மெகா சீரியல்: அறுசுவை

தேவா அவங்க டூர் பதிவு மாதிரி இன்னொரு காமெடி பதிவு எழுதிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. அது வர்ற வரைக்கும் நாம இந்த மெகா சீரியலை கொஞ்ச நேரம் பார்ப்போம்.

சீரியலில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் நிஜ சீரியல்களில் வருபவையே. எதுவும் கற்பனை இல்லை. ஒரு நாள் ஒரே ஒரு எபிஸோட் ஆஃப் அரசி + கோலங்கள் + ஆனந்தம் + சிவசக்தி + கனா காணும் காலங்கள் பாத்த சைட் இஃபெக்ட். சீரியலில் ஒரே ஒரு சீன் தான் (அதுக்கே முடி கொட்டிடுமேங்கறீங்களா? அதுவும் சரி தான்)

அபி, சாந்தி இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள்.

சாந்தி: என்ன அபி, ரொம்ப அமைதியா வர்ற? மேனகா எதாவது பிரச்சனை பண்ணாளா திருப்பி?
அபி: இல்ல இல்ல.
சாந்தி: பின்ன ஆதி, பாஸ்கர்னால ஏதாவது?
அபி: சே சே அவங்கல்லாம் திருச்செல்வம் 'பேக்- அப்' சொன்ன அடுத்த நிமிஷம் கன்னியாகுமரி, பெங்களூர்னு ஓடிடுவாங்க.
சாந்தி: அப்படியா? ஏன்?
அபி: ரீஷூட் பண்ண திருப்பி கூப்பிடுவாரொனு பயம் தான். பேசின டையலாக்கையே திருப்பி திருப்பி எல்லாராலயும் பேசிட முடியுமா என்னை மாதிரி?
சாந்தி: அது உண்மை தான். பின்ன என்ன கரணத்துக்கு இப்படி சைலண்டா இருக்க?
அபி: ஐயோஓ.. என் ப்ரௌன் ஹேண்ட்பேகை வீடுலயே வெச்சுட்டேன். அது இல்லாம எனக்கு பேச்சே வராது ஒழுங்கா.. போதுமா?
சாந்தி: ஓ.. அதுவா விஷயம். சரி வா, சாமி கும்பிடலாம்.

கோவிலுக்குள்ளே ராகவி உட்கார்ந்து அழுது கொன்டு இருக்கிறார்.

சாந்தி: ஹேய் ராகவி..! எப்படி இருக்க?
அபி: என்ன ராகவி? ஏன் அழற?
ராகவி: அழறேனா? நானா?
சாந்தி: ஆமாம்பா.. உன் கண்ணுல தண்ணி வருதே? அழற தானே?
ராகவி: அதுவா.. எப்போதும் க்ளிசரின் போட்டு அழுது அழுது, இப்போ அழலைனா என்னவோ குறஞ்சா மாதிரி இருக்கு. அதான் ஒரு கம்பெனிக்கு.
அபி: ஏய் சாந்தி அங்க பாரு மேனகாவும் அபிராமியும் ஜோடியா வர்றாங்க!
அபிராமி: என்ன சாந்தி எப்படி இருக்க? ஆர்.கே மாம எப்படி இருக்காரு? (அப்போது அபிராமி கையில் இருக்கும் டைரி கீழே விழுகிறது)
சாந்தி: என்ன அபிராமி இது டைரி?
அபிராமி: அதுவா என்னை எப்போ யாரு யாரு கிட்ட தத்து கொடுத்தாங்கன்னு நோட் பண்ணி வெச்சுருக்கேன் இந்த டைரில. அப்போ தான் என் நிஜ அப்பா- அம்மாவை கண்டு பிடிக்கும் போது குழம்பாம இருக்க முடியும்!
மேனகா: கங்க்ராட்ஸ் ராக்வி..! கேல்வி பட்டேய்ன்.. நீ ரொம்ப் நல்ல படிப்பனு. ஸ்டேட் ஃப்ர்ஸ்டாமே? குட்.
அபிராமி: அதுவும் எப்படி? ஸ்கூலுக்கு போனாலும் க்ளாஸே அட்டெண்ட் பண்ணாம ப்ளேக்ரவுண்ட், பசங்களோட அரட்டை, காதல், கத்தரிக்காய் எல்லாம் வித்து, அன்யுவல் டேனு ஒரு சின்ன ஃபங்ஷனுக்கு ஏதோ பெரிய கல்யாணம் ரேஞ்சுக்கு சீனை போட்டு, சதா க்ளிசரின் டப்பாவோட குடித்தனம் பண்ணி ஸ்டேட் ஃபர்ஸ்ட். யாரல முடியும் சொல்லு?
மேனகா: வாவ்.. யூ ஆர் சிம்ப்ளி க்ரேட்! இந்தா ஒரு சின்ன பரிசு!
ராகவி: தேங்க்ஸ். என்னது இது?
மேனகா: அது விலை மதிப்பு இல்லாதது. என்னோட இயர் ரிங்.
அபி: ஐயம் சாரி ராகவி.
ராகவி: சாரியா? எதுக்குக்கா?
அபி: ஆமாம், இன்னிக்கு தானே உன்னை கடைசியா 2 காதோட பாக்க போறோம். இந்த தோடை போட்டுட்டு ஒரு 2 நாள் சுத்தினேனா உன் காது அறுந்து விழ போகுது. அப்புறம் என்ன பண்ணுவியோ.. பாவம்.
அபி: என்ன சாந்தி என்னை அமைதியா இருக்கேன்னு சொல்லிட்டு இப்போ நீ தான் கம்முனு இருக்க.. என்ன ஆச்சு?
சாந்தி: இல்லை அந்த சன்னதில இருக்கறது செல்வி மாதிரி இல்ல? அதான் பயந்து நடுங்கிட்டு இருக்கேன்.
மேனகா: ஐயயோ செல்வியா!! வாங்க ஓடிடலாம்!
அபி: என்ன மேனகா, யாருக்குமே பயப்பட மாட்டேன்னு சொல்வ, இப்போ ஓடலாம்ங்கற?
மேனகா: ஏய் அபி, அந்த் சவால் எல்லாம் நான் உன்ன மாட்ரி "என் கோபத்தை நீ பக்க ட்ரை பண்ணாதே மேனகா" னு வெத்து சவால் போடற ஆளுங் கிட்ட தான் போட்வேன். செல்வியை பாத்து ஓடாம இருக்க என்ன என்ன முட்டால்னு நெனச்சியா..
செல்வி: மேனகா! எப்படிம்மா இருக்கே? (என்று கூவிக் கொண்டே வருகிறார்)

