புருவத்துக்கு ட்ரெடிங்...... தேவா மேம்!!

தேவா மேம் எப்படி இருக்கிங்க?உங்களிடம் பேசுவது இதான் முதல் முறை. உங்க குறிப்புகள் அனைத்து படித்திருக்கேன்,சூப்பர்.எனக்கு வீட்டிலேயே புருவத்துக்கு ட்ரெட்டிங் செய்யனும் ஆசை,முடியுமா?அப்படி செய்யாலாம் என்றால் எப்படி செய்வது என்று விளக்கவும்.உங்கள் பதிலுக்கு காத்திருக்கேன்.நேரம் கிடைக்கும்போது பதில் தரவும் மேம்.

ஹாய் மேனகா, உங்கள் பாராட்டுக்கு நன்றி. வீட்டிலேயே த்ரெட்டிங் செஞ்சுக்கறது பெரிய கஷ்டமான விஷயமே இல்லை. ஆனால் போட்டோஸ் இல்லாமல் என்னால் அதனை தெளிவாக விளக்க முடியும்னு தோணலை. இப்போது முடிந்தவரை சொல்கிறேன். உங்களுக்கு புரியாவிட்டால் விரைவில் போட்டோவுடன் விளக்கமாக சொல்கிறேன்.

வீட்டிலேயே த்ரெட்டிங் செய்ய பவுடர் சிறிது, தரமான நூல், ஒரு ஐப்ரோ பிரஷ் அல்லது சீப்பு மட்டுமே தேவை. கடைகளில் நூல் வாங்கும்போது த்ரெட்டிங் செய்ய என்று கேட்டுப் பாருங்கள். வெளி நாடுகளில் என்றால் திக்காக ஜப்பான் த்ரெட் கிடைக்கும். அதனைப் பயன்படுத்தலாம். த்ரெட்டிங் செய்யும் முன் முகத்தை கழுவாதீர்கள். முகம் ஈரமில்லாமல் உலர்ந்து இருக்க வேண்டும். மாய்ச்சுரைசிங் லோஷனும் போடாதீர்கள். த்ரெட்டிங் செய்யும் இடங்களில் முதலில் பவுடரை தடவுங்கள். 20 செ.மீ அளவுள்ள நூலை கட் செய்யுங்கள். அதன் இரண்டு நுனிகளையும் முடிச்சு போடுங்கள். இப்போது உங்கள் கைகளில் நூல், லூப் (ரப்பர் பேண்ட் போல) போல இருக்கும். இரண்டு கைகளில் கட்டை விரலையும் சுண்டு விரலையும் அதனுள் நுழைத்து ஒரு கையை மட்டும் 3 முறை சுற்றுங்கள். இப்போது நூல் நடுவில் ட்விஸ்ட் செய்ததுபோல் ஆகிவிடும். முடி உள்ள இடத்தில் அந்த நூலை வைத்து ஒரு கையில் உள்ள சுண்டு விரலையும், கட்டை விரலையும் ஓன்றை ஒன்று தொடுமாறு செய்து பிறகு விலக்கினால் நடுவில் உள்ள நூல் முறுக்கு, முடியிருக்கும் ஓரத்திற்கு சென்று, முடி த்ரெட்டில் மாட்டில் கொண்டு வந்துவிடும். இப்படியே எல்லா இடங்களிலும் செய்யலாம். அடுத்தவருக்கு செய்யும்போது மிகவும் எளிதாக இருக்கும். முதலில் பழக காலில் செய்துப் பாருங்கள்.
இதைப் படிக்கும்போது கஷ்டம் போலவும், குழப்பமாகவும் இருக்கலாம். நேரிலோ, போட்டோ செய்முறை விளக்கத்திலேயோ பார்த்தால் இவ்வளவுதானா என்று தோன்றும். விரைவில் நீங்கள் அறுசுவையில் அதனைப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

ஹலோ தேவா மேம் எப்படி இருக்கிங்க?இப்போ தான் உங்க பதிவைப்பார்த்தேன்.எனக்கு நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு.உடனே பதில் தந்தமைக்கு ரொம்ப நன்றி மேம்.உங்க குறிப்பு எனக்கு கொஞ்சம் புரிந்தது,நானும் பார்லரில் பார்த்து இருக்கேன்.இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி முதலில் காலில் செய்து பார்க்கிரேன்.
மேம் நீங்க சொன்ன மாதிரி போட்டோ பார்த்தால் மேலும் எனக்கு நன்கு புரியுமென நினைக்கிரேன்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது போட்டோ அனுப்புங்கள்,எதிர்ப்பார்க்கிரேன்.
மிக்க நன்றி மேம்,எனக்கு ரொம்ப நாளாக இந்த சந்தேகம்,கேட்க தயக்கமாக இருந்தது.
சீப்பு நாம்தலைவாரும் சீப்பா?நானும் பிரான்சில் தான் இருக்கேன் மேம்.

