அறுசுவை புதுசுவை

அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.இப்போது அறுசுவை மிக வேகமாக ஓபன் ஆகிறது.தங்களின் இந்த சேவைப்பணி(அறுசுவையை பராமரிப்பது)இனிதே தொடர என் வாழ்த்துக்கள்.தங்களின் பல்வேறு வேளைகளுக்கிடையில் அறுசுவையை சீரமைப்பதில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்ச்சிகள் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அறுசுவை கிடைக்காத போது, ஏன் கிடைக்கவில்லை? என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? அதை சரியாக பார்க்க முடியவில்லை, இது ஓபனாகவில்லை.. இதை சரி செய்யாமல் வேறு என்ன வேலை உங்களுக்கு? நாங்கள் உங்கள் சைட்டை பார்க்க வேண்டுமா? இல்லை வேறு எங்காவது போய்விடலாமா.. என்றெல்லாம் அதட்டி, மிரட்டி மின்னஞ்சல்களாக எழுதி குவித்தவர்கள் எல்லாம், அறுசுவை நன்றாக கிடைக்கும்போது ஒரு வார்த்தைகூட உரைக்கவில்லை. என்மேல் கொஞ்சம் இரக்கப்பட்டு ஆறுதலாக இங்கே ஒரு பதிவு கொடுத்து இருக்கும் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி.

அறுசுவையை பார்வையிட பெயர்பதிவு கட்டாயம் என்ற நிலையை நானாக விரும்பி கொண்டுவரவில்லை. அறுசுவைக்கு தொடர்ந்து பிரச்சனைகள் கொடுத்து வந்த சிலரால் அந்த நிலை உருவாயிற்று. எனக்கும் சிலரை அடையாளம் காண வேண்டியது அவசியமாயிற்று. நடவடிக்கை எடுக்க நிறைய விசயங்களை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. நிறைய ஆதாரங்களும் தேவைப்பட்டன. கிடைத்த ஆதாரங்களுடன் இது சம்பந்தமான சட்ட நடவடிக்கைக்கு அதற்கான இலாகாவினை அணுகியிருக்கின்றேன். விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிட்டும் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்தமட்டில் நடவடிக்கை என்பது இரண்டாம் பட்சம். எனக்கு அந்த நபரை அல்லது கூட்டத்தை பார்க்க வேண்டும். அவர்களை தோலுறித்து உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இதனால்தான் அவர்களின் IP ஐ ப்ளாக் செய்யாமல் தொடர்ந்து அனுமதித்து வந்தேன். இதைப் பற்றி இப்போது அதிகம் பேச விருப்பம் இல்லை. நிறைய விசயங்கள் உறுதிசெய்யப்பட்டவுடன் இங்கே விளக்கமாக தெரிவிக்கின்றேன். சில காலமாக அறுசுவையை பார்வையிடுவதில் நிறைய சிரமங்கள் இருந்ததே.. ஏன் என்ற கேள்வியை எழுப்பியோருக்காக இந்த சிறிய விளக்கம்.

இனி அறுசுவையை எல்லோரும் பார்வையிடலாம். தற்போது பெயர்பதிவு அவசியம் இல்லை என்றாலும், தயவுசெய்து உங்கள் பெயரை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பெயர்பதிவு அவசியம் என்ற நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம். இப்படி எல்லோரையும் பார்வையிட அனுமதிப்பதால் சில பிரச்சனைகள் வருகின்றன. பிரச்சனைகள் மீண்டும் தொடருமாயின், பெயர்பதிவு அவசியம் என்பதை மீண்டும் கொண்டு வரவேண்டிய நிலை வரும்.