மேனகா: (மெதுவாக) போச்ச்டா.. பாத்த்ட்டாங்க. சொன்னேனே கேட்டீங்லா?
செல்வி: தங்கச்சி எப்படிமா இருக்க?
மேனகா: ஹான் நல்லர்கேன் நல்லார்கேன். ஹௌ அபௌட் யூ?
சாந்தி: செல்வி, மேனகா உங்க தங்கச்சியா? எப்படி புரிலியே?
செல்வி: ஓ அதுவா.. என்னோட சொந்த அப்பாவோட 2ஆவது மனைவியோட தங்கையோட 4ஆவது புருஷனுக்கு பிறந்த.. இருங்க ஒரு நிமிஷம்.. (ஹேன்ட்பேகில் எதையோ தேடுகிறார்)
சாந்தி: என்ன தேடுறீங்க?
செல்வி: அது.. ஒரு டைரி வெச்சுருப்பேன் அதான் தேடறேன்.
அபிராமி: நீங்களும் டைரியா? எதுக்கு?
செல்வி: என்னோட பெத்த அம்மா- அவங்க புருஷன், பெத்த அப்பா- அவங்க புருஷன், வளர்த்த அப்பா-அம்மா, இவங்களோட 2ஆவது 3ஆவது ஸ்பௌஸ், அப்புறம் என் கணவரோட மாமனார் - மாமியர் குடும்பத்துல பிரந்தவங்கனு எல்ல தம்பி தங்கச்சிகளையும் கணக்கு பண்ண ஒரு மாநாடே பொடலாம். அதான் யாரு எப்படி உறவு நு நோட் பண்ணி வெச்சுருக்கேன்.
அபிராமி: (மனதிற்குள்) இதுக்கு என் நிலைமையே தெவலாம் போலிருக்கே..
செல்வி: சரி சரி வீண் பேச்சு வேண்டாம்.. வாங்க என் அம்மாவை பாக்க போலாம்.
எல்லாரும்: எந்த அம்மா??
செல்வி: அது எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? வாங்கனா வாங்க..

