காரப்பொரி

தேதி: August 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொரி - ஒரு படி
பூண்டு - 3 பல்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வறுத்த நிலக்கடலை - அரை கப்
பொட்டுக் கடலை - கால் கப்


 

எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் பூண்டை ஒன்றிரண்டாக அம்மியில் தட்டி இதனுடன் சேர்த்து கிளறி பொன்னிறமாக வாசனை வரும்வரை குறைந்த தீயில் வறுக்கவும்.
அதனுடன் நிலக்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து ஒரு கிளறி கிளறி தீயை அணைத்த பின் பொரியை கொட்டி கிளறி இறக்கவும். சுவையான காரப்பொரி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தாளிக்கும் பொழுது சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்த்தால், கடையில் வாங்குவது போல் சுவையாக இருக்கும்.

தாளிக்கயில் மஞ்சதூள் சிறிது மற்றும் பொரிக்கு சிறிது உப்பு சேர்க்கலாம்.

இன்று இது தான் எங்கள் வீட்டில். Sorry for posting my kurippu in urs.

பரவால்ல கவின்.நல்ல டிப்ஸ் தான்

என் பையன் பொரி பார்க்க ஊரில் சாப்பிட்ட நினைப்புடன் வாங்க வேண்டும் என்ற்று அடம்,அது அவ்வளவா ருசி இல்ல,இத பார்த்தது நேற்று செய்திட்டேன்,பூண்டு மணம் ரெம்ப நல்லா இருந்தது

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ரேனு..இதுவும் எனக்கு பழைய நியாபகம் வந்து விடும்..அப்போ ஒரு அம்மா தான் பொரி கொண்டு வருவாங்க.பொட்டுகடலை நிலக்கடலை கூட அந்தம்மா குட்டி படியில் போட்டு தருவாங்க..அன்று 3 ரூபாய்க்கு நெறைய பொரி அதில் அம்மா செய்வது தான் தெரியும் அடுத்த நொடி வயிற்றுக்குள்.

தளிகா நான் இதில் சிறிது மஞ்சள்பொடி சேர்த்துசெய்தேன்.நன்றாக இருந்தது.
செல்வி.

சவுதி செல்வி

நன்றி esms..அதுவும் நல்லது தான் கலராக இருக்கும்.

வீக்கென்ட் இந்த ஸ்னாக் ஐயிட்டம் செய்தேன் - செய்வதற்கு ரொம்ப ஈஸியா, சாப்பிட நல்லாவும் இருந்தது!.
தேங்ஸ் தளிகா ஃபார் த ரெஸிப்பி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி ஷ்ரீ..நானும் பொரி வாங்கி வந்து கவனிக்காமல் செய்து விட்டேன் பார்த்தால் பழைய பொரி போல மொருமொருப்பே இல்லை மண்டை காய்ந்து விட்டது..தேன்க் யூ ஷ்ரீ