தேவா மேடம்,
த்ரெஅடிங் செய்வது பற்றீ அழகாக சொன்னீர்கள்.கொஞ்சம் கஷ்டம் தான்.இருந்தாலும் ட்ர்ய் பன்னுகிறேன்.வேறூ வழி சொலுங்கள்

see this link

http://www.videojug.com/film/how-to-create-a-threading-instrument-to-remove-hair

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

வணக்கம் தேவா மேடம். நான் இப்பதான் அருசுவைக்கு வரேன். ப்ரெக்னன்ட் ஆக இருகும்பொது எபிலேட்டர் யூஸ் பண்ணீயும் ஹைர் ரிமூவ் பண்ணக் கூடாதா?எனக்கு பதில் சொல்லுஙலேன் யாராவது please...

உங்க எல்லா அழகு குறிப்புகளும் அருமை.எனக்கு ஒரு டவுட். முகத்தில் சில இடங்களில் சின்ன கருப்பு புள்ளி போல இருக்கும் இது ப்யூட்ஷியன் இதை எரித்து எடுக்கிறார்கள்.இதற்க்கு பேர் வார்ட்ஸ் என்று சொல்கிறார்கள். அந்த இடம் இரண்டு நாட்களுக்கு மார்க்ஸ் இரூக்கும் அதன் பிறகு அது நார்மல் கலருக்கு வருகிறது. இதை வராமல் தடுக்க அல்லது வீட்டில் ஏதாவது நம்மால் செய்யமுடியுமா எதாவது வழி சொல்லுங்க.
நிங்க எப்படி இவ்வளவு அழகாக எல்லா அழகு சம்பந்தமான கேள்விகளூக்கு பதில் சொல்றிங்க நிங்க எதாவது ப்யூட்டி கோர்ஸ் எடுத்து இருக்கிங்களா?
சரி இது பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்க டைம் கிடைக்கும் போது, ஆனால் போடாமல் மட்டும் இருக்காதிங்க நான் உங்க பதிவுக்காக வெயிட்டிங். அட்வான்ஸா நன்றி தேவா.

ஹாய் விஜி, எப்படி இருக்கீங்க? நீங்க சொன்ன வார்ட்ஸ் வராமல் தடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வைத்தியம் துன்னுத்தி பச்சிலை சாறு. ஆங்கிலத்தில் Basil Leaves என்று சொல்வார்கள். தாய்லாந்து உணவுகளில் நம்ம ஊர் கருவேப்பிலை மாதிரி உபயோகிப்பார்கள். இதன் சாற்றை தினமும் தடவி வந்தால் மரு வருவது குறையும். இந்த செடி நிறைய இடங்களில், கோயில்களில் கூட வளர்ப்பார்கள். விதைகளும் கிடைக்கின்றன. இது துளசி செடி வகையை சேர்ந்தது. துன்னுத்திப் பச்சிலையுடன், துளசி சாறும் சேர்த்து உபயோகிக்கலாம். ஆனால் சரும நிறம் குறையும். வெண்மையான சருமத்திற்கு உபயோகிக்கலாம்.

என் தம்பிக்கு இப்படி ஒரு முறை கைகளில் வந்த பொழுது ஸ்கின் டாக்டரிடம் கன்சல்ட் செய்ததில் அவர் ஒரு மருந்து ப்ரிஸ்க்ரைப் செய்தார். அந்த மருந்து மேலும் மருக்களை பரவ விடாமல் செய்தது. நீங்கள் ஸ்கின் டாக்டரை சென்று பார்ப்பதும் நல்லது.