(எல்லோரும் கிளம்பி செல்லும் வழியில் சிவசக்தி சிவாகாமியம்மா வருகிறார்)

சிவகாமி: அடடே என்ன எல்லாரும் கூட்டமா போயிட்டு இருக்கீங்க?
அபிராமி: கூட்டமா போறோமா? அப்போ எங்களை எல்லாம் பாத்து பன்னிங்கனு சொல்றீங்களா?
சிவகாமி: ஐயயோ நான் அப்படிலாம் சொல்லுவேனாம்மா? தெரியாம கேட்டுடேன். விட்டுடு. சரி எனக்கு ரொம்ப நாளா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்னு இருக்கு..
சாந்தி: கேளுங்க..
சிவகாமி: தப்பா நினைக்க கூடாது.. அது எப்படி அரைச்ச மாவையே திருப்பி திருப்பி வருஷ கணக்கா அரைக்கறீங்க.. கொஞ்சம் டெக்னிக் சொல்லுங்களேன்..
அபி: நாங்களாவது பரவாயில்ல.. எங்க சீரியலுக்குள்ளயே தான் அரைக்கறோம். சில பேரு 10 வருஷம் முன்னாடி வந்த கையளவு மனசு கதையவே புது சீரியல் மாதிரி த்ரிஉப்பி நடிக்கறாங்க. அது இல்ல பெரிசு?
சிவகாமி: ஹிஹி.. அப்படியா? என்ன சீரியல் இது?
செல்வி: சும்மா என்ன பேச்சு, வாங்க அம்மாவை பாக்க போலாம்.
சிவகாமி: எந்த அம்மா?
சாந்தி: அது அவங்களுக்கே தெரியாதாம்.
செல்வி: ஹாங் ஞாபகம் வந்துருச்சு. அவங்க பேரு "லட்சுமி"..
சிவகாமி: எந்த லட்சுமி?
செல்வி: முக்கு தெரு லட்சுமி.. உங்களுக்கு அவங்களை தெரியுமா?
சிவகாமி: (அதிர்ச்சியாக) முக்கு தெரு லட்சுமியா? அவங்க புருஷன் தானே சிக்கல் சிதம்பரம்?
செல்வி: ஆமா..
சிவகாமி: செல்வி..! நான் உன் அம்மாமா.. நீ என் பொண்ணு!!
செல்வி: என்னது நீங்க என் அம்மாவா?
அபி: கரெக்ஷன் - நீங்களும் என் அம்மாவானு கேக்கணும் செல்வி!
சிவகாமி: உன் லட்சுமியம்மாவோட 2ஆவது புருஷனோட 2ஆவது சம்சாரம் நான் தான்மா..
அபி: என்னது சிக்கலோட 2ஆவது சம்சாரமா? எங்கம்மாவும் அவங்களும் அக்கா- தங்கை ஆச்சே? அப்போ நீங்க எனக்கும் அம்மாவா?
செல்வி: அபீ.. நீ என் தங்கையா?
சிவகாமி: என்னோட பொண்ணு தான் இன்னும் கிடைக்கல.. ஒரு நால் கடைக்கு போனப்போ காய்கறி வாங்கிட்டு அதுக்கு காசு இல்லதனால என் பொண்ண அங்க வேலைக்கு விட்டேன். அப்புறம்..
அபிராமி: அம்மா! என்ன தெரிலியா!! நாந்தாம்மா அந்த பொண்ணு!!
செல்வி: ஐயோ நீயும் என் தங்கச்சியா? ஒரு தங்கைய பாக்க வந்து எனக்கு 4 தங்கைங்க புதுசா கிடைப்பாங்கன்னு நினைக்கவே இல்லை!
சாந்தி: எல்லாரும் தங்கச்சி சரி, நான் எப்படி தங்கை ஆனேன்?
செல்வி: அபிராமி உனக்கு அக்க முறைனா, எனக்கு நீ தங்கச்சி தானே?
ராகவி: அப்போ நானு?
செல்வி: நீ பாக்க அப்படியே என் 17ஆவது தங்கச்சி மாதிரியே இருக்க. அதுனால நீயும் தங்கச்சி. இரு டைரில நோட் பண்ணிக்கறேன் எல்லாத்தையும்..
(மீதி எல்லோரும் தலை தெறிக்க திசைக்கொன்றாக ஓடுகிறார்கள்)

ஒரு குரல்: செல்வி.. செல்வீ!
செல்வி யாரென நிமிர்கிறார்.. மெட்டி ஒலி ராஜம்.
செல்வி: (பயத்தில் நடுங்கி கொண்டே..) என்னம்மா.. எங்க இந்த பக்கம்.. நீங்க போய் தான் 3 - 4 வருஷம் ஆச்சே?
ராஜம்: அதுவாம்மா.. ரீ- டெலிகாஸ்ட் ஆகறேனே பாக்கல?
செல்வி: என்னது ரீ- டெலிகாஸ்ட்ஆ??? (அலறி அடிட்து கொண்டு ஓடுகிறார்)

