Oats குழந்தைக்கு கொடுத்தால் வெயிட் குறையுமா

Oatsகுழந்தைக்கு கொடுத்தால் வெயிட் குறையும் என்கிறார்கள்.எனவே என் குழந்தைக்கு கொடுக்க யோசனையாக உள்ளது.because my son weight is below 10 .if anybody knows pls inform me.

இதே கேள்வியை என் மருத்துவரிடம் கேட்டேன் இல்லவே இல்லை என்றார்.நாம் பெரியவங்க போல கஞ்சி போல கொடுக்காமல் பால்,இனிப்பு 1 சொட்டு நெய் விட்டு காய்ச்சி கொடுங்க..வெயிட் கூடுமே தவிற குறையாது.

எப்படி இருக்கீங்க?ரீமா எப்படி இருக்கிறாள் இந்தியா போய்
திரும்பிட்டீங்களா?உங்கள் பதிவை இப்போதான் பார்க்கிறேன் நலமாக இருக்கீங்களா?

ஹாய் ரசியா இப்போ தான் பதிவு போட்டேன்..இல்லையம்மா நான் அடுத்த அல்லது அதற்கடுத்த வாரம் திரும்புவேன்.தற்பொழுது ரீமா நன்றாக இருக்கிறாள்.வழக்கம் போல நம்ம தண்ணீர் உணவு க்லைமேட் ஒத்துக்கொள்ளாததால அவளுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்து இப்ப சரியாகிவிட்டது.
சரி அப்படியே அம்மாவை கொஞ்சம் இம்சை பன்னிட்டு வரலாமேன்னு ஜம்முன்னு இருக்கிறேன் ரசியா...அங்கே குழந்தைகள் நலமா..நாளை முதல் நோன்பு இல்லையா..சஹருக்கான வேலைகள் முடிந்திருக்கும் இல்லையா

ஆமாம் ரூபி சகருக்கு சாப்பாடு ரெடியாச்சு,ரமலானை வரவேற்க்க தயாராயிட்டோம் பிள்ளைகள் இருவரும் நோன்பு நோர்க்க ஆசைப்படுகிறார்கள் அவர்கள் விருப்பத்திர்க்கு விடலாம் என நினைக்கிறேன்,பாவம் உங்கல் அம்மா ஆனால் நம் அம்மாக்களுக்கு இது தான் சந்தோசம்ரீமாவிர்க்கு உடல் நலமில்லாது போனது அறிந்து வருத்தமாக இருக்கிறது,ஆனால் வெலிநாட்டில் இருந்துவிட்டு போனால் அனேகமானோருக்கு இப்படிதான் அவர்கள் அந்த க்ளைமேட்டோடு ஒத்துபோகும் நாளில் நாம் கிளம்பிடுவோம்,சரி நீங்கள் பெருநாளை அம்மாவோடு கொண்டாடளாமே நல்ல சான்ஸ் அல்லவா நான் அம்மாவோடு பெருநாளைக்கொண்டாடி 13 வருடமாகிவிட்டது இருக்கும் வரை நல்லா என்ஜாய் பன்னுங்க பிள்ளையை நல்லா பார்த்துக்கோங்க இறைவன் நாடினால் பிறகு பேசுவோம்

மிகவும் நன்றி thalika madam. நீங்கள் சொன்ன மாதிரியே கொடுக்கிறேன்.

இனிய ரமலான் வாழ்த்துக்கள்,தளிகா,ஜலீலா,ரஸியா மற்றும் என் இனிய இஸ்லாம் தோழிகள் அனைவர்க்கும் உரித்தாகுக..;-))
முன்பு நாங்கள் இருந்த ஊரில் என் நண்பி ஷபிஅம்மா
எங்கள் குடும்பத்துக்கு நோன்பு கஞ்சியும்,பலவகையான பலகாரங்களும் தருவார்கள்.ம்ம்ம்...அந்த நினைப்பு வந்து விட்டது..எல்லாவகையான விசேஷங்களும் நம் ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் உறு துணையாக
இருப்பது மனதிர்க்கு மிக மகிழ்வை தருகிறது.
வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்.
அன்புடன் விமலா.

இந்த த்ரெட்டுக்கு யாருமே பதில் சொல்லலை.. நமக்கோ அனுபவம் இல்லை.. தளிகா இருந்தா பதில் சொல்லுவாங்கன்னு நினச்சேன்... எப்படி இப்படி... என்னய ஐடியா அலமுன்னு சொல்லுறவங்கள பாருங்க

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் எம்பொண்ணுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் ஓட்ஸ் கொடுப்பேன். பாலில் தண்ணீர்விட்டாமல் அதில் ஓட்ஸ் ஒரு 2 ஸ்பூன் போட்டு சிறிது சர்க்கரை, ஒரு ஏலம், 1 ஸ்பூன் பட்டர் or நெய் போட்டு கொடுப்பேன் என் மகளுக்கு 11 மாதம் ஆகிறது செப்-22 வந்தால் 1 வயது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நான் கொழுப்பில்லாத பாலில் ஓட்ஸ் போட்டு வேகவைத்து sweetner போட்டு சாப்பிடுவேன்.. .நெய்யெல்லாம் போட்டா அவ்வளவு தான்... குழந்தைக்கு ரொம்ப நல்லா இருக்கு...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் என் கணவருக்கு காய்ச்சும் போது 1 டம்ளர் பாலில், 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 ஸ்பூன் ஓட்ஸ் லைட்டா சர்க்கரை( கருப்பட்டி சேர்த்தால் இன்னும் நல்லது) 2 ஏலக்காய் சேர்த்து செய்வேன். டயட்டில் இருப்பவர்கள் காலை டிபனுக்கு பதிலாக இப்படி செய்து சாப்பிட்டால் நல்லது. குழந்தைக்குன்ன கொஞ்சம் நெய் சேர்த்தால் சுவை பிடித்து சாப்பிடுவார்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்