அறுசுவை தளத்தில் பிடித்தது பிடிக்காதது?

அன்பு நேயர்களுக்கு வணக்கம்.சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் உங்களுடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.இந்த முறை நான் நமது தளத்தைப் பற்றி உங்களுடன் உரையாடலாம் என்று நினைக்கிறேன். அதாவது பொதுவாக அறுசுவை தளத்தைப் பொருத்தவரையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும் அல்லவா ஆகவே இதில் பிடித்தது பிடிக்காத்து என்னென்ன என்று உங்கள் கருத்துக்களைக் கூறக் கேட்க்கலாம் சரீங்களா. அதன் முதற்கட்டமாக என்னுடைய விமரிசனத்தை எழுதிவுள்ளேன் நீங்களும் உங்கள் விமரிசனங்களை கூறலாம்,ஒரே ஒரு நிபந்தனை இது நமது தளத்தை பற்றிய விமரிசனம் என்பதால் அதை மட்டுமே அடிப்படையாக உங்கள் கருத்துக்கள் இருக்கவேண்டும். யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு எந்த விமரிசனமும் தர வேண்டாம் பொதுவான அம்சங்களை மட்டும் கூறினால் போதும். அதாவது தளததில் பிடித்தது பிடிக்காதது இரண்டே வரிகளில் இருந்தால் கூட போதும். உதாரணத்திற்க்கு எனது விமரிசனத்தை பார்த்துக்குங்க சரிங்களா,எத்தனை இருந்தாலும் எழுதுங்க.வாங்க வந்து உங்க கருத்துக்களை பதிவுச் செய்யுங்க நன்றி.

அறுசுவை தளததில் உள்ள அனைத்துமே பிடித்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள்:
1. மொழி: அறுசுவை தளம் முழுவதும் தமிழ் மொழியில் உருவாகியுள்ளதால் மிகவும் பிடிக்கும்.
2. மன்றம்: உலகத்தில் வாழும் அனைத்து முக்கியமாக எமது தமிழ் இனத்தவருடன் எண்ணற்ற தலைப்புகளில் உரையாடி மகிழமுடிகின்றது என்பதால் பிடிக்கும்.
3. கூட்டாஞ்சோறு: வெறும் சமையல் மட்டுமே செய்துக் கொண்டிருந்த எனக்கு அதை குறிப்பு வடிவில் உருவாக்கி அதை மற்றவர்களுக்கும் வழங்க உதவிய பகுதி என்பதால் மிகவும் பிடிக்கும்.
4. பிறந்தநாள் வாழ்த்து பகுதி: உறுப்பினர்களை கெளரவிக்கும் விதமாக தினமும் நேயர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருப்பது தினமும் பிடிக்கின்றது.
5. வாக்கெடுப்பு: நல்ல சுவாரசியமாகவும் அதே நேரத்தில் நன்கு சிந்திக்க வைக்க கூடிய பகுதியாதலால் அதுவும் மிக பிடிக்கும்.

பிடிக்காதவை என்றால்:
1. ஆங்கிலத்தில் வரும் பதிவுகள்,
2. ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதும் பதிவுகள்
3. எழுத்துப் பிழைகளுடன் உள்ள குறிப்புகள்,
4. ஆணை பெண்ணாகவும்,பெண்ணை ஆணாகவும் தன்னை சித்தரித்து கொண்டு வரும் பதிவுகள்.
5. சகிப்பு தன்மையில்லாமல் நடக்கும் உரையாடல்கள்.
6. முகப்பில் சமீபத்திய கருத்துக்கள் பகுதி.

பின் குறிப்பு: அட்மின் அவர்களுக்கு நமது தளத்தைப் பற்றி நேயர்களின் விமரிசனங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளவே இந்த பதிவு.மேலும் எங்களின் குறை நிறைகளை நீங்கள் அறிந்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு,ஆனால் இது வேறு ரூபத்தில் சென்று பிரச்சனையை உண்டாக்கும் என்று கருதினால் நீக்கிவிடவும் நன்றி.

