அறுசுவை தளத்தில் பிடித்தது பிடிக்காதது?

அன்பு நேயர்களுக்கு வணக்கம்.சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.இந்த முறை நான் நமது தளத்தைப் பற்றி உங்களுடன் உரையாடலாம் என்று நினைக்கிறேன். அதாவது பொதுவாக அறுசுவை தளத்தைப் பொருத்தவரையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும் அல்லவா ஆகவே இதில் பிடித்தது பிடிக்காத்து என்னென்ன என்று உங்கள் கருத்துக்களைக் கூறக் கேட்க்கலாம் சரீங்களா. அதன் முதற்கட்டமாக என்னுடைய விமரிசனத்தை எழுதிவுள்ளேன் நீங்களும் உங்கள் விமரிசனங்களை கூறலாம்,ஒரே ஒரு நிபந்தனை இது நமது தளத்தை பற்றிய விமரிசனம் என்பதால் அதை மட்டுமே அடிப்படையாக உங்கள் கருத்துக்கள் இருக்கவேண்டும். யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு எந்த விமரிசனமும் தர வேண்டாம் பொதுவான அம்சங்களை மட்டும் கூறினால் போதும். அதாவது தளததில் பிடித்தது பிடிக்காதது இரண்டே வரிகளில் இருந்தால் கூட போதும். உதாரணத்திற்க்கு எனது விமரிசனத்தை பார்த்துக்குங்க சரிங்களா,எத்தனை இருந்தாலும் எழுதுங்க.வாங்க வந்து உங்க கருத்துக்களை பதிவுச் செய்யுங்க நன்றி.

அறுசுவை தளததில் உள்ள அனைத்துமே பிடித்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள்:
1. மொழி: அறுசுவை தளம் முழுவதும் தமிழ் மொழியில் உருவாகியுள்ளதால் மிகவும் பிடிக்கும்.
2. மன்றம்: உலகத்தில் வாழும் அனைத்து முக்கியமாக எமது தமிழ் இனத்தவருடன் எண்ணற்ற தலைப்புகளில் உரையாடி மகிழமுடிகின்றது என்பதால் பிடிக்கும்.
3. கூட்டாஞ்சோறு: வெறும் சமையல் மட்டுமே செய்துக் கொண்டிருந்த எனக்கு அதை குறிப்பு வடிவில் உருவாக்கி அதை மற்றவர்களுக்கும் வழங்க உதவிய பகுதி என்பதால் மிகவும் பிடிக்கும்.
4. பிறந்தநாள் வாழ்த்து பகுதி: உறுப்பினர்களை கெளரவிக்கும் விதமாக தினமும் நேயர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருப்பது தினமும் பிடிக்கின்றது.
5. வாக்கெடுப்பு: நல்ல சுவாரசியமாகவும் அதே நேரத்தில் நன்கு சிந்திக்க வைக்க கூடிய பகுதியாதலால் அதுவும் மிக பிடிக்கும்.

பிடிக்காதவை என்றால்:
1. ஆங்கிலத்தில் வரும் பதிவுகள்,
2. ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதும் பதிவுகள்
3. எழுத்துப் பிழைகளுடன் உள்ள குறிப்புகள்,
4. ஆணை பெண்ணாகவும்,பெண்ணை ஆணாகவும் தன்னை சித்தரித்து கொண்டு வரும் பதிவுகள்.
5. சகிப்பு தன்மையில்லாமல் நடக்கும் உரையாடல்கள்.
6. முகப்பில் சமீபத்திய கருத்துக்கள் பகுதி.

பின் குறிப்பு: அட்மின் அவர்களுக்கு நமது தளத்தைப் பற்றி நேயர்களின் விமரிசனங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளவே இந்த பதிவு.மேலும் எங்களின் குறை நிறைகளை நீங்கள் அறிந்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு,ஆனால் இது வேறு ரூபத்தில் சென்று பிரச்சனையை உண்டாக்கும் என்று கருதினால் நீக்கிவிடவும் நன்றி.

