engineering course

என் பையன் 12 thcomputer science படிக்கிறான் எந்த engineering course படித்தால் நல்லது .

பொதுவாக எல்லா துறைகளுமே பயனுள்ளவையே.பையனுக்கு எதில் விருப்பமோ அந்த பிரிவை தேர்ந்தெடுங்கள்.

i suggest electronics and communication,aeronautical engineering, mechatronics(mechanical+electronics) engineering, information technology.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அன்பு விஜி & தோழி ஸாதிகா,
இருவரும் நலமா?
பசங்க +2 வந்தாலே நாம டென்ஷன் ஆகிடுவோம்.
உங்க இருவரின் மகன்களுக்கும் என் ஆசிகள்.
சாஃப்வேர் லைன் எப்ப பீக்கில் இருக்கும், எப்ப டவுன் ஆகும்னு சொல்ல முடியாது. அதனால், அதை விட்டு ஏரோநாட்டிகல்ஸ், இ.சி.இ, மெகட்ரானிக்ஸ்(குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இதை படிச்சுகிட்டே, வெளியில் கம்ப்யூட்டர் லாங்வேஜ் படித்துக் கொள்ளலாம்.(எங்க பையன் அப்படித்தான் படிக்கிறார்). இரண்டு துறைகளையும் படித்த மாதிரி ஆகும்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியம் பையனுக்கு எதில் விருப்பம் என கேட்டு, அதை படிக்க விடுவதே சிறந்தது. விருப்பமில்லாத ஒன்றை நாம் திணித்தால், அதுவே அவர்கள் மனதில் வெறுப்பேற்றி விடும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஸாதிகா, உங்க பையனும் 12 THபடிக்கின்றாரா, எந்தCOURSE, என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லவும்.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

ஹலோ, செந்தமிழ்செல்வி,அம்பிகா, வணக்கம். நீங்கள் கொடுத்த பதிலுக்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

அம்பிகா.ஸ்னேகிதி செந்தமிழ்செல்வி உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.என் பையன்
ஜியாலஜி,மைனிங்,மெரைன் எஞ்ஜினியரிங் போன்றவற்றை தான் விரும்புகின்றார்.மூன்றுமே பிள்ளைகள் நம்மை விட்டு தூரமாகி விடுவார்கள்.அதை நினைத்தால் கிலியாக உள்ளது.பார்ப்போம் இறைவனின் நாட்டம் எவ்வாறு உள்ளதோ.செல்வி,நான் நன்றாக இருக்கின்றேன்.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?உங்கள் மகன் என்ன படிக்கின்றார்?அறிந்து கொள்ள ஆவல் .உங்களின் ஆசிர்வாததிற்கு நன்றி.பெட்ரோலியம் எஞ்சினியரிங் படிப்புக்கு இப்பொழுது நல்ல எதிகாலம் உல்ளது என்கின்றனர்.
சகோதரி விஜிமலை.உங்கள் ஆசிர் வாததிற்கு நன்றி.உங்கள் பையனுக்கும் எனது வாழ்த்துக்கள்.நல்ல மார்க் பெற்று,முன்னனி கல்லூரியில்,நீங்கள் விரும்பிய வண்ணம் படித்து,செழிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா எனக்கும் உங்கள் பயம் தான் நம்மை விட்டு போய் விடுவார்கள் என்று
என் பையனுக்கும் சேர்த்து நல்ல மார்க் வாங்க.தூவா செய்யுங்கள்

