ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் ( பாகம் 11 )

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பத்தாம் பதிப்பு 90 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 11இல் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க..

பிரியத்துடன்,
மர்ழியா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

பத்தாம் பதிப்பு 90 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் 11இல் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... இதில் மட்டும்தானே சின்ன பிள்ளையாட்டம் சண்டை போட விளையாட,ஜாலியா பேச முடியும் வாங்கப்பா வாங்க்கா எல்லோரும் வந்து மனம் விட்டு சிரித்து பேசிட்டு போங்க..

பிரியத்துடன்,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன ,
ஒரே திறப்பு விழா தான் போல.............கலக்கு........ம்ம்ம்ம்.......கலக்கு.......

மர்ழியா அரட்டை ராணி எனப் பட்டம் சூட்டவேண்டும் உங்களுக்கு.

என்னை முந்தைய பாகங்களில் நிறையப்பேர் விசாரித்துள்ளீங்கள்... யாருக்கும் பதில் போடுவேன் யாரை விடுவேன்..? யாரும் கோபித்திட வேண்டாம்....

மொழி... அதிகம் கல்யாணக் கனவு கண்டு பயப்பட வேண்டாம்... அதுதான் காய்ச்சல் வந்ததோ....?

ஹரி ஹாயத்திரி அடிக்கடி அன்போடு விசாரித்திருக்கிறீங்க கேட்க சந்தோசமாக இருக்கு.

ஜயந்திமாமி..... என்னை மன்னிச்சுக்கோங்கோ..... உங்களைக் கேட்காமல் உங்க ஐ டி திருடி பத்திரமா டயரியில் குறிச்சு வைத்துள்ளேன்.... நீங்க சொன்னது சரிதான் மாமி தெரியாத மெயில் வந்தால் ஓபின் பண்ணக்கூடாது... மற்றபடி எம்மை என்ன செய்யப்போகிறார்கள்... இந்த பாழாய்ப்போன வயிரசுக்குத்தான் பயம்.... இருந்தாலும் மனம் கேட்காது எதற்கும் ஒருதடவை ஓபின் பண்ணிப்பார்ப்போமே என நினைக்கும்...

மஹா... நாங்களும் ஆயத்தமாக இருக்கிறோம்... வெள்ளி பகல் 12. முக்காலுக்கு இங்கே தொடங்குகிறது ஒலிம்பிக்ஸ்......

யாரும் பேச வேண்டாம்... ஜூலை 30 ம் திகதி எங்கள் 2 வது மகனின் பிறந்ததினம் அதனால் போனகிழமை முளுவதும் என் கணவரும் லீவு... வீட்டிலும் நிற்கவில்லை... அறுசுவையைப் பார்வையிடக்கூட முடியவில்லை, மஹா அடிக்கடி கேட்டிருந்தீங்க பிறந்தநாளைக்குறிப்பிடும்படி, எனக்கு மனதில் ஒரு பயமாக இருந்தது அதுதான் எதுவும் குறிப்பிடவில்லை, என் மனப்பயத்தை குழந்தைகளின் பிறந்ததின பகுதியில் எழுதுகிறேன்... அது பற்றி நீங்களும் சொல்லுங்கள்.

கதீஜா... எனக்கு எந்த மெயிலும் வரவில்லை உங்களிடமிருந்து..... அதுதான் நீங்கள் கா சொன்னபோது எனக்குப் புரியவில்லை... அதுசரி "கா" என்றால் கோபமா? நான் பார்த்து அப்படித்தான் புரிந்து கொண்டேன். அப்போ நேசம் என்றால் என்ன சொல்ல வேண்டும்?

அஞ்சலி வந்ததுபோல் இருந்தது... காணவில்லை.
தனிஷா சசிகலா... நலம் நலமறிய ஆவல்.

இலா பாவம் உங்கள் கஸ் இப்படிச் செய்யலாமா? நானும் இங்கே நிறைய உங்களைப்போல் ஒழிப்பேன்... அதாவது சொக்கலேற் , சொக்கலேற் பிஸ்கட் இப்படியான இனிப்பு அயிட்டங்கள்... குஞ்செலிகளுக்காக அல்ல பெரிய எலிக்காக..... (அப்பா எலி)...
விஜி... மாமா, மாமி இன்னும் போகவில்லையே... அப்போ இங்கே என்ன அரட்டை .... போய்க்கவனியுங்கப்பா பாவம் அவர்கள்.....