இந்த தளத்தில் நான் புதிதா இணைந்துள்ளேன் இந்த குறுகிய காலத்தில் என் மனம் கவர்ந்தவைகளை எழுதுகிறேன்..

1.முழுவதும் தமிழில் இருப்பது
2.யாரும் சமைக்கலாம்
3.சமீபத்திய பதிவுகள்(எங்கே,என்ன பதில் தந்தேன் என்று பார்க்க)
4.நிறைய தோழிகளின் நட்பு
5.சமீபத்திய உலக செய்திகள்,தகவல்கள்
6.நிறைய சமையல் குறிப்புகளுடன் வீட்டு குறிப்புகள், அழகு குறிப்புகள், இதில் சந்தேகம் என்றால் உடனே கிடைக்கும் பதில்
7.புதியவர்களை அன்புடன் வரவேற்கும் தன்மை

நான் தனிமையில் இருக்கும் போது நல்ல தோழியாக இருக்கும் அறுசுவையை என் மனதார பாராட்டுகிறேன்..பிடித்தவைகளை பட்டியலிட்ட என்னால் பிடிக்காவை என்று பிரிக்க முடியவில்லை காரணம் நான் அறுசுவையை மிகவும் நேசிக்கிறேன்..நன்றி

அடடே மனோஹரி ஆண்ட்டி இங்கே இருக்கீங்களா? நான் என்னடா நாம வந்ததுக்கு இவங்க இன்னும் பதிலே போடலியேனு பாத்துட்டு இருந்தேன். நானெல்லாம் கருத்து சொல்லலாமானு தெரியாது, இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காது.

அறுசுவை ஒரு முன்னோடி, தமிழ் வெப்சைட், இத்தனை ஆயிரம் குறிப்புகள், உபயோகமான தகவல்கள், தனி மென்பொருள் எதுவும் இன்ஸ்டால் பண்ண தேவையில்லாம தமிழில் எழுத வசதி, இது எல்லாம் இலவசமா!!! :)

பிடிக்காததுனு இல்லை, அப்பப்போ கடுப்பு வரும் விஷயங்கள்னா சிலது சொல்லலாம். நான் முன்னை காட்டிலும் ஆர்கனைஸ்டா அரட்டை அடிக்கறேங்கற நம்பிக்கைல சொல்றே ஒரு டாபிக் போயிட்டு இருக்கும் போது டைவர்ட் பண்ணி வேற ஏதோ அரட்டை அடிக்கறது நின்ன பாடில்லை. நாம் அடிக்கும் அரட்டைகளில், பிற்காலத்துக்கு உபயோகம் இல்லாதது எல்லாம் தனியா ஒரு த்ரெட்ல போட்டு மாசா மாசமோ வாரா வாரமோ நீக்கிடலாம். இதனால சர்வர் பளு குறையும்னு என் நினைப்பு.. சரியா பாபு மாமா? எது உபயோகம், எது வெட்டி அரட்டை பதிவுகள் என்பதில் பெரிய மாற்று கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. உபயோகமான தகவல்களை கம்பைல் பண்ணி தனியா போடறதும் இதுல சேர்த்தி.

தேவா சொன்னது போல அரசியல், நாட்டு நடப்பு பற்றி நாம் அதிகம் விவாதிப்பது இல்லை என்பது ஒரு வருத்தம்.

பதிவுகள் எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபாண்டுல தெரியுது, இது நிச்சயமா நான் வெச்சுருக்கும் ரெசொல்யூஷன்னால இல்லை நான் பார்த்த வரை.

வெட்டி அரட்டை பதிவுகளுக்கு தலைப்பு கொடுக்கணும்ங்கறது ரொம்பவே கஷ்டமா இருக்கு- அட்லீஸ்ட் என்னை போல விடாம பெசும் ஆட்களுக்கு அப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு ஏதாவது வழி பண்ணலாம்.

பொதுவாக எல்லோரும் பிடிக்கவில்லை என்று கூறும் சில விஷயங்களான ஆங்கிலத்தில் பதிவு போடுவது, இன்டீஸன்ட்/மதச் சார்போடு புண்படுத்தும் பதிவுகள்- இதற்கெல்லாம் எளிய தீர்வு - "இக்னோர்". :) நமக்கு அவங்க பேசுவது சரியென்று பட்டால் பதில் கூறுவோம், இல்லையெனில் புறக்கணிப்பு.