இப்படி ஒரு பதிவை ஆரம்பித்த உங்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இது அட்மினுக்கும் ஒரு கணக்கெடுப்பு மாதிரி உதவலாம். அது என்ன இன்னொரு தலைப்பு? நான் பேர் எழுதி கெடுத்துவிட்டேனா? மன்னித்துக் கொள்ளுங்கள். நான் எழுதக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்து மற்ற பிடித்த விஷயங்களை எழுதும் போது இதுவும் வந்துவிட்டது. ஏனெனில் இவையெல்லாமுமே அறுசுவையில் என்னைக் கவர்ந்தவைதானே. நான் எப்போதும் சொல்வது இது என்பதால் இயல்பாக வந்துவிட்டது. மேலும்,பெண்கள் தைரியமாக தாம்பத்தியம் பற்றி எழுத தயங்கும்போது (ஏதோ அதைப் பற்றி எதாவது எழுதினாலே நம்மை எல்லாரும் தப்பா நினைத்துவிடுவார்களே என்று எண்ணி(நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்)), தாங்கள் அதனை இயல்பாக, உண்மையாக எழுதியதால் எப்போதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மேலும் சில பதிவுகளில் மெல்ல எட்டிப் பார்க்கும் நகைச்சுவையும் பிடிக்கும். அது போன்ற விஷயங்களையும் தயங்காமல் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். இது போன்ற இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளை நீங்கள் தொடங்க வேண்டூம் என்ற தாழ்மையான வேண்டுகோளையும் வைக்கிறேன். நீங்க விசாரித்ததற்கு உடனடியாக பதில் எழுத இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும். எனது நண்பர் பாபுவும், பாப்பியும் நலமே. மீண்டும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டியர் விஜி ஒழுங்கா வந்து பதிவு போட்டதற்கு உங்களுக்கு தான் என் நன்றி. என்னங்க விஜி..... எப்படீங்க!!!!!விட்டா இன்னும் நாலு பக்கத்திற்கு விமர்சனம் இருக்கும் போல் இருக்கு எழுதுங்க எழுதுங்க எவ்வளவு இருக்கின்றதோ எல்லாத்தையும் எழுதுங்க. கிட்டத்தட்ட எல்லா அம்சங்களையும் சும்மா புட்டு புட்டு வெச்சிட்டீங்க. ஏதோ வந்தோம் பார்த்தோம் பதிவைப் போடடோம் என்று இல்லாமல் எல்லாத்தையும் மிகவும் நுணுக்கமாக கவனித்துள்ளீர்கள் என்று தெரிகின்றது. நல்ல வேல யார் பெயரும் குறிப்பிடக்கூடாதுன்னு நிபந்தனைப் போட்டது நல்லதாப்போச்சு தல தப்பிச்சதுடா சாமி. தளத்தில் நானும் ஒரு சீனியர் என்ற முறையில் நிறைய யோசிக்க வெச்சிட்டீங்க மிக மிக அருமையான விமர்சனம் மிக்க நன்றி விஜி வீன்டும் காணாம்.

தேவா டியர் செம்ம டயர்டா இருக்கு மீதி பதிவுகளையும் உங்கள் பதிவிற்கும் நாளை வந்து பதில் தருகின்றேன் ஒகேவா குட்நயிட.

பிடித்தது : ரொம்ப எழிமையான இனைய தளம். தமிழ் எலுத்துதவி, என்னக்கு ரொம்ப அவசியமானது.
பிடிக்காதது : எடுவும் இல்லை.
=> சமையல் தெரியாதவர்கல் கூட பார்து சையிர தலம் இது ஒன்னு தான்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

மனோகரி மேடம் ம்ம் சூப்பரா ஆரம்பித்துள்ளீர்கள் ம்ம் எனக்கு மனதில் பட்டதையும் எழுதுகிறேன்.

பிடித்தது
**********

திறந்ததும் முதல் பக்கம் தனிதனியாக்க தேவையான லட்டை எடுத்து சாப்பிடுவது போல் இருக்கு// ஹா ஹா ஹா

அருசுவை கேட்கவே காதுக்கு இனிமையாக இருக்கு.

1. முதலில் யாரும் சமைக்கலாம். எல்லா பெண்களுக்கும் சமையலே தெரியாதவர்களுக்கும் இது ஒரு அருமையான தளம்.