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா.கண்டிப்பாக.இறைவன் உதவியால் உங்கள் பையனும் நல்ல மார்க் கிடைத்து நல்ல காலேஜும் கிடைத்து நீங்கள் விரும்பிய படி படித்து செழித்து,வாழ்வாங்கு வாழ துஆ செய்கின்றேன்.எங்கு படிக்க வைக்கப் போகின்றீகள்?இந்தியாவிலா?அமீரகத்திலா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஸ்னேகிதி ஸாதிகா,
நான் நலமே. உங்களுக்கு அன்பான நோன்பு வாழ்த்துக்கள்.
எங்க பையன் காரைக்காலில் பி.டெக்(இசிஇ) இரண்டாம் ஆண்டு படிக்கிறார். விரும்பி எடுத்தார். அவருக்கு எரோநாட்டிகல்ஸ் ரொம்ப விருப்பம். தமிழ்நாட்டில் படித்தும் கூட பிறப்பிட சான்றிதழ் கிடைக்காததால் (அது தனி சோகக் கதை) இங்கேயே தகுதி அடிப்படையில் இந்த சீட் கிடைத்ததும் சேர்த்து விட்டோம்.
நீங்கள் சொல்வது போல, மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் ரிஸ்க் அதிகம். பெட்ரோலியம் எஞ்சினீயரிங் நல்ல பிரிவுதான்.
என் பெண் ஐடி எடுத்தாள். அவள் நல்லகாலம் மென் பொருள் துறை நன்றாக இருந்ததால், கேம்பஸில் வேலை கிடைத்தது. இப்ப அப்படி சொல்ல முடியலை.
நாம் என்ன நினைத்தாலும் கடவுள் நினைப்பதே நடக்கும். மகனை நன்கு படிக்க சொல்லுங்கள். பிறகு பார்ப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தோழி செந்தமிழ்செல்வி, நான் விஜிமலை. வ்ணக்கம்.உங்கள் பையன் காரைக்காலில் படிக்கிறாரா? எனது சொந்த ஊர் மயிலாடுதுறை. காரைக்காலில் எனது நாத்தனார் இருக்கிறார்.thankyou very much.வாழ்க வளமுடன்

அன்பு தோழிகளே,

இங்கே சில சகோதரிகள் சொன்னதுபோல் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பதற்கு முன்பு உங்கள் மகனின் விருப்பத்தை தெரிந்துகொள்ளுங்கள். சில பிள்ளைகள் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனது எதிர்கால துறையை முடிவு செய்துவிடுகின்றார்கள். சிலருக்கு +2 முடிக்கும் சமயத்தில்கூட பட்டப்படிப்பிற்கு என்ன என்ன கோர்ஸஸ் இருக்கின்றன என்பது தெரியாது. எந்த துறையை தேர்ந்தெடுப்பது என எந்த ஐடியாவும் இல்லாத பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள சப்ஜெக்ட் சம்பந்தமான துறையை பரிந்துரைப்பது மிகவும் நல்லது.

இந்த துறையில் வாய்ப்புகள் அதிகம், இந்த துறையில் குறைவு என்பது பற்றியெல்லாம் நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. எல்லாத் துறையிலும் திறமைசாலிகளுக்கு என்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு தகுந்த ஊதியமும் இருக்கின்றன. தேர்ந்தெடுத்த துறையில் திறமைசாலியாக வேண்டுமென்றால், அந்த துறையில் அவருக்கு ஆர்வம் இருத்தல் அவசியம். பிடிக்காத ஒரு துறையை வாய்ப்புகள் அதிகம் என்ற காரணத்தினால் தேர்ந்தெடுத்துவிட்டு, இஷ்டமில்லாமல் படித்து முடித்து வெளியில் வரும்போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலைகூட கிடைக்கலாம். ஆனால் வேலையை ஆர்வமுடன் செய்ய இயலாது.

வேலை எல்லோரும் செய்கின்றார்கள். எத்தனை பேர் அதை ஆர்வமுடன் செய்கின்றார்கள்? எத்தனை பேர் தங்கள் வேலையை ரசித்து, அனுபவித்து செய்கின்றனர்? எத்தனை பேருக்கு தாங்கள் செய்யும் வேலை குறித்து மனநிறைவு உள்ளது? ஒரு கட்டத்தில் இதுதான் கேள்வியாக இருக்கும். வேலை என்பது பணத்திற்காக மட்டும் என்பது ஆரம்பகால எண்ணமாக இருக்கும். ஒரு வேலையில் சேர்ந்து எதிர்பார்த்த சம்பளத்தையும் பெற்ற பிறகு மற்ற விசயங்களைத் தேட ஆரம்பிப்போம். அப்போது பணம் பெரிதாக தெரியாது.

பணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். கீழ்கண்ட யாஹூ செய்தியை படியுங்கள்.

http://in.news.yahoo.com/139/20080917/874/twl-beggars-in-pak-during-ramazan-earn-m.html

(நான்கூட பாகிஸ்தான் போய் ஒரு மாசம் இருந்துட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்..:-)

மேலும் சில பதிவுகள்