அறுவையாக இருந்து இருந்தால், சீ சீ மன்னிப்பு எல்லாம் கேக்க மாட்டேன். சீரியல்னாலே அறுவை தான்னு தெரியாம இந்த பக்கமே வர கூடாது! :-) தேவா, சீக்கிரமே உங்க பதிவை போட்டுருந்தா இப்படி ஆகிருக்குமா? சீகிரம் போடுங்க!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நல்லா இருக்கீங்களா? நல்ல காமெடி சென்ஸ் தான் உங்களுக்கு ஐய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறயே வலிக்குது போங்க. நான் முதல் முறை பேசுறேன் உங்க கூட.

ரொம்ப நல்லா இருக்கு உங்க சீரியல்.
அதிலயும் கோலங்கள் கலக்கல் தான் போங்க.
என்னா நான் அதை மட்டும்தான் பார்த்துகிட்டு இருக்கேன்.
ஆமா, ரிசெர்ச் பன்னிகிட்டு இருக்கரப்ப பிரேக் தேவை படும் போது, தேவையான (useful) வெப்சைட் ஒன்னு அருசுவை பார்ப்பேன், அல்லது இந்த கோலங்கள்(useless but inevitable) பார்ப்பேன்.

பரவாயில்லை, எல்லொரலும் எல்லா சிரியலும் பார்க்க முடியாது என்றாலும் ஒவ்வொருத்தரும் பார்க்கற சீரியலுக்கு தகுந்தமதிரி ரசிச்சு சிரிக்க முடியு(ம்)து.

கிரேட், கீப் இட் அப் மிஸஸ் ஹெமா!!!!!

இப்படிக்கு
இந்திரா

indira

அய்யோ ஹேமா, என்னது இது? எனக்கு படிச்சு முடிச்சதும் யாரோ என்னை சேரில் கட்டி வெச்சு ஒரு நாள் முழுக்க கோலங்கள் பார்க்க சொன்ன எபெக்டல இருக்கு. சிரிச்சிட்டேதான் எழுதறேன். எப்படி இத்தனையும் ஞாபகம் வெச்சுட்டு சரியா கோர்த்து எழுதினீங்களோ. என்னாலலாம் முடியாது. பரவாயில்லை, கைவசம் மைக்ரோசாப்ட் வேலை தவிர இன்னொரு வேலையும் இருக்கு. இதை மட்டும் நம்ம டீவி ஆளுங்க பார்த்தா உங்களை பார்க்க கையில் பொட்டியோட வந்துடுவாங்க. இந்த ஐடியா எங்களுக்கு தோணலியேம்மான்னு. ஆனாலும் உங்களுக்கு நிகர் ஜோக் அடிக்க இங்கே யாரும் இல்லைதான்.

அந்த மேனகாவின் தமிழை சரியா வித்தியாசப்படுத்தி வேற எழுதியிருக்கீங்க. இந்த ஆனந்தம், கோலங்கள் (அரசியைக்கூட மன்னிச்சுடலாம்) சீரியலுங்கள என்னைக்குதான் முடிக்கப் போறாங்களோ. நான் சீரியல் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஆனால் நீங்கள் எழுதின மெகா சீரியலை ரொம்ப ரசிச்சுப் படிச்சு, இப்பவும் சிரிச்சுட்டு இருக்கேன். இன்னும் எல்லாரும் இதைப் படிச்சாங்கன்னா இனி யாரும் சீரியல் பாக்கணும்னு புலம்பறதை விட்டாலும் விட்டுட்டுவாங்கன்னு நினைக்கிறேன். இனி அறுசுவையில் இதே நடையில் நீங்க சினிமா விமரிசனப் பகுதி எழுதலாம். நல்லா இருக்கும். நேரம் கிடைக்கும்போது ட்ரை பண்ணுங்க. எங்களையும் சிரிக்க வைங்க.

ஹேமா ஏன்மா ஏன் ஏன் ????????உங்க பதிவை பார்த்து பலமுறை ரசித்து சிரிச்சு இருக்கேன்.ஏன் அட்மினையே smiley அடிச்சு அதிர வைத்து பார்த்து இருக்கேன்.இதுதான் உங்க ஊரில் ஒரே சீனா.சிரிக்க வச்ச நீங்களே இப்படி அழவச்சிட்டீங்களே...மெகா சீரியலே உங்ககிட்ட தோத்து போச்சு....