2.எழுத்துதவி இது எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. எல்லோருக்கும் மெயில் பண்ண, குறிப்பு அனுப்ப,மன்றத்தில் உரையாட, என் டைப்பிங் ஸ்பீட் கூட அதிகமாகி விட்டது.
3.முதல் முதல் 100 குறிப்பு முடிந்த போது எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு வாழ்த்து வந்து குமியும் என்று.
4.என்னுடைய சமையலை செய்து பார்த்து பின்னூடம் வரும் போது மிக்க மகிழ்சியாக இருக்கும்
5.கூட்டாஞ்சோறு, பாரம்பரிய சமைஅல், எல்லா நாட்டினருடைய சமையலும் செய்து பார்க்க முடிகிறது.
6. சமீபத்திய பதிவு வாவ் சூப்பர்.

7.எல்லோருடைய அறட்டையும் ரொம்ப பிடிக்கும்.

8.எல்லோருடைய அறட்டையும் ரொம்ப பிடிக்கும்(மெயில மர்லியா யாராவாது இருக்கிறீகளா என்பார் அதுவும், அதிரா கதைப்பதும் ரொம்பவே பிடிக்கும்.
9. தேவ சேனாதிபதியுடைய அழகு குறிப்பு, உலகத்தில் உள்ள எல்லா பெண்களையும் அழகு படுத்தி கொன்டு இருக்கிறார்கள்.
10.யாராவது சந்தேகம்,குறிப்பு,மருத்துவ குறிப்பு,டிப்ஸ் கேட்டா உடனே கொடுக்கனும் என்று எனக்கு தோன்றும்.
11.எல்லாத்துக்கும் மேல் பாபு தம்பி உடைய கடின உழைப்பு. இந்த சமையல் தளம் மூலம் பல பெண்கள் உடைய பிரச்சனை தீருகிறது.

பிடிக்காதது
************

1.முதலில் எழுத்துதவி அழகாக வாழைபழத்தை உறித்து கையில் கொடுத்த மாதிரி இருக்கு அதை விட்டு விட்டு ஆங்கிலத்தில் டைப் பண்ணுவது, ஆனால் தங்கிலீஷில் டைப் பண்ணி விட்டு அதை அப்படி போஸ்ட் செய்வது.
சிலருக்கு புரியாது தான், கொஞ்சம் இரண்டு நாள் நல்ல எப்படி என்று எல்லம் தரோவாக பார்த்து கொண்டு பிறகு போஸ்ட் பண்ணலாம்.

2. குறிப்பு எவ்வளவோ பேர் செய்கிறார்கள் ஆனால் பின்னூட்டம் அனுப்புவதில்லை. இதற்காவே இன்னும் பல குறிப்புகள் நான் கொடுக்கவே இல்லை.
3.செய்து பார்த்து நல்ல இருக்கா இல்லையா நிறை குறை சொன்னால் நல்ல இருக்கும்.
4.சில குறிப்புகள் செய்து பார்த்ததில் வாயிலேயே வைக்க முடியவில்லை ஏதோ நானும் கொடுக்கிறேன் குறிப்பு என்று சில பேர் கொடுக்கிறார்கள். பெயர் சொல்ல விருப்பம் இல்லை.
5.மதம் பற்றி பேசினா மற்றவர்களுக்கும் அம்மமதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். அந்த இடத்தில் பேச பிடிக்க வில்லையா என்ன் அந்த டாப்பிக்கில் வருகிறீர்கள். பிடிக்க வில்லை என்றால் நீங்கள் வேறு டாப்பிக்கில் பேசுங்கள்.
எதற்கு வீணான வாக்குவாதங்கள்

குறிப்பு கொடுக்கும் போது எரர் வந்து வந்து எல்லாம் அழிந்து போன போது,
ஓப்பன் பண்ண முடியாமல் தவித்தது.

சிறிய வருத்தம்
***************

(1. ஆனால் நான் பழைய மன்றத்தில்நிறை வீட்டுக்கு குறிப்பு, மருத்துவ குறிப்பு எல்லாம் கொடுத்துள்ளேன் ஆனால் அதேல்லாம் பழைய பதிவோடு போய் விட்டது.)

