புதிய வீடு கட்டுதல்

நாங்கள் புதிதாக வீடு கட்டுவதற்கு ஆரபித்து இருக்கின்றோம். வீட்டில் எந்தெந்த அறை எங்கு வைக்க வேண்டும். எப்படி அமைப்பா இருக்க வேண்டும். எப்படி அழகுபடுத்தலாம். என்னமாதிரியான இண்டீரியர் டெகரேஷன் பண்ணலாம்.என்ன விலையிலிருந்து கிடைக்கிறது? டைல்ஸ் & மார்பிள்ஸ் எது வாங்கலாம்? மற்றபடி வீட்டை எப்படி கட்டலாம் என்பதை அறுசுவையின் அனுபவமிக்க சகோதரிகள், மனோகரி மேடம், செல்விமேடம்,ஜலிலாக்கா,மாலதி, ரசியா, தேவா, சாதிகாஅக்கா,சரஸ்வதி மேடம்,ஜெயந்தி மாமி, தளிகா, ஹேமா, அதிரா, மர்லியா மற்றும் அனைத்து தோழிகளும் உங்களுக்கு தெரிந்ததை கூறினாள் எனக்கு மட்டுமல்ல கனவு இல்லத்தை கட்டுவதற்கு காத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

தேவா நீங்கள் வேறு ஒருதெரெட்டில் கூறியிருந்தீர்கள் அதை தேடுவது கடினமாக இருந்தது. எனவே நான் புதிய த்ரெட் போட்டுள்ளேன். எல்லோரும் அவரவருக்கு தெரிந்ததை கூறினாள் நன்றாக இருக்கும். அறுசுவை தோழிகள் வந்து என்னுடைய குழப்பத்தை தீர்த்தால் மிக்க மகிழ்ச்சி. காத்திருக்கிறேன் உங்கள் கருத்திற்காக