ஹிபா, ஹாசினி, ஸாதிகா அக்கா உங்கள் பேரனின் பிறந்ததினம் எனச் சொன்னது எனக்கு நினைவு இனித்தான் வாழ்த்தப்போகிறேன்..... அறுசுவை ஸ்லோவாக இருப்பதால் திரும்ப பார்க்கவும் முடியவில்லை யாரையெல்லாம் தவற விட்டுவிட்டேனோ தெரியாது... தயவு செய்து மன்னிக்கவும்...பிரதீபா, மேனகா,கவிசிவா, கவியெஸ், ஜானகி,அனைவருக்கும் நலமறிய ஆவல்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கவி.எஸ் வாமிட் அவ்லவா இல்லைப்பா குமட்டல்..மயக்கம் இப்படி இருக்கு கொஞ்சநாளா இல்லாம இருந்தது நேற்றில் இருந்து ரிட்டன் வந்து இருக்கு இன்று பரவா இல்லை..கண்டிப்பாக சொல்கிறேன் என் பொண்ணிடம்..நான் த்னியா இருகேன்ப்பா எனக்கு தனிமை சுத்தமா பிடிக்காது கலகல்லப்பாக இருந்தவள் அதனால்தான் கொஞ்சம் என்னால் முடியும் டைம் வந்துட்டு போறேன் அருசுவை தனிமையை மறக்கடிக்குமே அதுக்காகதான்!

சசிகலா ஹாய்ப்பா ஆமாப்ப அவளை ப்ர்றிதான் இப்ப எனக்கு கவலை யாராவது ந்ல்ல வலி சொன்னாதான் உண்டு..எல்லோரும் எங்கேப்பா போனீங்க ஜெ.மாமி,சாதிகா சேச்சி,விஜி,அதிரா,காயு இன்னும் அனைவரும் எங்கே போனீங்க கொஞ்சம் பதில் போடுங்க இரண்டாம் குழந்தைன்ன த்ரட்டில்

ஆமாம் தனிஷஅ அங்குதான் பெற்றேன்

சரண்யா சும்மாதான் சொன்னேன் பீல் செய்யாதீங்க..ஏட் செதுடறேன் பிராப்லம் இல்லை ஆனா ஆன்லைனில் கிடைக்க மாட்டேன் பலர் என்னை வாழ்த்திட்டே இருக்காங்க ஏன் வரலன்னு அந்த லிஸ்ட்டில் உங்களையும் சேர்கவான்னுதான் யோசனை :-
தினம் ஒரு தகவல் போல ஆகிட்டு தினம் ஒரு திட்டு மெச்சேஞரை ஓப்பன் செய்தாலே!

சிஜா எனக்கு ஒரு எர்ஸிபி தெரியும் ஆனா டூ லேட் சோ ஏதாவது செது இருப்பீங்களே?

அதிரா என்னப்பா ஆளையே கானோம்?

ஜெ.மாமி. என்னா ஆயிற்று ஆளை கானோம்?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி நீங்க,மரியம்,குட்டி பேபி எல்லோரும் எப்படி இருக்கிங்க.என்னை அன்போடு விசாரித்திருக்கீங்க.ரொம்ப தேங்க்ஸ்ப்பா.என் பொண்ணு என்னை நல்லாவே உதைக்கிறாப்பா.என்னால் இப்போது அடிக்கடி பதிவு போட முடியல.உங்களை மாதிரி நானும் பார்த்து விட்டு போகிரேன்.இப்போதெல்லாம் வேலையே செய்ய முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு.நல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க மர்ழி.
அதிரா எப்படி இருக்கிங்க,உங்க வாண்டுகளும் நலமா?
மஹா,யுவன் எப்படி இருக்கிங்க.ஊருக்கு போவதில் பிஸியா?
மொழி மணிமொழி எங்கெ ஆளே காணேம்,கலர் கனவுகளா?
ஜெ மாமி ஐ டி கொடுத்தா மட்டும் போதாது ஆட் பண்ணுங்க சீக்கிரமா.எப்படி இருக்கிங்க?
மற்றும் சசிகலா,ப்ரதீபா,5லி,காயத்திரி,விஜி,ரஜினி,தனிஷா,கவி.எஸ்,கவிசிவா,ஹர்ஷினி,கதீஜாக்கா,ஆசியா,மணிமேகலை,ஷாதிகாக்கா,ரமணி.கா,ரமணி.எஸ்,இலா
,பெயர் விடுபட்ட அனைத்து தோழிகளும் எப்படி இருக்கிங்க?