ஹேமா ஜோக் அடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உண்மையிலேயே ரொம்ப சிரிச்சிட்டேன். கோலங்கள் மாதிரி க்ரேட் பிளேடு வேறெதுவும் கிடையாது. என் கல்யாணத்திற்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணினாங்க. எனக்கு குழந்தையும் பொறந்து அவளுக்கு 1வருடம் ஆக போகுது இன்னும் முடிந்தபாடில்லை.(அபிக்கே 2 குழந்தை பொறந்தாச்சு... எப்பதா முடிப்பாங்களோ). ஹேமா எப்படி உக்கார்ந்து பொறுமயா சிந்திச்சீங்களோ.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹேமா ஜோக் அடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உண்மையிலேயே ரொம்ப சிரிச்சிட்டேன். கோலங்கள் மாதிரி க்ரேட் பிளேடு வேறெதுவும் கிடையாது. என் கல்யாணத்திற்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணினாங்க. எனக்கு குழந்தையும் பொறந்து அவளுக்கு 1வருடம் ஆக போகுது இன்னும் முடிந்தபாடில்லை.(அபிக்கே 2 குழந்தை பொறந்தாச்சு... எப்பதா முடிப்பாங்களோ). ஹேமா எப்படி உக்கார்ந்து பொறுமயா சிந்திச்சீங்களோ.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எப்படி இருக்கீங்க.நல்ல எழுதி இருக்கீங்க அது எப்படி சீரியல் பிடிக்காம எல்லாரையும் சரியா சொல்லி எழுதி இருக்கீங்க.எனக்கு சீரியலே பிடிக்காது ஒரே போர் எப்பவாவது பார்கலாம்னு உட்கார்ந்தால் ஒரே அழுகைதான் செம போர் படம் கூட பிடிக்காவிட்டாலும் 2 1/2 மணி நேரம்ல முடிந்துவிடும்.ஆனால் இந்த சீரியல் அப்பப்பா 2 1/2 வருடம் ஆனாலும் முடியாது.போர் அடித்தாலும் ஹேமா எழுதியதாச்சேன்னு ஒரு வழியா படித்துட்டேன் இப்ப சிரிச்சுட்டு இருக்கேன் என் பையன் பார்த்து முறைக்கிறான் அம்மா தன்னால சிரிக்கிறாங்கன்னு.கொஞ்ச நேரம் எல்லாரும் சிரிக்க வாய்ப்பு தந்ததுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

யம்மா ஹேமா ஒரு வருஷம் காணாம போய் இப்போ எல்லாம் சேர்த்து வச்சு இப்படி சிரிக்க வைக்கறீங்களே!சீரியலை பார்க்கிறதே கஷ்டம்.இதில் எல்லாத்தையும் பார்த்து காமடியா அழகா கோர்த்து எழுதி இருக்கீங்களே.பிரமாதம் போங்க.
எனக்கு ஒரு சந்தேகம் உங்க டேமேஜர் சாரி மேனேஜர் இன்னிக்கு லீவா?பொறுமையா எழுதி இருக்கீங்களே அதான் கேட்டேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

படிச்ச எல்லாருக்கும் நன்றிகள். சும்மா நேத்து ஆஃபீஸ்ல இருந்து வந்து கொஞ்சம் நேரம் இருந்தப்போ எழுதினது. எழுத ஆரம்பிச்ச உடனே ஃப்ளோவாக வந்து விட்டது சுலபமா! படிக்கறது தான் கஷ்டமா இருந்துது!!

ஊர்ல இருக்கும் போது இந்த சீரியல்லாம் ஓடுறது காதுல விழும். இப்போ 2 வாரம் முன்னாடி பாத்தா இன்னமும் எல்லா சீரியலும் எனகு ஓரளவுக்காவது புரியுது! என்ன கொடுமயோ போங்க! சிரிச்சு இருந்தீங்கன்னா நன்றி, அழுது இருந்தீங்கன்னா (அது அறுவைனாலயும் இருக்கலாம் உங்களுக்கு அபிமான கேரக்டரை டேமேஜ் பண்ணிட்டதாலயும் இருக்கலாம்).

இது ஒரு சீன் இல்லியா? ஒரு சீரியல் டைரக்டர் கிட்ட பேசற பேச்சா இது?? போங்கம்மா போய் சீரியல் இலக்கணம் படிச்சுட்டு வாங்க :-)

தேவா தேங்க்ஸ், நல்லா கவனிச்சு படிச்சுருக்கீங்க, மேனகா ஆக்செண்ட் உட்பட :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்