இணையம் என்பது எந்த அளவுக்கு சுதந்திரம் உள்ளது, அதனால் யாரு வேணாலும் எப்படி வேணாலும் அவங்களை பத்தி சொல்லிக்கலாம், பேசலாம்- ரொம்ப இமோஷ்னலி அட்டாச்டா இருப்பது நல்லது இல்லை.

வழக்கம் போல ஏதேனும் இடம் பொருள் தெரியாமல் பேசியிருந்தால், மன்னிப்பு.

அன்புடன்,
ஹேமா.

பி.கு: கடைசியா நீங்களும் காயல்பட்டிணமா/சேலமா/திருச்சியா/வர்ஜீனியாவா- பதிவுகள் மாடரேட் செய்ய படணும். இது சும்மா லுலுலாயிக்கு..

அன்புடன்,
ஹேமா.

என்டே மனோஹரிச் சேச்சி எப்படி இப்படி யோசிச்சீங்கன்னு புரீல.ஹ்ம்ம் வெரி குட் கேர்ல்.
இப்போ எனக்கு புடிச்சது புடிக்காததை மேல உள்ளவங்க எல்லாரும் சொல்லியாச்சு குறிப்பா தேவாவின் அதே விருப்பு வெறுப்பு தான் எனக்கும்.இருந்தாலும் சிலது

பிடித்தது
1)தளத்தை திறந்தாலே இப்படி பன்னினால் நல்ல இருக்கும் அப்படி பன்னினால் நல்ல இருக்கும்னு யோசிக்க வெக்காத அளவுக்கு அடிமின் ரொம்ப யோசிச்சு யோசிச்சு குழந்தையை போல அறுசுவையை வளத்திருக்கார்.அது ரொம்ப அழகா சுலபமா இருக்கு
2)நல்ல அனுபவமாக அழகாக தெளிவாக பேசும் தோழிகள் இங்குள்ளவர்களை ரொம்ப பிடிக்கும்.அவங்க எழுத்தை படித்தாலே ரொம்ப யோசிக்க தோனும் என்னடா நான் இன்னும் லூசு மாதிரி எழுதரேனே இவங்களைப் போல தெளிவா எழுதனும்னு
3)நகைச்சுவை ரொம்பவே பிடிக்கும் அதை அப்பப்ப படிச்சு யோசிச்சு சிரிக்க எல்லாம் மறக்கும்.
4)சமீபத்திய பதிவுகள் குறிப்புக்கு வரும் பின்னூட்டங்கள் தான் எனக்கு பூஸ்ட் ..ரொம்ப சந்தோஷப்படுவேன் துள்ளுவேன் ஆனா பெரிசா கட்டிக்காம அடக்கிடுவேன்.யாரும் சமைக்கலாமை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது

இனி பிடிக்காதவை
1)வாழ்த்து சொல்லலாம் தப்பில்லை பிடித்தவர்களுக்கு பழகியவர்களுக்கு மனசாற சொல்லலாம் த்ரெட்டே போடலாம் சந்தோஷம் தான்..ஆனால் அதுக்குன்னு வாழ்த்து சொல்வதே என் பொழப்புங்கர மாதிரி தினசரி பல் விளக்கியதும் இன்னைக்கி யாருக்கு வாழ்த்து சொல்ரதுன்னு கடனேன்னு சொல்லுவதும் எல்லோரும் சொல்ராங்களே நானும் சொல்லனுமேன்னு சொல்லுவதும் எனக்கு செம்ம வெறுப்பு..இதுல அப்பப்ப எனக்கு யாரும் வாழ்த்து சொல்லல நான் டூ ந்னு சொல்லும்போது சங்கடமாகவும் கொஞ்சம் தமாஷாகவும் இருக்கு..அதுவும் பிடிக்கல
2)நானும் அப்பப்ப தேவையில்லாம உளறுவேன் என்றாலும் அந்த வேண்டாத பேச்சை பின்னாளில் படிச்சு பாத்தா அசிங்கமா கேவலமாக இருக்கும்..அதனால் நானுள்பட தேவையில்லாத பதிவுகளை குறைத்துக் கொள்வோமே
3)குறிப்பு அதுவும் நான் உள்பட நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கரதுன்னு இல்லாம முடிந்தவரை பிழைகளை திருத்தி அனுப்பலாம்..
4)அப்பப்ப வரும் சண்டை சச்சரவு வெறுப்பு..மனதில் பட்டதை சொல்லக் கூட பயப்படுமளவுக்கு நடக்கும் சம்பவங்கள் ரொம்பவே வெறுப்பு..அதற்கு ஹேமா சொன்ன இக்னோர் ரொம்பவே சரி..
5)அடுத்தவர்களுகு புரியாத பாஷையில் அவரவர் மதம்,கடவுள் பெயரை குறிப்பிட்டு தேவையில்லாமல் தன்பக்தியைக் காட்டிக் கொள்வது ரொம்பவே வெறுப்பு...அது மனசோடு இருந்தால் போதுமே எழுதி நாலு பேர் பார்த்து நமக்கு என்ன கிடைக்க போவுது

இப்ப எழுதினதுகெல்லாம் எப்ப டோஸ் வாங்க போரோமோன்னு காத்துகிட்டு நாளைக்கு சமீபத்திய பதிவை திறப்பேனே அது ரொம்பவே வெறுப்பு

எனக்கு பிடித்ததது, பிடிக்காதது

முதலில் பிடித்ததது: தமிழில் இருப்பது, அடுத்து யாரும் சமைக்கலாம்(என்னை போன்றவர்கள்க்கு) தோழிகளுடன் அரட்டை அடிப்பது. ஒரு குடும்பமாக இருப்பது, என்னைப்போல் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல அரிய குறிப்புகளை பிரித்து தருவது, இலவசமாக இருப்பது, நாம் எப்பொழுது பதிவு போட்டோம் என்ன கேள்வி கேட்டோம் என்று பார்ப்பது.

பிடிக்காதது, அவ்வப்போது அறுசுவை ஓபனாகமல் இருப்பது இது வாக மட்டும்
தான்

மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

அறுசுவைதளம்
வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு இனிய சிநேகிதி
எனக்கு ரொம்ப பிடிச்சது
1.யாரும் சமைக்கலாம் பகுதி, தெளிவானா படங்களுடன் அழகா இருக்கிறது.
2.அட்மினின் அவர்களின் உடன் விளக்கமும் ,
3.மன்றம் பலரின் ஆலோசனைகள் ,பலரின் கருத்துக்கள்
4.உறுப்பினர்களின் பயனுள்ள குறிப்புகள்,அழகு குறிப்புகள்,
5.சந்தேகம் கேட்டால் உறுப்பினர்களின் உடனடி பதில்,அரட்டையிலும் சில தகவல்கள் கிடைப்பது
அனைத்தும் பிடிச்சிருக்கு.
6.சமீபத்திய பதிவுகள்

பிடிக்காதது
1.அரட்டைக்குனு தனிபக்கம் இருக்கும் போது
மற்ற டாப்பிக்லையும் அரட்டை அடிப்பது பிடிக்கவில்லை.
3.உறுப்பினர் அல்லாதவர்ளுகெல்லாம் வாழ்த்துப்பதிவு
4.முகப்புக்கு முன் வரும் பக்கம் (இனிய தமிழிலி ஒரு சமையல் இனையத்தளம்)என்ற பக்கத்தை இன்னும் கலர்புல்லா கண்ணை கவரும் விதமா இருந்தா நல்லா இருக்கும்.

வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த மனோஹரி மேடம் அவர்களூக்கு எனது அன்பான நன்றி
அன்புடன் பர்வீன்.

வணக்கம். நலமர்.
எனக்கு அறுசுவையில் பிடித்தது.