நிறைய நேயர்கள் பாஸ்வேர்டு கிடைக்கவில்லை, லாகின் செய்ய இயலவில்லை என்றெல்லாம் தொடர்ந்து மின்னஞ்சல்கள் எழுதி குவித்திருந்தனர். அவர்களுக்கான விளக்கத்தை நான் பதிவேட்டில் (Guesbook) பலமுறை கொடுத்திருந்தேன். வேறு இடத்தில் கொடுத்தால் அவர்களால் அதை பார்வையிட முடியாது என்ற காரணத்தால் அங்கே அதனை கொடுத்தேன். அப்படியும் தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருந்தன. நாள் ஒன்றுக்கு 300,400 என்று மின்னஞ்சல்கள் வந்து குவிந்தன. ஆரம்பத்தில் என்னால் இயன்ற அளவு பதில் கொடுத்தேன். பின்னர் யாருக்கும் பதில் கொடுக்கவில்லை.

பெரும்பாலான நேயர்கள் பெயர்பதிவில் மின்னஞ்சல் முகவரியை தவறாக டைப் செய்திருந்தார்கள். இதனால் அவர்களுக்கு பாஸ்வேர்டு சென்று சேரவில்லை. சிலர் பெயர்ப்பதிவு செய்வது எப்படி என்று தெரியாமல் மின்னஞ்சல் முகவரியை மட்டும் பின்னூட்டம் வழியாக எனக்கு அனுப்பி பதிவு செய்ய சொல்லியிருந்தார்கள். சிலர் உங்கள் பெயர்ப்பதிவு சிஸ்டமில் ஏதோ பிரச்சனை என்று குறை கூறி இருந்தார்கள். எங்களுடையை சிஸ்டமில் பிரச்சனை என்றால் யாருமே பெயர்ப்பதிவு செய்திருக்க முடியாது. கடந்த நான்கு ஐந்து நாட்களில் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் பெயர்பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்களில் குறைந்தது 75 சதவீதம் பேருக்கு எந்த பிரச்சனைகளும் இருக்கவில்லை. சில நேரங்களில் தொடர் பளுவின் காரணமாக எங்களது மெயில் சர்வர் செயலற்று போனது. இருப்பினும் அவை சிறிது நேரத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. மற்றபடி சரியாக பெயர்பதிவு செய்யாதவர்கள், செய்து கடவுச்சொல் கிடைக்கப் பெறாதவர்கள் வேறு பெயரில், வேறு மெயில் முகவரி கொடுத்து தயவுசெய்து மீண்டும் பெயர்பதிவு செய்துகொள்ளவும்.

மற்றவை பின்னர்.

அருசுவை கிடைத்த போதும் கிடைக்காத போதும் நான் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பவில்லை.ஆனால் சரியாக கிடைக்கும் போது நன்றி சொல்லி இருக்கலாம் என்று இப்போது நினைக்க தோன்றுகிறது..அதற்காக வருத்தபடுகிறேன். உங்களுக்கு என் நன்றிகள், மேலும் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

இடையில் சில நாள் மட்டும் தளத்தை திறக்க முடியவில்லை...மற்றபடி .. தற்காலம் site performance ரொம்ப அருமையா இருக்கு...

///நாங்கள் உங்கள் சைட்டை பார்க்க வேண்டுமா? இல்லை வேறு எங்காவது போய்விடலாமா..

>> தமிழில இப்படி ஒரு தளத்திலதான் அரட்டை அடிக்கவும் / சமையல் குறிப்பு பார்க்கவும் format/site flow ( this is known as user experience) ரெண்டுமே நல்லா இருக்கு...

ஒரு வாரம் கண்முழிச்சி வேலை பாக்கவே ஒரு கேஸ் ரெட் புல் (Red Bull) தேவையா இருக்கு... டீமுக்கே இவ்வளவு நாள் வேலைக்கு டெயிலி டோர் டெலிவரிதானா??

It is job well done. Admin!!! you dont need thanks from all of us... The mere fact that the site traffic increased is gratifying .

Thanks a ton for making this site available for all of us.

ila

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அட்மின் அவர்கலுக்கு,
நன்றீகள் பல பல.......
thanx a lot....