(2. இன்னும் ஒன்று குழந்தை களுக்கு நிறைய உனவு வகை கொடுத்துள்ளேன் அதையும் தனியாக போட்டால் நல்ல இருக்கும்)

மற்றபடி எல்லா தோழிகளும் எ\சொன்னது சரியே//

ஏப்பா மனதில் பட்டதை தாம்பா சொல்லி உள்ளேன் யாரும் கம்ப தூக்கி கொண்டு வந்து விடாதீர்கள்.

//கூட்டாஞ்சோறு , யரும் சமைக்கலாம் என் சமையல் திறனை வெளிகாட்ட முடிந்தது
இஸ்லாமிய இல்ல சமையல் குறிப்பு மூலமாக உலகம் முழுவதும் செய்து பார்ப்பது ரொம்ப சந்தோஷம்.
அதற்கு பின்னூட்டம் வரும் போது தளிக்கா சொன்ன மாதிரி பூஸ்ட் தான்.///

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப சூப்பரான் த்ரெட் ஆரம்பிச்சிருக்கீங்க. உங்களுடயை இந்த முயற்சிய பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.

பிடித்தது

அறுசுவையில் ஒவ்வொரு பகுதியும் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் இந்த அளவுக்கு தமிழில் எல்லாத்தையும் கற்றுத் தரும் வெப்சைட் வேறு எதுவும் இல்லை. இங்கு வந்த புதிதில் எந்த ஒரு டவும் என்றாலும் அம்மாவுக்குத்தான் போன் செய்வேன். ஆனால் இப்போது அறுசுவை தோழிகளுடந்தான் கேட்கின்றேன்.

மிகவும் கவர்ந்தவை யாரும் சமைக்கலாம், வீட்டுக்கு உபயோகமான் அத்தனை பயனுள்ள குறிப்புக்கள், சமீபத்தியபதிவு, தேவாவின் அழகு குறிப்புக்கள், அவர் சொல்லும் விதம் (தேவாவிற்கு ஒரு ஸ்பெசல் சல்யூட்)அன்புத்தோழிகளின் உடன் பதில்... இப்படி நிறைய இருக்கு. மிக சிறப்பு வாய்ந்த இணைய தளம்.

பிடிக்காதது

தேவா சொன்னதைத்தான் நானும் வழிமொழிகிறேன். அப்படியே காப்பி, பேஸ்ட் செய்தால் நன்றாக இருக்காது. அவர் சொன்ன கருத்தில் நிறைய உண்மை இருப்பதை உணர்கின்றேன்

மேலும் சமீபத்திய மதசண்டை. ஒரு சில தோழிகள் தங்களுடைய் கருத்தை மன்றத்தில் தோழிகளுடன் நேரிடையாக சொல்லாமல் ஒரு சண்டையை சாக்காக வைத்து சொன்ன விதம்.

மனோகரி மேடம் நான் எதுவும் தவறாக பதிவு செய்திருப்பின் மன்னியுங்கள். தோழிகளே நான் உங்கள் அனைவரின் நட்பையும் விரும்புகிறேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அறுசுவையில் எனக்குப் பிடித்தது:
(1) படத்துடன் கூடிய சமையல் குறிப்பு.அழகாக,சுலபமாக உள்ளது.
(2)எத்தனையோ தமிழ் தளங்களை பார்வையிடுகின்றேன்.ஆனால் அறுசுவையில் உள்ள சுவை எதிலும் இல்லை.அட்மினுக்கு இந்த சமயத்தில் மீண்டும் எனது பாராட்டுக்கள்.
(3)நிறைய புது ஸ்னேகிதங்கள்.உரையாடும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.
(4)எக்கச்சக்கமான சமையல் குறிப்புக்கள். படிக்கத்தான் நேரம் வேண்டும்.இதிலும் மற்ற தளங்களில் முதலிடம் பிடிக்கின்றது அறுசுவை.
(5)எந்த சந்தேகங்களுக்கும் உடனடி நிவாரணம் கிடைப்பது.
(6)சகோதரிகள் ஒருவருக்கொருவர் அன்புடனும்,அனுசரனையோடும்,உரையாடிக் களிப்பது.
(7)அழகிய கைவேலைப்பாடுகள் பற்றிய செய் முறை விளக்கம்.
(8)மற்ற மத சம்பிரதாயங்கள்,விளக்கங்கள் (உதாரணம்:விளக்கு பூஜை)போன்ற வற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.
(9)தமிழ் எழுத்துதவி பக்கம்.
(10)நேயர்களின் மனம் நோகாமல் அமைதி காக்கும் அறுசுவை நிர்வாகத்தினர்.
அறுசுவையில் எனக்கு பிடிக்காதது:
மன்னிக்கவும்