1. தனித்தமிழ் தன்மை கொண்டமை.
2. என்ன விரும்புகிறொமொ அவற்றுக்கென தனியான பக்கங்கள்.

பிடிக்கதவை
1. மதப் பற்றூ இருக்கலம். அதுவெ வெறீயாகக் மாற வேணாம்.
2. ஒரு பின்னோட்டத்தினுள் அதைப் பற்றீ சொல்வதில்லை. வேறூ விடயங்கள் பெசுவது.
3. இனியாவது தவருகளை திருத்துவொமாக.
பின். குறீப்பு. மறப்பொம் மன்னிப்பொம்.
முதல் தடவை தமிழ் அச்சடிக்கிரென் மன்னிக்கவும்.

மிக்க நன்றி கவி. ஆமா எதற்கு மன்னிப்பு கேட்டீங்க இந்த இழையே நமது தளத்தைப் பற்றி அவரவரின் கருத்தை எடுத்துக்கூற,விமர்சனம் செய்வதற்கு தானே தொடங்கப்பட்டுள்ளது, இது யாரையும் காயப்படுத்தாது. உறுப்பினர் யார் வேண்டுமானாலும் தளத்திலுள்ள நிறை குறைகளை வந்து கூறலாம் ஆகவே மன்னிப்பை திருப்பி எடுத்துக்குங்க சரியா. உங்கள் விமர்சனத்தை ரொம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க கூட்டாஞ்சோறு பற்றிய உங்க கருத்து ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது நன்றி மீண்டும் பேசுவோம்

ஹலோ ஜெயந்தி அக்கா எப்படி இருக்கீங்க?உங்களுடன் அடிக்கடி பேச முடியாவிட்டாலும் உங்க பதிவுகளை ரசித்து படிக்க தவறியதில்லை. இந்த பதிவை போட்டதே உங்களையெல்லாம் மனதில்யிருத்தி தான் அதை மெய்ப்பிக்கும் வகையில் வந்து உங்க விமர்சனத்தை கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி.மேலும் பிடித்ததில் கடைசியில் உள்ள கருத்து ரொம்ப சூப்பர் அதை விட ஒரு நல்ல விமர்சனத்தை அறுசுவைக்கு யாராலும் தரமுடியாது என்று தான் கூறுவேன் தங்கள் நேரத்தை ஒதுக்கி வந்து பதிவை போட்டதற்கு மிக்க நன்றி அக்கா.

ஹலோ மொழி எப்படி இருக்கீங்க?என்னங்க தளத்தைப் பற்றி விமர்சனம் கொடுக்கச் சொன்னால் ஏதோ முந்திரிக் கொட்டைன்னு சொல்றீங்க, கோவிச்சுக்க வேண்டாம்ன்னு சொல்றீங்க ஒன்னுமே புரியலயே சரி விடுங்க உங்க கருத்துக்கலைப் பற்றி பேசுவோம். ரொம்ப ஈடுபாட்டுடன் தான் எழுதியிருக்கீங்க. பிடித்ததில் வரிசை எண் ஏழில் தாய் மடி போல ஒரு அரவணைப்பு என்பதை படித்ததும் கண்கலங்கிவிட்டது என்னே ஒரு அழகான வர்ணனை இதற்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை நன்றி நன்றி மீண்டும் சந்திப்போம்.

இந்த தளத்தை பற்றி விமர்சனம் கொடுக்க வாய்ப்பை அளித்த மனோகிரி மேடத்திற்கு நன்றி. மேடம் நலமா? வீட்டில் அனைவரும் டைகர் உட்பட நலமா? எனக்கு பிடித்ததை பற்றி எழுதலாம் என்று இங்கு வரும் போது அதற்கு முன் எல்லோரும் நான் நினைத்ததை எழுதி விட்டார்கள். அதை எழுதினால் திரும்ப காப்பி அடித்தது போல இருக்கும். ஆனால் அறுசுவையில் நுழைந்தால் ஒரு குடும்பத்தில் உள்ளது போல ஒரு உணர்வு எனக்கு எப்பொழுதுமே இருக்கும்.

ஜானகி

மேலும் சில பதிவுகள்