மரவள்ளிக் கிழங்கு இனிப்பு அடை

தேதி: September 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மரவள்ளிக் கிழங்கு - ஒரு கிலோ
அரிசி - 3 கப்
வெல்லம் - முக்கால் கிலோ
ஏலக்காய் - 5
தேங்காய் துருவல் - ஒரு கப்
உப்பு - அரை தேக்கரண்டி


 

மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி விட்டு தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ளவும். பிறகு அதை கத்தியால் சிறு சிறுத் துண்டுகளாக சீவிக் கொள்ளவும், அல்லது காரட் துருவியால் துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியுடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
முதலில் கிரைண்டரில் ஊற வைத்த அரிசியை கல் களைந்து விட்டு போடவும். பிறகு அரிசியை 5 நிமிடம் அரைக்கவும்.
பிறகு அதனுடன் துருவிய கிழங்கை போட்டு 10 நிமிடம் அரைக்கவும். கிழங்கு அரைப்படும்போது கைகளால் மாவை தள்ளி விட்டு கிழங்கில் உள்ள சக்கையை எடுத்து விடவும். அரிசி மற்றும் கிழங்கு நன்கு அரைப்பட்டவுடன் தேங்காய் துருவல், உப்பு, ஏலக்காய் போட்டு 2 நிமிடம் அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை கரண்டியை வைத்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.
வெல்லம் கரைந்ததும் அதை அரைத்த மாவுடன் மேலாக ஊற்றி கிளறவும். வெல்லப் பாகை கலக்காமல் ஊற்றவும், அடியில் மண்படிந்திருக்கும்.
மாவுடன் வெல்லம் ஒன்றாக சேரும்படி நன்கு கலந்து தோசைமாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெலிதாக தேய்க்கவும்.
பிறகு மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான மரவள்ளிகிழங்கு அடை தயார். இதை சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் <b> செல்வி. பத்மினி </b> அவர்கள். சிறு வயது முதலே சமைக்க ஆரம்பித்துவிட்ட இவர்,ஒரு சாரசரி இல்லத்தரசி தெரிந்து வைத்திருக்கும் அனைத்து உணவுகளையும் மிகவும் சுவையாகத் தயாரிக்கத் தெரிந்தவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்