தனிஷா,நல்லதொரு திரட்,நிறைய ஸ்னேகிதிகளுக்கு உபயோகமாக இருக்கும்.சமீபத்தில் வீடு கட்டி முடித்ததால் என்னிடமுள்ள அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.
பொருளாதாரம்,பர்சேஸ்,வீடுகட்டும் நிமித்தமாக அரசாங்க அலுவலகம் செல்லுதல் போன்றவற்றில் என் கணவர் ஈடு பட்டிருந்தாலும் களப்பணியில் முழுமூச்சாக நான் ஈடு பட்டு இருந்தேன்.காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு,ஒரு தண்ணீர் பாட்டிலுடன் சைட்டுக்கு வரும் நான் வீடு திரும்ப 6 மணி ஆகி விடும்.வேலை பார்ப்பவர்களை தம்பி,அண்ணன் என்ற முறையுடன் அழைத்து வேலை வாங்கினால் வஞ்சனை இல்லாமல் வேலை பார்ப்பார்கள்.தவிர அவ்வப்போது ஸ்வீட்,காரம் எனவும் நாமும் வாங்கி கொடுத்து அனுசரனையுடன் நடந்துகொள்ளவேண்டும்.தனிஷா...நோட் இட்.இப்படி பல டெக்னிக் பின்பற்றியதால் ஒரே வருஷத்தில் ஐந்தாயிரம் சதுர அடியில் சுலபமாக கட்ட முடிந்தது.
பேஸ்மென்ட்:
தரமான ராட் குறைந்த பட்சம்16 எம்.எம் வாங்கவும்.இந்த விசயத்தில் கஞ்சத்தனம் பண்ணக்கூடாது.இரண்டு தளம் போடுவதாக இருந்தால் மூன்றுதளத்துக்குறிய அளவு ஸ்ட்ரென் தன் செய்து போடும் படி இன்ஞ்சினியரிடம் வலியுறுத்தவும்.ரோடு மட்டத்தில் இருந்து நல்ல உயரமாக காம்பவுண்ட் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.
தளவாடப்பொருட்கள்:
மணல்.செங்கல்,ஜல்லி,சிமெண்ட் போன்றவை தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
கான்கிரீட்:
இதிலும் நல்ல குவாலிடி பார்க்க வேண்டும்.முன்னனி சிமென்ட் தயாரிக்கும் கம்பெனியே வந்து போட்டு தருவார்கள்.15- 20 மணி நேரம் பல லேபர்கள் செய்யும் வேலையை ஓரிருவர் நின்று சற்று நேரத்தில் முடித்து தந்து விடுவார்கள் .வேலையும் மிச்சம்.டென்ஷனும் தேவை இல்லை.தளம் போட்ட பின் கிட்டே இருந்து உலர உலர நீர் ஊற்றிக்கொண்டே இருக்க வலியுறுத்த வேண்டும்.
பிளம்பிங்:
தரமான பைப் வாங்கி கொடுக்கவும்.பின்னாளில் பிரச்சினை என வரும் பொழுது பிளம்பிங் பிரச்சினைதான் ஒவ்வொரு வீட்டிற்கும் அநேகமாக வரும்.
இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.மொட்டை மாடியில் தரையிலேயே பைப் லைனை பதிப்பார்கள் .அதற்கு ஒத்துக்கொள்ளாதீர்கள்.சுவரிலேயே மொட்டைமாடியில் கன்ஸீல்ட் பண்ணமல் பைப் லைன் கொண்டு வரவும்.பின்நாளில் பிரச்சினை வராமல் தவிர்க்கலாம்.
எலெக்டிரிகல் வேலை:
ஐ எஸ் ஐ முத்திரை உள்ள வயர்களை வாங்க வேண்டும்.கன்ஸீல்ட் வயரிங் பண்ணும் பொழுது
எலெக்ட்ரிகல் வயரிங் தனியாகவும்,கேபிள் டிவி,டெலிபோன் வயரிங் தனியாகவும் பண்ண சொல்லவும்.ஒரு ரூமை எடுத்துக் கொண்டால் பேனுக்கு நடுவில் தான் ஹூக் போடுவொம் .ஒரு பக்கத்தில் லாஃப்ட் இருக்கும். .லாஃப்ட் இருக்கும் பகுதியை கணக்கில் கொள்ளாமல் அதை தவிர்த்து மைய்யமான இடத்தில் பேனுக்கு புரவைட் பண்ணவும்.மாடுலர் ஸ்விட்ச் அழகாக இருக்கும்.பட்ஜெட்டுக்கு ஏற்ற வாறு தேர்ந்தெடுக்கவும்.
ப்ளோரிங்:
மார்பிள்.டைல்ஸ் ,கிரானைட் பட்ஜட்டுக்கு ஏற்ற படி தேர்ந்தெடுக்கவும்.மார்பிள் என்றால் இன்னும் அழகாக இருக்கும்.இட்டாலியன் மார்பிள்,மக்ரானா போன்றவை விலை அதிகம்.ஹாலுக்கு பெரிய சைஸ் ஸ்லாப்புகளும்.ரூமுக்கு சிறிய சைஸ் என வாங்கினால் பட்ஜெட் இடிக்காது.
பெய்ண்டிங்:
வளவளப்பாக பூசிய பிறகு வெள்ளை அடித்த பின் பிரைமர் பண்ணி,பட்டி பார்த்து பெயிண்ட் அடிப்பது குறித்து பெயிண்ட் ஷாப் வைத்து இருக்கும் ஸ்னேகிதி ஒருவர் கூறிய அட்வைஸ் ...புது சுவருக்கு ஸ்னோசெம் தான் ஏற்றது.இது பூசுவதால் சுவரின் ஈரத்தன்மை உறிஞ்சப்பட்டு விடும்.குறைந்தது ஆறு மாதங்கள் கழித்த பிறகு பட்டி பார்த்து நல்ல ரக பெயிண்ட் அடிப்பது தான் சுவருக்கு நல்லது என்றார்.
பால்ஸீலிங்:
இதை சீலிங் போட்ட பின் கடைசி கட்டத்தில் போடுவார்கள்.எங்கள் வீட்டில் போட்டது கேரளா பாணி.கான்கிரீட் போடும் பொழுதே டிஸைனர் ஓடு பதித்த பிறகு காங்கிரீட் போடுவார்கள். சென்ட்ரிங் பிரித்த பின் பார்க்கும் பொழுது அழகாக இருக்கும்.சிமென்ட் துகள்களை நீக்கி.பட்டி பார்த்து பெயிண்ட் அடித்தால் சீலிங் மிக அழகாக இருக்கும்.
யம்மாடி தனிஷா..முடிய வில்லையம்மா.தொடரும் போட்டு முடிக்கின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அக்கா என் குரல்கேட்டு ஒடிவந்து ரொம்ப அழகா பதில் கொடுத்திருக்கீங்க. நீங்க சொன்னபடியே நான் நடந்துக்குவேன்.அக்கா எங்களோடது சின்ன ப்ராஜக்ட்தான். 2500 sq. இடம் இப்போதான் வாங்கினோம். என்ஜினியர் போட்டுத்தரும் ப்ளான் எங்கள் இருவருக்கும் அவ்வளவாக பிடிக்கவில்லை. கீழ்தளத்தில் ரிஷப்ஷன், ஒரு ஹால், டைனிங்க்ரூம், 2 பெட்ரூம்,ஒருபெட்ரூமில் அட்டாச்பாத்ரூம், கிச்சன், ஸ்டோர்ரூம்,இப்படித்தான் க்ரவுன் ப்ளோரில் கட்டனும்னு நினைக்கிறோம். ஆனால் எதை எங்கே வைப்பது. எண்ட்ரன்சை எப்படி அழகாக்குவது போர்ட்டிக்கோவும் வைக்கனும். 15 நாளா ஒரே குழப்பம்.