ஹலோ மேனகா,

வாழ்த்துக்கள். வரப்போகும் குட்டி வரவுக்கும். நான் US -ல் இருக்கிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை ஏழு மாத்ங்களாகிறது. பெயர் செல்வ இலக்யா. உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நன்றாக நடைப்பயிற்சி செய்யுங்கள்.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

நீங்களும் உங்க குட்டி பொண்ணும் நலமா?உங்க பெண் பெயர் நன்றாக இருக்கு.நான் பிரான்சில் இருக்கேன்பா.நான் தினமும் வாக்கிங் போவேன்.உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய பெயரில் எனக்கு ஒரு அக்கா (பெரியம்மா பெண்)இருக்காங்க.

ஹாய் மஹா நான் நலமே.நீங்க,யுவன் நலமா?பரவாயில்லை மஹா எனக்கும் சாட் பண்ண டைம் கிடைக்கமாட்டிக்குது.அதனால உங்களுக்கு டைம் கிடைக்கும் போது மெயில் பன்னுங்க.ஊருக்கு நல்லபடியா போய் ஜாலியா இருந்துட்டு வாங்க.
ஹாய் ஜெமாமி நலமா?உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க.கண்டிப்பா நானும்,காயத்ரியும் ஒரு நாள் உங்க ரெண்டு பக்கமும் நின்னு போங்க மாமினு சொல்லுவோம் பாருங்க நிஜத்தில்.
ஹாய் மர்ழி நலமா?மரியம் இப்ப எப்படி இருக்கா?ஒழுங்கா ஸ்கூல் போறாளா?இன்னொரு ஜீவன் வரப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்காளா?மர்ழியா காயத்ரி ஐடி உங்ககிட்ட இல்லையா பரவாயில்லை.
ஹாய் மொழி நலமா?எங்க ஆளை காணோம் மறுபடியும் கல்யாண பர்சேஸா?இல்ல உடம்பு சரியில்லையா?
ஹாய் விஜி நான் நலமே?நீங்க?என்னப்பா உங்களை மறக்கமுடியுமா?உங்களுக்கு முடியும் பொழுது மெயில் பண்ணுங்க.
ஹாய் மேனகா நலமா?கண்டிப்பா ப்ரான்ஸ் வந்தா உங்க வீட்டுக்கு வருவோம்.உங்க வாழ்த்துக்கும் நன்றிப்பா.யாராவது உங்க வீட்டிலிருந்து வந்திருக்கிறார்களா உங்க பிரசவத்திற்கு துணைக்கு?நல்லபடியா உங்களுக்கு குழந்தை பிறக்க நான் ஆண்டவை வேண்டுகிறேன்.
ஹாய் ஹாஷினி நலமா?உங்க கணவரும் அப்படியா கூப்பிடறார்?உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா.ஹர்ஷினி எப்படி இருக்கா?
ஹாய் ஜானு நலமா?வேலை எப்படி போகுது?
ஹாய் ரமணி.க நான் நலமே.நீங்க?
ஸாதிகா அக்கா நலமா?நான் நலமே.ஓ நீங்க பாக்கலையா என் பதிவை பரவாயில்லை.
காயத்ரி நலமா?என்னோட ஐடி உங்களுக்கு கிடைத்ததா?இல்லை என்றால் இது தான் என் ஐடி pradeebala@yahoo.co.uk மெயில் பண்ணுங்க
ஹாய் சரண்யா நலமா?உங்க கணவர் பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள்?
ஹாய் தனிஷா நலமா?உங்க குழந்தை நலமா?உங்க தோழிகள் பற்றிய பதிவை படித்தேன் ரொம்ப நல்ல ப்ரண்ட்ஸ் உங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள்.உங்கள் நட்பு தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
ஹாய் சசிகலா நலமா?உங்க பொண்ணு வர்ஷா எப்படி இருக்கா?சசி நல்லபடியா ஊருக்கு போய் ஜாலியா இருந்துட்டு வாங்க.
ஹாய் சிஜா நலமா?என்னப்பா பழைய சாதத்தில் புது ரெசிபி செய்தீர்களா?என்ன செய்தீர்கள் என்றால் எங்களுக்கும் உதவியாக இருக்கும்.
ஹாய் கவி நலமா?ஈஷ்வர் எப்படி இருக்கான்?
கவி.எஸ் நலமா?உங்க கணவருடன் நீங்க போகலையா ஊருக்கு?
ஹாய் கவிசிவா நலமா?
ஹாய் ஜலிலா அக்கா ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?எப்படி இருந்தது இந்தியா டிரிப்?வாங்க மறுபடியும் வந்து எங்களோட அரட்டையில் கலந்துக்கங்க.
ஹாய் மணிமேகலை நலமா?உங்க பொண்ணு செல்வ இலக்கியா நலமா?
ஹாய் அதிரா நான் நலமே.நீங்க?என்னப்பா பசங்க லீவ் முடியற வரை நீங்களும் அறுசுவைக்கு லீவா?இப்பல்லாம் ரொம்ப வரதேயில்லை.
ஹாய் ரஜினி நலமா?ஊருக்கு போயிட்டு வந்தாச்சா?பயணகலைப்பு டயர்டா இருப்பீங்க முடியும் பொழுது வாங்க வந்து எப்படி இருந்தது டிரிப் என்று சொல்லுங்க
வேற யார் பெயராவது விட்டு போயிருந்தால் அவர்களுக்கும் ஒரு ஹாய்.
அன்புடன் பிரதீபா

