உதவுங்கள் சகோதரிகளே

எனக்கு மிகவும் வருத்தம் உங்கெள்ளோரும் மேலும்.எல்லோரைம் சகோதரியாக நினைத்துதான் நான் மன்றத்தில் கேள்வி கேட்டேன்.ஒருத்தரும் பதில் தரவில்லை ஏன்? மன்னிக்கவும் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறேன்.எனக்காக இந்த உதவி செய்யுங்க பீளீஸ்,சீக்கிரம் பதில் கொடுங்கள்.

ஹாய் கதீஜா, என்னது இது சின்னக் குழந்தை மாதிரி கோச்சிக்கறீங்க. உங்க கேள்வி பார்த்தவுடனே நிச்சயம் பதில் எழுதணும்னு யாராவது முடிவு பண்னி இருப்பாங்க. வீக் எண்ட்டில் ரிப்ளை பண்ணலாம்னு நினைச்சிருக்கலாம். நீங்க கேட்டிருந்தபடி இரண்டாவதும் சிசேரியன் ஆகாமல் தடுக்கறது கொஞ்சம் கஷ்டம். ஆனால் நடக்காத அதிசயம் இல்லை. நிறைய பேருக்கு முதல் சிசேரியனாக இருந்து இரண்டாவது நார்மல் இருந்திருக்கு.

ஆனால் மருத்துவர்கள் பொதுவாக முதல் பேபி சிசேரியன் என்ரால் இரண்டாவது பேபிக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு சிசேரியன் பரிந்துரைப்பார்கள். இதுக்கு உங்களோட உடல் அமைப்பு, அப்போதைய நிலவரம்னு நிறைய காரணம் இருக்கலாம். நாமாக முயற்சி மட்டும்தான் செய்யலாம். ஆனால் முடிவு நம்ம கையில் நிச்சயம் இல்லை. நீங்க தினமும் வாக்கிங், டாக்டரின் ஆலோசனைப் படி உடற்பயிற்சி, முக்கியமா பெல்விக் பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் செய்யலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையோடு ஆரம்பிங்க. அந்த நேரத்தில் மனதை தைரியமா வெச்சுக்குங்க. டாக்டருக்கு ஒத்துழைப்பு கொடுங்க. பாசிட்டிவா இருங்க. அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கனு டாக்டர் ஆலோசனை இல்லாம எதையும் செய்ய ஆரம்பிக்காதீங்க. உங்க பெல்விக் போன் (இடுப்பு எலும்பு) குறுகியதா (உயரம் கம்மியாக இருப்பவர்களுக்கு பொதுவாக குறுகி இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் என் பெரியம்மா பெண் உயரம் கம்மிதான். ஆனாலும் எல்லாமே நார்மல் டெலிவரிதான்) இருந்தால் சிசேரியனுக்கு சான்ஸ் அதிகம்னு சொல்வாங்க. மனசைப் போட்டுக் குழப்பிக்காம தைரியமா அந்த நாளை எதிர் நோக்குங்க. நல்லதே நடக்கும்னு நம்புங்க. உடல்நலனை கவனிச்சுக்கோங்க. குழந்தை நல்லபடியா பொறக்கறதுதான் முக்கியம். ஆல் தி பெஸ்ட்.

எனக்கு கொஞ்சம் தைரியம் தான் இருந்தது,உங்க பதில் மேலும் தைரியம் தந்துள்ளது.நீங்க சொன்னது போல் நான் கொஞ்சம் உயரம் கம்மி தான்.பெல்விக் பயிற்சி எப்படி செய்வது, உங்களுக்கு தெரியுமா?ஏனெனில் நான் டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் எடுத்து தான் போக முடியும்,இப்போ எடுத்தால் அடுத்த மாதம் தான் அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்கும்.அடுத்த மாதம் இருதியில் டெலிவரி இருக்கலாம்.அதனால் தான் உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்.உங்க ஆறுதலான பதிலுக்கு மென்மேலும் மிக்க நன்றி.
அன்பான வார்த்தை என்றும் அமிர்தம் மனதிற்க்கு.

மேலும் சில பதிவுகள்