சாதிக்கா அக்கா உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இன்னும் சொல்லுங்கள். அறுசுவையின் மற்ற சகோதரிகளும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நீங்கள் ஆன்லைனில் இருந்தால் இந்த த்ரெட்டுக்கு பதில் போடுங்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அஹா! தனிஷா, சோரி, இப்போ தான் பார்த்தேன் நீங்க கூப்பிட்டு இருக்க்றதை! லன்ச் சாப்பிட்டுட்டேன், திருப்பி கோட் அடிக்க போகணும் :( நளை வரும் போது பேசுவோம்! வீடு கட்றீங்க போல, எங்க இந்தியாலயா?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

ஆமாம் ஹேமா. இந்தியாவுலதாம்ப்பா. ரொம்ப குழம்பி போய் இருக்கேன். நீங்களும் யூ.எஸ் ல வீடு வாங்குறீங்க. அதான் உங்களுடைய கருத்தை கேட்டேன். நீங்க ப்ரீயா இருக்கும் போது போடுங்க. எல்லாத்தோழிகளும் தெரிந்ததை கூறினாள் மகிழ்ச்சி

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் ஹேமா,
போர்டிகோ பெரிதாக இருந்தால் வீடு பார்க்க அழகாக இருக்கும்.முன்னால் கொஞ்சம் நிறைய இடம் விட்டு கட்டினால் எடுப்பாக இருக்கும்.அறுசுவை தோழியர்க்கு கிச்சன் முக்கியம்,மூண்றாக பிரிக்கவும்,ஸ்டோர் ரூம்,சமையலறை,ஒர்க் ஏரியா என்று.அத்க நேரம் சமையலறையில் கழிப்பதால் இது அவசியம். நாளை மீதி பார்க்கலாம்.
என்றென்றும் அன்புடன்
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

asiya omar

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்னங்க ஆஸியா, இங்க நான் போர்டிகோவுக்கு எங்க போறது? பேக்யார்ட் வேணா போர்டிகோனு நினைச்சுக்கலாம் :-)

தனிஷா, உங்க கிட்ட நளைக்கு வரேன்னு சொன்னேன் கடைசில நடு ராத்திரி வந்துருக்கேன். இவ்ளோ நேரம் என்ன செஞ்செனா? அஃபீஸ் வேல தான்.. அன்னன்னிக்கு தூங்கி அன்னன்னிக்கு எழறேன் ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

என்ன ஹேமா வீட்டிலும் ஆபிஸ் வேலையா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமா.. :( கொஞ்சம் வேலை சேர்ந்து போச்சு.. சரி அறுசுவையை பார்க்காம தூங்க போறது இல்லனு உக்கந்துருக்கேன்..

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மேலும் சில பதிவுகள்