நான் அழகுக்குறிப்பு எழுதுவது, அன்றாடம் நாம் செய்துக் கொள்ளக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் தான். இது வீட்டில் அனைவருக்கும் செய்து பார்த்து கற்றுக்கொண்டது. ஒரு ஆர்வம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் இதில் எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லை. நன்றாக தெரிந்த விஷயங்களை, உபயோகித்து அதன் மூலம் கற்றுக் கொண்டதை எழுதுகிறேன். அவ்வளவே. ப்யூட்டி கோர்ஸ் எதுவும் செய்யவில்லை. குடும்பத்தில் உள்ளவங்களுக்கு ஹேர் கட், மெனிக்யூர், பெடிக்யூர், ஹேர் கேர், Foot care, த்ரெட்டிங், ப்ளிச்சிங், பேஷியல், மேக்கப் போன்ற அடிப்படை விஷயங்களை செய்து பழகிக்கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம். சொல்லப் போனால் எங்கேயோ படிச்சதை எழுதுவதைக் காட்டிலும் செய்துப் பார்த்ததை எழுதினால் என்னால் விளக்கமாக எழுத முடியும் இல்லியா. அதனால்தான் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதாக இருக்கிறது. இதில் எனக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றது. யாருமே நீட்டா, பளிச்சுன்னா இருந்தா அழகுதானே. இதைப் பற்றி நிறைய எழுதணும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

ஹாய் தேவா,

மீண்டும் அறுசுவைக்கு ஆஜர் ஆகி உள்ளீர்கள்... சந்தோஷம்!

விஜி, அது எப்படிங்க மிகச்சரியாக நான் கேட்க நினைத்த கேள்வியையே நீங்களும் கேட்டீர்கள்?! நானும் தேவாவிடம் அவங்க ப்யூட்டி கோர்ஸ் எதுவும் படிச்சாங்களான்னு கேட்டு அறிய வேண்டுமென்று நினைத்திருந்தேன்...

உண்மையிலேயே நீங்க ரொம்ப க்ரேட் தேவா... எவ்வளவு அழகா தெள்ள தெளிவா ஒவ்வொருத்தர் கேள்விக்கும் பதில் கொடுக்கறீங்க.... தேங்க் யூ சோ மச்!

என்னிடமும் ஒரு மரு கேள்வி இருக்கு... (அட, இதுலகூட விஜியும் நானும் மேட்ச்சிங் : -))
தேவா, எனக்கு நடு முதுகில் ஒரு பெரிய மரு உள்ளது... முதலில் ரொம்ப சின்னதாக வந்த ஒன்று , நாளடைவில்... கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்பொது நல்ல ஒரு பெரிய மிளகு ஸைஸில் இருக்கிறது... இதை எப்படி போக்கலாம்?! இதற்க்கு ஏதேனும் கை வைத்தியம் உண்டா?! ப்ளீஸ், தெரிந்தால் சொல்லுங்கள்!நன்றி!!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நான் நல்லா இருக்கேன். நிங்க எப்படி இருக்கிங்க? நிங்க வேலைக்கு போய்கொண்டு எப்படி இவ்வளவு டிடெய்லா எழுத உங்களுக்கு நேரம் கிடைக்கிறது. ரொம்ப நன்றி. எனக்கு ஹெர்பல் ப்ளிச், பேஷியல் அந்த மாதிரி எல்லாம் நன்றாகவே தெரியும் நானும் எழுத வரேன் உங்க கூட. ஆமாம் அப்கோர்ஸ் எல்லாரும் அழகா இருக்க தான் விரும்புவாங்க. நான் உங்க எல்லா அழகு குறிப்புகளும் படிப்பேன்.மேலும் நிறய்ய டைம் கிடைக்கும் போது சொல்லுங்க நாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஆமாம் நம்ம இரண்டு பேருக்கும் என்ன ஒற்றுமை நிங்க எங்கு இருக்கிங்க? இது தான் உங்க கூட முதலில் பேசுகிறேன்.இவ்வளவு அழகா எழுதினதை பார்த்து படிக்கிறபோது கேட்கவேண்டூம் என்று தோன்றியது. நிங்க உங்க மருவை கண்டிப்பா டாக்டரிடமும் கேளுங்கள். என் தோழிக்கு முதலில் சின்னதா இருந்து அது பெரியதாகி அவங்க டாக்டரிடம் காட்டினா, அவங்க சொன்னது மரு வந்து ஸ்கினை விட்டு வளந்து கொண்டு வருகிறது இதை சர்ஜரி பண்ண வேண்டும் என்று சொன்னார். அதனால் நிங்க கன்சல்ட் செய்வது ஒன்றும் தப்பில்லை.மிண்டும் பேசலாம்.

மேலும் சில பதிவுகள்