகத்தை இதில் கேல்விகளாக கொடுக்கவும்..பதில் தெரிஞ்சதை சொல்லுங்க மற்றவர்களும் ஈஸியா பார்க்கவும் முடியுமே!

முக்கியாமாக அனுபவசாலிகள் தங்களுக்கு தெரிஞ்ச கை வைத்திய முறைகளை இதில் சொல்லுங்க எடுத்துகாட்டாக இருமலுக்கு..காய்ச்சல் கசாயம் செய்யுமுறை இப்படி தலைப்புடன் போடுங்க..இதை படித்தும் பலர் பயனடையலாமே!ஒரு வேண்டுகோள் அப்படி மருந்துகளை சொல்லுபவர்கள் தயவு செய்து எந்த புக்கை பார்த்தும் சொல்ல கூடாது!உங்களின் அனுபவம் அல்லது நமக்கு தெரிஞ்சவர்கள்(பெரியவர்கள்) சொல்லி இருக்கும் அனுப்பவத்தை மட்டுமே சொல்லுங்க!

அன்புடன்..
மர்ழியா..

ஆசியா.. ஸ்வேதா11 .... ... உங்க ரெண்டு பேரோட கைவைத்தியமும் இன்று முதல் செய்து பார்க்கிறேன்.. உங்க உடனடி பதிலுக்கு நன்றி!!!!

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா என்ன ஊருக்கு பொய் இருப்பதா சொன்னங்க வந்தாச்சா.
என்ன பா தொண்டை வலியா காதுக்கு கிழே உள்ளே தொன்டை பகுதியில் ஏதாவது தைலம் தேய்ங்க, சூடா வெண்ணீர் குடித்து கொண்டே இருங்க.
லவஙம், மிளகு பொட்டு கசாயம் போட்டு கற்கண்டு இருந்தா அது சேர்த்து குடிங்க.
ஜலீலா

Jaleelakamal

எப்படி இருக்கீங்க... நான் ஊருக்கெல்லாம் போகலை.. இப்பொ நல்லா பிரீயாதான் இருக்கேன்... சூடா ஹார்லிக்ஸ் தான் சிப் பண்ணிட்டு இருக்கேன்... நீங்க சொல்லுற மாதிரி காதுக்கு கீழே தான் வலிக்குது... நீங்க சொன்ன கஷாயம் இன்று செய்து குடிக்கிறேன்.. கல்கண்டு இல்லைன்ன சர்க்கரை போடலாமா...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆசியா நானும் அப்படிதான் என் பொண்ணுக்கும் எனக்கும் குளிச்சதும் குளோன் வைத்துப்பேன்..

மேனு,இப்ப எல்லாம் போயே போச்சு போயிந்தே இட்ஸ்கான்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இலா கற்கண்டு இல்லை என்றால் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள், வெண்ணீர் உப்பு போட்டு கார்கிலிங் செய்ய்ங்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை.

இலா தேன் பெஸ்ட் பா சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்து கொள்ளுங்கள் தேன் தொண்டை புண்ணுக்கு ரொம்ப நல்லது

ஜலீலா

Jaleelakamal

எனக்கு ஒரு வாரமாவே சாப்பிடுவது நெஞ்சிலேயே இருப்பது போல உள்ளது இதற்கு ஏதாவது கை வைத்தியம் உண்டா? ஏன் இப்படி இருக்கிறது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.

ஹலோ Kavi.s

என்க்கும் சில நேரங்களில் அப்படி இருக்கும். நான் சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்து விடுவேன். சரியாகிவிடும்.

நன்றி ஜெயலஷ்மி
நானும் சீரகத்தை சாப்பிட்டு பார்க்கிறேன்.நீங்க கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே தரலையே?

என்ன கேள்வி பா?

கவி.எஸ்.மல்லி டீ சாப்பிடுங்கள்,அசிடிடி போய்விடும்.இன்று இந்த குறிப்பு கொடுத்துள்ளேன்.

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்