ஸ்னேகிதத்துடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த இழையை துவங்கி எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மனோகரி மேடம் அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

என்ன பிடிச்சிருக்கு!!! பிடிச்சதைவிட நான் ரசிப்பது.... என்னை ஆச்சரியபட வைப்பது!!

தமிழில் இருப்பது.... எனக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது தமிழில் எதாவது வாசிக்கனும்...

எந்த நேரமானாலும் வந்து பேசினால் துணைக்கு ஆள் இருப்பாங்க.. பிரச்சனையை சொன்னா ... 24 மணி நேரத்தில் பதில் வரும்... எமெர்ஜென்சி வார்ட் மாதிரி எப்பவும் மக்களுண்டு...

பலவிதமான மக்களில் பழக்கங்கள்/உணவு முறை எல்லாம் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு..

அருமையான கவிதைகள் ( ரொம்ப அழகுணர்ச்சியோட இருக்கு) -->> மீண்டும் வருமா அட்மின்?? கைவினை பொருள்கள் செய்வது... அழகு குறிப்புகள்... எல்லாருடைய திறமையை நினைத்து நான் ரொம்ப வியந்து இருக்கேன்... இவ்வளவு திறமைசாலியான பெண்களை ஒரே இணையதளத்தில் பார்க்கும் போது இது ஒரு இமாலய சாதனை என்றே எனக்கு தோன்றுகிறது.

பல பிடித்த விஷயங்களை ஏற்கனவே எல்லோரும் சொல்லி விட்டார்கள்.. விட்டு போன சில விஷயங்கள் என் எண்ணக்கூட்டிலிருந்து வருகிறது.

பலருடைய எழுத்துநடை.. சிலரால் நகைச்சுவையாகவும் சிலரால் முதிர்ந்த அனுபவ எழுத்தாகவும்.. சிலரால் கதைசொல்லியாகவும் எழுதமுடிகிறது..

தளத்தை பற்றி!!!
வேறு ஒரு மன்ற இழையில் குறிப்பிட்டது போல அமைப்பும் பயனீட்டாளர் அனுபவமும் நன்கு அமைந்து உள்ளது . எனக்கு தளத்திலோ/பயன்பாட்டிலோ ஒரு குறையும் இல்லை... அட்மினும் அருசுவை டீமும் பணியை செவ்வனே செய்து வருகிறார்கள்...

எனக்குதான் சில் விஷயங்கள பிடிக்கலை.. சிலருக்கு அது சாதாரணமாக தோணலாம் இல்லையா??

சகிப்புதன்மை இல்லாமல் இருப்பது... மற்றவர் மனம் நோகாமல் இருக்கணும் என்று ஒரு கணம் யோசித்தால் என்ன...

இன்னுமொரு விஷயம்... யாராவது எதாவது சொல்லிவிட்டா உடனே வாடிவிடுரது... " சொல் பொறுக்காத செல்வகுமாரி -- ஜெ மாமி" ( மன்னிக்கவும் இது ஒரு மேற்கோள்) .. இதெல்லாம் நமக்கு புதுசா... இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு நமக்கு பிடிச்ச இந்த தளத்தில மீண்டும் அனைவரும் அன்புடனும் சகோதர பாசத்துடனும் இருக்கனும்

தமிழில் பல நேரம் எழுத வார்தைகள் சரியாக அமையவில்லை.. அதற்க்கு என்னை மன்னிக்கவும்.. இது மிக கடினமான ஒன்று.. ஆங்கில வார்த்தைகள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் போது அதை தமிழாக்கம் செய்வது எனக்கு புதிய முயற்சி... மேற்கோள் = quote என்பதை ஒரு 10 நிமிடம் யோசித்தேன்...