என்ன யாரையும் காணும் எங்க போய்ட்டீங்க எல்லாரும்? எப்படி இருக்கீங்க?

மர்ழி எப்படி இருக்கீங்க? how is ur health? மரியம் எப்படி இப்போ நீங்க எதையும் நினைத்து குழப்பிக்காதீங்க? ஆனா அவளுக்கு கூட ஒரு பாப்பா வரபோகுது அத நீ தான் நல்லா பாத்துக்கனும் அப்படினு சொல்லி பழக்குங்க. நீ அக்கா பெரியவ அப்படியெல்லாம் சொல்லுங்க. நான் த்ரெட்டில் போடுறேன் அப்பறம்.

மஹா ஹாய் யுவன்ராஜ் எப்படி இருக்கார்? இந்தியா பயணம் எவ்வளவு தூரத்தில் இருக்கு?
சரண்யா எப்படி இருக்கீங்க முன்பு போல இப்ப இங்க வர்றீங்க போல?
தனிஷா எப்படி இருக்கீங்க? உங்க குட்டீஸ் அப்சரா எப்படி இருக்கா என்ன பேரு கரைக்டா சொன்னேனா?

மேனகா எப்படி இருக்கீங்க? உங்கள் குள்ளும் ஒரு ஜீவன் வளருதா ரொம்ப சந்தோஷம் மேனகா,

சசி என்ன நீங்களும் ஊருக்கு கிளம்புரீங்களா? ஓகே இந்தியா கலட்ட போகுது.

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீங்க சந்தியா, srinath எப்படி இருக்காங்க உங்க பெருமாள் எப்படி இருக்காங்க? எங்க போய்ட்டீங்க ஆளை காணும். நீங்களும் ப்ரண்டிஷிப் த்ரெட்டில் எழுதுங்க மாமி உங்க golden friendship பற்றி

மொழிய ஆளையே காணும்? கொஞ்சம் வந்துட்டு போங்க மொழி

ஹாய் தனிஷா எப்படி இருக்கீங்க குழந்தை எப்படி இருக்கா? உங்க அரட்டை திரெட்டில் உங்க ப்ரண்ஷிப் பற்றி படித்தேன் ரொம்ப டச்சிங். நானும் எழுதனும் தோ வந்துட்டேன்.

ப்ரதீபா ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க பா. நான் கூட எழுதனும். same pinch நானும் எல்லார் கூடையும் சீக்கிரம் பேசிடுவேன். எனக்கும் நிறைய ப்ரண்ட்ஸ். நீங்க எங்க படிச்சீங்க சொல்ல முடியுமா? இல்ல எனக்கும் காயத்ரின்னு ஒரு ப்ரண்ட் இருந்தா அவளோட ப்ரண்ட் பேரு தீபா தான் ஒரு வேலைந் நீங்க அந்த தீபாவான்னு தெரிஞ்சுக்க தான் கேட்டென். நான் உங்க மெயில் ஐடி எடுத்துக்கிட்டேன் இனி நீங்க அவ்வளவு தான்

கதீஜா என்ன ஊருக்கு ஆகியாச்சா? இன்சாப் எப்படி இருக்கார்.

