சவால்.. நீங்க ரெடியா?

வாருங்கள் தோழிகளே (தோழர்களே)..
எல்லாரும் சுதந்திர தினத்தை சந்தோசமா கொண்டாடி இருப்பீங்கன்னு நம்புறேன். இப்ப இங்க வந்து என் சவால்ல கலந்துக்கிட்டு உங்க திறமையை நிருபியுங்க பார்க்கலாம்.

"கும்பகோணத்தில் குடியிருக்கும் குடிகார குப்புசாமி குடித்துவிட்டு, குறும்புத்தனமாய் குரங்கை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குரங்கு குபீரென குளத்தில் குதிக்க, குளமே குழம்பியது."

இந்த மாதிரி ஒரே எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைகளை வச்சு பெரிய லைன் குடுக்கணும். வேற எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைகள் எதுவும் நடுவுல வரக்கூடாது. ரொம்ப முக்கியமா படிச்சா அதுக்கு மீனிங் இருக்கணும். எதாவது சம்பந்தம் இல்லாமல் வார்த்தையெல்லாம் சேர்க்கக்கூடாது. யார் அதிக வார்த்தைகள் யூஸ் பண்ணி பெரிய வாக்கியம் கொடுக்குறாங்கன்னு பார்க்கலாம். தேவைன்னா எப்ப வேணும்னாலும் நடுவில வார்த்தைகளை சேர்த்துக்கலாம். என்ன ரெடியா? வாங்க கலக்குங்க.

தீபா அருண்குமார்

திருமதி. தீபா அருண்குமார் அவர்கள் மேலே உள்ள பதிவை பின்னூட்டம் மூலம் அனுப்பி வெளியிடலாமா என்று கேட்டிருந்தார். நன்றாக இருந்ததால் சில மாற்றங்கள் மட்டும் செய்து அதனை நானே அவர் பெயரில் சேர்த்துவிட்டேன்.

அவர் கொடுத்திருக்கும் தொடர் வாக்கியத்தில் என் பங்கிற்கு ஒரு சிறிய சேர்க்கை,

கும்பகோணத்தில் குடியிருக்கும் குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தி, குடித்துவிட்டு குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து கும்மாளமிட, குளமே குழம்பியது.

16 வார்த்தைகளை 23 ஆக்கியாச்சு.. இன்னும்கூட சேர்க்கலாம் போல இருக்கு.

ஹாய்,
என் பங்கிற்கு நானும் கொஞ்சம் இதை நீட்டி இருக்கிறேன். 23 வார்த்தைகளை 35 ஆக்கியாச்சு. அடுத்து யார் வர்றா?.

கும்பகோணத்தின் குறுக்குச்சந்தில் குட்டிக் குடிலில் குடியும் குடித்தனமுமாய் குடியிருக்கும் குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தி, குடித்துவிட்டு குறுக்குப்புத்தியுடன் குமரிகளிடம் குசும்பும், குழந்தைகளை குட்டியும் குழப்பி, குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து குருதியுடன் கும்மாளமிட, குளமே குளம்பியது.
Rajini

நான் அனுப்பிய டாப்பிக்கை சரி செய்து போட்டதற்கு ரொம்ப நன்றி பாபு அண்ணா. எப்படி அண்ணா இதலாம் நா 16 வார்த்தைகள் கொடுத்தேன். அதை விட அதிகமாக 7 வார்த்தைகள் சேர்த்துவிட்டீர்கள் சூப்பர் அண்ணா. இப்போது ரஜினி 35 வார்த்தைகள் கொடுத்திருக்கிறார்கள் சூப்பர்... அண்ணனைவிட 12 வார்த்தைகள் அதிகம் சேர்த்து சவாலில் முன் நிலையில் இருக்கும் ரஜினிக்கு எனது வாழ்த்துகள். அறுசுவை தோழிகள் அனைவரும் அண்ணன் மற்றும் ரஜினிக்கு ஒரு ஓ போடுங்கப்பா:-)
அறுசுவை தோழிகளே வாங்க வாங்க உங்க பங்குக்கு நீங்களும் வந்து போடுங்க.

