என்னை நினைவு இருக்கா? :-)

ஹலோ சகோதரிகளே, ஆண்ட்டிகளே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க, என்னை ஞாபகம் இருக்கா? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வரேன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு! ஒரு வருஷத்துல அறுசுவைல ரொம்பவே மாற்றம் தெரியுது. நான் சேர்ந்தப்போ இருந்த அமைதியான அறுசுவை காணாமலே போயிடுச்சா?

பாபு மாமா கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? பாப்பி மாமி (மாமா மனைவி = மாமி) எப்படி இருக்காங்க?

தளிகா, தேவா, ஜலீலா (ஆண்ட்டி), சுபா, ஜெ மாமி, வானதி அக்கா, மனோஹரி ஆண்ட்டி, இன்னும் நிறைய பேரை சொல்லிட்டே போலாம், ஆனா இந்த ஞாபக மறதி தான் கொஞ்சம் படுத்துது.. :( எல்லாரும் நலமா? ரீமா, திவாகர்லாம் இப்போ என்ன சேட்டை பண்ணிட்டு இருக்காங்க?

எனக்கு ஜூனியர் யாரவது வந்துருக்காங்களா- 86 born? ரேகிங் செய்ய ஆசை ;-)

அன்புடன்,
ஹேமா.

பி.கு.1:(யாருக்கும் என்னை நினைவு இல்லைனாலும், ஓ நல்லா இருக்கே, உன்னை மறக்க முடியுமா அப்படின்னு கேக்கலாம் பரவாயில்லை, எனக்கு தெரியவா போகுது?)

பி.கு.2: அந்த புது உறுப்பினர்ல இருக்கும் மீண்டும் ஹேமா நானே தான். பாஸ்வேர்ட் மறந்துட்டேன்னு திறந்தேன், அப்புறம் இதை ஒரு இடத்தில நோட் பண்ணீ வெச்சுருந்தது நினைவுக்கு வந்துது ;D

செந்தமிழ்செல்வி மேடம், நர்மதா- இவங்க பேரை காபி-பேஸ்ட் பண்ணும்போது விட்டு போச்சு! எப்படி இருக்கீங்க?

அன்புடன்,
ஹேமா.

அதிரா தாமதமான திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள். என்ன ஸ்பெஷல் செய்தீர்கள்? உங்க மெயில் ஐடி யாரிடம் இருக்கிறது நான் வாங்கி கொள்கிறேன்

ரஜினி உங்களுக்கும் என்னுடைய தாமதமான வாழ்த்துக்கள். லேட்டானலும் லேட்டஸ்ட் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று, நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

என்ன ஹேமா நலமா? என்னை மறந்து விட்டீர்கள் அதனால் உங்க பேச்சு கா. எங்கே ஆளை ரொம்ப நாளா காணோம். மீண்டும் அறுசுவைக்கு வருக வருக என வரவேற்கிறேன். என்ன வேலை கிடைத்து விட்டதா? இப்பவும் கனவு ரொம்ப வருகிறதா? ராகிங் பண்ண ஆள் இல்லாம கஷ்டமா இருந்துச்சு. வந்து பதிவு போடுங்க பார்ப்போம்.

ஜானகி

ஜானகி.. உங்களை மறக்க முடியுமா? சட்டுனு பேரு எல்லாத்தையும் நினைவு படுத்தி எழுத முடியலை..

எப்படி இருக்கீங்க, உங்க வாழ்க்கைல ஏதேனும் (நல்ல) செய்தி உண்டா? நான் மைக்ரோசாஃப்டில் வேலைக்கு சேர்ந்து 6 மாசம் ஆகிடுச்சு. ட்ரீம் ஜாப் தான், அதுனால தான் கனவு வர்றதுக்கு வாய்ப்பே இல்லாம தூங்கறதே இல்லை ;-) இப்போ கொஞ்சம் வேலைல எல்லாம் செட்டில் ஆகிட்டதால பரவாயில்லை. அங்க தலையை பிச்சுக்கறது போதும்னு தான் இங்க வரவே இல்லை. அறுசுவை அப்டேட்ஸ் எதாவது கொடுத்துட்டு போயிருக்க கூடாதா?

தளிகா தான் என் கூட அரட்டைக்கு பெர்ஃபெக்ட் மேட்ச் :-) இதுக்கும் கா விட்டுடாதீங்க..

அன்புடன்,
ஹேமா.

உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். எனக்கு இந்த ஆகஸ்ட் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் நான் ஆஸ்திரேலியா அவர் இந்தியாவில் இருக்கிறார். நான் டிசம்பர் முதல் வாரம் ரிசைன் பண்ணி விட்டு போகிறேன். அப்புறம் தளிகா இந்தியா போயிருக்கிறார்கள்? நானே வேலை பிஸியில் அப்ப அப்ப வந்து அறுசுவை பார்ப்பேன்.

ஜானகி

ஹாய் ஹேமா

உங்கள மறக்க முடியுமா நல்லா நினைவு இருக்கே.