அருசுவை கிடைத்த போதும் கிடைக்காத போதும் நான் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பவில்லை.ஆனால் சரியாக கிடைக்கும் போது நன்றி சொல்லி இருக்கலாம் என்று இப்போது நினைக்க தோன்றுகிறது..அதற்காக வருத்தபடுகிறேன். உங்களுக்கு என் நன்றிகள், மேலும் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

அன்பு தோழிகளே,

அன்புள்ள அறுசுவை அட்மின் அவர்களுக்கு வணக்கம்.நமது தளத்தை இனிமேல் பிரச்சனையில்லாமல் பார்வையிட முடியும் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி. தங்களின் இந்த விடா முயற்ச்சிக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது. ஆனால் தங்களின் பதிவிலிருந்த நேயர்களின் செயல் குறித்த வருத்தம் மிகவும் வேதனைத் தந்தது.உங்கள் வருத்தம் நியாயமானதே.அதைப் பார்த்த பிறகாவது நேயர்கள் தங்கள் கருத்தை வந்து கூறுவார்கள் என்று நினைக்கின்றேன். அறுசுவை தளத்தை தாங்கள் திறன்பட செயலாற்ற போராடி வருவதை நாங்கள் அறிவோம், ஆகவே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தாங்கள் இது போன்று எழும் மனக்கசப்பிற்கெல்லாம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து உங்கள் சேவைகளை புரிந்து அறுசுவையை மென் மேலும் சிறப்படையச் செய்து, இதை ஒரு உலகப் புகழ் வாய்ந்த தளமாக வளரச் செய்ய வேண்டும் என்று கேட்டு, அதற்கு இந்த அக்காவின் வாழ்த்துக்களையும் கூறி விடைப்பெறுகின்றேன்.நன்றி.

பாபு தம்பி நன்றி
ஆகா அருமையாக ஓப்பன் ஆகிறது ஆனால் என்னால் தான் தொடர்ந்து வரமுடியவில்லை.

பாவம் ரொம்பவே சிரமம் எடுத்து இருக்கீறார், எல்லோரும் இப்படி மெயிலனுப்பி குமித்தால் சாப்பிட கூட டைம் இருந்திருக்காது.

இப்ப ஓப்பன் செய்யும் போது டக்கு டக்குன்னு வருது அதே போல் சில சம்யம் ஓப்பன் பண்ண முடியவில்லை என்றாலும் கொஞ்சம் எல்லோரும் நிச்சயம் பொறுமையை கையாளவேண்டும்.

நன்றி.ஒரு குறிப்பு அனுப்புவதே எவ்வளவு கழ்டமா இருக்கு அனைத்தையும் சரி செய்து எல்லோருக்கும் ஈசியா கொடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷியம் இல்லை.

ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி சுகன்யாவிற்கு இவ்வாறு ஒரு பதிவைப் போட வேண்டும் என்று நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

அதைப் போல் நேயர்கள் எல்லோரும் வந்து தளத்தினைப் பற்றி அவரவர்களின் கருத்தை கூறினீர்களானால் தள நிர்வாகத்தினருக்கு அது உதவியாய் இருக்கும் நன்றி.

ஒரு வாரம் ஜாலியா ஊர் சுத்திட்டு வந்து பார்த்தா ஆபீசில நெட் ப்ராப்ளம். இன்றுதான் சரியாச்சு. வீட்டிலோ நான் ப்ரீயானபோதெல்லாம் கரண்ட் கட். சந்தேகத்தோடுதான் ஓபன் செய்தேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் சரி செய்திருப்பீங்க.

அறுசுவையில் நுழைய பெயர் பதிவு தேவைதான் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

பழமொழி எல்லாம் பெரியவர்கள் அனுபவித்துத்தான் எழுதி இருக்கிறார்கள். "தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்" என்பார்கள்.

நல்ல நண்பர்களையும், சுவையான உணவுகளையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும். தொடரட்டும் நும் பணி.
வாழ்க வளமுடன்
ஜெயந்தி மாமி

அறுசுவை அருமையாக ஓப்பன் ஆகிறது. ஓப்பன் செய்தால் டக்கு டக்குன்னு வருது .மிக்க நன்றி
ramani

மேலும் சில பதிவுகள்