மன்றம்

நாட்டுக் கோழி என்று எப்படியான கோழியைக் குறிப்பிடுகிறார்கள். தெரிந்தால் சொல்லுங்களேன்.

இங்க cornish hen என்று ஒரு கோழி இருக்கு அது நாட்டுகோழி போல சுவை நல்லா இருக்கு poultry பகுதியில் பாருங்க கிடைக்கிறது

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னோட அறிவுக்கு எட்டினவரை தெரிஞ்சதை சொல்றேன்

ப்ராய்லெர் கோழி என்பது ஒரு கோழிக் குஞ்சுக்கு ஆகும் ஆயுசு தான் சுமார் 35 நாளில் குஞ்சு ஒரு முழு கோழியாக வளர்ந்து விடும்.அது செயற்கை முறையில் என்னவோ ஹார்மோனல் இஞெக்ஷன் போட்டு நல்ல சதையும் எடையுமா ஒரே மாசத்தில் வயிற்றுக்குள் போயிடும்.இதனால் அவர்களுக்கு குறைந்த காலத்தில் லாபம் அதிகம்..பொதுவா பாரிலெர் கோழி வெள்ளை தான் பார்ஹ்திருக்கிறேன்

நாட்டுக் கோழி நாம வீட்டில் வளர்போமே அது .அதை பண்னையிலும் வள்ரப்பாங்க..அதிகமா ப்ரவுன் நிறத்தில் இருக்கும்..அது ரொம்ப மெல்ல தான் வளரும் ஒரு வருஷமெல்லாம் ஆனபின் கூட அறுப்பாங்க...அது வேக கொஞ்சம் நேரம் எடுக்கும் ப்ராஇலெர் கோழியை விட சத்து நிறைந்தது இது...ப்ராஇலெர் கோழி சாப்பிடுவதால் ரொம்ப கேடு தான்..அந்த கேடு எதுவும் இது சாப்பிட்டா வராது ஏன்னா எடை சதைக்காக வளர்ச்சிக்காக எதையும் செயற்கையா குத்தாமல் தானியம் சாப்பிட்டு மெல்ல வளரும்.அதான் நாட்டுக் கோழி ..முட்டையிலும் நாட்டுக் கோழி முட்டை தான் சத்து.
ஆனால் விலையில் நாட்டுக் கோழி கறி அதிகம் ஏன்னா அதை வளர்க்க அதிக காலம் தேவைபடுகிறது..சுமார் 250 ரூபாய்க்கு 1 கிலோ விற்கிறார்கள் என நினைக்கிறேன்..அதுவே பாரிலெர் 100 ரூபாய்க்கு கெடைக்கும்.சொல்லப் போனா ஆர்கேனிக் கோழின்னு சொல்லலாம் நாட்டுக் கோழியை
என்னங்க ரொம்ப ஒளரிட்டேனோ?நீங்க இதைத் தான் கேட்டீங்களா இல்ல நாட்டுக் கோழியை எப்படி வாங்கி சமச்சு சாப்பிடுறதுன்னு கேட்டீங்களா..

தளிகா:-)

எனது கேள்விக்கு பதில் அளித்தமைக்கு முதலில் இலாவிற்கும் தளிகாவிற்கும் நன்றியை தெரிவிக்கிறேன். நாட்டுக்கோழி என்றால் வைரமாக இருக்கும் என்று நினைத்தேன்.இங்கு தான் ஒரு சமையல் குறிப்பு பார்த்தேன் நாட்டுக்கோழி என்று இருந்தது அதனால்தான் கேட்டேன்.நான் இந்த இணையத்தளத்தில் நேற்று தான் இணைந்துகொண்டேன். ஆனால் நீண்டகாலமாக பார்த்துவருகிறேன்.அறுசுவை தோழிகள் எல்லோருக்கும் வணக்கம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

அங்க natural/farm raised/organic feed இந்த மாதிரி கோழி கிடைக்குதான்னு பாருங்க...

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நீங்கள் சொன்னமாதிரி இங்கு கிடைக்குதா என பார்க்கிறேன்.கிடைத்தால் பதில் அனுப்புகிறேன்.மீண்டும் நன்றிகள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நாட்டுக் கோழியை free range chickens என்றும் சொல்லுவதுண்டு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்