பல ஆயிரம் பேர் வந்தாலும் இந்த இணைய நட்பு என்றும் அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து மணம் வீசனும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

பிடித்தது

1.தமிழ் (படிக்க)

2.தமிழ் (பேச/எழுத)

3.யாரும் சமைக்கலாம்

4.மன்றம்

5.வாக்கெடுப்பு விவாதம்

6.பல்வேறு சூழல்களிலும் அயராது குறிப்புகளைக் கொடுக்கும் கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள்

7.இத் தளத்தின் மூலம் கிடைத்த தோழிகள்,சகோதரிகள்

பிடிக்காதது

தங்கிலீஷில் எழுதினால்- படிக்க மிக மிக..சிரமமாக இருப்பதால்

மனோகரி மேடம் அறுசுவை தளததில் உள்ள அனைத்துமே பிடித்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவை

# . தமிழில் இருப்பது:-

எனக்கு தாய் மொழி வேறு ஆனால் தமிழ் ரொம்ப பிடிக்கும்..... தமிழ்லில் நிறைய பிழை வரும் என்று ரொம்ப நாள பார்வே மட்டும் பண்ணுவேன் ... ஆனால் படிக்க படிக்க தமிழ் ட்ய்பிங் ஆர்வம் வந்து விட்டது ....எனக்கு தமிழ் டைப் பண்ண கற்றது தந்த அறுசுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்

#. மன்றம்:-

எந்த விசயத்தே பற்றி கேட்டலும் ... உடனே பல கோணத்தில் பதில் அளிக்கும் அன்பான தோழிகள் .... அக்கரையன விசாரிப்புகள் .......அருசுவையல் கிடைக்கும் நல்ல தோழிகள் ..... வெளிநாட்டில் இருக்கும் என்னே போன்ற தோழிகளுக்கு நல்லதொரு குடும்பம் அறுசுவை

#. யாரும் சமைக்கலாம்:-
புது வகையான உணவு சமைக்கும் பொது நிச்சயம் ஒருவரப்பிரச்சதம்.படங்களுடன் விளக்கும் முறை மிகவும் நன்றாக இருக்கிறது. சமையல் ஆரம்பமே தெரியாதவர்கள் கூட இதைபார்த்து கற்று கொள்ள எளிதாக இருக்கும். சமைக்கும் ஆவலேயும் துண்டுகிறது

#.முதல் பக்கம் :-

தெளிவான font சைஸ் , வலது பக்கம் உள்ள பட்டியல் , தேவைய்யன குறிப்புகளே எளிதில் எடுக்கும் வசதி எல்லாம் அறுமே .....அதுவும் அறுசுவை வேகமாக வருவது ரொம்ப பிடிக்கும் ... நன்றி அட்மின்

#சமீபத்திய பதிவு :-

எத்தனே நாட்கள் கழித்து வந்தாலும் பதிவுகள் பார்க்க வசதியாக உள்ளது

#. நீங்களும் செய்யலாம்:-

நீங்களும் செய்யலாம் ரொம்ப பிடிக்கும் ...... இன்னும் நிரைய்ய எதிர் பார்க்கிறோம் .....குறிப்புகள் அனுப்பவும் என்னை போன்ற நிறைய தோழிகள் காத்து கொண்டுஉள்ளோம்

#தேடுக:-
அறுசுவையில் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது இதுதான் ....ரொம்ப நாள் இதில் தேடி தான் நிறைய புது புது முயற்சி எல்லாம் நடக்கும் ...:)

# வாழ்த்துகள் :-
யாராக இருந்தாலும் மனதார வாழ்த்தும் முகம் தெரியாத அன்பான வாழ்த்துகள் ...அதில் கிடைக்கும் சந்தோசத்திக்கு அளவே கிடேய்யது
சமையலுக்கு வரும் பின்னுட்டங்கள் ....அதில் இருந்து எல்லமே சமைக்கும் ஆர்வத்தே அதிகமாக்கும்

பிடிக்காதது சில சமயம் நடக்கும் விவாதங்கள் ..... தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்தில் வரும் பதிவுகள் ....( தமிழ் நாட்டில் தமிழ் போச யோசிப்பங்கலோ ) எல்லாரும் இதே தான் சொல்லராங்க .... இனிமேலாவது நடக்காமல் பார்த்து கொள்ளலாமே

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மேலும் சில பதிவுகள்