//பி.கு.1:(யாருக்கும் என்னை நினைவு இல்லைனாலும், ஓ நல்லா இருக்கே, உன்னை மறக்க முடியுமா அப்படின்னு கேக்கலாம் பரவாயில்லை, எனக்கு தெரியவா போகுது?)//

சும்மாதாம்பா. எப்டியிருக்கீங்க,

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

வாங்க ஹேமா!!! உங்க பல பதிவுகளை படிச்சி ரசிச்சி இருக்கேன்.. இப்படி ஒரு ஆளை மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருந்தது... வாம்மா!! ஹேமா ( வாம்மா மின்னலு ஸ்டைல படிங்க)... இப்ப எப்படி வீடும் வேலையும் சமாளிக்கிறீங்க... பல பழைய பதிவுகளை படிக்கும் போது இப்படி நல்லா ஜாலியா இருந்ததேன்னு நினைப்பேன்... எப்படி இருந்த தளம்.... கொஞ்சம் கொஞமா மக்களெல்லாம் எட்டி பாக்கிறாங்க... நல்லதுதான்...

என்னை உங்களுக்கு தெரியாது.... அதனால் என்ன அறிமுக படுத்திக்கலாம்.. பேரு ஊரெல்லாம் ப்ரொபைலில் இருக்கு... இப்பதைக்கு... வாசம் பாஸ்டன்... ரிமோட் வேலை... ஆபிஸ் நியுயார்க். வாரம் ஒரு முறை மீட்டிங்க் மட்டும் போகனும்... சமையல்ல... கொஞ்சம் புலிக்கும் பூனைக்கும் இடையில்... இப்பதான் நான்வெஜ் ஒழுங்கா சமைக்கிறேன்... எல்லாம் அருசுவை புண்ணியம் குறிப்பா ஜலீலாக்கா/ செல்விமா/மனொஹரி மேடம்/ தளிகா இவங்க ரெசிபி அதிகமா நான்வெஜ்ல பண்ணி இருக்கேன்...

வாங்க ஜானகி.. கல்யாண பெண்ணே!!! எங்க ஊரில் அடுத்த கல்யாண ஜோடி வரும் வரை ரீசன்டா கல்யாணம் ஆனவங்க புது ஜோடிதாம்.... இப்ப ஆஸியில் நல்ல வெய்யிலா?? நான் ஒரு முறை குளிர்காலத்தில் வந்து மாட்டிகிட்டென். ரொம்ப அருமையான இடம்...

என் ஐடி ஊருக்கே தெரியும்... மர்லிகிட்டேயும் இருக்கு...

மீண்டும் பேசுவோம்...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாங்க ஹேமா.. உங்க பழைய பல பதிவுகளை படிச்சி ரசிச்சி இருக்கேன்..நான் புதிதாக இணைந்துள்ளேன்.. ஆனால் 83, ரேகிங் பண்ண முடியாது.. உங்களை நானும் வரவேர்க்கிறேன்..

அடடே!!தாளிகா இப்ப பாத்து ஊருக்கு போயாச்சா! யாரு வந்திருக்கான்னு வந்து பாருங்க!! ஹேமாவை ரொம்ப நாளா காணோம் என்று இங்க எத்தனை பேர் ஃபீலிங்க்ஸ்ல இருக்கோம்:-) என்னை ஞாபகம் இருக்கான்னு கேள்வி வேறயா? வேலை கிடைச்சாச்சா? ரொம்ப சந்தோஷம்! வாழ்த்துக்கள்! அப்பப்ப நேரம் கிடைக்கும்போது வந்து எட்டி பாத்துட்டு போ ஹேமா.

இலா, நீ அறுசுவைக்கு வந்ததும் முதன் முதலா பேசினது ஹேமாவிடம்தான். ஞாபகம் இருக்கா... கண்டுபிடி.. கண்டுபிடி.. (அந்த சமயத்தில் உன்னுடைய யூஸர் நேம் 'இலவீரா')

ஹாய் ஹேமா,
எப்படியிருக்கே? ரொம்ப நாளாச்சு? காணாமால் போனவர்கள் லிஸ்டில் உன்னை எப்பவோ சேர்த்தாச்சு (நானும் அந்த லிஸ்டில் சமீப காலமா இருந்தேங்கற விஷயத்தை ஹேமாகிட்ட யாரும் சொல்லீடாதீங்கப்பா, ப்ளீஸ்)
எப்படியோ வேலை கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள். அடுத்த வாழ்த்து எப்ப சொல்ல வைக்கப் போறே? முதல் பதிவை பார்த்து இந்த ஹேமாப்பொண்ணு நம்பளை மறந்துடுச்சேன்னு நினைச்சேன். நல்லவேளை, அடுத்த பதிவில் ஆறுதல் அளிச்சிட்டே.
வெல்கம் பேக் ஹேமா.
இனி அறுசுவை களை கட்டும்.
பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்