ஹே... அதிரா வந்தாச்சு என்ன அதிரா எப்படி இருக்கீங்க குட்டி பசங்க எப்படி இருக்காங்க உங்க அழகு தமிழ் கேட்டு ரொம்ப நாள் ஆகுது.

விஜி சூப்பர் த்ரெட் ஆரம்பிச்சி இருக்கீங்க உடம்பு எப்படி சுகமா?

ஹாய் சரண்யா எப்படி இருக்கீங்க உங்க ஹஸ் பிறந்த நாள் எப்படி கொண்டாடினீங்க? என்ன சர்ப்ரைஸ் கொடுத்தீங்க?

ஹாய் ஹா ஹா ஹாசினி நலமா?

ஹாய் கவி இது தான் முதல் முறை உங்ககிட்ட பேசுறேன் எப்படி இரூக்கீங்க எங்க இருக்கீங்க?

ஹாய் ரஜினி எப்படி இருக்கீங்க என்ன இந்தியாவுல செட்டிலா நீங்க? அங்க உள்ளவங்கள விட்டு பிரிய மனசில்லையா

ஹாய் பிரதீபா நலமா?உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா.பிரதி உங்களுக்கு குழந்தை இருக்கா? பிரதி நானும் உங்க Id நோட்பண்ணிக் கொண்டேன். உங்களுக்கு மெயில் பண்ணலாமா?

ஹாய் ஜெமாமி நலமா நான் மற்றும் குட்டி நலம். இன்னைக்குதான் உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என இருக்கிறேன்.

அஞ்சலி என்ன உங்களை ஆளையே காணோம்? சிவராஜ் ரொம்ப சேட்டையா

அனு என்ன ஆச்சு இந்த பக்கமே எட்டி பார்க்கல?
மஹா நலமா? யுவன் எப்படி இருக்கார். உங்களை 2 நாளா காணோமே.உங்களுடய நீண்ட ப்திவை பார்க்க ஆவல். யுவன் ரொம்ப படுத்துறானா? அப்fரா நடக்கிறா.

ஸாதிகா அக்கா நலமா? உங்க பதிவில் பார்த்தேன் நீங்க ஜப்பானில் இருப்பதை தெரிந்து கொண்டேன். உங்களுடய சைனிஸ் ஸ்பிரிங் ரோல் செய்தேன். ரொம்ப நல்லா இருந்த்து.

ஹாய் சசி நலமா?உங்க பொண்ணு வர்ஷா எப்படி இருக்கா?சசி சார்ஜா ஏர்போட்டா? அபுதாபி ஏர்போட் என்றால் வந்து இருப்பேன். நல்லபடியா ஊருக்கு போய் ஜாலியா இருந்துட்டு வாங்க

கவி.எஸ் நலமா?உங்க கணவருடன் நீங்க சேலம் போகலையா ?
ஹாய் கவிசிவா நலமா? என்ன ரிப்ளே கொடுக்க மாட்டீங்களா

ஹாய் அதிரா நான் நலமே.நீங்க நலமா? உங்களை அறுசுவையில் காணோமே?

ஹாய் சரண்யா நலமா? என்னுடைய மெயில் கிடைத்ததா? காயத்ரி நலமா

ஹாய் விஜி நான் நலம்? நீங்க நலமா? உங்களுடைய ப்ரெண்ட் த்ரெட்டில் என்னுடைய ப்ரெண்ட் பற்றி கூறியுள்ளேன் பார்த்தீர்களா?

ஹாய் சிஜா நலமா?என்னப்பா பழைய சாதத்தில் ஆப்பத்திற்கு போட்டீர்களா? இல்லையா எந்த பதிலும் இல்லையே

ஹாய் மேனகா நலமா? செக்க்ப் ஒழுங்கா போரீங்களா? நல்ல சாப்பிடுங்க. ஓவர் வெயிட் போட்டுராம் பார்த்துக்கோங்க.

ஷகிலா பானு நலமா. ஹஸ் உம்ரா பண்ணிட்டு வந்தாச்சா? நீங்களும் ஸ்கேன் பார்த்தாச்சா

ஜானகி நலமா? நீங்க வேலையில் பிஸியாக இருக்கீங்க போல?

ஹரிகாயத்திரி நலமா. மற்றும் பெயர் விடுபட்ட அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்