தீபா அருண்குமார்

கும்பகோணத்தின் குறுக்குச்சந்தில் குட்டிக் குடிலில் குடியும் குடித்தனமுமாய் குடியிருக்கும் குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தி, குடித்துவிட்டு குறுக்குப்புத்தியுடன் குமரிகளிடம் குசும்பும், குழந்தைகளை குட்டியும் குழப்பி, குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து குருதியுடன் கும்மாளமிட, குளமே குளம்பியதைக்கண்டு குளக்கரையில் குந்தியிருந்து கும்மாளமிட்டு குதூகலித்த குட்டிக் குழந்தைகளை (குரங்குகளை) கும்கும்மென்று கும்மினார் குரும்பூர் குமாரசாமி.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

தீபா சூப்பர் interestimg த்ரெட்,

கும்பகோணத்தின் குறுக்குச்சந்தில் குட்டிக் குடிலில் குடியும் குடித்தனத்துடன் கும்மாளமாய் குடியிருக்கும் குண்டு குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தி, குடித்துவிட்டு குறுக்குப்புத்தியுடன் குமரிகளிடம் குசும்பும், குழந்தைகளை குட்டியும் குழப்பி, குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து குருதியுடன் கும்மாளமிட, குளமே குளம்பியதைக்கண்டு குளக்கரையில் குந்தியிருந்து கும்மாளமிட்டு குதூகலித்த குட்டிக் குழந்தைகளை (குரங்குகளை) கும்கும்மென்று கும்மினார் குரும்பூர் குமாரசாமி. கும்மியதை குழுமியிருந்த குழந்தைகள் கும்மாளத்துடன் குதுக்களித்தனர்.

இதை இப்படியே யாராவது தொடருங்கோ.................
ப்ரண்ட்ஸ்

கும்பகோணத்தின் குறுக்குச்சந்தில் குட்டிக் குடிலில் குடியும் குடித்தனமுமாய் குடியிருக்கும் குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தியும், குடவாசல் குண்டுப்பையன் குமரிமுத்துவும், குடித்துவிட்டு குறுக்குப்புத்தியுடன் குமரிகளிடம் குசும்பும், குழந்தைகளை குட்டியும் குழப்பி, குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குருட்டுக் குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து குருதியுடன் கும்மாளமிட, குளமே குழம்பியதைக்கண்டு குளக்கரையில் குந்தியிருந்து கும்மாளமிட்டு குதூகலித்த குட்டிக் குழந்தைகளை (குரங்குகளை) கும்கும்மென்று கும்மிய குரும்பூர் குமாரசாமியும் குஷியாகி குந்தியிருந்த குருட்டுக் குரங்கையும் குண்டூசியால் குத்த, குத்துப்பட்ட குருட்டுக் குரங்கும் குபீரென குளத்தில் குதித்து கும்மாளமிட குளம் குழம்பாகியது.

கும்பகோணத்தின் குறுக்குச்சந்தில் குட்டிக் குடிலில் குடியும் குடித்தனமுமாய் குடியிருக்கும் குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தியும், குடவாசல் குண்டுப்பையன் குமரிமுத்துவும், குடித்துவிட்டு குறுக்குப்புத்தியுடன் குமரிகளிடம் குசும்பும், குழந்தைகளை குட்டியும் குழப்பி, குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குருட்டுக் குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து குருதியுடன் கும்மாளமிட, குளமே குளம்பியதைக்கண்டு குளக்கரையில் குந்தியிருந்து கும்மாளமிட்டு குதூகலித்த குட்டிக் குழந்தைகளை (குரங்குகளை) கும்கும்மென்று கும்மிய குரும்பூர் குமாரசாமியும் குஷியாகி குந்தியிருந்த குருட்டுக் குரங்கையும் குண்டூசியால் குத்த, குத்துப்பட்ட குருட்டுக் குரங்கும் குபீரென குளத்தில் குதித்து கும்மாளமிட குளம்பின குளம் குழம்ப குளத்துக்குக் குழுவாகக் குளிக்கவந்த குந்தளா, குசலா, குமுதா, குமாரி, குணா, குழம்பி, குட்டிக் குழந்தைகளுடன் கும்மியாட, குரங்குகள் குதித்தோட, குடிகாரர்கள் குமரிமுத்துவும், குப்புசாமியும், குப்புறவிழ, குறும்புக் குரங்குகள் குதித்தோடின.

வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

அக்காவ்.. கலக்குறீங்க.. :-0

அதுசரி, நான் குழம்பியதை குளம்பியதுன்னு தப்பா போட்டு இருக்கேன். யாருமே திருத்தலையே..

கும்பகோணத்தின் குறுக்குச்சந்தில் குட்டிக் குடிலில் குடியும் குடித்தனமுமாய் குடியிருக்கும் குமாஸ்தா குப்புசாமியின் குமாரன் குடிகார குருமூர்த்தியும், குடவாசல் குண்டுப்பையன் குமரிமுத்துவும், குடித்துவிட்டு குறுக்குப்புத்தியுடன் குமரிகளிடம் குசும்பும், குழந்தைகளை குட்டியும் குழப்பி, குறும்புத்தனமாய், குளக்கரையில் குந்தியிருந்த குருட்டுக் குரங்கின் குட்டியை குச்சியால் குத்த, குத்துப்பட்ட குட்டிக்குரங்கு குபீரென குளத்தில் குதித்து குருதியுடன் கும்மாளமிட, குளமே குளம்பியதைக்கண்டு குளக்கரையில் குந்தியிருந்து கும்மாளமிட்டு குதூகலித்த குட்டிக் குழந்தைகளை (குரங்குகளை) கும்கும்மென்று கும்மிய குரும்பூர் குமாரசாமியும் குஷியாகி குந்தியிருந்த குருட்டுக் குரங்கையும் குண்டூசியால் குத்த, குத்துப்பட்ட குருட்டுக் குரங்கும் குபீரென குளத்தில் குதித்து கும்மாளமிட குழம்பின குளம் குழம்ப குளத்துக்குக் குழுவாகக் குளிக்கவந்த குந்தளா, குசலா, குமுதா, குமாரி, குணா, குழம்பி, குட்டிக் குழந்தைகளுடன் கும்மியாட, குரங்குகள் குதித்தோட, குடிகாரர்கள் குமரிமுத்துவும், குப்புசாமியும், குப்புறவிழ, குறும்புக் குரங்குகள் குதித்தோட குளிக்கவந்த குமரிகள் குளிக்கவராத குஷ்பூவை குசலம்விசாரிக்க குதித்தோடினர்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

தீபா சூப்பர் திரட் ஆரம்பித்து எனக்கு வயிற்று வலியை ஏற்படுத்திவிட்டார்.சிரித்துசிரித்துதான்.இத்தனை நாள் தலையை காட்டாத அட்மின் கூட இந்த திரட்டை பார்த்ததும் ஆவலாகி பதிவு போட்டுவிட்டரே...?
ஜெயந்திமாமி..போதும் இந்த கு கு கு .வேறு எதாவது எழுத்தில் ஆரம்பியுங்களேன்.அட்மின் தம்பி கூட இந்த ஆட்டத்திற்கு வரவில்லை என ஜகா வாங்கி விட்டார்.நீங்கள் கு வை விடமாட்டீர்கள் போல் இருக்கிறது.வேறு எழுத்தில் .
ஆரம்பியுங்கள்.நானும் தொடர்கின்றேன்
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்